ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 42
الهادى வழிகாட்டுபவன்
புத்தக ஆசிரியர் கருத்து :- தன்னுடைய அடியார்களுக்கு இம்மை மறுமை வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டுபவன். மேலும் தன்னுடைய நேசர்கள் அவனை வழிபடுவதற்கும் அவனுடைய திருப்தியை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுபவன். மிருகங்களாலும் தேவயானவற்றுக்கு வழிகாட்டுபவன்
ஸூரத்துல் ஹஜ் 22:54
وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
…..மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:31
وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا
….இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
ஹிதாயத்தை அறிஞர்கள் பல வகையாக வகைப்படுத்துகிறார்கள்
1 -الهداية العامة(பொதுவான ஹிதாயத்)
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்கு தேவையான விஷயங்களையும் வழிகளையும் காட்டுவது.
ஸூரத்துல் அன்ஆம் 6:38 , 39
وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُـكُمْؕ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِؕ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ ؕ وَمَنْ يَّشَاْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
கருத்துரைகள் (Comments)