அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 3

அகீதா

மின்ஹாஜூல் முஸ்லிம்

பாகம் – 3

தவ்ஹீதுல் உலூஹிய்யா:
எவன் என்னைப் படைத்தானோ எவன் எனக்கு உணவளிக்கின்றானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்
தவ்ஹீத் (ஒருமைப்படுத்துதல்)
லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே.
🔷 من قال لا اله الا الله دخل الجنة
🔹எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு இல்லை என்று
கூறுகிறானோ அவன் சொர்க்கம் நுழைவான்.
🔷من كان آخر كلامة لا إله إلا الله دخل الجنة
🔹யாருடைய கடைசி வார்த்தை லா இலாஹா இல்லல்லாஹ் வாக இருக்கிறதோ அவர் சொர்க்கம் நுழைவார்.
இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் தவறு வரும் இடம் உலூஹியாத்தில் தான். அல்லாஹ்வை
நம்புகிறார்கள் ஆனால் அவனுக்கு மட்டுமே வணக்கம்
, இபாதத் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் தவறு செய்கிறார்கள்.