அகீதாமின்ஹாஜூல் முஸ்லிம்
பாகம் – 4
توحيد الأسماء والصفات
அல்லாஹ்வின் அழகிய பெயர்களும் பண்புகளும் (تَوْحِيْدُ الْأَسْمَاءِ وَالصِّفَاتِ):
اسم – பெயர் : اسماء – பெயர்கள்
அல்லாஹ்வின் பெயர்களில் சில :
جبار, خالق, سميع, بصير, رزاق,..
ان لله تسعة وتسعين اسما
அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன (புகாரி ). ஆனால் அது எந்த பெயர்கள் என்பது நாம் அறிய மாட்டோம்.
பெயர்களும் பண்புகளும்:
سميع – கேட்பவன் (பெயர்): سمع – கேட்டல் (பண்பு)
بصير – பார்ப்பவன் (பெயர்): بصر – பார்த்தல் (பண்பு)
قدير – சக்தியுள்ளவன் (பெயர்): قدرة – சக்தி (பண்பு)
عزيز – கண்ணியமானவன் (பெயர்): عزة – கண்ணியம் (பண்பு)
بصير – பார்ப்பவன் (பெயர்): بصر – பார்த்தல் (பண்பு)
قدير – சக்தியுள்ளவன் (பெயர்): قدرة – சக்தி (பண்பு)
عزيز – கண்ணியமானவன் (பெயர்): عزة – கண்ணியம் (பண்பு)
🔶இறைவனுடைய பெயர்களிலிருந்து பண்புகளை எடுக்கலாம் ஆனால் பண்புகளிலிருந்து பெயர்கள் இறைவனுக்கு நாம் சூட்ட முடியாது.
🔶 இறைவன் தனக்கு தானே சூட்டிய பெயர்களைத் தவிர வேறு பெயர்களை நாம் அவனுக்கு சூட்டக்கூடாது.
உதாரணம் : وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ↔ ( 8:30) அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்
இந்த வசனத்தை ஆதாரமாக வைத்து அல்லாஹ் ماكر (சூழ்ச்சி செய்பவன்) என்று அழைக்கக்கூடாது.
ஆகவே இறைவனின் எல்லாப்பெயர்களிலிருந்தும் அவன் பண்புகளை விளங்கலாம் ஆனால் இறைவனின் எல்லாப்பண்புகளிலிருந்தும் பெயர்களை விளங்க முடியாது.
🔶அல்லாஹ் பூரணத்துவமிக்கவன் ஆனால் அவன் சொல்லாததால் நாம் அவனை كامل (பூரணத்துவமிக்கவன்) என்று சொல்ல முடியாது
🔶 அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் உலகில் உள்ள யாருக்கும் ஒப்பாக இருக்காது என்று நாம் நம்ப வேண்டும்.
🔶 அல்லாஹ்வுடைய பெயர்களோ பண்புகளோ எவருக்கும் ஒப்பாக இருக்காது.
🔶அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளுக்கு உதாரணம், மாற்றுவிளக்கம் போன்றவையெல்லாம் கொடுக்கக்கூடாது, கருத்து தெரியாது என்று கூறக்கூடாது,ஒப்பிட்டுக்கட்டுதல், ஒன்றுமில்லை என்றும் சொல்லக்கூடாது.
🌺அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், ரோஷப்படுகிறான்,அவனுக்கு இரு கைகள் இருக்கிறது என்றெல்லாம் அவனைப்பற்றி வரும் அறிவிப்புகளை
எவ்வாறு நம்ப வேண்டும் ?
(42:11) ↔ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ அவனைப்போன்று எதுவுமில்லை. அவன் தான் செவியேற்பவன் பார்ப்பவன்.
எவ்வாறு நம்ப வேண்டும் ?
(42:11) ↔ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ அவனைப்போன்று எதுவுமில்லை. அவன் தான் செவியேற்பவன் பார்ப்பவன்.
தவ்ஹீத்
1. படைத்தவன் ஒருவன் மட்டுமே.
2. படைத்தவன் எவனோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
3. அவனுக்கு பெயர்கள் உண்டு பண்புகள் உண்டு அது யாரைப்போன்ற பெயரும் அல்ல யாருடைய பண்பைப்போன்றதும் அல்ல.
قل هو الله احد – படைத்தலில் அவன் தனித்தவன், நிர்வாகத்திலும் அவன் தனித்தவன், பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் அனைத்திலும் அவன் தனித்தவன். எல்லா வகையிலும் அவன் ஒருவன்.

🔶 இறைவனை சரியாக வணங்க வேண்டும் என்பதை சரியாகப்புரிந்து
கொள்வதற்காகவே இப்படி 3 ஆக பிரித்து நாம் படிக்கிறோம்.
கருத்துரைகள் (Comments)