حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 14 🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது. 🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் பிறகு – பிறகு என்று தள்ளிப்போடாமல் …
Tag: கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 13 🌹 கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். 🌹 இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம் 🌹 இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள். 🌹 கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் தகுதிக்கு மீறி தன்னை உயர்த்திக்கொள்ள மாட்டார்.(தனக்கு …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 12
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 12 💠 மாணவருக்கு பொறுமை வேண்டும். கற்பதிலும் பொறுமை இருக்க வேண்டும். 💠 கல்வியில் விளக்கத்தை கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். கல்வியில் அமானிதத்தைப் பேணுதல். 💕 சரியான நபரிடம் கல்வி கற்க வேண்டும். 💕 அவர்கள் கற்றுத்தரும் சரியான விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 💕 கற்றதை அமல் செய்ய வேண்டும். 💕 அமல் செய்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 💠 கல்வியில் அமானிதம் பேணுதல் மிகவும் அவசியமாகும். …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 11
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 11 குர்ஆன் சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்ள ஷேக் உஸைமீனின் (ரஹ்) அறிவுரை 💠 கல்வி علم 💠 புரிதல் فهم 💠 புரிந்த கல்வியை சிந்திப்பது التفكر மேற்கண்ட 3 ஆயும் சரியாக செய்தால் التفقه (மார்க்கத்தை புரிந்தவர்) என்ற அந்தஸ்தை அடைய முடியும். 💕 குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் التفقه இருக்க வேண்டும். அது அறிவைச்சார்ந்தோ அவருடைய மனோ இச்சையை சார்ந்தோ இருக்கக்கூடாது. உலமாக்கள் ஃபிக்ஹ் ஐ …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 10
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 10 💕 நபி (ஸல்) – யார் உலமாக்களிடம் விவாதிப்பதற்காகவோ, மடயர்களை மேலும் மடயர்களாக்கவோ, மக்களெல்லாம் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவோ கல்வியைக் கற்றுக்கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை நரகத்தில் புகச்செய்வான்(திர்மிதி) உலமாக்கள் கல்வியை இரண்டாக பிரிக்கிறார்கள் தான் கற்பதையெல்லாம் மனனம் செய்வது حفظ الرواية தான் கற்றுக்கொள்வதெல்லாம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது حفظ الرعاية 💕 நாம் கற்றதை மனனம் செய்வதை விட அதை நடைமுறை படுத்துவது மிக …
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 9 ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕 சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – ஹஸன்) 💕 இப்னு ஒதைமீன் (ரஹ்) – உபகாரத்தை …
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 8 💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️ நட்பை 3 ஆக பிரிக்கலாம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டு பிடிக்க வேண்டும். மக்களிடம் எந்த …
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 7 ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள். பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான ஆசிரியரிடமிருந்து மட்டுமே மார்க்க கல்வியை கற்பார்கள். இமாம் …
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 06
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 6 அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள். ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள். முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் செய்வதோ அவமதிப்பதோ செய்ததில்லை. மரியாதையில் ஷிர்க் குஃப்ர் …
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 05
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 5 ஒரு துறையை எடுத்தால் அந்த துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள். தகுதியான ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். சரியான சனத் இருக்கும் ஆசிரியரிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்காமல் சுயமாக கல்வி கற்பது அபாயகரமானதாகும்.
கருத்துரைகள் (Comments)