ஸீரா பாகம் – 11 உன் நபியை அறிந்துகொள் ❤ 3 ஆண்டுகளுக்குப் பிறகு : ஸூரத்துல் ஹிஜ்ர் 15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ ➥ ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!என்ற இறை வசனம் இறக்கப்பட்டது. பிறகு நபி(ஸல்) மூடப்பழக்கங்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ் வை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்.
Tag: ஸீரா உன் நபியை அறிந்துகொள்
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 10
ஸீரா பாகம் – 10 உன் நபியை அறிந்துகொள் 40 வயது முழுமையடைந்த போது ஹிரா குகையில் தனித்திருக்க ஆரம்பித்த 3ஆம் ஆண்டின் ரமலான் மாதம் பிறை 21 திங்கள் கிழமை (ஏறக்குறைய கி.பி 610 ஆகஸ்ட் 10) அப்போது நபி (ஸல்) விற்கு நாற்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் 12 நாட்கள் முழுமையடைந்து இருந்தன. ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) வை கட்டியணைத்தார்கள். நபி (ஸல்) சிரமப்படும் அளவிற்கு அணைத்தார்கள். ஓதுங்கள் ஓதுங்கள் என கூறியபோது …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 9
ஸீரா பாகம் – 9 உன் நபியை அறிந்துகொள் ❖ 38 ஆம் வயதில் : சிலை வழிபாடுகளையும் மூடப்பழக்கங்களையும் அடியோடு வெறுத்தார்கள். ஹிரா மலை குகையில் தனித்திருந்து பல நாட்கள் இறை தியானம் புரிந்தார்கள். ❖ நுபுவ்வத்தின் வெளிப்பாடுகள் : அப்போதிலிருந்து அவர்கள் பார்த்த கனவுகள் அனைத்தும் பார்த்தவாறே உண்மையில் நிகழ்ந்தன. நபி(ஸல்) சில இடங்களுக்கு அருகில் சென்றால் அங்குள்ள மரங்களும் செடிகளும் நபி(ஸல்) விற்கு ஸலாம் கூறின. இதே நிலை 40 வது வயது வரை தொடர்ந்தன.
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 8
ஸீரா பாகம் – 8 உன் நபியை அறிந்துகொள் ❖ 35 வயதில் : குறைஷிகள் கஃபாவை புதுப்பிக்க முடிவு செய்து ஹலாலான பணத்தைக்கொண்டு கட்ட முடிவு செய்தார்கள். கட்டும்போது ஹஜருல் அஸ்வதை யார் அதன் இடத்தில் வைப்பது என சர்ச்சை ஏற்பட்டது. அப்போது நடுநிசியில் இறைவழிபாட்டிற்காக யார் முதலில் கஃபாவிற்கு வருகிறாரோ அவரை நடுவராக்க முடிவு செய்தார்கள். அப்போது அங்கே நபி(ஸல்) தான் முதலில் வந்தார்கள். ❖ நபி(ஸல்) வின் தீர்ப்பு : ஒரு பெரிய போர்வையை கொண்டு …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 7
ஸீரா பாகம் – 7 உன் நபியை அறிந்துகொள் ❊ 25 ஆம் வயதில் : விதவையாக இருந்த கதீஜா(ரலி) தன் செல்வத்தை பாதுகாத்து அதில் வியாபாரம் செய்ய நல்ல நம்பகமான ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அந்த வியாபாரத்தில் நபி(ஸல்) நல்ல லாபம் ஈட்டினார்கள். தோழியின் மூலம் திருமண விருப்பத்தை கதீஜா (ரலி) தெரிவித்த போது பெரிய தந்தை அபுதாலிபின் சம்மதத்தோடு திருமணம் செய்ய நபி(ஸல்) ஒப்புக்கொண்டார்கள். அப்போது கதீஜா(றால்) வின் வயது 40. …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 6
ஸீரா பாகம் – 6 உன் நபியை அறிந்துகொள் ✽ 15 வயதில் : குறைஷி மற்றும் ஹவாசின் குலத்தவர்களுக்கிடையில் நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்கள். ( சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்தார்கள்). ✽ 20 வது வயது : வியாபாரத்திற்காக வந்த ஒருவரின் பொருளை வாங்கிவிட்டு அதற்கான கிரயம் கொடுக்கப்படவில்லை. அப்போது அநீதிக்கெதிரான ஹில்ஃபுல் ஃபுலூல் (சிறப்பிற்குரிய ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள். ( நபி(ஸல்) நபித்துவத்திற்கு பிறகும் இந்த ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து அது போன்ற …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 5
ஸீரா பாகம் – 5 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) 3 வயது முதல் 6 வயது வரை தாய் ஆமினாவிடம் வளர்ந்தார்கள். பிறகு தாய் ஆமினா அவர்களும் இறந்துவிட்டார்கள். ✥ 6 – 8 வயது வரை பாட்டனார் அப்துல் முத்தலிப் வளர்த்தார்கள். (அப்துல் முத்தலிப் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருக்கும் ஒருவர் நபி(ஸல்) வாக தான் இருந்தார்கள். ✥ 8 வயது முதல் தன் தந்தையின் மூத்த சகோதரர்களில் 3வது சகோதரரான அபுதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்தார்கள். …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 4
ஸீரா பாகம் – 4 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) – என் தாய் தன் உடம்பிலிருந்து ஒரு பெரும் ஒளி ஏற்பட்டதை பார்த்தாள். ✥ நபி(ஸல்) ஹலீமா சஹதியா என்றவரிடம் பால் குடித்து வளர்ந்தார்கள். நபி(ஸல்) வை எடுக்க வரும்போது மெலிந்த கழுதையில், மெல்லிய ஒட்டகத்தில் மக்காவுக்கு வந்தார்கள். நபி(ஸல்) அனாதை குழந்தையாக இருந்ததால் அவர்களை யாரும் கொண்டு போகவில்லை. ஆனால் ஹலீமா அவர்கள் நபி(ஸல்) வை கூட்டிச்செல்லும் போது அவர்களது ஒட்டகமும் கழுதையும் நன்றாக ஆகிவிட்டது. …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 3
ஸீரா பாகம் – 3 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் வம்சத்தொடர் இப்ராஹிம் (அலை) விற்கு 2 பிள்ளைகள் 1. இஸ்மாயீல் (மூத்தவர்) 2. இஸ்ஹாக் (இளையவர்) ❣ இஸ்ஹாக் (அலை)க்கு பிறந்தவர் யஹ்கூப். ❣ யஹ்கூப் (அலை)யின் இன்னொரு பெயர் இஸ்ராயீல் (அலை). ❣ அவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான் இஸ்ரவேலர்கள். ❣ இப்ராஹிம் (அலை) அல்லாஹ்வின் கட்டளைப்படி இஸ்மாயீல் (அலை)யையும் அவரது தாயார் ஹாஜரா அவர்களையும் மக்காவிற்கு அழைத்து வந்து தங்கவைக்கிறார்கள். ❣ அந்த இஸ்மாயீல் (அலை)யின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 2
ஸீரா பாகம் – 2 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) பிறந்த ஆண்டு கஹ்பா வை இடிக்க வந்த அப்ரஹாவின் படையை அல்லாஹ் நாசமாக்கினான் (சூரத்துல் பீல்). அந்த சம்பவத்தின் 50 நாட்கள் கழித்து நபி (ஸல்) பிறந்தார். இயற்பெயர் : முஹம்மத் தந்தையின் பெயர் : அப்துல்லாஹ் தாயின் பெயர் : ஆமினா குடும்பம் : ஹாஷிம் குலம் : குறைஷ் பிறந்த நாள் : திங்கள் தேதி : பிறை 9 (மூத்த அறிஞர்களின் ஆய்வின் படி நபி (ஸல்) பிறந்தது 9 இறந்தது …
கருத்துரைகள் (Comments)