ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 19

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள் 

பாகம் – 19

பொதுவாக அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் அது தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் முக்கியமானதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் மனோஇச்சை அடிப்படையில் பேசுதல் கூடாது. 

  • அல்லாஹ்வின் பெயர்களை குறிப்பிட்டு இந்த பெயரை இத்தனை முறை கூறினால் இந்த விஷயம் நடக்கும் என்று குறிப்பிடும் புத்தகங்களில் எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லை.
  • அல்லாஹ்வின் பெயர்களை பயன்படுத்தி தாயத்துகள் எழுதுவதோ உபயோகிப்பதோ கூடாது  

 من تعلق تميمة فقد أشرك 

இப்னு மசூத் (ரலி) – யார் தாயத்து கட்டுகிறாரோ  அவர் அல்லாஹ்விற்கு இணைவைத்து விட்டார் (அபூதாவூத், அஹ்மத்)

  • வீடுகளில் அலங்காரத்துக்காக அல்லாஹ்வின் பெயர்களை எழுதி தொங்கவிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • காலை மாலை துஆக்களுடன் அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத்துக்களை  ஓத வேண்டிய அவசியமில்லை.
  • குர்ஆன் ஹதீஸின் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தாமாகவே அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத்துக்களுக்கு தனிச்சிறப்பை இருப்பதாக இட்டுக்கட்டி கூறுவது தவறாகும்.
  • அல்லாஹ்வின் பெயர்களுக்கு நிகராக பிறரின் பெயர்களை சூட்டுவது ஷிர்க்காகும்.

உதாரணம் :

அப்துல் அலீ 

  • அல்லாஹ்வின் பெயர்கள் அடங்கிய தாள்களை அவமதிக்கும் செயல்களை செய்வதை விட அதை எரிப்பதே  சிறந்ததாகும்.
  • அல்லாஹ்வின் பெயர்களில் சில சிலவற்றை விட சிறப்பு வாய்ந்ததாகும். 
  • ஆதாரம் 
  • நபி (ஸல்) :- அல்லாஹ்வின் பெயரில் ஒன்றை மகத்தான பெயர் என அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

💠 நபி (ஸல்) – அல்லாஹ்வின் இஸ்முல் அஃழம்(மகத்தான பெயர்) ஐ கொண்டு ஒருவர் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனை நிராகரிக்கப்படாது.

💠 அந்த மகத்தான பெயர் அல்லாஹ் என்றும், அல் ஹய்யு என்றும் , அல் கய்யூம் என்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. 

  • இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத்துக்கள் ஒன்றை விட மற்றொன்று சிறந்ததல்ல என்று எவரேனும் கூறினால் அது ஆதாரமற்ற செய்தியாகும்.

ஸூரத்துல் அஃராஃப் 7:180

وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌….

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை பிரார்த்தியுங்கள்….

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا ، يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ

الصَّمَدُ ، الَّذِي لَمْ تَلِدْ وَلَمْ تُولَدْ ، وَلَمْ يَكُنْ لَكَ كُفُوًا أَحَدٌ . قَالَ : ” لَقَدْ سَأَلْتَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ ، الَّذِي إِذَا

سُئِلَ بِهِ أَعْطَى ، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ

மாலிக் இப்னு மிக்வல்- நபி (ஸல்) – ஒருவர் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில்  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ تَلِدْ وَلَمْ تُولَدْ ، وَلَمْ يَكُنْ لَكَ كُفُوًا أَحَدٌ இவ்வாறு துஆ செய்தபோது நபி (ஸல்) அல்லாஹ் உன்னுடைய துஆ வை ஏற்றுக்கொள்கிறான் என்ற நற்செய்தியை  கூறினார்கள். (முஸ்லீம்)