உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 4

ஃபிக்ஹ் பாகம் – 4

உளூவின் ஃபர்ளுகள்

உளூவின் ஃபர்ளுகள்

 ❤ ஸூரத்துல் மாயிதா 5:6

  1. முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்,
  2. கைகளை முட்டு வரை கழுவிக்கொள்ளுங்கள்,
  3. தலைகளை தடவிக்கொள்ளுங்கள்,
  4. இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்

 குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து படிப்பதே பிக்ஹ் எனும் கல்வியாகும்.

உளூவின் பர்ளுகள்:

   1. நிய்யத்

ஆதாரம்: – إِنَّما الأَغْمَالُ بِالنِّيَّت உமர் (ரலி) – நபி (ஸல்) – எண்ணங்களை கொண்டே அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது கூலி கொடுக்கப்படும்.

 இபாதத் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்; இஸ்லாஹ் ( அல்லாஹ்விற்காக செய்தல் என எண்ணம் கொள்ளுதல்) வேண்டும்.

 நிய்யத் (எண்ணம்) உள்ளத்தால் ஒன்றை நினைப்பது அல்லது உறுதிப்படுத்துவது.

 இப்னுல் கய்யிம் (ரஹ்) – நிய்யத்தின் இடம் உள்ளமாகும்.

நிய்யத்திற்கும் நாவிற்கு சம்பந்தமில்லை. நிய்யத்தை நாவல் சொல்பவர் மார்க்கத்தில் புதுமையை (பித்அத்) செய்தவராவார்.

   2. முகத்தை கழுவுதல்:

முடி துடங்கும் இடம் முதல் தாடை வரை இரண்டு காதுகளுக்கு இடைப்பட்ட பகுதி முழுவதும் கழுவ வேண்டும்.

   3. கைகள் (முழங்கைகள் வரை):

விரல் நுனியிலிருந்து முழங்கைகள் வரை கழுவ வேண்டும்.