ஃபிக்ஹ் பாகம் – 10
உளூவின் சுன்னத்துக்கள்
தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது :
🌷 நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்) தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள்
🌷 உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க ஒரு சாஊ-உம்மை விட சிறந்த மனிதர் நபி (ஸல்) விற்க்கே அந்த தண்ணீர் போதுமானதாக இருந்தது (அஹ்மத், தப்ரானீ)
துஆ
أَشْهَدُ أَنْ لَا إِلَـهَ إِلاَّ اللّهُ وَحْدَهُ لَا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّـداً عَبْـدُهُ وَرَسُـولُـهُ
🌷 உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்ததற்கு பின்னால் – அஷ்ஹது அந் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு என்று ஓதினால் அவருக்கு சொர்க்கத்தின் 8 வாசல்கள் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசல் வழியாக நுழைவார். (முஸ்லீம்)
سُبْحـَانَكَ اللَّهُـمَّ وَبِحَمْدِكَ، أَشْهَـدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَـيْكَ
🌷 அபூ சயீத் அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) – யாரவது ஒருவர் உளூ செய்து அதற்கு பிறகு சுபானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன் லா இலாஹா இல்லா அன்த அஸ்தக்பிருக வ அதூபு இலைக் இதை ஓதினால் ஒரு துண்டில் நன்மை எழுதப்பட்டு ஒரு முத்திரையிடப்பட்டு பிறகு அது மறுமை வரை உடைக்கப்படாது(தப்ரானீ)
கருத்துரைகள் (Comments)