சஜ்தா சஹ்வு பாகம் 04

ஃபிக்ஹ் 

சஜ்தா சஹ்வு

பாகம் – 4

💠 அபூசயீது அல் குத்ரி (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் அவருடைய தொழுகையில் சந்தேகம் கொண்டால் எத்தனை ரக்காத் தொழுதார் என்று தெரியாத நிலையில் 3 ஆ அல்லது 4 ஆ என்று சந்தேகம் வந்தால் அவர் சந்தேகப்பட்டதை வீசி விடட்டும் அவர் உறுதிகொண்டதின் மீது அமைத்துக்கொள்ளட்டும் ஸலாம் கொடுப்பதற்கு முன்னதாக அவர் 2 சஜ்தா செய்யட்டும் இவ்வாறு நாம் தொழுகையை நிறைவேற்றுவது ஷைத்தானை அடிப்பதற்கு சமம் (முஸ்லிம்)

💠 நபி (ஸல்) ஒருமுறை குறைவாக தொழுதபோது ஸஹாபி ஞாபகப்படுத்தியாதால் விடுபட்ட ரக்காத்துகளை  தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு அதன் பின்னர் சஜ்தா சஹ்வு செய்தார்கள் 

💠 சில நேரத்தில் நபி (ஸல்) ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் ஸுஜூது சஹு செய்திருக்கிறார்கள் சில நேரத்தில் ஸலாம் கொடுத்ததற்கு பிறகு ஸுஜூது சஹு செய்திருக்கிறார்கள். 

💠 நபி (ஸல்) விற்கு நடந்தது போன்று நமக்கும் தவறுகள் ஏற்பட்டால் நபி (ஸல்) ஸுஜூது செய்தது போலவே நாமும் செய்வோம்.

💠 நபி (ஸல்) விற்கு நடக்காத விதத்தில் நம் தொழுகையில் தவறுகள் ஏற்பட்டால் நமக்கு சரியாக பட்டது போன்று நாம் சஜ்தா சஹ்வு செய்துக்கொள்ளலாம். (இமாம் ஷாவ்க்காணி)(இதில் அறிஞர்களுக்கிடையில் பல கருத்துக்கள் உள்ளன)

إِذَا زَادَ الرَّجُلُ أَوْ نَقَصَ ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ 

إِذَا زَادَ الرَّجُلُ 

ஓரு மனிதர் அதிகப்படுத்தி விட்டால் 

أَوْ نَقَصَ

அல்லது குறைந்துவிட்டால் 

↔  فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ

அவர் இரண்டு ஸஜ்தாக்களை செய்யட்டும் 

💠 அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதர் தொழுகையில் கூட்டி தவறு செய்தாலும் அல்லது குறைத்து தவறு செய்தாலும் அவர் இரண்டு சஜ்தாக்களை செய்யட்டும் (முஸ்லீம்)

இலக்கணம் சம்மந்தமாக வந்த கேள்விக்கு விடை அரபி புக் 2 வில் படிக்க இருக்கிறோம் إِن شاء الله 

(Refer சஜ்தா சஹ்வு பாகம்-3)