ஃபிக்ஹ்
சஜ்தா சுக்ர்
🍀 தொழுகையில் தவறுகள் ஏற்பட்டால் செய்யக்கூடிய ஸுஜூது சஹ்வு 2 ஸுஜூது செய்ய வேண்டும்.
🍀 குர்ஆனில் வரும் ஸுஜூது திலாவத் ஒரு ஸுஜூது செய்ய வேண்டும்
🍀 ஸுஜூது சுக்ர் (நன்றி கூறும் சஜ்தா)சந்தோஷமான நிலையிலும் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படும் நேரத்திலும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி ஸுஜூது செய்யலாம். இதுவும் ஒரு ரக்காஅத் தான்.ஸுஜூது சுக்ரு -விற்கு தக்பீர் சொல்ல வேண்டிய அவசியமில்லை
🍀 அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விற்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லப்பட்டால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி சுஜூதில் இருப்பார்கள்(அபூதாவூத், திர்மிதி-ஹஸன்)
🍀அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) – நபி (ஸல்) உடன் ஒரு பிரயாணத்தில் இருக்கும்போது நபி (ஸல்) ஒரு தோட்டத்தில் நுழைந்து நீளமாக ஸுஜூது செய்தார்கள்.நீண்ட நேரம் ஆன போதும் நபியவர்களை காணாததால் அவர்களை பார்ப்பதற்காக நான் வந்தேன் அப்போது நபி (ஸல்) தன் தலையை உயர்த்தினார்கள்.அப்போது நபி (ஸல்) என்னிடம் என்ன நேர்ந்தது என்று கேட்டார்கள் அதற்கு நீளமாக நீங்கள் சுஜூதில் இருப்பதை கண்டு நீங்கள் மரணித்து விட்டீர்களா என்று நான் பயந்து விட்டேன் என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) ஜிப்ரஈல் (அலை) எனக்கு ஒரு நல்ல செய்தி சொன்னார்கள் அதாவது யார் நபியின் மீது ஸலவாத்து சொல்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத்து கூறுகிறான் என்று அதனால் தான் சஜ்தா சுக்ர் செய்தேன் என்றார்கள்.
🍀 கஹ்ப் இப்னு மாலிக் (ரலி) வின் தவ்பா வை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்று அறிந்ததும் அவர்கள் சஜ்தா சுக்ர் செய்தார்கள்(புஹாரி)
கருத்துரைகள் (Comments)