أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني
ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்)
பாகம் – 6
சொத்தில் 3இல் ஒரு பங்கு மட்டுமே தருமத்திற்கு வஸிய்யத் செய்ய வேண்டும்
- ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும், ‘வேண்டாம்’ என்றே பதிலளித்தார்கள். நான், ‘மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)’ என்று கேட்டேன். அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்’ என்று கூறினார்கள். அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை.
Volume :3 Book :55(புஹாரி)
இப்னு அப்பாஸ் (ரலி) மூன்றிலொரு பங்கிலிருந்து 4 இல் ஒரு பங்கு வரை ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
கருத்துரைகள் (Comments)