ஜனாஸா சட்டங்கள் 07

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 7

நம்முடைய வாரிசுகளுக்கு சொத்திலிருந்து அதிகப்படியான வஸிய்யத் செல்லுபடியாகாது. 

நபி (ஸல்) தனது இறுதி ஹஜ்ஜில் ” அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் உரிமைகளை கொடுத்துவிட்டான். வாரிசுகளுக்கு வஸிய்யத் கிடையாது” என்று கூறினார்கள்.

பிறருக்கு இடைஞ்சல் வருவது போல வஸிய்யத் செய்யக்கூடாது. வாரிசுகளில் சிலருக்கு சொத்து கிடைக்காத ஏற்பாடுகளை செய்வதும் செய்யக்கூடாது.

ஸூரத்துன்னிஸாவு 4: 12 – 14

….مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏

………..ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

تِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ

الْفَوْزُ الْعَظِيْمُ‏

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான வெற்றியாகும்

 وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

لا ضرر ولا ضرار

நபி (ஸல்) – ஒரு முஸ்லீம் தனக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடாது பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடாது.

مَنْ ضَارَّ مُسْلِمًا ضَارَّهُ اللَّهُ، وَمَنْ شَاقَّ مُسْلِمًا شَقَّ اللَّهُ عَلَيْه

நபி (ஸல்) – யார் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கிறானோ அல்லாஹ் அவருக்கு ஆபத்தை விளைவிப்பான், யார் பிறரை கஷ்டப்படுத்துகிறாரோ அல்லாஹ் அவரை கஷ்டப்படுத்துகிறான். (ஹாகிம், தாரகுத்னீ)

அது போலவே அநியாயமான வஸிய்யத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد

நபி (ஸல்) – மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவரேனும் புதிதாக கொண்டு வந்தால் அது ரத்து செய்யப்படும்.(புஹாரி, முஸ்லீம் )

ஒருவர் தன்னுடைய மரண நேரத்தில் தனது 6 அடிமைகளையும் விடுதலையிட்டார்கள். அவரிடம் வேறு எந்த சொத்தும் இருந்திருக்கவில்லை. அப்போது அவரது வாரிசுகள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த செய்தியை சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) – எனக்கு தெரிந்திருந்தால் அதற்கு நான் துணை செய்திருக்க மாட்டேனே என்று கூறிவிட்டு அந்த 6 அடிமைகளுக்கும் மத்தியில் சீட்டு குலுக்கி போட்டார்கள் அதில் 2 பேரை தேர்வு செய்து உரிமை விட்டுவிட்டு மீதமிருக்கும் 4 அடிமைகளை அவரது வாரிசுகளுக்கு கொடுத்தார்கள்.