தஃப்ஸீர்
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 7
❤ வசனம் 68
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ
وَلَا يَزْنُوْنَ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ
➥ அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
❤ அல்லாஹ் இருக்கிறான் என்று மக்கள் கூறுகிறார்கள், படைத்தவன் அவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அல்லாஹ்வை தவிர மற்றவர்களிடம் துஆ செய்வார்கள்.
❋ [highlight color=”green”]சூரா அல் அன்கபூத் 29:65[/highlight]
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
❤ அல்லாஹ்வை பற்றிய சரியான அறிவை தேட நாம் முயற்சிக்க வேண்டும்.
கருத்துரைகள் (Comments)