தஃப்ஸீர் பாடம் 18
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)
الضَّآلِّيْنَ | لَا | وَ | عَلَيْهِمْ | المَغْضُوْبِ | غَيْرِ |
வழித்தவறியவர்கள் | இல்லை | மேலும் | அவர்கள் மீது |
கோபத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் |
தவிர |
ضلَّ | غضب |
வழிதவருதல் | கோபப்பட்டான் |
(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
கோபத்திற்கு உள்ளானவர்கள் ;
1- அது யூதர்களை குறிக்கும்
♥️ சூரா முஜாதலா↔️58:14
எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும்அ ல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
2- சத்தியம் எதுவென்று தெரிந்தும் அதன் படி அமல் செய்யாமல் இருப்பவர்கள்
(ஆசிரியர் கருத்து) الضالين
1- நபி (ஸல்) அவர்கள் தூதராக வருவதற்கு முன்னால் இருந்த கிறிஸ்தவர்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தூதராக வந்த பிறகு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் வின் தூதர் தான் என்று தெரிந்தே நிராகரிக்கிறார்கள்.
2- அறியாமையின் காரணத்தினால் சத்தியம் அல்லாதவற்றை கொண்டு அமல் செய்யக்கூடியவர்கள்
நேர்வழியிலிருந்து வழித்தவற காரணங்கள்;
1- அறியாமை
2- பிடிவாதம்
ஆமீன் சொல்வது ;
ஹதீத் – ஆமீன் சொல்லும்போது மஸ்ஜிதுகள் அதிரும்
- நபி (ஸல்) – இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள்
- தனியே தொழுதாலும் ஜமாஅத் உடன் தொழுதாலும் ஃபாத்திஹா ஓதிய பின் ஆமீன் சொல்ல வேண்டும்.
- தொழுகை அல்லாத நேரத்தில் ஃபாத்திஹா ஓதினால் ஆமீன் சொல்ல வேண்டுமா❔இல்லையா❔என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆமீன் சொல்வது சிறந்தது
கருத்துரைகள் (Comments)