தஃப்ஸீர் பாடம் 8
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8)
வசனம் 3:
الرَّحْمَٰنِ ↔ அல்லாஹ்விடம் இருக்கும் பண்பு
الرَّحِيمِ ↔ பிறரின்மீது அல்லாஹ் காட்டக்கூடிய பண்பு.
الرَّحْمَٰنِ ம் الرَّحِيمِ ம் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வந்தால்; இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம் வரும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் தனித்தனியே வந்தால் இந்த இரண்டு
வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான்.
உதாரணம்:-
ஈமான், இஸ்லாம் இந்த இரண்டு வார்த்தையும் ஒரே இடத்தில் வந்தால், ஈமானிற்கு வேறு அர்த்தமும், இஸ்லாமிற்கு வேறு அர்த்தமும் கொடுக்கப்படும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் (வெவ்வேறு இடங்களில்) தனித்தனியாக வந்தால் இந்த இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் ஒன்று தான்.
🔶ஸிஃபாஅத் தாத்தியா
🔶ஸிஃபாஅத் ஃபிஅலியா
என்ற தலைப்பை நாம் விரிவாக அகீதா பாடத்தில் பார்ப்போம் ;
சிறிது விரிவாக கூறவேண்டும் என்றால் ⤵
🔹அல்லாஹ்வுடைய குணமாக சொல்வது ரஹ்மான் என்றும்.
🔹அவன் பிறரின்மீது காட்டக்கூடிய அன்பை ரஹீம் என்றும் புரிந்துகொள்ளுங்கள்.
●அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன; யார் அதை புரிந்து மனனம் செய்கிறார்களோ அவர்களுக்கு சுவர்க்கம் உண்டு என்று ஹதீஸ் உள்ளது.
● ஆனால் அந்த 99 பெயர்களும் என்ன என்று சரியான அறிவிப்புகள்மூலம் அறிவிக்கப்படவில்லை.
● திருகுர்ஆனில் 80ற்க்கும் மேற்பட்ட அல்லாஹ்வின் திருநாமங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கருத்துரைகள் (Comments)