தஃப்ஸீர் பாடம் 11
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11)
♥️ சூரா முஃமின்↔️40:16
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு
மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் – ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே
யாகும்.
♥️ சூரா ஃபஜ்ரி↔️89:22
இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
♥️ சூரா தாஹா↔️20:108
அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லா சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
ஆசிரியரின் கருத்து :
1. மறுமை நாளின் உண்மையான ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே
2. மறுமை என்பது நிச்சயமாக உள்ளது
3. இவ்வசனம் மனிதர்களை அமல் செய்யத்தூண்டுகிறது
♥️வசனம்-5
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾
اِيَّاكَ | نَعْبُدُ | وَ | اِيَّاكَ | نَسْتَعِيْن |
உன்னை மட்டுமே | நாங்கள் வணங்குகிறோம் | மேலும் | உன்னிடம் மட்டுமே | நாங்கள் உதவி தேடுகிறோம் |
இதில் 2 வணக்கம் உண்டு
1- نعبد – عبد – அடிபணிவது
🔹அல்லாஹ்வுக்கு முழுக்க முழுக்க பணிந்து அடிபணிய வேண்டும்
🔹அல்லாஹ் விரும்பி அங்கீகரிக்கின்ற வெளிப்படையான உள்ளார்ந்த அணைத்து செயல்களும் இபாதத் ஆகும்
🔹உதைமீன் (ரஹ்)- அல்லாஹ் ஏவிய அனைத்தையும் செய்வதையும் அவன் தடுத்த அனைத்தையும் விடுவதும் செய்வது தான்.
கருத்துரைகள் (Comments)