ஃபிக்ஹ் பாகம் – 1
தொடர் உதிரப்போக்கு
الاستحاضة: هي استمرار نزول الدم وجريانه في غير أوانه
(மாதவிடாய் கால உதிரப்போக்கை விட) அதிகமான நாட்கள் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படுதல்:
இவர்கள் தங்களுடைய ஹைளுடைய காலத்தை எப்படி கணக்கிடுவது?
الاستحاضة உள்ள பெண் மூன்றில் ஒரு நிலையில் இருப்பாள்
(1) மாதவிடாயிற்குரிய கால எல்லை அறிந்தவளாக இருப்பாள்.
இவர்கள் தன்னுடைய மாதவிடாயின் காலத்தை கணக்கிட்டுக்கொண்டு மற்ற காலத்தில் சுத்தம் செய்து விட்டு தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் இரத்தம் வருமிடத்தை சுத்தம் செய்து விட்டு அது வெளி வராத விதத்தில் அதை சரிசெய்து தொழுகையுடைய நேரம் வந்ததற்கு பின்னால் உளூ செய்து தொழ வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வக்த்திற்கும் செய்ய வேண்டும்.
🌺” لِتَنْظُرْ عِدَّةَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا ، فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ
ذَلِكَ مِنَ الشَّهْرِ ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ ، ثُمَّ لِتُصَلِّ فِيهِ
உம்முஸலாமா (ரலி) – நபி (ஸல்) விடத்தில் தொடர் உதிரப்போக்கு உள்ள ஒரு பெண்ணைப்பற்றி கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) – ஒவ்வொரு மாதத்திலும் அந்த பெண்கள் மாதவிடாய் சரியாக ஆகிக்கொண்டிருந்த அந்த காலங்களின் அடிப்படையில் கணக்கிட்டு அந்த பகலையும் இரவையும் மாதவிடாயாக கணக்கிட்டுக்கொள்ளட்டும். பிறகு அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு(சுத்தம் செய்து விட்டு, அது வெளியேறாத வண்ணம் பாதுகாத்துவிட்டு) தொழட்டும் (முஸ்லீம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, இமாம் நவவி இந்த ஹதீஸை சரி காண்கிறார்கள். ஹத்தாபி (ரஹ்) – இது ஏற்கனவே தன்னுடைய மாதவிடாயின் நாட்களை அறிந்திருந்த பெண்ணிற்கான சட்டமாகும்)
கருத்துரைகள் (Comments)