ஃபிக்ஹ்
தொழுகையின் ஃபர்ளுகள்
பாகம் – 7
ஸுஜூத்
ஸூரத்துல் ஹஜ் 22:77
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
🌼தொழுகையை விவரிக்கும் மேற்கூறப்பட்ட ஹதீஸில் நபி (ஸல்)
ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا
நீங்கள் அமைதி அடையும் வரை ஸுஜூத் செய்யுங்கள், பிறகு எழுந்து அமருங்கள் அதில் அமைதி பெரும் வரை. பின்பு மீண்டும் சுஜூதில் அமைதி பெரும் வரை ஸுஜூத் செய்யுங்கள்.
ثم يسجد حتى تطمئن مفاصله،
நபி (ஸல்) – ஒவ்வொரு மூட்டுகளும் அதன் இடத்தை அடையும் வரை ஸுஜூத் செய்ய சொன்னார்கள்(ஸுனன் அபூதாவூத்)
ஸுஜூத் எப்படி செய்வது?
وعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:” أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى
الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ وَلَا نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ
🌼 இப்னு அப்பாஸ் – நபி (ஸல்) -7 உறுப்புக்கள் மீது ஸுஜூத் செய்ய நான் ஏவப்பட்டிருக்கிறேன், நெற்றி என்று கூறி விட்டு மூக்கின் பக்கமும் கையால் சைக்கினை செய்தார்கள், பிறகு இரண்டு உள்ளங்கைகள், 2 முட்டுக்கால்கள், கால்களின் விரல்பகுதிகளின் உள்பகுதிகள்.(புஹாரி, முஸ்லீம்)
🌼 நபி (ஸல்) -தன்னுடைய இரண்டு கைகளையும் தன்னுடைய விலாப்புறங்களிலிருந்து தூரமாக வைத்துக்கொள்வார்கள். (ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)-(இது ஆண்களுக்கு மட்டும் தான் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை)
கருத்துரைகள் (Comments)