ஃபிக்ஹ் பாகம் – 4
தொழுகையின் ஃபர்ளுகள்
(2) நின்று தொழ சக்தி பெற்றவர் நின்று தொழ வேண்டும்:
ஸூரத்துல் பகரா 2:238
حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
🌼 இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – எனக்கு மூலநோய் இருந்தது ஆகவே எப்படி தொழவேண்டும் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அப்போது நபி (ஸல்) நின்றுகொண்டு தொழுங்கள் என்றார்கள். அதற்கு உங்களால் முடியவில்லையென்றால்; உட்கார்ந்து தொழுங்கள்; அதற்கும் முடியவில்லையென்றால் ஒரு பக்கமாக சாய்ந்து தொழுங்கள் (புஹாரி)
🌼 அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) – ஒரு அடியான் ஒரு சுன்னத்தான அமலை பிரயாணத்தின் காரணத்தாலோ நோயின் காரணத்தாலோ விட்டுவிட்டால் ஊரிலிருக்கும்போதும் ஆரோக்கியமான நேரத்திலும் வழமையாக செய்துக்கொண்டிருந்த நன்மையை அல்லாஹ் அவருக்கு வழங்குகிறான்.
சுன்னத்தான தொழுகைகளை உட்கார்ந்தும் தொழலாம்:
🌼 صلاة الرجل قاعدا نصف الصلاة
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதன் உட்கார்ந்து தொழுதால் அவருக்கு பாதி நன்மைகள் தான் கிடைக்கும் (புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)