நாங்கள் தான் முஹம்மது க்கு பைஅத் செய்தவர்கள் – நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள், ‘அல்லாஹ்வே மறுமை நன்மையை தவிர வேறு நன்மை இல்லை. அன்சாரிகளுக்கும் முஹஜிர்களுக்கும் நன்மை செய்’.
நபி (ஸல்) அல்லாஹ்வை நோக்கி, ‘நீயில்லையென்றால் எங்களுக்கு நேர்வழியில்லை. நாங்கள் தர்மம் செய்திருக்க மாட்டோம், நாங்கள் தொழுதிருக்க மாட்டோம், எங்கள் மீது அமைதியை இறக்கி வை, எதிரிகளை சந்தித்தால் எங்கள் கால்களை உறுதிப்படுத்து. அவர்கள் எங்கள் மீது அத்துமீறி வருகிறார்கள், நாங்கள் அதற்கெதிராக கிளம்பியிருக்கிறோம்’.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், இரண்டு அருட்கொடைகளில் மக்கள் கவனமற்றுஇருக்கிறார்கள், அது ஆரோக்கியம் மற்றும் ஒய்வு நேரம் ஆகும்.
{அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) (6412)}
ஒய்வு நேரம்:
சூரா அஷ் ஷரஹ் 94: 7,8
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ94 : 7
வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் இறைவழியிலும் எனவே வணக்கத்திலும் முயல்வீராக (94. 7)
فَرَغْتَ
فَانصَبْ
நீங்கள் ஓய்வாகிவிட்டால்
நேராக நில்லுங்கள்
(இறைவனையே
வணங்குங்கள்)
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب 94 :8
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.(94:8)
மறுமையை இலக்காக வைத்து வாழ்பவருக்கு ஒய்வு நேரம் மிக முக்கியமானது.
ஆரோக்கியம்:
5விஷயங்கள் வரும் முன்5 விஷயங்களை பயன்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அறிவித்த ஒரு அறிவிப்பில் -நோய் வருவதற்கு முன்னால் உள்ள ஆரோக்கியத்தை பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமான நேரத்தில் ஒருவர் செய்யும் இபாதத்தை நோயின்போது செய்யாமல் இருந்தாலும் இபாதத் செய்த நன்மை அவருக்கு கிடைக்கும்என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
💠 பிறகு உமர் (ரலி) வின் காலத்தில் உமர் (ரலி) யின் மகள் ஹஃப்ஸா (ரலி) இடம் இருந்தது. உஸ்மான் (ரலி) வின் காலத்தில் ஹுதைபா (ரலி) அர்மேனியாவில் யுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது அங்கு குர்ஆனின் விஷயத்தில் மக்களுக்கு இடையில் அதிகமான முரண்பாடுகள் இருந்தது. அப்போது ஹுதைபா (ரலி) அபூபக்கர் (ரலி) யிடமிருந்த பிரதியிலிருந்தும் ; ஹஃப்ஸா (ரலி) பிரதியிலிருந்தும் எடுத்து; தொகுக்கும்போது உஸ்மான் (ரலி) குறைஷிகளுடைய ஓதல் முறையில் எழுதுங்கள் ஏனெனில் அது குறைஷிகளின் நாவில் தான் அது இறக்கப்பட்டது என்று கட்டளையிட்டார்கள். அந்த பிரதியிலிருந்து பிரதியெடுக்குமாறு கட்டளையிட்டு மற்ற பிரதிகளை எரித்துவிடுமாறு கட்டளையிட்டார்கள்.
💠குர்ஆனில் வசனங்கள் இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆன் தொகுக்கப்படவில்லை மாறாக நபி (ஸல்) தொகுக்க சொன்ன முறைப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது.
💠 ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்துக்கொண்டார்கள். யார் தன்னிடமுள்ள பிரதியை ஒப்படைத்தாலும் அது நபியவர்களின் முன்னிலையில் எழுதப்பட்ட இன்னொரு பிரதியை வைத்து உறுதிப்படுத்துவார்கள் அல்லது அதற்கு மேலும் ஒரு சாட்சியை கேட்டு சாட்சியின் மூலமாகவும் உறுதிப்படுத்திக்கொண்டார்கள். ஸைத் (ரலி) அவர்களும் ஒரு ஹாஃபிழ் என்பது குறிப்பிடத்தக்கது.
💠 ஸைத் (ரலி) – சூரத்து தவ்பா வில் 9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ … என்ற வசனத்தை எழுத்தில் என்னால் காணமுடியவில்லை ஆனால் நபி (ஸல்) அதை ஓத நான் கேட்டிருக்கிறேன். அந்த வசனம் யாரிடத்தில் இருக்கிறது என்று தேடிப்பார்த்ததில் ஹுசைமத் இப்னு ஸாபித் (ரலி) விடம் அது இருந்தது. அவரை நபி (ஸல்) இரண்டு சாட்சிக்கு சமமானவர் என்று கூறியிருந்ததால் நான் இன்னொரு சாட்சி கேட்கவில்லை. ஆகவே அது கிடைத்ததும் அந்த சூரத்தில் அதை தொகுத்து விட்டேன் அபூபக்கர் (ரலி) யின் காலத்தில் தொகுப்புகள் அவரிடம் இருந்தது. (புஹாரி)
கருத்துரைகள் (Comments)