அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 52

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 52

عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما

مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون

أكثرهم تابعا يوم القيامة

💠 அபூஹுரைரா (ரலி) – எந்த நபியாக இருந்தாலும் பார்த்த உடன் மக்கள் நம்பும் அளவிற்கு அற்புதங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர் எனக்கு கொடுக்கப்பட்டதோ இறைவனின் வஹீ தான் (குர்ஆன்)எனவே நான் எதிர்பார்ப்பதெல்லாம் நபிமார்களை பின்தொடர்ந்த சமுதாயங்களில் என் சமுதாயம் அதிகமாக இருக்க நான் ஆசைப்படுகிறேன்.

💠 குர்ஆனில் உள்ள விஞ்ஞானம் மட்டுமே அற்புதமல்ல அது முழு உலகத்திற்குமுரிய வேதம் என்பதை நாம் விளங்கி நடக்க வேண்டும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 51

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 51

7 – குர்ஆனை ஈமான் கொள்ளுதல் الايمان بالقرآن الكريم

[highlight color=”green”]பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசங்கள்[/highlight]

  • இறுதியானது.
  • பாதுகாக்கப்பட்ட வேதம்.
  • இது உலக மக்கள் அனைவருக்கும் உரியது.

💠 ஆகவே பிற வேதங்களை நம்புதைபோலல்ல குர்ஆனை நம்புவது.

💠 கடந்தகால வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றமாக குர்ஆனில் ஒரு சட்டம் இருந்தால் அந்த பழைய சட்டம் மாற்றப்பட்டது என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.

🌺 ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:1

تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ‏

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.

🌺 ஸூரத்து யூஸுஃப் 12:3

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.

(ஸூரத்துல் மாயிதா5:15ஸூரத்துல் ஜுமுஆ62:2,ஸூரத்துல் ஹிஜ்ர்15:9)

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 50

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 50

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ( خُفِّفَ عَلَى

دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ القُرْآنُ ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ ، فَيَقْرَأُ القُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ

دَوَابُّهُ ، وَلاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ )

💠 அபூஹுரைரா (ரலி) -தாவூத் (அலை) மீது குர்ஆன்(ஜபூர்) இலகுவாக்கப்பட்டிருந்தது; ஒட்டகத்திற்கு சாய்மானம் தயார்செய்யும் வரை அவர் குர்ஆனை ஓதுவார் -(புஹாரி)

💠 இந்த ஹதீஸில் தாவூத் (அலை) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது

💠 நபி (ஸல்) ஒரு ஜனாஸாவை கடந்து செல்லும்போது ஒரு யூதர் நபி (ஸல்) விடம் நீங்கள் பேசினால் இந்த ஜனாஸாவிற்கு கேட்குமா என்றார்கள் அதற்கு நபி (ஸல்) பதிலளிக்கவில்லை 3 முறை கேட்டுவிட்டு யூதர் ஜனாஸாவிற்கு கேட்கும் என பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) வேதக்காரர்கள் மார்க்க ரீதியில் ஏதேனும் செய்திகளை உங்களிடம் பேசினால் நீங்கள் உண்மை படுத்தவும் வேண்டாம் பொய்ப்படுத்தவும் வேண்டாம்.அவர்கள் சொல்லும் செய்தியை அறிவிப்பதில் குற்றமில்லை.

💠 அவர்களது வேதத்திலிருந்து அவர்கள் சொல்லியிருக்கக்கூடும் என்பதற்காகவே நபி (ஸல்) இப்படி உபதேசித்தார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 49

“إِنَمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنْ الأمَمِ كَمَا بَيْنَ صَلاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَمْسِ،

أُوتِيَ أَهْلُ التَوْرَاةِ التَوْرَاةَ فَعَمِلُوا، حَتَى إِذَا انْتَصَفَ النَهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطاً

قِيرَاطاً، ثُمَ أُوتِيَ أَهْلُ الإنْجِيلِ الإنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاةِ الْعَصْرِ، ثُمَ عَجَزُوا فَأُعْطُوا

قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِينَا الْقُرْآنَ فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ

قِيرَاطَيْن فَقَالَ أَهْلُ الْكِتَابَيْنِ: أَيْ رَبَنَا، أَعْطَيْتَ هَؤُلاءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْن، وَأَعْطَيْتَنَا

قِيرَاطاً قِيرَاطاً، وَنَحْنُ كُنَا أَكْثَرَ عَمَلاً، قَالَ: قَالَ اللَّه عَزَّ وَجَلَّ: هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ

مِنْ شَيْءٍ ؟ قَالُوا: لا، قَالَ: فَهُوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ.”    رواه البخاري.

இப்னு உமர் (ரலி) – உங்களுக்கு முன்னால் கடந்து சென்ற மக்களுடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டால் அஸர் தொழுகைக்கும் மக்ரிப் தொழுகைக்கும் இடைப்பட்ட காலம் போன்றதாகும் தவ்ராத் கொடுக்கப்பட்டவர்களுக்கு இறைவன் தவ்ராத்தை வழங்கினான் அவர்கள் பகல் வரை அதைக்கொண்டு அமல் செய்தார்கள்.  அவர்கள் லுஹருடன் கலைப்படைந்ததால் அவர்களுக்கு ஒரு கீராத் நன்மையை அல்லாஹ் வழங்கினான். இன்ஜீல் கொடுக்கப்பட்டவர்களுக்கு இன்ஜீல் கொடுக்கப்பட்டது அவர்கள் அதைக்கொண்டு அஸர் வரை அமல் செய்தார்கள் அவர்கள் கலைப்படைந்ததால் அவர்களுக்கு ஒரு கீராத் நன்மை கொடுக்கப்பட்டது. பிறகு உங்களுக்கு குர்ஆன் கொடுக்கப்பட்டிருக்கிறது நீங்கள் அதைக்கொண்டு சூரியன் மறையும் வரை அமல் செய்தீர்கள் உங்களுக்கு 2 கீராத் கொடுக்கப்படுகிறது   வேதக்காரர்கள் கேட்டார்கள் (அல்லாஹ்விடம்)எங்களை விட குறைந்த வேலை செய்து கூடுதல் கூலி கொடுக்கப்படுகிறார்களே என்று கேட்கப்பட்டது அல்லாஹ் கூறினான் உங்களுக்கு தர வேண்டிய கூலியில் எதையாவது நான் குறைத்தேனா? அவர்கள் இல்லை என்று கூறியதும்   அது எனது சிறப்பு நான் நாடியவருக்கு அதிகமாக கொடுப்பேன் என அல்லாஹ் கூறினான் (புஹாரி)

❣ இந்த ஹதீஸில் தவ்ராத், இன்ஜீல்,குர்ஆன்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 48

வேதங்களை ஈமான் கொள்ள வேண்டும்

🌺 ஸூரத்துன்னிஸா 4:136

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ

اَنْزَلَ مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ

بَعِيْدًا‏

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.

🌺 ஸூரத்துல் பகரா 2:4

وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

🌺 ஸூரத்துல்ஆல இம்ரான் 3:3

نَزَّلَ عَلَيْكَ الْـكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَۙ‏

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.

🌺 ஸூரத்துன்னிஸா 4:163

وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏ …

… இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

🌺 ஸூரத்துல் அஃலா 87:18,19

اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ‏

(18) நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-

صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى‏

(19இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.

🌺 ஸூரத்துல் பகரா 2:285

كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ

…அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்:…

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 47

வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என குர்ஆனில் கூறப்பட்டவை

💠 ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை இறக்கினான்.

2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”

  • மூஸா (அலை) – தவ்ராத்
  • தாவூத் (அலை) – zஸபூர்

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خفف على

داود عليه السلام القرآن فكان يأمر بدوابه فتسرج فيقرأ القرآن قبل أن تسرج

دوابه ولا يأكل إلا من عمل يده

💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- தாவூத் (அலை) தன்னுடைய வாகனத்தை தயார் செய்யும்வரை குர்ஆன் ஓதுபவராக இருந்தார்கள் (புஹாரி)

ஓதப்படும் அனைத்திற்கும் குர்ஆன் என்று அழைக்கப்படும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 46

நாம் படித்தவை

💠الايمان بوجود الله – இறைவன் இருக்கிறான்
💠التوحيد الربوبية  – இந்த உலகத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் அல்லாஹ் மட்டுமே என்று இறைவனை தனித்துவப்படுத்தல்.
💠التوحيد الالوهية – எவன் படைத்தானோ எவன் நிர்வகிக்கிறானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
💠التوحيد الاسماء والصفات – அல்லாஹ் வுடைய பெயர்கள் பண்புகளில் அவன் தனித்தவன்.
💠 மலக்குமார்கள்
💠 அல்லாஹ்வின் வேதங்களை நம்புதல் – الايمان بكتب الله
ஒரு முஸ்லீம் நம்ப வேண்டிய அடிப்படைகளில் ஒன்று வேதங்களை நம்புதல். வேதங்களை நம்பாமல் மறுத்தால் காஃபிராகி விடுவார்.
💠 அல்லாஹ் பல வேதங்களை பல தூதர்களுக்கு இறக்கியிருக்கிறான்.
குர்ஆனில் வேதங்களை كتب என்றும்  صحف என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
مصحف – صحيفة(ج) صحف – பிரதி – தொகுப்பு

தன்zஸீல், ஃபுர்கான் என்றும் நாம் குர்ஆனை கூறுவோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 45

மலக்குமார்கள் புனிதமான விஷயங்களை தேடுவார்கள்

💠 நபி (ஸல்) ஆயிஷா (ரலி) வின் வீட்டிற்கு வந்தபோது ஆயிஷா (ரலி) தூங்கிவிட்டதாக நினைத்து மெதுவாக வெளியே சென்றார்கள். ஜன்னத்துல் பகீ என்னும் மைய்யவாடிக்கு சென்றார்கள். பிறகு அதை பற்றி ஆயிஷா (ரலி) விடம் கூறும்போது மலக்கு எந்த ஒரு மனைவியின் போர்வையில் நான் இருக்கும்போதும் என்னிடம் வந்ததில்லை உங்களுடைய போர்வையில் நான் இருக்கும் நேரத்தை தவிர. மலக்கு வந்து என் தோழர்களுக்காக பிரார்த்திக்க சொன்னார்கள்.

💠 இந்த செய்தியில் மலக்குமார்கள் புனிதமான இடத்திற்கு வருவார்கள் என நபி (ஸல்) கூறுகிறார்கள்  

💠 ஜும்மாவுடைய தினங்களில் மலக்குமார்கள் பள்ளிவாயில்களில் முதலாவதாக வரும் நபர்களை கணக்கெடுப்பார்கள்.

💠 மலக்குமார்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மண்ணால் படைக்கப்பட்டவர்கள் .

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 44

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 44

மலக்குமார்கள் வெட்க உணர்வு உள்ளவர்கள்

💠 நபி (ஸல்) அமர்ந்திருக்கும்போது தொடைப்பகுதி திறந்திருந்தது அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) வந்தபோது சாதாரணமாக இருந்தார்கள். அப்போது உஸ்மான் (ரலி) வருவதை அறிந்து ஆடையை சரி செய்ததை கண்ட ஆயிஷா (ரலி ) காரணம் கேட்டபோது மலக்குமார்களே வெட்கப்படக்கூடிய ஒருவரை கண்டு நான் வெட்கப்படக்கூடாத என்று கேட்டார்கள்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 43

மலக்குமார்கள் எங்கெல்லாம் வர மாட்டார்கள்

  • உருவமுள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள்
  • நாய் உள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள்

💠 நபி (ஸல்) ஒரு முறை தன் வீட்டில் தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு சிறிய நாய்குட்டி இருந்தது அதை வெளியே போட்டார்கள். பிறகு ஜிப்ரஈல் (அலை) இடம் நீங்கள் வருவதாக கூறிய நேரத்தில் வரவில்லையே என்று கேட்டபோது நாய் உள்ள வீடுகளுக்கு நாங்கள் வர மாட்டோம் என்று ஜிப்ரஈல் (அலை) கூறினார்கள்.

من أكل البصل والثوم والكراث فلا يقربن مسجدنا، فإن الملائكة تتأذى

مما يتأذى منه بنو آدم

💠 நபி (ஸல்)- யாரொருவர் வெங்காயம் பூண்டு போன்ற துர்நாற்றம் அடிப்பவையை உண்டாறோ அவர் மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். நிச்சயமாக ஆதமின் மகனுக்கு எரிச்சலூட்டக்கூடிய அனைத்து காரியங்களிலும் மலக்குகளும் எரிச்சலடைவார்கள்

عن أبي هريرة أن رسول الله – صلى الله عليه وسلم – قال : الملائكة تصلي

على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث ، اللهم اغفر له اللهم

ارحمه

💠 ஒரு மனிதர் தொழுகை முடிந்து அதே இடத்தில அமர்ந்திருக்கும் போது மலக்குமார்கள் அவருடைய பாவமன்னிப்பிற்காக அல்லாஹ் விடம் துஆ செய்து கொண்டே இருப்பார்கள் அவருடைய உளூ முறியும் வரை.