அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 42

மலக்குமார்கள் ஓசை வடிவிலும் உரையாடுவார்கள்:

قَالَ ابْنُ هِشَامٍ ، وَحَدَّثَنِي مَنْ أَثِقُ بِهِ ” أَنَّ جِبْرِيلَ ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ

وَسَلَّمَ فَقَالَ : أَقْرِئْ خَدِيجَةَ السَّلامَ مِنْ رَبِّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

” يَا خَدِيجَةُ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلامَ مِنْ رَبِّكِ ” ، قَالَتْ خَدِيجَةُ : اللَّهُ السَّلامُ وَمِنْهُ

السَّلامُ وَعَلَى جِبْرِيلَ السَّلامُ ” .

கதீஜா (ரலி) நபி (ஸல்) உடன் இருக்கும்போது நபி (ஸல்) கதீஜா (ரலி) இடம் ஜிப்ரஈல் இறைவன் உங்களுக்கு ஸலாம் கூறுவதாக சொல்கிறார் என்றார்கள்.  

💠 நபி (ஸல்) கதீஜா (ரலி) யிடம் ஜிப்ரஈல் உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையை  நன்மாராயம் கூறுகிறார் என்றார்கள்.

இந்த சம்பவங்களில் நபி (ஸல்) விற்கு ஓசை மட்டுமே கேட்டது.

💠 ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்’ என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார்.

புஹாரி :2

💠 நபி (ஸல்) உறங்கும்போது யாரும் எழுப்ப மாட்டார்கள். ஒரு முறை நபி (ஸல்) தூங்கிக்கொண்டிருந்த போது சுபுஹ் நேரம் கடந்து விட்டதால் உமர் (ரலி) சத்தமாக தக்பீர் கூறிக்கொண்டே இருந்த சப்தத்தில் விழித்தார்கள் என ஹதீஸில் காண்கிறோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 41

மலக்குமார்கள் பல தோற்றங்களில் வருவார்கள்

மலக்குமார்கள் மனித உருவத்தில் வந்தாலும் வந்தது மலக்கு தான் என்று உடனடியாக நபிமார்கள் அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பிறகு புரிந்து கொள்வார்கள்.

உதாரணம்:

💠 (அருவெறுப்பான தோற்றங்களில் வர மாட்டார்கள்)

💠 உம்மு ஸலமா (ரலி) – எங்கள் வீட்டிற்கு திஹ்யா அல் கலபீ வந்தார்கள் நபி (ஸல்) உடன் பேசிவிட்டு சென்றார்கள். அப்போது நபி (ஸல்) வந்தது யாரென்று தெரியுமா என்று கேட்டபோது நான் திஹ்யா என்றேன் அதற்கு நபி (ஸல்) இல்லை வந்தவர் ஜிப்ரஈல் (அலை) என்றார்கள். அது வரை அவரை திஹ்யா என்றே நினைத்திருந்தேன்.

💠 இப்ராஹிம் (அலை) மலக்குமார்களுக்கு சமைத்த கறியை உண்ணக்கொடுத்தார்கள்.

💠 மர்யம் (அலை) – (சூரா மர்யம் 19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்) என்று ஜிப்ரஈல் (அலை) என்று தெரியாமல் பிரார்த்தித்தார்கள்.

💠 லூத் (அலை) வீட்டில் மலக்குகள் வந்தபோது ஆரம்பத்தில் அவர்கள் மலக்குகள் என்று புரியாமல் அவர்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று தன் ஊராரிடம் கேட்டுக்கொண்டார்கள்.  

🌺 சூரா அல் ஹிஜ்ர் 15:68

قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ‏

(லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”

💠 அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நாங்கள் நபி (ஸல்) வின் சபையில் அமர்ந்துகொண்டிருக்கும்போது ஒரு மனிதர் வந்தார் அவருடைய முடி கருமையாக இருந்தது. ஆடை வெண்மையாக இருந்தது பிரயாணத்தின் எந்த அடையாளமும் தோன்றவில்லை.நபி (ஸல்) விடம் மறுமை எப்போது வரும் என்று கேட்டபோது நபி (ஸல்) கேட்கப்பட்டவரை விட கேட்பவரே அறிந்தவர் என்றார்கள். அவர் கேள்விகள் கேட்டு திரும்பியதும் நபி (ஸல்) வந்தவர் ஜிப்ரஈல் (அலை) என்று கூறும்வரை ஸஹாபாக்கள் அறிந்திருக்கவில்லை.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 40

மலக்குமார்கள் எண்ணிக்கை

قال : البيت المعمور ، يدخله كل يوم سبعون ألف ملك إذا خرجوا منه لم يعودوا

آخر ما عليهم ” .

நபி (ஸல்) – பைத்துல் மஹ்மூர் எனும் (மலக்குகளின் மஸ்ஜிதுக்குள்) ஒவ்வொரு முறையும் 70,000 மலக்குகள் செல்வார்கள் ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத்திற்கு திரும்ப வர மாட்டார்கள்.

🌺 அல் முத்தஸ்ஸிர் 74:31

……. ‌ؕ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ‌ؕ………

…..அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்;…..

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 39

மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும்.

🌺 சூரா அஸ்ஸஜ்தா 32:11

قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ

“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு ஒரு தனி மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

💠 முன்கர் நகீர் கபரில் விசாரிப்பவர்கள்.

💠 ரகீப் அதீத் வலப்புறமும் இடப்புறமும் இருந்து நம்முடைய நன்மை தீமைகளை எழுதும் மலக்குகள்.

💠 அது அவர்களின் தனிப்பட்ட பெயர்களா அல்லது அல்லாஹ்வால் நியமிக்க பட்ட அந்த குழுவின் பெயரா என்று நாம் அறியமுடியவில்லை.

💠 சொர்க்கத்தின் காவலாளி மலக்கு ரிள்வான் என்ற பெயரில் கருத்துவேறுபாடு இருக்கிறது.

💠 நரக காவலாளி மாலிக் என்பது குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

இஸ்ராஃபீல் என்ற மலக்கின் பெயரை நாம் ஹதீஸில் காண்கிறோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 38

  • மலக்குமார்கள் இருக்கிறார்கள் என நாம் நம்புகிறோம்.
  • மலக்குமார்களுக்கு பெயர்கள் உண்டு என நம்புகிறோம்.
  • மலக்குமார்கள் பெயர்களில் சிலவற்றை நாம் ஆதாரபூர்வமாக அறிகிறோம் உதாரணம் ஜிப்ரஈல், மீகாயீல், ….
  • மலக்குமார்கள் பெயர்களில் ஆதாரமற்ற பெயர்களும் நம்பப்பட்டு வருகிறது.

عن الزهري أخبرني ابن أبي نملة الأنصاري عن أبيه أنه بينما هو جالس عند

رسول الله صلى الله عليه وسلم وعنده رجل من اليهود مر بجنازة فقال يا محمد

هل تتكلم هذه الجنازة فقال النبي صلى الله عليه وسلم الله أعلم فقال اليهودي إنها

تتكلم فقال رسول الله صلى الله عليه وسلم ما حدثكم أهل الكتاب فلا تصدقوهم ولا

تكذبوهم وقولوا آمنا بالله ورسله فإن كان باطلا لم تصدقوه وإن كان حقا لم

تكذبوه

நபி (ஸல்) விடம் ஒரு யூதர் ஜனாஸா(மண்ணறையில் முன்கர் நகீர்; என்கின்ற மலக்குமார்களுடன்) பேசுமா என்றார்கள் அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே அறிந்தவன் என்றபோது ஜனாஸா(முன்கர் நகீருடன்) பேசும் என்று அவர் கூறினார் அப்போது நபி (ஸல்) வேதக்காரர்கள் உங்களிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை நீங்கள் பொய்ப்படுத்தவும் வேண்டாம் உண்மைப்படுத்தவும் வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புகிறோம் என்று கூறுங்கள் ஏனெனில் அவர்கள் கூறுவது உண்மையாயின் அதை பொய்ப்படுத்தக்கூடும் அவர்கள் கூறுவது பொய்யாயின் நீங்கள் அதை உண்மைப்படுத்த கூடும்.

عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا

عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – இஸ்ராயீலர்களிடமிருந்து வரும் செய்திகளை அறிவியுங்கள் அதில் தவறில்லை (ஆனால் அதில் உண்மையுமிருக்கலாம் பொய்யுமிருக்கலாம் ஆகவே நாம் அதை முழுமையாக நம்பி கூறாமல் இருப்பதே சிறந்தது)

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 37

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:31

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை

ஸூரத்துல் ஹாஃக்ஃகா 69:17

இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

🌷 அல்லாஹ்விற்கு பிரதிநிதி என்று கூறுவது மிகவும் வழிகெட்ட கொள்கையாகும்.

ஸூரத்துல் வாகிஆ 56:60

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ‏

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

🌷 அபூபக்கர் (ரலி )யை நோக்கி ஒருவர் நீங்கள் அல்லாஹ்வுடைய கலீஃபா என்று கூறியபோது அதை அபூபக்கர் (ரலி )தடுத்தார்கள் மேலும்  நான் அல்லாஹ்வின் தூதரின் கலீஃபா ஆவேன் என்றார்கள் .

ஸூரத்துல் பகரா 2:30

وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ؕ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا

وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌ؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ‏

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு வழித்தோன்றலை(பரம்பரையை பெருக்கக்கூடிய சந்ததிகளை) அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அதற்கு இறைவன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.

🌷 நபி (ஸல்) இரவில் வித்ர் தொழுகையில் தக்பீர் கட்டிய பிறகு கேட்கக்கூடிய துஆ

اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب

والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلفوا فيه من

الحق فإنك أنت تهدي من تشاء إلى صراط مستقيم

ஜிப்ரயீலுடைய மீக்காயீலுடைய இஸ்ராஃபீலுடைய இறைவனே என்று துஆ செய்கிறார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 36

அகீதா

மின்ஹாஜூல் முஸ்லிம்

பாகம் – 36

மலக்குமார்களை ஈமான் கொள்ளுதல்:

மலக்குமார்களை நம்பிக்கைக் கொள்ளுதல் நம்  கடமை:

ஸூரத்துன்னிஸாவு 4:136

وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏

எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.

🛑யூதர்கள் மலக்குகளில் சிலரை ஏற்றுக்கொண்டு சில மலக்குகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .

ஸூரத்துல் பகரா 2:98

مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓٮِٕکَتِهٖ وَ رُسُلِهٖ وَجِبْرِيْلَ وَمِيْكٰٮلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِيْنَ‏

எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

ஸூரத்துன்னிஸாவு 4:172

لَنْ يَّسْتَـنْكِفَ الْمَسِيْحُ اَنْ يَّكُوْنَ عَبْدًالِّلّٰهِ وَلَا الْمَلٰٓٮِٕكَةُ الْمُقَرَّبُوْنَ‌ؕ وَمَنْ يَّسْتَـنْكِفْ عَنْ عِبَادَ تِهٖ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ اِلَيْهِ جَمِيْعًا‏

(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்விற்கு  அடிமையாயிருப்பதைக் தாழ்வாக கருதமாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலை குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 35

💠 அல்லாஹ்வுடைய பண்புகள் மற்றும் பெயர்களை  நாம் எப்போதும் நினைவு கூறுபவர்களாக இருக்க வேண்டும்.

நபி (ஸல் )கவலையின் போது:

💠 اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ

فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ

عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ

قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي

யா அல்லாஹ் உனது அனைத்து பெயர்களைக்  கொண்டும் நான் துஆ கேட்கிறேன், நீ உனக்கு சூட்டிய பெயர்களாக இருந்தாலும் சரி உனது வேதத்தில் நீ கூறிய பெயர்களாக இருந்தாலும் சரி உனது நபிமார்கள் மூலம் அறிவித்த பெயர்களாக இருந்தாலும் சரியே. நீ யாருக்கும் அறிவிக்காமல் நீ வைத்திருக்கும் பெயர்களாக இருந்தாலும் சரியே அனைத்துப்  பெயர்களைக்  கொண்டும் உன்னிடம் நான் துஆ கேட்கிறேன். குர்ஆனை என் உள்ளத்தின் பசுமையான பகுதியாக்குவாயாக! என் இதயத்தின் ஒளியாக ஆக்குவாயாக! என் கவலையை போக்குவதாக ஆக்குவாயாக!அனைத்து கவலைகளையும் போக்கக்கூடியதாக ஆக்குவாயாக! என்று ஓதுவார்கள்.

💠 ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு அல்லாஹ்வின் பண்புகளையும் பெயர்களையும் உபயோகித்து துஆ செய்வது சிறந்ததாகும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 34

தெளிவான விஷயங்களில் விளக்கம் கூறலாம்.

ஸூரத்துல் ஜாஸியா 45:34

وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏

அன்றி, (அவர்களை நோக்கி) “இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை” என்றும் கூறப்படும்…

ஸூரத்து மர்யம் 19:64

وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا‌ ۚ‏

உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்

 ஆகவே இந்த வசனத்திற்கு இறைவன் மறந்து விடுவான் என்று அர்த்தமல்ல, மறுமையில் அவன் இத்தகையவர்களை கண்டு கொள்ள மாட்டான்  என்பதே பொருளாகும் ,என்று குர்ஆன் ஹதீஸின் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்

 يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ

فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ

بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ

لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ

ஒரு ஹதீஸில் நபி (ஸல் )இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உபதேசம் செய்யும்போது நீங்கள் உதவி தேடினால் அல்லாஹ்விடம் தேடுங்கள் என்று கூறும்போது அந்த ஹதீஸில் அல்லாஹ்வை உங்கள் முன்னால் காண்பீர்கள் என்று ஒரு வார்த்தை இடம்பெறும்.

ஸூரத்துல் அஃராஃப் 7:143

لَنْ تَرٰٮنِىْ…

மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது…

إنكم سترون ربكم عز وجل كما ترون القمر

நபி (ஸல்) – மறுமையில் நீங்கள் பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பது போல் உங்கள் இறைவனை  காண்பீர்கள்.

وعَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ نُورٌ

أَنَّى أراه رواه مسلم

அபூதர் (ரலி) நபி (ஸல்)ளிடம் நீங்கள் இறைவனைப் பார்த்தீர்களா”?, என்று கேட்டபோது அவன் ஒளியாயிற்றே! எப்படிப் பார்ப்பேன் என்று நபி( ஸல் )கூறினார்கள் (முஸ்லீம்)

ஆகவே تَجِدْهُ تُجَاهَكَ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டிய முறைப்படி புரிந்து கொள்ள வேண்டும்.

ஸூரத்துல் முல்க் 67:1

تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ

அவனது கையில் ஆட்சி இருக்கிறது …

ஆகவே அது கையல்ல, அது பலம் என்றெல்லாம் மாற்று விளக்கம் கூறுதல் கூடாது .

تكييف – அல்லாஹ்  உடைய பெயர்கள் பண்புகளை முறைமைப்படுத்துதல் (தன்னுடைய அறிவுக்கேற்றார் போல் புரிந்து கொள்ள)கூடாது.

அல்லாஹ்விற்கு உதாரணம் சொல்லக்  கூடாது.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 33

المشبه يعبد صنما والمعطل يعبد عدما

இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) – யார் இறைவனை ஒப்பிடுகிறாரோ அவர் சிலையை வணங்குகிறார்யார் இறைவனுக்கு பண்புகளே இல்லையென்றாரோ அவர் இல்லாமையை வணங்குகிறார்.

إن الله لا داخل العالم ولا خارجه ولا متصل به ولا منفصل عنه ولا فوقه ولا تحته

அஷ்அரிய்யாக்கள் கொள்கை – அல்லாஹ் உலகிலும் இல்லை, வெளியிலுமில்லை, ஒட்டியுமில்லை, பிரிந்துமில்லை  மேலுமில்லை, கீழு மில்லை என்று நம்புகிறார்கள்.

❣அல்லாஹ்விற்கு இடம் தேவையில்லை என்பதற்காக இதை கூறுகிறார்கள்.

ஆனால் அவர்களின் இந்த கொள்கையால் அல்லாஹ் இல்லை என்று ஒரு அர்த்தம் வரும் விளைவு ஏற்பட்டு விட்டது.

மேலும் சூஃபிக்கள் கூறுவது போல எங்கும் இறைவன் எதிலும் இறைவன் எல்லாம் இறைவன் என்ற கருத்தையும் இது உள்ளடக்கிவிட்டது. ஆகவே இறைவனின் பண்புகளை குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டது போன்று விளங்குவதே சிறந்ததாகும்.

تشبيه – ஒப்பிடுதல்

ஆகவே இறைவனை எவருடனும் ,எதனுடனும் ஒப்பிடுதல் கூடாது.

تاويله -மாற்று  விளக்கம்

இறைவனுக்கு மாற்று விளக்கங்கள் கூறக்கூடாது.