அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 32

⚜ அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், கோபப்படுகிறான், ரோஷமுள்ளவன், வெட்கமுள்ளவன், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய முகம், அல்லாஹ்வுடைய கெண்டைக்கால் என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகிறது. அது எப்படி கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே  ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கே உள்ள  தகுதியில் அது இருக்கிறது என்று நம்ப வேண்டும் அதை யாருடனும்  எதனுடனும் ஒப்பிட முடியாது;ஒப்பிடக் கூடாது.

ஸூரத்துல் பகரா 2:255

وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ

அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்து கொள்ள முடியாது…

ஸூரத்துல் பகரா 2:19

وَاللّٰهُ مُحِيْطٌ‌ۢ بِالْكٰفِرِيْنَ‏

அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.

⚜ இறைவனுக்குக் கோபம் உண்டு; ஆனால் அது உலகில் எவருடைய கோபத்தைப்  போன்றும் அல்ல.

அல்லாஹ் இரவின் கடைசி பகுதியில் முதலாம் வானத்திற்கு இறங்கி வருவதை கேள்வி கேட்பவர்கள் அல்லாஹ்வைப்  படைப்பினங்களுடன் ஒப்பிடுகிறார்கள். நேரத்தையும் காலத்தையும் படைத்தவன் அல்லாஹ் ,நேரமும் காலமும் இல்லாத காலத்தில் இருந்தவன் அல்லாஹ் என்பதை புரிந்து கொண்டால் விளக்கம் கொடுக்க முயற்சிக்க மாட்டார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 31

உதாரணங்கள் மூலமாகவே பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்

அல்லாஹ் கூறும் உதாரணங்கள்;

ஸூரத்துல் அன்கபூத் 29:43

وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ‌ۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ‏

இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

ஸூரத்துல் ஹஜ் 22:73

ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ

ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது.

அல்லாஹ்விற்கு உதாரணம் இல்லை:

ஸூரத்துஷ் ஷூஃறா 42:11

لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்

அவனுடன் எதையும் ஒப்பிடவும் முடியாது அவனைப்பற்றி அவன் கற்றுத்தந்ததை தவிர வேறெதுவும் நாம் புரிந்து கொள்ளவும் முடியாது. 

ஒப்பிட்டால் வழிகெட்டு விட நேரிடும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 30

(10) அல்லாஹ்வுடைய பண்புகளை அணுகும் நேரத்தில் தவிர்க்க வேண்டியவை

அல்லாஹ்வுடைய பண்புகளை (ஐஸ்பாத்) ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

அல்லாஹ் எது தனக்கு இருக்கிறது என்று சொல்கிறானோ அது அவனுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும் மேலும் அதற்கு உதாரணம் சொல்ல கூடாது…….,

تعطيل  ↔ நிராகரிப்பது

تشبيه/ تحريف ↔ ஒப்பிடுவது

تمثيل ↔ உதாரணம் சொல்லக்கூடாது

تكييف ↔ முறைப்படுத்துவது(நாம் செய்து காட்டுவது)

இமாம் மாலிக் இப்னு அனஸ் இடம் ஒருவர் அர்ஷில் அல்லாஹ் ஆகிவிட்டான் என்றால் என்ன?

الاستواء معلوم، والكيف مجهول، والإيمان به واجب، والسؤال عنه بدعة،

 ↔ الاستواء معلوم

இஸ்திவாஹ் என்றால் என்ன என்பது தெரிந்த விஷயம்

 எப்படி என்பது தெரியாது ↔ والكيف مجهول

 அதை நம்புவது கட்டாயமாகும் ↔ والإيمان به واجب 

 அதை பற்றி கேட்பது பித்அத்தாகும் ↔ والسؤال عنه بدعة

  • என்று கூறிவிட்டு கேள்வி கேட்டவரை வெளியேற்றச்சொன்னார்கள்.(கேள்வி கேட்டவரை வெளியேற்றியது பற்றி ஷேக் அல்பானி -இது இமாம் மாலிக்கின் காலகட்டத்தின் நிலைப்பாடு).
  • முஃபவ்விதா என்ற வழி கெட்ட கூட்டத்தினர் அல்லாஹ் அர்ஷில் ஆகிவிட்டான் என்றால் என்ன என்றே எங்களுக்கு தெரியாது என்று கூறினர். அல்லாஹ்வுடைய விஷயத்தில் கருத்து இல்லை என்பார்கள்.  
  • குர்ஆன் படைக்கப்பட்டதா இல்லையா என்ற கருத்துவேறுபாட்டில் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலிடம் இதை பற்றி ஸஹாபாக்கள் பேசவில்லையே நாம் பேச வேண்டுமா என்று கேட்டபோது ஸஹாபாக்களின் காலத்தில் அதை பேசியிருக்க கூடாது ஆனால் இன்றைக்கு அதை நாம் பேச வேண்டும் என்றார்கள். பித்னா உண்டானதற்கு பின்னால் மௌனம் காப்பது தவறு.

🌙 சூரா அஷ்ஷூரா 42:11

لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

இறைவனது கேட்டலும் பார்த்தலும் நம்முடைய கேட்டலும் பார்த்தலுக்கும் போல அறவே அல்ல. அதை நம்முடன் ஒப்பிடுவதும், நிராகரிப்பதும், உதாரணம் கூறுவதும், அதை போன்று செய்து காட்டுவதும் மிகப்பெரும் தவறாகும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 29

(9) அல்லாஹ்வுடைய சில பெயர்களும் பண்புகளும் அனைத்து  கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

உதாரணம்:-

الصمد – தேவைகள் அற்றவன், தன்னகத்தே பூரணமானவன் (அனைத்து பூரணத்துவமும் கொண்டவன் அணைத்து குறைகளையும் விட்டு பரிசுத்தமானவன்)

العظيم – மகத்தானவன் (குறையே இல்லாத முழுமையான நிறைவானவன்)

المجيد – கண்ணியம் தூய்மை என அனைத்து பண்புகளையும் குறிக்கக்கூடியது .

  • அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் சம்மந்தமான விஷயத்தில் அதிகம் தெரிந்து கொள்ள இப்னு உதைமீன் அவர்களது القواعد المثلى (கவையிதுல் முத்லா) போன்ற சில புத்தகங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 28

(8) இறைவன் எதையெல்லாம் தனக்கு இல்லையென்று மறுக்கிறானோ அதற்க்கெதிரானது இறைவனுக்கு உண்டு என நம்புதல்

🌙 சூரா அல் கஹ்ஃப் 18:49

ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا‏ 

ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.

  • இப்படி அநியாயம் செய்ய மாட்டான் என மறுக்கும்போது இறைவன் அனைவருக்கும் நீதியில் முழுமையாக இருப்பான் என நாம் நம்ப வேண்டும்.

உதாரணம்

  • இறைவன் மறக்கமாட்டான் என்று இறைவன் கூறினால் இறைவன் மறக்கவே மாட்டான் என்று நம்புவதோடு இறைவன் அனைத்தையும் அறிந்தவன் ஞாபகமுள்ளவன் ஒன்றும் அவன் அறிவிலிருந்து தப்பாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  • இறைவன் தனக்கு மனைவி குழந்தைகள் இல்லையென்று கூறும்போது தன்னகத்தே பரிபூரணமாக எந்தத்தேவையும் இல்லாதவனாக இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 27

(7) صفة الكمال – இறைவனுடைய பண்புகளில் அவன் பூரணமானவன்

மனிதர்களின் விஷயத்தில் பலகீனமாக இருக்கும் பல விஷயம் இறைவனின் விஷயத்தில் பூரணத்துவமாக இருக்கிறது. எதெல்லாம் இறைவனின் விஷயத்தில் எது பூரணத்துவமோ அது முழுமையாக அவனுக்கு இருக்கிறது. எதுவெல்லாம் இறைத்தன்மைக்கு குறையாக அமையுமோ அது இறைவனிடம் அறவே இல்லையென நாம் நம்பவேண்டும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 26

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 26

(6) இறைவனுடைய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் வரையறை இல்லை

இறைவன் சார்ந்த அனைத்தும் வரையறை அற்றது

إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ

அபூஹுரைரா ரலி – அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கிறது அதை யார் அதை புரிந்து நடைமுறைப்படுத்தி மனனமிடுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்(புஹாரி)

  • 99 திருப்பெயர்கள் மட்டுமே இருக்கிறது என்று நாம் இதை புரிந்து கொள்ளக்கூடாது.
  • 99 பெயர்கள் கொண்ட ஹதீஸுக்கு அபூதாவூத் திர்மிதி போன்ற கிரந்தங்களில் வருபவை ஆதரமற்றவையாகும்.
  • குரான் சுன்னத் அடிப்படையில் அல்லாஹ் வின் திருப்பெயர்களை 100 க்கும் அதிகமான பெயர்களை சிலர் தொகுத்துள்ளார்.

உதாரணம் :

إن الله عز وجل حليم، حيي ستير يحب الحياء والستر فإذا اغتسل أحدكم فليستتر

நபி ஸல் – நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவனாகவும் மறைத்துக்கொள்ளக்கூடியவனாகவும் இருக்கிறான் அடியார்கள் தவறு செய்வதை பார்த்து மிகவும் ரோஷப்படக்கூடியவனாக இருக்கிறான்.

  • ஷேக் அல்பானியில் வாழ்க்கையில் மிக சோதனையான நேரத்தில் கூட அல்லாஹ்வின் பெயரை சத்தார் என்று ஒருவர் அழைத்தபோது சித்தீர் என்று தான் ஹதீஸில் வருகிறது ஆகவே அப்படி அல்லாஹ்வை அழையுங்கள் என்று கற்றுக்கொடுத்தார்.
  • المُحيِى என்ற தனிப்பெயர் இறைவனுக்கு இல்லை.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 25

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 25

(5)அல்லாஹ் எதிரான பண்புகளை சொல்லும்போது அது யாருக்கு உரியதோ அவர்களுக்கு மட்டும் தான்  

❤ சூரா அல் அன்ஃபால் 8:30

وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

   அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

❤ சூரா அல்ஃபத்ஹ் 48:6

غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ

   இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்.

  • இது போன்ற பண்புகளை தனியாக புரிந்து கொள்ளக்கூடாது. அந்த வசனத்தில் அல்லாஹ் யார் மீது அந்த பண்பை விளக்கியிருக்குறான் என்பதோடு சேர்த்து விளங்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒரே நேரத்தில் பல தன்மைகளை வெளிப்படுத்தும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 24

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 24

4 – அல்லாஹ்வுடைய பண்புகளை பொதுவாக 2 ஆக பிரிக்கலாம்

சில உதாரணங்கள்:-

அர்ஷில் இருக்கிறான்

فقال لها الرسول : أين الله ؟ فقالت : في السماء، قال من أنا؟ قالت: أنت رسول

الله، قال: أعتقها فإنها مؤمنة) رواه مسلم

நபி (ஸல்) – ஒரு பெண்மணியிடம் اين الله؟ -அல்லாஹ் எங்கே இருக்கிறான்?-(في السماء)

அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என அந்த பெண்மணி பதிலளித்தார்கள்-

(أعتقها فإنها مؤمنة) அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அவள் முஹ்மினான பெண் (முஸ்லீம்)

அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்ற செய்தி குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியில் இருக்கிறான் என்பதை குறிக்க استوى என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சொல்லை நேரான வழியில் உள்ள அறிஞ்சர்களும் 2 விதமாக விளக்குகிறார்கள்.

الاستواء على العرش – جالس على عرشه-

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களின் மகன் அபூஅப்துல்லாஹ் அவர்களின் புத்தகத்தில் – அல்லாஹ் அர்ஷின் மேல் இருக்கிறான் என்பதற்கு அர்ஷின் மேல் அமர்ந்திருக்கிறான் என்று விளக்கம் தந்துள்ளார்கள். ஏனெனில் الاستواء என்ற சொல்லுக்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது. குர்ஆனில் அல்லாஹ் இந்த சொல்லுக்கு அமர்ந்தான் என்ற அர்த்தத்தை உபயோகித்திருக்கிறான்.

❤ அல் முஃமினூன் : 23:28

فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ

الظّٰلِمِيْنَ‏

   “நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!

❤ சூரா அல் ஜுக்ருஃப் 43:13

لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِىْ

سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ‏

   அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.  

  • அல்லாஹ் அர்ஷின் மீது ஆகிவிட்டான் என்றால்  மனிதர்கள் இருப்பது போல அல்ல என்பதை  புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கம்:

அல்லாஹ்வுடைய பண்பை பொறுத்தவரை 2 ஆக பிரிக்கிறோம்

صفات ذاتية  – அல்லாஹ்வுடைய இருப்போடு சம்மந்தப்பட்ட பண்புகள்.

உதாரணம்:

  • அல்லாஹ் அறிவுள்ளவன் இது இருப்போடு சம்மந்தப்பட்டது.
  • அல்லாஹ்வுடைய சக்தி அவனுடைய இப்போது சம்மந்தப்பட்டது அல்லாஹ் ஆட்சியதிகாரம் உள்ளவன், அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன்,  
  • அல்லாஹ்விற்கு கை இருக்கிறது என்று ஹதீஸில் வந்தால் அதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் நாமாகவே  அவனுக்கு உடல் இருக்கிறது என்று கூறிவிடக்கூடாது.

صفات فعلية – அல்லாஹ்வுடைய செயலோடு சம்மந்தப்பட்ட பண்புகள்.

இறைவன் வருகிறான், மழையை இறங்குகிறான்.

உதாரணம்

❤ சூரா அல் ஃபஜ்ர் 89:22

وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا

   இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

  • (இறைவனுடைய பேச்சை இரு கோணத்தில் நோக்க வேண்டும் அவன் பேசும் இயல்புடையன் ஆற்றலுடையவன் என்று கூறும்போது அது அவனுடைய இருப்போடு சம்மந்தப்படுகிறது ஆனால் வேதம் (குரான்) அவன் நாடினால் செய்யக்கூடிய செயல்களோடு சம்மந்தப்பட்டது. ஆகவே அவனுடைய பேச்சு என்பது இந்த இரண்டோடும் சம்மந்தப்பட்டதாகும்)

● ஆகவே அல்லாஹ் அர்ஷின் மீது ஆகிவிட்டான் என்பது அவனது செயலோடு (فعلية) அடங்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 23

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 23

(3)அல்லாஹ் தனது பண்பை மட்டும் சொல்லியிருந்தால் அதில் அவனுடைய பெயர் அடங்காது

உதாரணம் – 1

❤ சூரா அஷ்ஷூரா 42:49 , 50

يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ 

49) தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ‏

50) அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும்(குழந்தை பெறாதவர்களாகவும்) செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.

  • இந்த வசனத்தை வைத்து அல்லாஹ்விற்கு வாஹிப் என்ற பெயரை நாமாக சூட்டக் கூடாது மாறாக அல்லாஹ் தனக்குத் தானே குரானிலோ ஹதீஸிலோ சூட்டியிருந்தால் மட்டுமே அந்த பெயரை நாம் உபயோகிக்க வேண்டும். ஹதீஸுகளில் நாம் பார்க்கும்போது வஹ்ஹாப் என்ற பெயர் தான் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

உதாரணம் – 2

اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏

நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்

  • இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து அல்லாஹ்விற்கு முரீத் என்ற பெயரை நாமாகவே சூட்டி விடக்கூடாது. ஏனெனில் இங்கு தனது பண்பை தான் அல்லாஹ் கூறினான் பெயரை கூறவில்லை.