يُؤمِنُ المُسلِمُ بِما للهِ تَعالى مِن اَسماءٍ حُسنى, و صِفاتٍ عَليا, ولا يُشرِكُ غَيرُهُ تَعالى فيها, و لا يَتَأَوَّلُها فَيُعَطِّلُها ولا يُشَبِّهُها بِصَفاتِ المُحَدِّثِينَ فَيُكَيِّفُها أَوْ يُمثِلُها وذلك مَحالٌ
فَهُوَ اِنَّما يَثبِتُ اللهِ تَعالى ما أَثبَتَ لِنَفسِهِ, واثبَتَهُ لَهُ رَسولُ مِن الاَسماءِ والصِّفاتِ, ويَنفى عَنهُ تَعالى ما نَفاهُ عَنهُ نَفسِهِ, ونفاهُ عَن نَفسِهِ , و نفاهُ عَنهُ رَسولُ مِن كُلِّ عَيبٍ ونقصٍ, اِجمالاً و تَفصيلاً, و ذلك لِلأدِلَّةِ النَّقلِيَّةِ والعَقلِيَّةِ الآتِيةِ
(1) அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் தன்னகத்தே அழகானவை
எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன.
لا تقولوا السلام على الله فإن الله هو السلام
இப்னு மசூத ரலி- நபி ஸல் – அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறவேண்டாம். நிச்சயமாக அல்லாஹுவே சலாமாக இருக்கிறான்(புஹாரி, முஸ்லீம், அபூதாவூத்,திர்மிதிம் நஸயீ)
🍭 மார்க்க அறிஞ்சர்கள் துஆ கேட்கும்போது அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் பண்புகளை சொல்லி துஆ கேட்டல் ஒரு அழகிய முறை என்று குறிப்பிடுகிறார்கள்.
[highlight color=”orange”]அல்லாஹ்வுடைய பெயர்களை மறுத்தவர்களில் நபி(ஸல்) வின் உம்மத்தில் ஜாஹிலிய்யா மக்கள்[/highlight]
நபி(ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹி ரஹ்மானி ரஹீம் என்று எழுத் சொன்னபோது எங்களுக்கு அல்லாஹ்வை தெரியும் ஆனால் ரஹ்மான் என்ற பெயர்கள் வேண்டாம் ஆகவே பிஸ்மில்லாஹ் என்று மட்டும் எழுதுங்கள் என அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வுடைய பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் என்று நம்புதல் :
❈ உலகத்தில் முதல் முதலாக ஷிர்க் வந்தது தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் தான்
நூஹ் (அலை) யின் சமூகத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் இறந்த போது அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களது கப்ருகளை கட்டி நேசத்தை காட்டி காலப்போக்கில் அவர்களையே வணங்க ஆரம்பித்து ஷிர்க் செய்தார்கள்.
❈ நபி (ஸல்) வின் உம்மத்தில் முதல் முதலாக ஷிர்க் வந்தது அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் விஷயத்தில் தான்
إن الشيطان قد يئس أن يعبد بأرضكم هذه، ولكن قد رضي بما تحقرون من
أعمالكم
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நிச்சயமாக ஷைத்தான் இந்த (அரபு)பூமியில் அவனை வணங்கப்படுவதில் நம்பிக்கையிழந்துவிட்டான் ஆனால் நீங்கள் சிறிதாக நினைக்கும் பாவங்கள் மூலம் உங்கள் அமல்களை அழிப்பான்.(முஸ்லீம்)
🍭அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரியவன் என்று குர்ஆனில் பல முறை ஞாபகப்படுத்துகிறான்
🍭தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனை வணங்கவேண்டும் என்பதை தான் வலியுறுத்தினார்கள்.
🍭நபி (ஸல்) – மறுமையில் தூதர்களிடம் அல்லாஹ் தனது மார்க்கத்தை பரப்பினார்களா என்று கேட்பான் அவரால் ஆம் என்றதும் அதற்கு நம்முடைய உம்மத்துக்கள் சாட்சியாக இருப்பார்கள்.
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
(நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்
🍭நபி ஸல் – மறுமையில் நரகில் இருப்பவரிடம் அல்லாஹ் கேட்பான் இந்த உலகத்தையும் அதில் உள்ளவரையும் பகரமாக தந்து இந்த நரகை விட்டு வெளியேற நீ விரும்பவில்லையா என்று கேட்பான் அதற்கவன் ஆம் என்றதும் அல்லாஹ் கூறுவான் அதை விட எளிமையானதை தானே உலகில் உன்னிடம் நான் கேட்டேன் என்று பதில் கூறுவான்.
جاء رجل من بني فزارة إلي النبي – صلى الله عليه وسلم – فقال:” إن امرأتي
ولدت غلامل أسود – وهو يريد الانتفاء منه – فقال له: (هل لك من إبل؟)، قال:
نعم، قال: ( ما ألو انها؟) قال: حُمْر، فقال له: (هل فيها من أورق؟) ، قال : نعم،
قال (فأنى كان ذلك؟) ، قال : أراه عرقٌ نزعه، قال: (فلعل ابنك هذا نزعه. عرق)
، ولم يرخص له في الانتفاء منه” متفق عليه
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) விடம் ஒருவர் வந்தார் – என் மனைவி கருப்பான குழந்தையை பெற்றுள்ளார். அப்போது நபி(ஸல்) – உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கிறதா ? – ஆம் – அதன் நிறங்கள் என்ன ? – சிவப்பு – அதில் கருப்பு சார்ந்த நிறம் இருக்கிறதா ? – ஆம் – எப்படி வந்தது ? – அது அதன் பரம்பரையில் அந்த நிறம் இருந்திருக்கலாம் – நபி (ஸல்) – உன் பிள்ளையும் உன்னுடைய பரம்பரையில் ஒருவரின் நிறமாக இருந்திருக்கலாம். (புஹாரி, முஸ்லீம்)
❀ இயன்ற வரை நம்முடைய வாதங்களை குர்ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் எடுக்க வேண்டும்.
கருத்துரைகள் (Comments)