இறைவன் கேட்கும் சில கேள்விகள்19

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 19

ஸூரத்து யாஸீன் 36: 77 , 78 , 79 , 80 , 81

اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏

(77) மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.

 நபி (ஸல்) விடம் ஒருவர் வந்து ஒரு எலும்பு துண்டை காண்பித்து இதை அல்லாஹ் உயிர்த்தெழ செய்வானா? என்று கேட்டபோது அல்லாஹ் கேட்கிறான்

وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَهٗ‌ ؕ قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ‏

(78) மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

قُلْ يُحْيِيْهَا الَّذِىْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ‌ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمُ ۙ‏

(79) “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

اۨلَّذِىْ جَعَلَ لَـكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْـتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ‏

(80) “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

اَوَلَيْسَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْؔؕ بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ

الْعَلِيْمُ‏

(81) வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.

பனீ இஸ்ராயீல் 17: 49 , 50 , 51 ,

وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏

(49) இன்னும:; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًا‏

(50) (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.

اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِىْ صُدُوْرِكُمْ‌ۚ فَسَيَـقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَا‌ ؕ قُلِ الَّذِىْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍ‌ ۚ

فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَ‌ ؕ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا‏

(51) “அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!

ஸூரத்துந் நாஜிஆத் 79: 43 , 44

فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ‏

(43)அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ‏

(44)அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

இறைவன் கேட்கும் சில கேள்விகள்18

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 18

🔶 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59

وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗ‌ۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ‏

(57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‌ۚ‏

(58) அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான்.

يَتَوَارٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖ ؕ اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّـرَابِ‌ ؕ اَلَا سَآءَ مَا يَحْكُمُوْنَ‏

(59) எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?

🔶 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் 37:149 , 150 , 151 , 152 , 153

فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَۙ‏

(149) (நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.

اَمْ خَلَقْنَا الْمَلٰٓٮِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ‏

(150) அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?

اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَۙ‏

(151)“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”

وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏

(152) “அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!

اَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِيْنَؕ‏

(153) (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?

 

இறைவன் கேட்கும் சில கேள்விகள்17

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 17

🔶 ஸூரத்துல் கஹ்ஃபு 18:51 , 52

مَّاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا‏

(51) வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

وَيَوْمَ يَقُوْلُ نَادُوْا شُرَكَآءِىَ الَّذِيْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَّوْبِقًا‏

(52) “எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”

 

இறைவன் கேட்கும் சில கேள்விகள்16

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 16

 கிறிஸ்துவர்களின் இணைவைப்பு :

கிறிஸ்துவர்கள் அனைத்து சிலைகளையும் வணங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மகன் என்று கூறி அந்த சிலையை மட்டும் வணங்குவார்கள். திரியேகத்துவம் (இறைவன் 3 – பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்ற பெயரில் ஷிர்க் வைத்தார்கள்.

❤ ஸூரத்துன்னிஸாவு 4:171

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

❤ ஸூரத்துல் முஃமினூன் 23:91

مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ‌ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ

عَلٰى بَعْضٍ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏

   அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 15

❤ ஸூரத்து லுக்மான் 31:11

هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ

   “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.

 முஸ்லிம்களில் சிலர் அறியாத மடத்தனத்தால் இரு விஷயங்கள் கூறினார்கள்.

ஸுலைமான் (அலை) அல்லாஹ்வின் அனுமதி பெற்று படைத்த உயிர்கள் தான் வௌவால், அண்ணாசி, முந்திரி என்றும்,

நபி படைத்ததால் தவறுதலாக படைத்துவிட்டார்கள் என்றும் ஷிர்குல் ருபூபிய்யாஹ் – படைத்தலில் இணைவைத்தல் செய்கிறார்கள்.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 14

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 14

இஸ்லாம் இயற்கை மனநிலைக்கு ஒப்பான மார்க்கமாகவே இருக்கிறது:

♻ தந்தையின் வீட்டை விட்டும் தொழிலை விட்டும் பாரம்பரியத்தை விட்டும் மாறும் மனிதனுக்கு தந்தையின் கொள்கைக்கு மாற்றமாக செல்வதற்கு என்ன தடை?

🔶 ஸூரத்துல் பகரா 2:170

▶ மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

இறைவன் நம்  உள்ளத்தை தான் பார்க்கிறான்.

♻ ஆதாரம் : மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில்,”நீ என் அடிமை நான் உன் இறைவன் “என்று கூறிய மனிதனை அல்லாஹ் குற்றம் பிடிக்கவில்லை, ஏனெனில் அவன் உள்ளம் மாறவில்லை.

🔶 ஸூரத்துந் நஹ்ல் 16:106

எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய உள்ளம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

 இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு ஒரு நாளும் அறிவு தடையாக இருப்பதில்லை மாறாக தடையாக இருப்பது பொருளாதாரம், கலாச்சாரம், குடும்பம் போன்ற உலக விஷயங்கள் மட்டுமே

 

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 13

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 13

 ஸூரத்துல் பகரா 2:258

اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ

وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا

مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۚ

   அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

 ஸூரத்துர் ரஃது 13:16

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ قُلِ اللّٰهُ‌ؕ قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ لَا يَمْلِكُوْنَ

لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا‌ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ اَمْ هَلْ تَسْتَوِى الظُّلُمٰتُ

وَالنُّوْرُ ۚ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَـلْقُ عَلَيْهِمْ‌ؕ قُلِ اللّٰهُ خَالِـقُ كُلِّ

شَىْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ

   (நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.

قَالَ عَبْدُ اللهِ بْنُ قَيْسٍ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَحَدٌ أَصْبَرَ عَلَى

أَذًى يَسْمَعُهُ مِنَ اللهِ تَعَالَى، إِنَّهُمْ يَجْعَلُونَ لَهُ نِدًّا وَيَجْعَلُونَ لَهُ وَلَدًا وَهُوَ مَعَ ذَلِكَ

يَرْزُقُهُمْ وَيُعَافِيهِمْ وَيُعْطِيهِمْ»

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் உங்கள் இறைவனை விட பொறுமைசாலி ஒருவரும் இல்லை. இறைவனுக்கு மனைவி குழந்தைகள் உள்ளார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், இறைவன் அவர்களுக்கும் உணவையும் பானத்தையும் வழங்கிக் கொண்டுள்ளான்.(முஸ்லீம்)

 ஸூரத்துந் நஹ்ல் 16:17

اَفَمَنْ يَّخْلُقُ كَمَنْ لَّا يَخْلُقُ‌ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏

   (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 12

✿ மக்காவில் இருந்த இணைவைப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்?

யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களைத் தவிர அதிகமானவர்கள் மறுமையை நம்பாத இணைவைப்பாளர்கள்,

 எனவே தான் நாங்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா? தண்டிக்கப்படுவோமா?என்றெல்லாம் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர்.

 ஸூரத்து ஃபாத்திர் 35:40

قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ

لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ ۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ

بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا‏

   “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்)

இந்த உலகில் வேதம் என்று நம்பக்கூடிய எதை எடுத்தாலும் அதில் ஏகத்துவத்தை மாற்ற அல்லது அழிக்க எவராலும் முடியவில்லை என்பதே பிற மதத்தவரும் பெரும் சவாலாகவும் அதில் அவர்களுக்கு படிப்பினையும் இருக்கிறது.

 ஸூரத்துல் அஹ்காஃப் 46:4

قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى

السَّمٰوٰتِ‌ؕ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

   “நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

 ஸூரத்துல் ஹஜ் 22:73

   மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 11

இணைவைப்பவர்களை நாம் இரு பிரிவாக பிரிக்கலாம்.

  1. மறுமையை நம்பாமல் இறைவனுக்கு இணைவைத்தல்.
  2. மறுமையை நம்பிக் கொண்டு இறைவனுக்கு இணைவைத்தல்.

விளக்கம்

நாயாக பிறப்பது தண்டனை அல்ல, அந்த நாய்க்கு தான் சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை என்று உணர வைப்பது தான் தண்டனை.

இஸ்லாம் கூறும் தண்டனை

ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, எந்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறோம் என்று அறிந்தே அனுபவிப்பார்கள்.

 ஸூரத்துல் முல்க் 67:11

فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ‌ۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏

   (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் – எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.

 ஸூரத்துந் நாஜிஆத் 79:35

يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ‏

   அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

 ஸூரத்துல் ஃபஜ்ரி 89:23

وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏

➥   அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது – அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

من كان يؤمن بالله واليومن الآخر فليكرم ضيفه

அபூஹுரைரா (ரலி) – யார் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் (புஹாரி, முஸ்லீம்).

من كان يؤمن بالله واليومن الآخر فليقل خيرا أوليصمت

அபூஹுரைரா (ரலி) – யார் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும் அல்லது வாய்மூடி மௌனமாக இருக்கட்டும் (புஹாரி, முஸ்லீம்).

من كان يؤمن بالله واليومن الآخر فليكرم جاره

அபூஹுரைரா (ரலி) – யார் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் அண்டை வீட்டாருக்கு நல்லதையே செய்யட்டும் (புஹாரி, முஸ்லீம்).

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 10

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 10

ஷிர்க் மற்றும் குஃப்ர்

 ஸூரத்துல் பய்யினா 98:6

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمْ

شَرُّ الْبَرِيَّةِ ؕ‏

   நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

☘ முஷ்ரிக் மற்றும் காஃபிர் – இஸ்லாத்திற்கு வெளியே உள்ள அத்தனை போரையும் குறிக்கும்.

((إذا اجتمعا افترقا، وإذا افترقا اجتمعا))

ஈமான் இஸ்லாம் – குஃப்ர் ஷிர்க் :

இந்த இரண்டு வார்த்தைகளையும் அல்லாஹ் ஒரே இடத்தில் உபயோகித்தால் அதன் கருத்து வெவ்வேறாக இருக்கும் வெவ்வேறு இடத்தில் (அல்லாஹ்) உபயோகிக்கும் போது கருத்து ஒரே கருத்தாக இருக்கும்.

 ஸூரத்துல் ஹுஜுராத் 49:14

قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا‌ ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰـكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِىْ قُلُوْبِكُمْ‌ ۚ

وَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـٴًــــا‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

   “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

[highlight color=”orange”]அல்லாஹ் தன் திருக் குர் ஆனில் காஃபிர், முஷ்ரிக் இவர்கள் இருவரையும் வேறுபடுத்தவில்லை.[/highlight] முனாஃபிக்குகளைத் தான் காஃபிர்களை விட மிகவும் மோசமானவர்கள் என்று கூறுகிறான்.

 ஸூரத்துன்னிஸாவு 4:145

اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ‌ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ‏

   நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.