இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 9

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 9

 ஸூரத்துல் கஸஸ் 28: 71, 72, 73

(71). (நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?

(72). “கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!

(73). இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

 பனீ இஸ்ராயீல் 17:67

وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا نَجّٰٮكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا‏

   இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் – இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.

 ஆபத்தான கட்டத்தில் செயற்கையாக உருவாக்கிய அனைத்தும் இல்லாமல் போய் விடும்.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 8

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 8

 ஸூரத்துல் வாகிஆ 56: 58, 59, 60, 63, 64, 65, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76

(58). (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

(59). அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

(60). உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

(63). (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

(64). அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

(65). நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

(68). அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

(69). மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

(70). நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

(71). நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

(72). அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

(73). நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.

(74). ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

(75). நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

(76). நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 7

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 7

 ஒரு அரபு கிராமவாசியிடம் இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிந்து கொண்டீர்? – ஒட்டகத்தின் விட்டை அந்த வழியாக ஒட்டகம் சென்றிருக்கும் என்று சொல்வது போல ஒருவரது காலடியை கண்டு ஒருவர் இவ்வழியாக நடந்து சென்றார் என்று சொல்ல முடியுமென்றால், இவ்வளவு பெரிய வானத்தை, அலை கடலை காணும் போது அது படைத்தவன் இருக்கிறான் என்று தெரியவில்லையா? என்று கேட்டார் என கூறுவார்கள்.

 குர்ஆனைப் போன்ற ஒரு வசனமெனும் கொண்டு வாருங்கள் என்ற அல்லாஹ்வின் சவால் யாராலும் முறியடிக்க முடியாது.

  ஸூரத்துன்னிஸா 4:82

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏

   அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

 உலகத்தில் யாருக்கும் நான்தான் வானத்தை படைத்தேன் மற்ற எதையும் படைத்தேன் என எவராலும் சொல்லமுடியவில்லை.

 தன்னை தானே இறைவன் என்று கூறிய எவரும் நான்தான் இதை படைத்தேன் அதை படைத்தேன் என்று கூற முடியவில்லை.

 ஸூரத்து மர்யம் 19:68

فَوَرَبِّكَ لَـنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَــنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَـنَّمَ جِثِيًّا‌ ۚ‏

   ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 6

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 6

 ஸூரத்துத் தூர் 52: 35, 36

اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏

   அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?

اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ‏

   அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.

 ஸூரத்துல் முஃமின் 40:57

لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏

   நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

 ஸூரத்துல் அன்பியா 21:22

لَوْ كَانَ فِيْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَـفَسَدَتَا‌ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ‏

   (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 5

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 5

 ஸூரத்து மர்யம் 19: 66, 67, 68, 69

وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا

   (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.

اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏

   யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

فَوَرَبِّكَ لَـنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَــنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَـنَّمَ جِثِيًّا‌ ۚ‏

   ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

ثُمَّ لَـنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا‌ ۚ‏

   பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 4

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 4

 ஸூரத்துல் ஜாஸியா 45:24

وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ

مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏

   மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.

 பனீ இஸ்ராயீல் 17:85

وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏

   (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 3

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 3

 ஸூரத்துல் அன்ஃபால் 8:42

لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏

   அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) – நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

 ஸூரத்துல் முஃமினூன் 23:115

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏

➥   “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)

 ஸூரத்துல் கியாமா 75:36

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ‏

➥  வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 2

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 1

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 13

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 13

மனிதனுடைய உள்ளம் ருபூபிய்யத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. நோய் ஏற்பட்டாலும் குணமடையும் போதும் அது இறைவனின் ஏற்பாடு என்பது மனிதன் புரிந்து தான் இருக்கிறான்.

இறைவன் தான் இந்த முழு உலகத்தையும் தனித்து ஆள்கிறான். அவன் ஒருவன் தான் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடுகின்றான் வேறு கொண்டாடியதும் இல்லை.

 ஸூரத்து யூனுஸ் 10:31

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

 ஸூரத்து யூனுஸ் 10:32

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

இறைவன் ஒருவனால் தான் படைப்புகள் உருவாக்கப்பட்டன என நம்புதல் படைப்பிலும் நிர்வாகத்திலும் இறைவன் தனித்தவன்.