அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 12

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 12

உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு 

 ஸூரத்து ஹூது 11:6

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ

كِتٰبٍ مُّبِيْنٍ

   இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

وعن مصعب بن سعد – رضى الله عنه – قال : رأى سعد أن له فضلا على من

دونه، فقال رسول الله عليه وسلم: ” هل تنصرون وترزقون إلا بضعفانكم ؟!.

رواه بحاري  – 5232

   ஸஅத்  இப்னு அபீ வகாஸ் (ரலி) இடம் நபி (ஸல்) – உங்களுக்கு உணவு கிடைப்பதோ  உதவி கிடைப்பதோ உங்களில் உள்ள பலஹீனர்களைக் கொண்டுதான்  

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 11

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 11

அனைத்தையும் படைத்தவன் இறைவன் ஒருவனே 

1. படைத்தவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்புகளே  என்பது உலகில் அனைவரும் ஏற்றுக்கொண்டதே. வேறு ஒருவன் படைத்தான் என எவரும் உரிமை கொண்டாடியதும் இல்லை. 

 ஸூரத்துல் அஃராஃப் 7:54

اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏

   படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் 37:96

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ

   “உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 10

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 10

இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள்

இந்த உலகத்தில் அனைத்தும் ஒரு முறையில் இருப்பதே இறைவன் இருப்பதற்கான ஆதாரம் தான். (கருவறையில் வடிவமைப்பவன் இறைவனே. அதை மற்ற எவராலும் முடியாது)

❤ சூரா பனீ இஸ்ராயீல் 17:85

وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا

   (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 9

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 9

சிந்தனை பூர்வமான ஆதாரங்கள்
(இறைவன் இருப்பிற்கு)

 இந்த உலகத்தில் பல விதமான படைப்புகள் இருப்பது இறைவன் இருக்கிறான் என்பதற்கான அடையாளமாகும். நாம் உலகில் காணும் எதையும் தானாக வந்ததல்ல அதை செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மனதிற்கு தெரிகிறது. ஆகவே இவ்வளவு பெரிய உலகம் தானாக உருவாக வாய்ப்பில்லை.

 இறை வேதம் (குர்ஆன்) நம்மிடம் இருப்பதே மிகப்பெரும் ஒரு ஆதாரமாகும். (குர்ஆனில் உள்ள சவால்கள் மற்றும் வசனங்கள்)

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 8

அகீதா 

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 8

இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள்

 எல்லா சமுதாயத்திற்கும் நபிமார்கள் வந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான நபிமார்கள் இறைவன் இருக்கிறான் என்று கூறியதும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும்.

 கோடிக்கணக்கான மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள். அதுவும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும்.

 படித்து தெரிந்த அறிஞர்களும் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள்.

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 7

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 7

இறைவனின் இருப்பை அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகிறான்

 ஸூரத்து தாஹா 20:14

“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.

 ஸூரத்துல் கஸஸ் 28:30

அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.

 ஸூரத்துல் ஹஷ்ர் 59: 22, 23, 24

(22). அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

(23). அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

(24). அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

 சூரா பாத்திஹா 1: 1 – 4

 ஸூரத்துல் முஃமினூன் 23:52

இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).

❤ ஸூரத்துல் அன்பியா 21:22

வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.

அறிவுபூர்வமான ஆதாரங்கள்

1,24,000 நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள் என்ற செய்தி ஆதாரபூர்வமானதல்ல. இருப்பினும் பல நபிமார்கள் தூய்மையாக வாழ்ந்தார்கள் இறைவன் இருக்கிறான் என்பதை பற்றி அறிவித்திருக்கிறார்கள். இத்தனை பேர் ஒருசேர ஒரே போல அனுப்பிய செய்தி தவறாக வாய்ப்பு இல்லை.

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 6

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 6

இறைவன் இருக்கிறான் என்பதற்கு இறைவன் கூறும் சான்றுகள்

  ஸூரத்துல் அஃராஃப் 7:54

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ

يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ

الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏

   நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் – அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு – ஆட்சிக்குக் – கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

 

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 5

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 5

 லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமா முழு இஸ்லாத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்று குர் ஆன் ஹதீஸில் இல்லை இது இஸ்லாத்திற்குள் நுழையும் நிபந்தனையாக இருக்கிறது.

 ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு முஹம்மது நபியை நபியாக ஏற்கவில்லையென்றால் அவர் முஸ்லிமாக்கமாட்டார்.

 லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் வை நபி (ஸல்) கற்றுத்தந்த முறையும் அவரது தோழர்கள் புரிந்து கொண்ட முறையிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

[highlight color=”gray”]தவ்ஹீது ரப்[/highlight] – படைத்தல் பரிபாலித்தல் போன்றவை ஒருவனுக்கே சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளுதல்.

[highlight color=”gray”]தவ்ஹீது உலூஹிய்யா[/highlight] – எவன் படைத்தானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பிற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு இது தான்.

[highlight color=”gray”]தவ்ஹீது அஸ்மா வஸ் சிபாத்[/highlight] – அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளிலும் இணைவைத்தல். இந்த பகுதியில் தான் இஸ்லாமிய சமூகம் வழிகெட்டது.

 

SURAH ALA IMRAN

PART-1

PART-2

PART-3

PART-4

PART-5

PART-6

PART-7

PART-8

PART-9

 

 

img-20160925-wa0041img-20160927-wa0006img-20161009-wa0012

img-20161009-wa0027 img-20161009-wa0039 img-20161009-wa0046 img-20161013-wa0009 img-20161013-wa0018 img-20161018-wa0006 img-20161018-wa0007

 

SURAH MUMINOON

PART-1

 

PART-2

 

PART-3

PART-4

 

PART-5

 

PART-6

 

PART-7

 

 

PART-8

 

PART-9

 

PART-10

 

 

 

IMG-20160808-WA0034 IMG-20160808-WA0035 IMG-20160808-WA0041 IMG-20160808-WA0044

IMG-20160816-WA0024 IMG-20160816-WA0023

IMG-20160816-WA0028 IMG-20160816-WA0035IMG-20160816-WA0036IMG-20160824-WA0004IMG-20160824-WA0006IMG-20160824-WA0008IMG-20160824-WA0007

IMG-20160824-WA0024  IMG-20160824-WA0022

IMG-20160824-WA0023IMG-20160824-WA0027  IMG-20160824-WA0030   IMG-20160824-WA0029

IMG-20160824-WA0043     IMG-20160824-WA0042