🔶இறைவனுடைய பெயர்களிலிருந்து பண்புகளை எடுக்கலாம் ஆனால் பண்புகளிலிருந்து பெயர்கள் இறைவனுக்கு நாம்சூட்ட முடியாது.
🔶இறைவன் தனக்கு தானே சூட்டிய பெயர்களைத் தவிர வேறு பெயர்களை நாம் அவனுக்கு சூட்டக்கூடாது.
உதாரணம் : وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ↔ ( 8:30)அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான் இந்த வசனத்தை ஆதாரமாக வைத்து அல்லாஹ்ماكر(சூழ்ச்சி செய்பவன்) என்று அழைக்கக்கூடாது. ஆகவே இறைவனின் எல்லாப்பெயர்களிலிருந்தும் அவன் பண்புகளை விளங்கலாம் ஆனால் இறைவனின் எல்லாப்பண்புகளிலிருந்தும் பெயர்களை விளங்க முடியாது.
🔶அல்லாஹ் பூரணத்துவமிக்கவன் ஆனால் அவன் சொல்லாததால் நாம் அவனைكامل(பூரணத்துவமிக்கவன்) என்று சொல்ல முடியாது
🔶அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் உலகில் உள்ள யாருக்கும் ஒப்பாக இருக்காது என்று நாம் நம்ப வேண்டும்.
🔶அல்லாஹ்வுடைய பெயர்களோ பண்புகளோ எவருக்கும் ஒப்பாக இருக்காது.
🔶அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளுக்கு உதாரணம், மாற்றுவிளக்கம் போன்றவையெல்லாம் கொடுக்கக்கூடாது, கருத்து தெரியாது என்று கூறக்கூடாது,ஒப்பிட்டுக்கட்டுதல், ஒன்றுமில்லை என்றும் சொல்லக்கூடாது.
🌺அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், ரோஷப்படுகிறான்,அவனுக்கு இரு கைகள் இருக்கிறது என்றெல்லாம் அவனைப்பற்றி வரும் அறிவிப்புகளை
எவ்வாறு நம்ப வேண்டும் ? (42:11)↔ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُஅவனைப்போன்று எதுவுமில்லை. அவன் தான் செவியேற்பவன் பார்ப்பவன்.
தவ்ஹீத்
1. படைத்தவன் ஒருவன் மட்டுமே.
2. படைத்தவன் எவனோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
3. அவனுக்கு பெயர்கள் உண்டு பண்புகள் உண்டு அது யாரைப்போன்ற பெயரும் அல்ல யாருடைய பண்பைப்போன்றதும் அல்ல. قل هو الله احد– படைத்தலில் அவன் தனித்தவன், நிர்வாகத்திலும் அவன் தனித்தவன், பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் அனைத்திலும் அவன் தனித்தவன்.எல்லா வகையிலும் அவன் ஒருவன்.
🔶இறைவனை சரியாக வணங்க வேண்டும் என்பதை சரியாகப்புரிந்து
கொள்வதற்காகவே இப்படி 3 ஆக பிரித்து நாம் படிக்கிறோம்.
● எவன் என்னைப் படைத்தானோ எவன் எனக்கு உணவளிக்கின்றானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்
● தவ்ஹீத் (ஒருமைப்படுத்துதல்)
● லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே.
🔷من قال لا اله الا الله دخل الجنة⬇
🔹எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு இல்லை என்று
கூறுகிறானோ அவன் சொர்க்கம் நுழைவான்.
🔷من كان آخر كلامة لا إله إلا الله دخل الجنة⬇
🔹யாருடைய கடைசி வார்த்தை லா இலாஹா இல்லல்லாஹ் வாக இருக்கிறதோ அவர் சொர்க்கம் நுழைவார்.
●இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் தவறு வரும் இடம் உலூஹியாத்தில் தான். அல்லாஹ்வை
நம்புகிறார்கள் ஆனால் அவனுக்கு மட்டுமே வணக்கம், இபாதத் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் தவறு செய்கிறார்கள்.
படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளல் இஸ்லாம் ஆகாது.
சூரத்துல் முஃமினூன்(23:86,87) : “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.( 23:86) “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!(23:87)உலக வரலாற்றில் படைத்தவன் ஒருவன் தான் என்ற அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
சூரத்துஜ் ஜூமர் (39:38) :வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள்
நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?”(நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”
சூரத்துஜ் ஜூக்ருஃப் (43:9) : (நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
சூரத்துல் அன்கபூத்(29:61) : மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்தியிருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையைவிட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்(29:61)மக்கா முஷ்ரிக்குகள் நபி (ஸல்) க்கு எதிராக அல்லாஹ் விடம் துஆ செய்தார்கள்.
ஆதாரம் சூரா அன்ஃபால் (8:32)
படைத்தவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் தான்அபூஜஹல், அபூலஹப் போன்ற மோசமானவர்கள். ஆதலால் இறைவன் தான் படைத்தான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளுதல் ஒரு முஸ்லிமுக்கு போதாது.
அகீதாவின் அறிவு யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரால் மட்டும் தான் இறைவனை இன்பமாக வணங்க முடியும்.
தௌஹீத் ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் என ஸஹாபாக்களின் காலத்தில் மூன்றாகப் பிரித்துப் பேசப்படவில்லை; என்றாலும் இந்த தலைப்பின் கீழ் படிக்கும் அத்தனை விஷயங்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்த,
ஸஹாபாக்கள் கடைபிடித்த காரியங்களே ஆகும்.
கருத்துரைகள் (Comments)