எந்த வழி நேரான வழி எந்த வழியில் சென்றால் வெற்றி பெறலாம் என்பதை காண்பிக்க அல்லாஹ் நபிமார்களை அனுப்புவான். ஹலால் எது ஹராம் எது என்பது தொடர்பான வழிகாட்டல்.
240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :1 ஸஹீஹ் முஸ்லீம் .
⭐ ஏனெனில் ஒரு நபி வந்திருக்கிறார்கள் என்பது அவர் அறிந்த உடன் அவர்களது வேதங்களை அவர்கள் படிக்க வேண்டும். அதில் முஹம்மத் நபியவர்களின் அடையாளங்களும் குறிப்புகளும் இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு அதை நம்ப வேண்டிய கடமை நிச்சயமாக இருக்கிறது.
⭐ நபி (ஸல்) அவர்களும் நேர்வழி காட்டியாக இருக்கிறார்கள் ஸூரத்துஷ் ஷூரா 42:52 وَاِنَّكَ لَتَهْدِىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ …. நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
⭐ நேர்வழி எது என்று கற்றுத்தெறிந்த மக்களுக்கும் பிறருக்கு நேர்வழி காட்டவேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஹிதாயத்தின் பெறுமதி இம்மையில் புரிந்தே ஆக வேண்டும் இல்லையேல் மறுமையில் மிகப்பெரும் கைசேதத்தை சந்திக்க நேரிடும்.
கருத்துரைகள் (Comments)