ஹிஸ்னுல் முஸ்லிம் 69

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 69

35- “سبوح قدوس رب الملائكة والروح

3- مسلم1/ 353 وأبو داود 1/230

அல்லாஹ்) மிகவும் புனிதமானவன்) ↔ سبوح

  புனிதமானவன்↔ قدوس

மலக்குமார்களுடைய ரப்பு ↔ رب الملائكة

(ஜிப்ரஈல் (அலை ↔ والروح

《☆》 840. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் என்று கூறுவார்கள்.

(பொருள்: (இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.)

Book :4 ஸஹீஹ் முஸ்லீம்

ஹிஸ்னுல் முஸ்லிம் 68

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 68

34-سبحانك اللهم ربنا وبحمدك ، اللهم اغفر لي

– البخاري 1/199ومسلم 1/ 350

حديث عائشة في الصحيحين قال: (كان النبي صلى الله عليه وسلم يُكثِر أن يقول في ركوعه وسجوده: “سبحانك اللهم ربنا وبحمدك، اللهم اغفر لي”، يتأول القرآن).

  1. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி’ (இறைவா! உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! என்னை மன்னித்து விடு) என்று அதிகமதிகம் கூறுவார்கள். (இதாஜாஅ… என்ற அத்தியாயத்தில் கூறப்படும்) குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள்.

Book : 10 புஹாரி 

 ومعنى: (يتأول القرآن)؛ أي: يفعل ما أمر به فيه، والمراد بالقرآن هنا بعضه، وهو قوله تعالى: ﴿ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴾ [النصر: 3]، وفي هذا الحديث إباحةُ طلبِ المغفرة في الركوع، ولا يعارضه حديثُ ابن عباس المتقدِّمُ عند مسلمٍ: ((فأما الركوع، فعظِّموا فيه الرب))؛ لأن تعظيم الرب في الركوع لا ينافي الدعاء، كما أن الدعاء في السجود لا ينافي التعظيم

تأويل என்ற வார்த்தைக்கு 3 விதமான அர்த்தங்கள் உள்ளன 

  •  மாற்று விளக்கம் கொடுப்பது, பொருத்தமற்ற விளக்கம் கொடுப்பது. )3:7  مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِه(
  • தப்ஸீர் 
  • அந்த விளக்கத்தை கண்ணால் காணும்போது 

7:53 هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗ‌ؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ ….

《☆》 நபி (ஸல்) அவர்கள் தங்களது கடைசி காலத்தில் தான் இதை அதிகமாக சொன்னார்கள் என்பதற்கான ஆதாரம் இதாஜாஅ .. சூரா இறங்கியதற்கு பின்னால் தான் இதை ஓத ஆரம்பித்தார்கள் என்பதும். 

《☆》 ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்கள் இந்த துஆ வை  அதிகப்படுத்துவதை கண்டபோது புதிதாக ஏதோ சொல்கிறீர்களே என்று கேட்டபோது நபி (ஸல்) “என்னுடைய உம்மத்தில் நான் ஒரு அத்தாட்சியை காண்பேன் அப்போது நான் இதை சொல்வேன் என்று கூறிய கருத்தும் இடம்பெறுகின்றன. 

《☆》 மக்கா வெற்றியே அந்த அத்தாட்சியாகும். அதன் பிறகு நபி (ஸல்) அவர்களது மரணம் நெருங்கியதை நாம் அறிவோம். 

《☆》 இந்த துஆ வை எத்தனை எண்ணிக்கையிலும் கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்னுல் முஸ்லிம் 67

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 67

سبحان ربي العظيم  மற்றும் سبحان ربي الأعلى துஆக்களை 3 முறை கூறுவது-

《☆》 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்சிய்யா (ரஹ்) தனது zசாதுல் மஆத் என்ற நூலில் தொழுகையின் பாடத்திலும் இமாம் சித்தீக் ஹசன் கான் தனது ரவ்தத்துன்னதிய்யா என்ற நூலிலும் இந்த துஆ வை இத்தனை முறை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் என்று நிரூபிக்கக்கூடிய ஆதாரபூர்வமான செய்திகள் இடம்பெறவில்லை. ருகூஹிலும் சுஜூதிலும் எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்பது போன்ற அறிவிப்புகளே இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டிருந்தார்கள்(அறிஞர்கள் பலரும் இந்த கருத்தையே சரிகாண்கிறார்கள்).

《☆》 இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் ஷேக் அல்பானி (ரஹ்) தனது ஸிfபது ஸலாது நபி என்ற புத்தகத்தில் 7 அறிவிப்புக்களை கொண்டு வருகிறார்கள். மேற்கூறப்பட்ட 6 அறிவிப்புக்கள் அதில் அடங்கும். (இந்த புத்தகம் அவர் ஆரம்ப கால ஆய்வின் அடிப்படையில் தொகுத்ததாகும் அதில் சொல்லப்பட்ட சில துஆக்களை அவரே பிற்காலத்தில் லயீஃப் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே அவரது பிற்கால நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்த ஆதாரங்கள் ஸஹீஹ் என்று கருத முடியாத நிலையில் இருக்கிறது)

《☆》 ஆகவே நபி (ஸல்) அவர்கள் ருகூஹில் سبحان ربي العظيم என்று சொன்னார்கள் அதை எண்ணிக்கையில் கணக்கிட முடியாது. 

《☆》 سبحان ربي العظيم ஒரு சிறந்த தஸ்பீஹாக இருக்கிறது.

《☆》ஒற்றைப்படைகளில் கூறுவது சிறந்தது

ஹிஸ்னுல் முஸ்லிம் 66

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 66

عن ابن مسعود أن النبي صلى الله عليه وسلم قال إذا ركع أحدكم فقال في ركوعه سبحان ربي العظيم ثلاث مرات فقد تم ركوعه وذلك أدناه وإذا سجد فقال في سجوده سبحان ربي الأعلى ثلاث مرات فقد تم سجوده وذلك أدناه قال وفي الباب عن حذيفة وعقبة بن عامر قال أبو عيسى حديث ابن مسعود ليس إسناده بمتصل عون بن عبد الله بن عتبة لم يلق ابن مسعود والعمل على هذا عند أهل العلم يستحبون أن لا ينقص الرجل في الركوع والسجود من ثلاث تسبيحات وروي عن عبد الله بن المبارك أنه قال أستحب للإمام أن يسبح خمس تسبيحات لكي يدرك من خلفه ثلاث تسبيحات وهكذا قال إسحق بن إبراهيم 

இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்)  உங்களிலொருவர் ருகூஹில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் என 3 முறை சொன்னால் அவருடைய ருகூஹ் பூரணமாகி விட்டது. அது தான் ஆகக்குறைந்ததாகும், ஸுஜூது செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று 3 முறை சொன்னால் அவரது ஸுஜூது பூர்த்தியாகிறது அதுவே ஆகக்குறைந்ததாகும் 

திர்மிதி 261 

《☆》 இந்த பாடத்தில் ஹுதைபா (ரலி) மற்றும் உக்பத் இப்னு அமீர் (ரலி) அவர்கள் வழியாகவும் சில செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்னு மசூத் (ரலி) வின் இந்த அறிவிப்பாளர் தொடர் சரியான தொடரில் இல்லை. இந்த அறிவிப்பாளர் தொடரில் அவ்ன் இப்னு அப்துல்லாஹ் என்பவர் இப்னு மசூத் (ரலி) வை சந்திக்கவில்லை. ஆயினும் அஹ்லுல் இல்ம் இந்த நடைமுறையை விரும்புகிறார்கள். இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) இமாம் 5 தஸ்பீஹ் சொல்வது சிறந்தது என்று கூறியதாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதலால் பின்னால் உள்ளவர்களுக்கு 3 தஸ்பீஹ் சொல்லும் நேரம் கிடைக்கும். ஆகவே இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அவர்களும் கூறுகிறார்கள். 

《☆》 இந்த செய்தியை  இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இது உறுதியான செய்தியாக இருந்தால் …….. என பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் அபூதாவூத் – இது தொடர்பு அறுந்த செய்தி. அவ்ன் இப்னு அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) யை சந்திக்கவில்லை. 

குறிப்பு:

அறிஞர்களில் சிலர் முர்சல் ஐ முன்கதிஹ் என்றும் அறிவித்துள்ளார்கள்.

《☆》 ஷேக் அல்பானி (ரஹ்) இதை லயீஃப் என்று அறிவித்துள்ளார்கள். 

《☆》 இந்த அறிவிப்பில் மூஸா இப்னு அய்யூப் என்பவர் அறியப்படாதவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 كان رسولُ الله – صلَّى الله عليه وسلَّم – إذا ركَع قال: ((سبحان ربي العظيم وبَحَمْده – ثلاثًا))، وإذا سجَد قال: ((سبحان ربي الأعلى وبحمْده – ثلاثًا))

நபி (ஸல்) ருக்கூஹில் سبحان ربي العظيم وبَحَمْده 

3முறையும் 

சுஜூதில் سبحان ربي الأعلى وبحمْده  

3முறையும் கூறினார்கள்.

ஸுனன் அபூதாவூத் 870 

 وقال: وهذه الزِّيادة نخاف ألاَّ تكون محفوظة

இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் – இது ஜியாதா வாகும். இது பாதுகாக்கப்பட்ட செய்தி அல்ல என்று நான் பயப்படுகிறேன்.

மேற்கூறப்பட்ட இந்த 2 ஹதீஸுகளையும் மிஸ்ர் வாசிகள் தான் அறிவித்திருக்கிறார்கள். 

இமாம் இப்னுல் மூலக்கின் தனது பதருல் முலீன் என்ற நூலில் பாகம் 3 பக்கம் 68 இல் 

  1. மூஸா இப்னு அய்யூப் அவர்களது பெரிய தந்தை தான் உக்பத் இப்னு ஆமீர் என நிரூபிக்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் அது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
  2. ஹுதைபாஹ் (ரலி) வழியாக 2 அறிவிப்பாளர் வரிசையில் வபிஹம்திஹி என்று இடம்பெற்றுள்ளது. அந்த 2 அறிவிப்பாளர் வரிசையும் பலஹீனமானது என பதிவு செய்துள்ளார்கள்.
  3. அப்துல்லாஹ் இப்னு மசூத் வரும் செய்தியில் சரீஹ் என்பவர் இடம்பெறுகிறார் அவரை அறிஞர்கள் கைவிட்டுவிட்டார்கள்.
  4. அபூ மாலிக் அல் அஷ்அரீ என்பவர் வழியாக வரும் அறிவிப்பில் ஷஹர் இப்னு ஹவ்ஷப் என்பவர் இடம்பெறுகிறார் அவரை அறிஞர்கள் கை விட்டு விட்டார்கள்.
  5. அபூஜுஹைபா எனும் ஸஹாபி வழியாக வரும் செய்தியில் அம்ர் என்பவர் இடம்பெறுகிறார். அவர் ஷியா வை சேர்ந்தவர் போன்று உள்ளது என அதை பலவீனப்படுத்தினார்கள். 
  6. சஹதீ என்பவர் தனது தந்தை வழியாக, தந்தை அவரது பெரிய தந்தை வழியாக அறிவிக்கக்கூடிய செய்தி  அதையும் பலஹீனப்படுத்தினார்கள்.

《☆》 இந்த அனைத்து செய்திகளையும் தொகுத்து பார்த்தாலும் சுஜூதிலும் ருக்கூஹிலும் வபிஹம்திஹி என்ற வார்த்தை இடம் பெறுவது பலஹீனமாகவே இருக்கிறது.

ஹிஸ்னுல் முஸ்லிம் 65

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 65

عن ابن مسعود أن النبي صلى الله عليه وسلم قال إذا ركع أحدكم فقال في ركوعه سبحان ربي العظيم ثلاث مرات فقد تم ركوعه وذلك أدناه وإذا سجد فقال في سجوده سبحان ربي الأعلى ثلاث مرات فقد تم سجوده وذلك أدناه قال وفي الباب عن حذيفة وعقبة بن عامر قال أبو عيسى حديث ابن مسعود ليس إسناده بمتصل عون بن عبد الله بن عتبة لم يلق ابن مسعود والعمل على هذا عند أهل العلم يستحبون أن لا ينقص الرجل في الركوع والسجود من ثلاث تسبيحات وروي عن عبد الله بن المبارك أنه قال أستحب للإمام أن يسبح خمس تسبيحات لكي يدرك من خلفه ثلاث تسبيحات وهكذا قال إسحق بن إبراهيم 

இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்)  உங்களிலொருவர் ருகூஹில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் என 3 முறை சொன்னால் அவருடைய ருகூஹ் பூரணமாகி விட்டது. அது தான் ஆகக்குறைந்ததாகும், ஸுஜூது செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று 3 முறை சொன்னால் அவரது ஸுஜூது பூர்த்தியாகிறது அதுவே ஆகக்குறைந்ததாகும் 

திர்மிதி 261 

《☆》 இந்த பாடத்தில் ஹுதைபா (ரலி) மற்றும் உக்பத் இப்னு அமீர் (ரலி) அவர்கள் வழியாகவும் சில செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்னு மசூத் (ரலி) வின் இந்த அறிவிப்பாளர் தொடர் சரியான தொடரில் இல்லை. இந்த அறிவிப்பாளர் தொடரில் அவ்ன் இப்னு அப்துல்லாஹ் என்பவர் இப்னு மசூத் (ரலி) வை சந்திக்கவில்லை. ஆயினும் அஹ்லுல் இல்ம் இந்த நடைமுறையை விரும்புகிறார்கள். இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) இமாம் 5 தஸ்பீஹ் சொல்வது சிறந்தது என்று கூறியதாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதலால் பின்னால் உள்ளவர்களுக்கு 3 தஸ்பீஹ் சொல்லும் நேரம் கிடைக்கும். ஆகவே இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அவர்களும் கூறுகிறார்கள். 

《☆》 இந்த செய்தியை  இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இது உறுதியான செய்தியாக இருந்தால் …….. என பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் அபூதாவூத் – இது தொடர்பு அறுந்த செய்தி. அவ்ன் இப்னு அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) யை சந்திக்கவில்லை. 

குறிப்பு:

அறிஞர்களில் சிலர் முர்சல் ஐ முன்கதிஹ் என்றும் அறிவித்துள்ளார்கள்.

《☆》 ஷேக் அல்பானி (ரஹ்) இதை லயீஃப் என்று அறிவித்துள்ளார்கள். 

《☆》 இந்த அறிவிப்பில் மூஸா இப்னு அய்யூப் என்பவர் அறியப்படாதவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 كان رسولُ الله – صلَّى الله عليه وسلَّم – إذا ركَع قال: ((سبحان ربي العظيم وبَحَمْده – ثلاثًا))، وإذا سجَد قال: ((سبحان ربي الأعلى وبحمْده – ثلاثًا))

நபி (ஸல்) ருக்கூஹில் سبحان ربي العظيم وبَحَمْده 

3முறையும் 

சுஜூதில் سبحان ربي الأعلى وبحمْده  

3முறையும் கூறினார்கள்.

ஸுனன் அபூதாவூத் 870 

 وقال: وهذه الزِّيادة نخاف ألاَّ تكون محفوظة

இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் – இது ஜியாதா வாகும். இது பாதுகாக்கப்பட்ட செய்தி அல்ல என்று நான் பயப்படுகிறேன்.

மேற்கூறப்பட்ட இந்த 2 ஹதீஸுகளையும் மிஸ்ர் வாசிகள் தான் அறிவித்திருக்கிறார்கள். 

இமாம் இப்னுல் மூலக்கின் தனது பதருல் முலீன் என்ற நூலில் பாகம் 3 பக்கம் 68 இல் 

  1. மூஸா இப்னு அய்யூப் அவர்களது பெரிய தந்தை தான் உக்பத் இப்னு ஆமீர் என நிரூபிக்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் அது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
  2. ஹுதைபாஹ் (ரலி) வழியாக 2 அறிவிப்பாளர் வரிசையில் வபிஹம்திஹி என்று இடம்பெற்றுள்ளது. அந்த 2 அறிவிப்பாளர் வரிசையும் பலஹீனமானது என பதிவு செய்துள்ளார்கள்.
  3. அப்துல்லாஹ் இப்னு மசூத் வரும் செய்தியில் சரீஹ் என்பவர் இடம்பெறுகிறார் அவரை அறிஞர்கள் கைவிட்டுவிட்டார்கள்.
  4. அபூ மாலிக் அல் அஷ்அரீ என்பவர் வழியாக வரும் அறிவிப்பில் ஷஹர் இப்னு ஹவ்ஷப் என்பவர் இடம்பெறுகிறார் அவரை அறிஞர்கள் கை விட்டு விட்டார்கள்.
  5. அபூஜுஹைபா எனும் ஸஹாபி வழியாக வரும் செய்தியில் அம்ர் என்பவர் இடம்பெறுகிறார். அவர் ஷியா வை சேர்ந்தவர் போன்று உள்ளது என அதை பலவீனப்படுத்தினார்கள். 
  6. சஹதீ என்பவர் தனது தந்தை வழியாக, தந்தை அவரது பெரிய தந்தை வழியாக அறிவிக்கக்கூடிய செய்தி  அதையும் பலஹீனப்படுத்தினார்கள்.

《☆》 இந்த அனைத்து செய்திகளையும் தொகுத்து பார்த்தாலும் சுஜூதிலும் ருக்கூஹிலும் வபிஹம்திஹி என்ற வார்த்தை இடம் பெறுவது பலஹீனமாகவே இருக்கிறது.

ஹிஸ்னுல் முஸ்லிம் 64

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 64

17- دعاء الركوع

ருகூஹில் ஓதும் துஆக்கள் 

《☆》 33 ” سبحان ربي العظيم ” ثلاث مرات

صَلَّيْتُ مع النبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَافْتَتَحَ البَقَرَةَ، فَقُلتُ: يَرْكَعُ عِنْدَ المِئَةِ، ثُمَّ مَضَى، فَقُلتُ: يُصَلِّي بهَا في رَكْعَةٍ، فَمَضَى، فَقُلتُ: يَرْكَعُ بهَا، ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ، فَقَرَأَهَا، ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ، فَقَرَأَهَا، يَقْرَأُ مُتَرَسِّلًا، إذَا مَرَّ بآيَةٍ فِيهَا تَسْبِيحٌ سَبَّحَ، وإذَا مَرَّ بسُؤَالٍ سَأَلَ، وإذَا مَرَّ بتَعَوُّذٍ تَعَوَّذَ، ثُمَّ رَكَعَ، فَجَعَلَ يقولُ: سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ، فَكانَ رُكُوعُهُ نَحْوًا مِن قِيَامِهِ، ثُمَّ قالَ: سَمِعَ اللَّهُ لِمَن حَمِدَهُ، ثُمَّ قَامَ طَوِيلًا قَرِيبًا ممَّا رَكَعَ، ثُمَّ سَجَدَ، فَقالَ: سُبْحَانَ رَبِّيَ الأعْلَى، فَكانَ سُجُودُهُ قَرِيبًا مِن قِيَامِهِ. قالَ: وفي حَديثِ جَرِيرٍ مِنَ الزِّيَادَةِ، فَقالَ: سَمِعَ اللَّهُ لِمَن حَمِدَهُ رَبَّنَا لكَ الحَمْدُ.

الراوي : حذيفة بن اليمان | المحدث : مسلم | المصدر : صحيح مسلم 

  1. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் “அல்பகரா”” எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் “அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் “அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் “அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) “அந்நிசா” எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆல இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.

பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் “சுப்ஹான ரப்பியல் அழீம்” (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் “சுப்ஹான ரப்பியல் அஃலா” (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.

《☆》 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லக்கல் ஹம்து” (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்; எங்கள் இறைவா, உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. 

Book :6 ஸஹீஹ் முஸ்லீம் 

《☆》 ஹுதைஃபா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ருகூஹில்

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ،سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ،سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ،

என்று சொன்னார்கள். 

ஸுனன் நஸாயீ 1133(அல்பானி (ரஹ்) -ஸஹீஹ்)

《☆》 இந்த ஹதீஸின் அடிப்படையில் 3 முறை சொன்னார்கள் என்றும் புரிந்துகொள்ளலாம் அல்லது நிறைய சொன்னார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 63

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 63

《☆》31- “الله اكبر كبيرا، الله اكبر كبيرا، الله اكبر كبيرا، والحمد لله كثيرا، والحمد لله كثيرا، والحمد لله كثيرا، وسبحان الله بكرةً وأصيلا ـ ثلاثا ـ ” أعوذ بالله من الشيطان الرجيم : من نفخه، ونفثه ،و همزه “

அபூதாவூத் 764 – ஷேக் அல்பானி இதை லயீஃப் என்கிறார்கள்.

أعوذ بالله من الشيطان الرجيم : من نفخه، ونفثه ،و همزه – என்பதற்கு شواهد مقطع 

(ஒரு ஹதீஸில் வரும் ஒரு பகுதிக்கு மட்டும் வேறு ஒரு ஹதீஸ் சாட்சியாக இருக்கும்). இந்த துஆ ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடுவது சம்மந்தமான வேறொரு ஹதீஸில் இதன் ஒரு பகுதி இடம்பெறுகிறது.

الله اكبر كبيرا،والحمد لله كثيرا، وسبحان الله بكرةً وأصيلا ـ என்று முஸ்லிமில் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றிருப்பினும் 3 முறை என்று வரவில்லை. மேற்கூறப்பட்ட துஆ வுடன் சேர்த்தும் வரவில்லை.

《☆》 1052. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 

الله اكبر كبيرا،والحمد لله كثيرا، وسبحان الله بكرةً وأصيلا ـ 

“அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா” 

(அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

《☆》 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை. 

Book :5 ஸஹீஹ் முஸ்லீம்  

《☆》 32– كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يتهجد قال: ” اللهم لك الحمد أنت نور السموات والأرض ومن فيهن ، ولك الحمد أنت قيمُ السموات والأرض ومن فيهن [ ولك الحمد أنت رب السموات والأرض ومن فيهن ]، [ ولك الحمد لك ملك السموات والأرض ومن فيهن ] [ ولك الحمد أنت ملك السموات والأرض] [ ولك الحمد] أنت الحق ، ووعدك الحق ، وقولك الحق ،ولقاؤك الحق ، والجنة حق ، والنار حق ، والنبيّون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعة حق ] [اللهم لك أسلمت ،  وعليك توكلت ، وبك آمنت ، وإليك أنبت ، وبك خاصمت ، وإليك حاكمت ، فاغفر لي ما قدمت وما أخرت ، وأسررت، وما أعلنت ][ أنت المقدم ،وأنت المؤخر لا إله إلا أنت ][أنت إلهي لا إله إلا أنت

இந்த அறிவிப்பில் சில கூடுதல்களும் இருக்கின்றன 

 وعن أنس رضي الله عنه – أن رجلا جاء فدخل الصف ، وقد حفزه النفس فقال : الله أكبر ، الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه فلما قضى رسول الله – صلى الله عليه وسلم – صلاته قال : أيكم المتكلم بالكلمات ؟ فأرم القوم ، فقال : أيكم المتكلم بالكلمات ؟ ” فأرم القوم ، فقال أيكم المتكلم بها ؟ فإنه لم يقل بأسا ، فقال رجل : جئت وقد حفزني النفس فقلتها ، فقال : لقد رأيت اثني عشر ملكا يبتدرونها أيهم يرفعها ، رواه مسلم . 

அனஸ் (ரலி) – ஒரு மனிதர் வந்தார் தொழுகையின் ஷஃபில் சேர்ந்தார் அப்போது அவருக்கு வேகமாக மூச்சுவாங்கியது. அப்போது அவர் الله أكبر ، الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه என்றார். நபி (ஸல்) அவர்களது தொழுகையை முடித்த பின் அவ்வாறு கூறியவர் யாரெனக்கேட்டார்கள். அனைவரும் அமைதி காத்தனர். அப்போது நபி (ஸல்) இதைச்சொன்னவர் பிழையாக ஒன்றும் கூறவில்லை என்றார்கள். அப்போது அவர் நான் தான் சொன்னேன் அல்லாஹ்வின் தூதரே; ஓடி வந்ததால் கலைப்படைந்தேன் அதனால் அவ்வாறு கூறினேன் என்றார். அதற்கு நபி (ஸல்) 12 மலக்குமார்கள் இதை யார் அல்லாஹ்விடம் சேர்ப்பது என்ற விஷயத்தில் போட்டி போடுவதை நான் கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லீம்) 

இது தொழுகையின் ஆரம்பத்தில் ஓதிய துஆ என்பதே சரியான புரிதலாக இருக்க முடியும்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 62

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 62

29- “وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً وما أنا من المشركين ،إن صلاتي ونُسُكي ومحياي ومماتي لله رب العالمين ، لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم أنت الملك لا إله إلا أنت ، أنت ربي وأنا عبدك ، ظلمت نفسي ، واعترفت بذنبي ، فاغفر لي ذنوبي جميعاً ، إنه لا يغفر الذنوب إلا أنت ، واهدني لأحسن الأخلاق، لا يهدي لأحسنها إلا أنت ، واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله بيديك ، والشر ليس إليك ، أنا بك وإليك ، تباركت وتعاليت أستغفرك وأتوب إليك

  1. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றவுடன் (முதலில்) “வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல்அர்ள ஹனீஃபன். வ மா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ வ நுசுகீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வ பிதாலிக உமிர்த்து. வ அன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு. லா இலாஹ இல்லா அன்த்த. அன்த்த ரப்பீ வ அன அப்துக்க. ழலம்த்து நஃப்சீ. வஅதரஃப்த்து பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ துனூபீ ஜமீஆ. இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. வஹ்தினீ லி அஹ்சனில் அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃபு அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த்த. லப்பைக்க வ சஅதைக்க. வல்கைரு குல்லுஹு ஃபீ யதைக்க. வஷ்ஷர்ரு லைஸ இலைக்க. அன பிக்க, வ இலைக்க. தபாரக்த்த வ தஆலைத்த. அஸ்தஃக்ஃபிருக்க வ அதூபு இலைக்க” என்று கூறுவார்கள்.)

பொருள்: நான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் நேராக என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். நான் இணைவைப்போரில் ஒருவனாக இருக்கமாட்டேன். என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையே இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் கட்டுப்பட்டு நடப்பவர் (முஸ்லிம்)களில் ஒருவன் ஆவேன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என் இறைவன். நான் உன் அடிமை. எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டேன். நான் என் பாவங்களை (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக. நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். இதோ வந்தேன். கட்டளையிடு (காத்திருக்கிறேன்). நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன. தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல. உன்னால்தான் நான் (நல்வாழ்வு கண்டேன்). உன்னிடமே நான் (திரும்பிவரப்போகிறேன்). நீ சுபிட்சமிக்கவன். உன்னதமானவன். நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்;பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்).

《☆》 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யும்போது, “அல்லாஹும்ம, லக்க ரகஅத்து, வ பிக்க ஆமன்து, வ லக்க அஸ்லம்து. கஷஅ லக்க சம்ஈ வ பஸரீ வ முஃக்கீ வ அழ்மீ வ அஸபீ” என்று கூறுவார்கள். 

பொருள்: இறைவா, உனக்காகக் குனிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப்பட்டேன். உனக்கே என் செவியும் பார்வையும் மூளையும் எலும்பும் நரம்பும் பணிந்தன.

《☆》 (அவர்கள் (ருகூவிலிருந்து) நிமிர்ந்ததும், “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா பைனஹுமா வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது” 

பொருள்: (இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப,அவற்றுக்கிடையே இருப்பவை நிரம்ப, இதன் பின்னர் நீ நாடியவை நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள்.

《☆》 அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது, “அல்லாஹும்ம லக்க சஜத்து. வ பிக்க ஆமன்த்து. வ லக்க அஸ்லம்து. சஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹு வ ஸவ்வரஹு, வ ஷக்க சம்அஹு வ பஸரஹு. தபாரக்கல்லாஹு அஹ்சனுல் காலிக்கீன்”
பொருள்: (இறைவா! உனக்கே சிரம்பணிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து வடிவமைத்து அதில் காதையும் கண்ணையும் திறந்துவைத்த (இறை)வனுக்கு முன் என் முகம் பணிந்தது. படைப்பாளர்களில் மிக மேலானவனான அல்லாஹ் சுபிட்சம் மிக்கவன்) என்று கூறுவார்கள்.

《☆》 பிறகு இறுதியாக அத்தஹிய்யாத்துக்கும் சலாமுக்குமிடையே “அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து வ மா அக்கர்த்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்த்து வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு லா இலாஹ இல்லா அன்த்த”
பொருள்: (அல்லாஹ்வே! நான் முந்திச் செய்த பிந்திச் செய்கிற, இரகசிமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த, வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள (இன்னபிற) பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே முன்னேறச் செய்பவன். பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவார்கள். 

Book :6 ஸஹீஹ் முஸ்லீம் 

 30 – “اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل ، فاطر السموات والأرض ، عالم الغيب والشهادة ، أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم

وعن عائشة – رضي الله عنها – قالت: كان – أيِ: النبِيُّ – صلَّى الله عليه وسلَّم – إذا قام من الليل افتتح صلاته: ((اللهم ربَّ جبرائيل وميكائيل وإسرافيل، فاطر السَّموات والأرض، عالِمَ الغيب والشهادة، أنت تَحْكم بين عبادك فيما كانوا فيه يختلفون، اهْدِني لما اختُلِف فيه من الحقِّ بإذنك، إنك تَهْدي من تشاء إلى صراط مستقيم)

  1. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் 

“அல்லாஹும்ம ரப்ப ஜப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்” 

என்று கூறுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. 

Book :6 ஸஹீஹ் முஸ்லீம்

ஹிஸ்னுல் முஸ்லிம் 61

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 61

28- “سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك، ولا أ له غيرك

யா அல்லாஹ் நீ தூய்மையானவன் ↔ سبحانك اللهم

மேலும் புகழ் அனைத்தும் உனக்கே உரியது ↔ وبحمدك

உனது பெயர்கள் பரக்கத் பெற்றவைகள் ↔ وتبارك اسمك

மேலும் உனது கண்ணியம் மகத்தானது ↔ وتعالى جدك، 

⬇️↔ ولا أ له غيرك 

மேலும் உன்னை தவிர வணக்கத்திற்கு தகுதியானவர்கள் வேறில்லை.

இது 7 நபித்தோழர்கள் வழியாக இடம்பெற்றிருக்கிறது அவற்றுள்

1) அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இந்த செய்தி பிரபல்யமாக இருக்கிறது.அதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களில் அலீ இப்னு அலீ என்பவர் பலஹீனமானவர் (நஸயீ)

2) ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக 3 அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறுகிறது அதில் அபுல் ஜவ்சா அவர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அது பலஹீனமானதாகும். அபுல் ஜவ்சா இடம்பெறாத வேறொரு வழியிலும் இடம்பெறுகிறது அதிலும் பலஹீனங்கள் உள்ளன.

هَذا حَدِيتُ لا تعرفه من حديث عائشة إلأ من هذا الوجه.

இமாம் திர்மிதி – இந்த வழியை தவிர ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் எங்களுக்கு தெரியவில்லை.இதில் இடம்பெறும் ஹாரிஸா என்பவர் மனரீதியாக விமர்சனங்களுக்கு உட்பட்டவர். 

《☆》 இப்னு ஹுஸைமா மற்றும் இமாம் அபூதாவூத் ரஹ்   ஹாரிஸாவை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். என்னிடம் இது நிரூபணம் இல்லாத செய்தியாகும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

《☆》 இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ, ஷேக் அபூ இஸ்ஹாக் அல் குவைனி,அவர்களும் இதை பலஹீனம் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

3) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் வழியாக வந்த அறிவிப்பு. சிலர் இதை முன்கர் (அறிவிப்பாளர் வரிசை சரியாக இருப்பினும் இந்த தொடரில்முன்கர் ஆனா ஒரு அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.) 

4) வாதிலதிப்னுல் அஸ்கா (ரலி) வழியாகவும் இந்த செய்தி இடம்பெறுகிறது. இதில் அம்ர் இப்னுல் ஹுசைன் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். அதனால் இது பலஹீனமான அறிவிப்பாகும் 

5)  உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் வழியாகவும் இடம்பெறும் செய்தி பலஹீனமானதாகும்.

6) அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறும் செய்தியும் பலஹீனமானது. 

7) அல் ஹகம் இப்னு உமைர் அஸ் சுமாலி என்பவர் வழியாக இடம்பெறும் அறிவிப்பும் பலஹீனமானதாகும்.

《☆》 இவ்வாறான பலஹீனமான அறிவிப்புகளாக இருப்பினும் இதை ஹசன் லி கைரிஹீ அல்லது சஹீஹுன் லி கைரிஹி என்ற தரத்திற்கு கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.

《☆》 ஷேக் அல்பானீ (ரஹ்) இந்த ஹதீஸை ஸஹீஹ் ஆக்கியுள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதை ஸஹீஹ் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

《☆》 இந்த  துஆ நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லாமல் நபித்தோழர்கள் சொன்னதாக 4 அறிவிப்புகள் இடம்பெறுகின்றன (موقوف). 

  • அபூபக்கர் (ரலி) வழியாக வரும் செய்தி பலஹீனமானதாகும்.
  • அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) 
  • உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) 
  • உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் வழியாக வரும் உமர் (ரலி)  அவர்களது கூற்று ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறுகின்றது. 

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ عَبْدَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، كَانَ يَجْهَرُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ يَقُولُ: «سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ، تَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»

918 அப்தா அறிவிக்கிறார்கள்- உமர் (ரலி) தொழுகையில் இந்த துஆ வை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக சப்தமிட்டு சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ، قَالَ: ” صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَقْرَأُ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] “

இமாம் முஸ்லீம் குறிப்பிடுகையில் –  அனஸ் இப்னு மாலிக் (ரலி)  இமாம் கத்தாதா (ரஹ்) அவர்களுக்கு கடிதம்  எழுதினார்கள் ” நான் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதிருக்கிறேன், அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) அவர்கள் பின்னாலெல்லாம் தொழுதிருக்கிறேன். அவர்கள் தங்கள் தொழுகைகளை அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீனை கொண்டு துவங்கினார்கள். அதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானி ரஹீம் சொல்ல மாட்டார்கள். தொழுகையின் ஆரம்பத்திலும் சொல்ல மாட்டார்கள் இறுதியிலும் சொல்ல மாட்டார்கள்.

《☆》 இமாம் மாலிக் அவர்களும் மதீனாவாசிகள் தொழுகையில் ஆரம்ப துஆ ஓதுவதில்லை என குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் மற்ற பிற அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கையில் அனஸ் (ரலி) அவர்களின் இந்த கூற்றில் பிஸ்மில்லாஹ் சொல்ல மாட்டார்கள் என்பதற்காகவே, ஆரம்ப துஆ வை மறுப்பதற்காக அல்ல என்று விவரிக்கின்றனர்.

《☆》 இவையல்லாமல் வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய துஆ வுடன் சேர்ந்ததாக மேலும் 3 வழியாக இடம்பெறுகிறது. 

  • ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) வழியாக 
  • அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) வழியாக 
  • அலீ இப்னு அபீதாலிப் (ரலி) வழியாக

மேற்கூறப்பட்ட 3 வழியும் பலஹீனமானதாகும்.

《☆》 ஆகவே இந்த துஆ உமர் (ரலி) பகிரங்கமாக மக்களுக்கு கற்றுக்கொடுத்ததால் இதை ஆதாரமாக எடுப்பதில் எந்த பிழையுமில்லை என்பதை புரிந்து கொள்கிறோம்.

 وعن أبي ذر رضي الله عنه قال، قال رسول الله صلى الله عليه وسلم:

(( أَلاَ أُخْبِرُكَ بِأَحَبّ الْكَلاَمِ إِلَىَ اللّهِ؟ قُلْتُ: يَا رَسُولَ اللّهِ أَخْبِرْنِي بِأَحَبّ الْكَلاَمِ إِلَىَ اللّهِ. فَقَالَ “إِنّ أَحَبّ الْكَلاَمِ إِلَىَ اللّهِ، سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِهِ ))

அபூதர் அல் கிபாரி (ரலி) – நபி (ஸல்) என்னிடம் “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான வார்த்தையை உங்களுக்கு கற்றுத்தரவா?” என்று கேட்டார்கள் அப்போது நான் “கற்றுத்தாருங்கள்” என்றேன் அப்போது”வார்த்தைகளில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِهِ என்பதாகும்.

(முஸ்லீம்)

 عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّ أَحَبَّ الْكَلامِ إِلَى اللَّهِ أَنْ يَقُولَ الْعَبْدُ : سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلا إِلَهَ غَيْرَكَ ، وَإِنَّ أَبْغَضَ الْكَلامِ إِلَى اللَّهِ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ : اتَّقِ اللَّهَ فَيَقُولُ : عَلَيْكَ نَفْسَكَ ” . أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاءِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، قَالَ : حَدَّثَنَا الأَعْمَشُ ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ ، قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : ” إِنَّ مِنْ أَحَبِّ الْكَلامِ إِلَى اللَّهِ أَنْ يَقُولَ الرَّجُلُ : سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلا إِلَهَ غَيْرَكَ ، رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ، فَاغْفِرْ لِي ذُنُوبِي ، إِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ ، وَإِنَّ مِنْ أَكْبَرِ الذَّنْبِ عِنْدَ اللَّهِ”، مِثْلَهُ . أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ ، قَالَ : حَدَّثَنَا مُصْعَبٌ ، قَالَ : حَدَّثَنَا دَاوُدُ ، عَنِ الأَعْمَشِ ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ، وَقَالَ : عَنْ عَبْدِ اللَّهِ “مِنْ أَحَبِّ الْكَلامِ”.

10619: அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான வார்த்தை  

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلا إِلَهَ غَيْرَكَ 

அல்லாஹ்விற்கு மிகவும்  வெறுப்பான வார்த்தை ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப்பார்த்து அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று  சொல்லும்போது – உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று பதிலளிப்பதாகும்.

 (சுனனுல் குப்ரா நஸயீ)

《☆》 இந்த அறிவிப்பை ஆய்வு செய்தால் இது அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) அவர்களது கருத்தாக தெரிகிறது. ஆயினும் அல்லாஹ்விற்கு வெறுப்பும் விருப்பமும் எதுவென்று ஸஹாபியால் சொல்ல முடியாது என்பதால் இது நபி (ஸல்)  அவர்களிடமிருந்து கேட்டதனாலேயே அறிவிக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 60

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 60

27- “اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ، اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد 

மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலுள்ள தூரத்தை போல் எனக்கும் என் பாவங்களுக்குமிடையில் தூரத்தை ஏற்படுத்துவாயாக. அசுத்தத்திலிருந்து வெள்ளை ஆடைகள் சுத்தப்படுத்தப்படுவது போல என்னுடை பாவங்களிலிருந்து என்னை சுத்தப்படுத்துவாயாக. தண்ணீரைக்கொண்டும், ஆலங்கட்டியை கொண்டும், குளிர்ந்த நீரைக்கொண்டும் என்னுடை பாவங்களை சுத்தப்படுத்துவாயாக.

حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ ، قَالَ : ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً ، قَالَ : أَحْسِبُهُ ، قَالَ : هُنَيَّةً ، فَقُلْتُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ ، قَالَ : أَقُولُ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ 

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் (சூரா ஃபாத்திஹா) ஓதுவதற்குமிடையில் மெளனமாக இருப்பார்கள். ஒரு அறிவிப்பாளர் சிறிது நேரம் என்று கூறியதாக நினைக்கிறேன் என்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம்”என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இந்த இடைப்பட்ட மௌனமான இடங்களில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என கேட்டேன்.” 

அதற்கு நபி (ஸல்) “நான்

 اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

என்று கூறுவேன் என்றார்கள். (புஹாரி)

முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பில் 3 இடங்களிலும் خَطَايَايَ என்று இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவையிரண்டிலும் அர்த்தத்தில் எந்த ஒரு முரண்பாடுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

《☆》 இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் இதை ஃபர்ளான தொழுகையில் ஓதியிருக்கிறார்கள் என அறிய முடிகிறது.