《☆》 ஆரம்ப காலத்திலேயே இந்த தலைப்பில் அதிகமான கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
《☆》 மாலிகி மத்ஹபில் ஃபர்ளான தொழுகையில் دعاء الاستفتاح ஓதக்கூடாது. ஆனால் சுன்னத்தான தொழுகைகளில் ஓதலாம் என்றொரு ஃபத்வா இருக்கிறது. அதற்கு அவர்கள் சில ஹதீஸுகளை ஆதாரங்களாக முன்வைத்தார்கள்.
《☆》 இமாம் மாலிக் மதீனாவில் பிறந்து வளர்ந்தவராக இருப்பதால் மதீனாவில் வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களை அவர்களது ஸஹாபாக்கள் மூலமாக கண்முன் கண்டவராக இருந்தார்கள். மக்களுக்கு போதனைகள் செய்யும்போது இமாம் மாலிக் அவர்கள் குர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்ள மதீனா வாசிகளின் அமல்களையும் ஆதாரமாக காட்டக்கூடியவர்களாக இருந்தார்கள்.
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: ((مَنْ صَلَّى عَلَيَّ حِينَ يُصْبِحُ عَشْرًا، وَحِينَ يُمْسِي عَشْرًا، أَدْرَكَتْهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ
அபூதர்தா (ரலி) – நபி (ஸல்) – காலை நேரத்தில் யார் என் மீது 10 முறை ஸலவாத் சொல்கிறாரோ மேலும் மாலை நேரத்தில் 10 முறை சொல்கிறாரோ அவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைக்கும்.(பலஹீனமான செய்தி)
《☆》 நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லல்(அஸ்ஸலாத் அலன்னபீ) என்ற இப்னு அபீ ஆஸிம் அவர்களுடைய நூலிலும் இமாம் தபறானீ யின் முஹஜ்முல் சகீர் மற்றும் கபீரில் இடம்பெற்றிருக்கிறது.
《☆》 பகிய்யாத் இப்னுல் வலீத் என்பவர் அறிவிப்பாளர்களை மறைத்து அறிவிக்கக்கூடியவர்.
《☆》 ஹாலித் இப்னு மஹ்தான் இவர் அபூதர்தா (ரலி) அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் கேட்டதில்லை.
97- “أعوذ بكلمات الله التامات من شر ما خلق“ ( ثلاث مرات إذا أمسى)
3 முறை மாலை நேரத்தில் ஓத வேண்டும்
⬇️↔ أعوذ بكلمات الله التامات
அல்லாஹ்வுடைய பூரணமான வார்த்தைகளை கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்.
⬇️↔ من شر ما خلق
அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து
《☆》 இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) தவ்ஹீத் என்ற புத்தகத்தில் முஹ்தஸிலாக்களுக்கு மறுப்பாக இந்த துஆ வை கொண்டு வந்தார்கள்.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ، قَالَ: ((أَمَا لَوْ قُلْتَ، حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّكَ
அபூஹுரைரா (ரலி) – யா ரசூலுல்லாஹ் நேற்று நான் நட்டுவங்காளியால் கொட்டப்பட்டுவிட்டேன் என்று கூறியபோது. நபி (ஸல்) – நீங்கள் மாலை நேரத்தை அடைந்தபோது
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَஎன்று கூறியிருந்தால் அது உங்களை பாதிக்காது என பதிலளித்தார்கள்.(ஸஹீஹ் முஸ்லீம்)
《☆》 இந்த செய்தி ஆதாரபூர்வமானதே ஆயினும் இந்த புத்தகத்தில் இருப்பது போல 3 முறை கூற வேண்டும் என்ற அறிவிப்பும் காலையில் ஓத வேண்டும் என்ற அறிவிப்பும் ஆதாரபூர்வமானதல்ல.
‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் ‘அஸ்தஃக் ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி’ என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)3
அகர் அல் முஸனி – நபி (ஸல்) – என்னுடைய உள்ளத்தில் கரை படிகிறது. நான் ஒரு நாளில் அல்லாஹ்விடத்தில் 100 முறை பாவமன்னிப்பு தேடுகிறேன்.
முஸ்லீம் 7033
《☆》 புஹாரியில் 70 என்றும் முஸ்லிமில் 100 என்றும் இடம்பெற்றிருக்கிறது.
《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ :- 7,70,700 என்பது அரபுகள் நிறைய என்று குறிப்பிட பயன்படுத்துவதாகும். ஆகவே புகாரியில் அறிவித்த அறிவிப்பாளர் கருத்தில் அறிவித்திருக்கலாம்(الروايا بالمعنى), முஸ்லிமில் வந்த ஹதீஸ் அப்படியே அறிவித்த அறிவிப்பாக இருக்கலாம்(الرواية باللفظ،)
95-” اللهم إني أسألك علماً نافعاً ، ورزقاً طيباً ، وعملاً متقبلاً ” ( إذا أصبح )
عن أمِّ سَلَمَة رضيَ الله عنها قالت: كان النبيُّ يقول إذا صلَّى الصُّبْح حين يُسلِّماللهم إني أسألك علماً نافعاً ، ورزقاً طيباً ، وعملاً متقبلاً
உம்மு ஸலமா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகை முடித்தால் இதை ஓதுபவர்களாக இருந்தார்கள்.
ஸுனன் இப்னு மாஜா 9025
《☆》 உம்மு ஸலமா (ரலி) விடமிருந்து அடிமையாக இருந்து விடுவிக்கப்பட்டவர் அறிவிக்கிறார் என்று மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. அவர் யார் என்ற எந்த விவரமும் இல்லை. ஆகவே இது பலஹீனமான செய்தியாகும்.
யாரொருவர் காலையை அடையும்போது இந்த துஆவை சொல்கிறாரோ அவருக்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் பரம்பரையில் ஒருவரை கிடைத்தது போல (விடுதலை செய்தது) போலவும், 10 நன்மைகளும் எழுதப்படும், 10 தீமைகள் அழிக்கப்படும், அவருக்கு 10 தராஜாக்கள் உயர்த்தப்படும், மேலும் அவர் மாலையை அடையும் வரை ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாக இருப்பார். இதை மாலையில் ஓதினால் காலை வரை இந்த கூலி அவருக்கு கிடைக்கும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை கனவு கண்டார்கள் அப்போது அவர் யா ரசூலுல்லாஹ் அபூ அய்யாஷ் நீங்கள் இவ்வாறெல்லாம் கூறுவதாக கூறுகிறார் என்றேன். அப்போது அபூ அய்யாஷ் உண்மையை உரைத்தார் என நபி (ஸல்) பதிலளித்தார்கள்.
அபூதாவூத் 5027(ஹஸன்)
قال صلى الله عليه وسلم : ] من قال دبر صلاة الفجر وهو ثاني رجله قبل أن يتكلم : لا إله إلا الله ، وحده لا شريك له ، له الملك وله الحمد ، يحيي ويميت ، بيده الخير ، وهو على كل شيء قدير . عشر مرات كتب الله له بكل واحدة قالها منهن حسنة ، ومحي عنه سيئة ، ورفع بها درجة ، وكان له بكل واحدة قالها عتق رقبة ، وكان يومه ذلك في حرز من كل مكروه ، وحُرس من الشيطان ، ولم ينبغ لذنب أن يدركه في ذلك اليوم إلا الشرك بالله
யாரொருவர் பஜர் தொழுகைக்கு பின் இரு கால்களையும் மடித்துக்கொண்டு பேசுவதற்கு முன்னால் இந்த துஆ வை சொல்கிறாரோ அன்றைய தினம் ஷைத்தானால் எந்த பாவத்திலும் இவரை அகப்படுத்த முடியாது ஷிர்க்கை தவிர.
சுனனு திர்மிதி 3744(هذا حديث حسن صحيح غريب)
《☆》 இந்த அறிவிப்பாளர் வரிசை பிரச்னைக்குரியது. துஆ வை ஹஸன் ஆக்கி இந்த செய்தியை பலஹீனப்படுத்தி இருக்கலாம்.
ஷேக் அல்பானி இந்த அறிவிப்பாளர் தொடரில் ஷஹர் இப்னு ஹவ்ஷப் என்பவர் இடம்பெறுகிறார் ஆகவே இதை லயீஃப் என்றார்கள்.
《☆》 ஆகவே காலையில் 10 முறை மாலையில் 10 ஓதுவது என்ற செய்தி பலஹீனமானது.
《☆》 திர்மிதி 3534
(هذا حديث حسن غريب، لا نعرفه إلا من حديث ليث بن سعد، ولا نعرف لعمارة سماعاً عن النبي)
உமாரா என்பவர் நபித்தோழர் என்பதே உறுதியல்ல. ஆகவே இதை இமாம் திர்மிதி غريب (லயீஃப்) என்கிறார்கள்.
இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்கள் சுமை என்பவர் வழியாக அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) இடமிருந்து:-
யாரொருவர் இந்த துஆ வை 100 முறை சொல்லுகிறாரோஅவருக்கு 10 அடிமைகளை விடுதலை செய்த கூலிஉண்டுஅவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும்அவரை விட்டும் 100 (சிறு) பாவங்கள் அழிக்கப்படும். அன்றைய தினம் மாலையை அடையும் வரை ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்பட்டவராக இருப்பார். அன்றைய தினத்தில் அமல்களால் சிறந்தவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்இவரை விட அதிகமாக ஓதியவரை தவிர.
(من قال سبحان الله وبحمده في يوم مائة مرة، حطت عنه خطاياه، ولو كانت مثل زبد البحر)
மேலும் யாரொருவர் سبحان الله وبحمده என்று ஒரு நாளில் 100 முறை சொல்கிறாரோஅவரது பாவங்களையெல்லாம் உதிர்க்கப்பட்டுவிடும்; கடல் நுரையளவுக்கு அது இருந்தாலும் சரியே.
சுமை அவர்கள் வழியாக சுஹைல் அறிவிக்கிறார்கள் அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக:-
யாரொருவர் காலையிலும் மாலையிலும் سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ என்று 100 முறை கூறுகிறாரேஅவரை விட மறுமை நாளில் அதிகமாக கொண்டு வருபவர் இருக்க மாட்டார்கள். அவரைப்போன்றோ அல்லது அவரை விட அதிகமாக ஓதியவரையோ தவிர.
《☆》 ஸஹீஹ் முஸ்லீம் 7019(ஹஸன் )
இமாம் மாலிக் அவர்கள் வழியாக வந்த மேற்கூறப்பட்ட ஹதீஸில் காலை மாலை என்று இடம்பெறவில்லை மாறாக ஒரு நாளில் 100 முறை என்றே இடம்பெறுகிறது.ஆகவே சில அறிஞர்கள் இதை காலை மாலை துஆ வில் சேர்க்காமல் பொதுவாக ஒரு நாளில் 100 முறை என்று கூறியிருப்பினும், பொதுவாக ஹதீஸ்கலை அறிஞர்கள் இதை காலை மாலை துஆ வில் சேர்த்தே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
《☆》 இதே ஹதீஸ் இமாம் புஹாரி பதிவு செய்ததில் சுபஹானல்லாஹி வபிஹம்திஹி யின் செய்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில வேளைகளில் இமாம் புஹாரி ஹதீஸுகளை தளைப்பிர்க்கேற்றவாறு சுறுக்குவதும் உண்டு. ஆகவே இந்த ஹதீஸ் சுறுக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.
அதிகமானோரின் அறிவிப்பின் படி இந்த கீழ்குறிப்பிட்டிருக்கப்படும் துஆ வே சரியானதாக இருக்கிறது. மேல் கூறப்பட்டவாறு ஓதுவதால் அர்த்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரைகள் (Comments)