87- رضيت بالله رباً ، وبالإسلام ديناً وبمحمد صلى الله عليه وسلم نبياً (ثلاث مرات)
حدثنا أبو سعيد الأشج حدثنا عقبة بن خالد عن أبي سعد سعيد بن المرزبان عن أبي سلمة عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يمسي رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا كان حقا على الله أن يرضيه قال أبو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه
ஸவ்பான் (ரலி) -யாரொறொருவர் காலையில்
رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا
என்று கூறுகிறாரே அல்லாஹ் அவரை திருப்தி படுத்துவதை தனக்கு தானே கடமையாக்கி கொண்டான்.
(ஸுனனு திர்மிதி -3389)
《☆》 இதில் சயீத் இப்னுல் மர்ஸுபான் என்பவர் பலகீனமானவராவார்.
《☆》அபூதாவூத் 5072 இல் இந்த அறிவிப்பு இடம்பெற்றிருப்பினும் அதில் சாபிக் இப்னு நாஜியா என்பவர் மஜ்ஹூல் (அறியப்படாதவர்).
《☆》 இதை பாங்கின் சமயத்திலும் பொதுவான நேரங்களிலும் கூறுவதற்கு ஹதீஸுகளின் ஆதாரம் இருக்கிறது. இதை காலையிலும் மாலையிலும் 3 முறை கூறவேண்டும் என்று வரும் ஹதீஸ் பலகீனமானதாகும்.
என்று எவரொருவர் 3 முறை மாலையில் கூறுகிறாரோ அவருக்கு திடீரென ஏற்படக்கூடிய எந்த சோதனையும் காலையை அடையும் வரை வராது. 3 முறை யார் காலையில் கூறுகிறாரோ மாலை வரை எந்த சோதனையும் ஏற்படாது.
இந்த செய்தியை அறிவித்த அபான் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆகவே அவரை நான் பார்த்தேன். ஏன் பார்க்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு அபான் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது பொய் சொல்லவுமில்லை உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை குறித்து பொய் சொல்லவுமில்லை. எனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்ட அந்த நாளில் கோபத்தின் காரணத்தால் இந்த துஆ வை ஓதாமல் தூங்கிவிட்டேன் என்றார்கள்.
சில அறிவிப்புகளில் நான் இந்த துஆ வை 30 வருடங்களாக ஓதினேன் எனக்கு பாதிப்பு ஏற்பட்ட அந்த நாளில் போதவில்லை என்று கூறியதாக இடம்பெறுகிறது.
《☆》 அபூமவ்தூத் அவர்கள் யார் மூலமாக கேட்டார் என்பது அறிவிக்கப்படவில்லை என்பதால் இது மஜ்ஹூல்.(அறியப்படாதவர் இடம்பெறுகிறார்) மேலும் அபூமவ்தூத், அபான் அவர்களிடமிருந்து கேட்டவரிடம் நான் கேட்டேன் என கூறுகிறார்.
《☆》 அபூமவ்தூத் அவர்கள் மூலமாக வேறு சில செய்திகள் இடம்பெற்றிருப்பினும் இந்த ஒரு செய்தி மட்டுமே சரியானது.
《☆》 இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு மஹதி மற்றும் இமாம் அபூ சுர்ஆ அர் ராஸீ இந்த ஹதீஸில் இருவரை விட்டு அறிவித்திருக்கிறார் அந்த ஒரு செய்தி மட்டுமே சரியானது.
《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ இது ஒரு மறைமுகமான வடு என்று கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹிப்பான் அவர்களுக்கும் இமாம் பஸ்ஸார் அவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது இந்த விஷயத்தில்.
இமாம் தாரகுத்னீ – இதில் இடையில் முஹம்மது இப்னு கஹ்பு இடையில் வருவது பிழை என்று.
《☆》 ஆகவே அபூதாவூதில் வரக்கூடிய இந்த அறிவிப்பாளர் வரிசை பலஹீனமானது.
2வது இஸ்னாத்
《☆》 இதே போன்ற செய்தி திர்மிதி 3388 இல் இடம்பெறுகிறது. அதில் அபான் அவர்கள் அன்றைய தினம் அந்த துஆ வை சொல்லவில்லை என்று மட்டும் வருகிறது.
இந்த அறிவிப்பில் அப்துர்ரஹ்மான் இப்னு அபுசினாத் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். அவர் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகள் மற்றும் இராக்கிலிருந்து இவர் அறிவிக்கும் அறிவிப்புகளும், இவரது ஈராக்கிய மாணவர்கள் மூலமாக அறிவிக்கும் அறிவிப்புகள் பலஹீனமானதாகும்.
மேற்கூறப்பட்ட ஹதீஸ் இந்த 3 வழியாகவும் தான் இந்த அறிவிப்பாளர் வரிசை இருக்கிறது.
இமாம் திர்மிதி இந்த செய்தியை ஹஸனுன் கரீபுன் என்று அறிவிக்கிறார்கள் (இஸ்னாதில் குறையுள்ளது)
《☆》 இமாம் நஸயீ தனது சுனனுல் குப்ரா வில் இந்த செய்தியை அறிவித்து விட்டு அப்துல் ரஹ்மான் இப்னு அபீ சிநாத் லயீப் ஆனவர் என அறிவிக்கிறார்கள்.
3வது இஸ்நாத்
《☆》 இந்த அறிவிப்பில் இந்த துஆ வை யார் கூறுகிறாரோ அவருக்கு திடீரென ஏற்படும் எந்த பாதிப்பும் வராது என்று மட்டுமே இடம் பெறுகிறது. காலையிலும் மாலையிலும் கூறவேண்டும் என்று மட்டுமே இடம் பெறுகிறது. இதில் 3 முறை கூறுவது, பக்கவாதம் சம்மந்தமான எந்த செய்தியும் இடம்பெறவில்லை.
சுனனுல் குப்ரா – இமாம் நஸயீ 10107
《☆》 இதில் யஸீத் இப்னு பிராஸ் என்பவர் இடம்பெறுகிறார். அவரைப்பற்றிய தகவல்கள் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்.
4வது இஸ்நாத்
ومن طريق قدامة بن محمد بن قدامة المديني نا المنذر بن عبد الله الحزامي نا أبان بن عثمان، قال: سمعت عثمان بن عفان، قال: قال رسول الله – صلى الله عليه وعلى آله وسلم-: “من قال إذا أصبح أو أمسى ثلاث مرات: بسم الله الحيّ الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء، وهو السميع العليم؛ لم يصبه شيء” وذكر قصة الفالج، فقال: فأصبح أبان قد ضَرَبَه الفالج، فنظر إليه بعض جلسائه، فقال: أما والله، ما كَذَبْتُ ولا كُذِبْتُ، ولازلتُ أقولها منذ ثلاثين سنة، حتى كانت هذه الليلة، فأُنسيتُها، وكان ذلك للقضاء والقدر.
أخرجه ابن أبي خيثمة في “تاريخه” (2/369-370/برقم 3438) وابن عساكر في “تاريخ دمشق” (6/148) ولم يذكر تصريح المنذر بالسماع من أبان
இமாம் இப்னு அபீ ஹைதமா அவர்களின் தாரீஹில் – 3438
அபான் இப்னு உஸ்மான் அவர்கள் அறிவித்ததாக – بسم الله الحيّ الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء، وهو السميع العليم என்று நான் 30 வருடங்களாக இதை கூறுகிறேன் எந்த நாளில் இந்த பக்கவாதம் வந்ததோ அந்த நாளில் இதை நான் கூற மறந்து விட்டேன் என்று இடம்பெறுகிறது.
அறிவிப்பாளர் தொடரில் 2 குறைகள்:-
இந்த அறிவிப்பில் இடம் பெரும் முந்திர் இப்னு அப்துல்லாஹ் என்பவர் அபான் இப்னு உஸ்மான் அவர்களை சந்திக்கவே இல்லை.
அவரிடமிருந்து அறிவிக்கும் குதாமா என்பவரும் பலஹீனமானவர்.
《☆》 ஷேக் அல்பானி (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவரான அபுல் ஹசன் அல் மக்ரபி இதை حسن لغيره
(அனைத்து இஸ்னாதுகளையும் சேர்த்து இதை ஹசன் தரத்திற்கு கொண்டு வரலாம்) என்கிறார்கள்.
இமாம் தாரகுத்னி அவர்கள் மேற்கூறப்பட்ட இஸ்னாதுகளில் சிறந்தது அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது தந்தை வழியாக அறிவிக்கும் இஸ்நாத் ஆகும். (நாம் முதலாவதாக பார்த்த இஸ்நாத்)
《☆》 ஆனால் நவீன காலத்து அறிஞர்கள் பெரும்பாலானோர் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்கின்றனர்.
《☆》 இதை ஹசன் என்று எடுத்துக்கொண்டாலும் 30 வருடங்கள் இந்த துஆ வை கூறியாதாக வரும் செய்திகள் ஹசன் இல் இடம் பெறாது என்பதே சரியானதாகும்(அல்லாஹு அஹ்லம்)
94-“سبحان الله وبحمده عدد خلقهِ ورِضَا نفسِهِ وزِنُة عَرشِهِ ومِداد كلماته”( ثلاث مرات إذا أصبح
காலையில் 3 முறை ஓதுதல்
وعَنْ جُوَيْرِيَةَ بنت الحارث، أم المؤمنين رضي الله عنها؛ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً، حِينَ صَلَّى الصُّبْحَ وَهِيَ فِي مَسْجِدِهَا، ثُمَّ رَجَعَ بَعْدَ أَنْ أَضْحَى، وَهِيَ جَالِسَةٌ، فَقَالَ: ((مَا زِلْتِ عَلَى الْحَالِ الَّتِي فَارَقْتُكِ عَلَيْهَا؟)) قَالَتْ: نَعَمْ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم:((لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ، ثَلَاثَ مَرَّاتٍ، لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ)).
ஜுவைரிய்யா (ரலி) – நபி (ஸல்) காலையில் வீட்டை விட்டு சுபுஹ் தொழுகை நேரத்தில் வெளியேறுகையில் ஜுவைரியா (ரலி) அவர்களது தொழுமிடத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) பகல் நேரத்தில் திரும்பி வரும்போது ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் அதே இடத்தில இருந்துகொண்டிருந்தார்கள். அதைக்கண்ட நபி (ஸல்) நான் போகும்நேரம் இருந்தது போலவே அமர்ந்துகொண்டிருக்கிறீர்களா என்று கேட்டபோது ஆம் என்றார்கள். அப்போது நபி (ஸல்) நான் இங்கிருந்து சென்ற பின் 4 வார்த்தைகளை 3 முறை சொன்னேன் நீங்கள் கூறியதையும் நான் கூறியதையும் நிறுத்து பார்த்தல் இது அதற்க்கு சமமாகிவிடும்.
அபூபக்கர் (ரலி) – யா ரசூலுல்லாஹ் நான் காலையை அடைந்தாலும் மாலையை அடைந்தாலும் சொல்லக்கூடிய ஒரு வார்த்தையை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டபோது நபி (ஸல்) கூறினார்கள் “
உன்னைத்தவிர வணக்கத்திற்கு தகுதியானவர்கள் வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
⬇️↔ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي
எனது ஆத்மாவால் ஏற்படும் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்
⬇️↔ وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ
விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும்
அவனை கூட்டு சேர்ப்பதை விட்டும் ↔ وَشِرْكِهِ
என்று நீங்கள் காலையை அடைந்தாலும் மாலையை அடைந்தாலும் தூங்கச்சென்றாலும் கூறுங்கள்.
《☆》 இந்த செய்தி அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாகவும், அபூபக்கர் (ரலி) மூலமாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாகவும் இடம்பெறுகிறது, அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அறிவிப்பதாகவும், அபூமாலிக் அல் அஷ்அரீ (ரலி) அறிவிப்பதாகவும் இடம்பெறுகிறது.
(அபூதாவூத் 5067 – ஸஹீஹ்)
《☆》 وأن اقترف على نفسي سوءًا أو أجُره إلى مسلم” எனக்கெதிராக நான் ஒரு பாவம் செய்வதை விட்டும் ஒரு முஸ்லிமுக்கு அதன் மூலம் அநியாயம் செய்வதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்ற இந்த வார்த்தை அபூபக்கர் (ரலி) வின் ஹதீஸில் இடம்பெறவில்லை. இந்த வார்த்தை ஒரு அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது.
84- “اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي،اللهم استر عوراتي وآمن روعاتي، اللهم احفظني من بين يديَّ ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي
عن ابن عمر رضي الله عنهما، قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يدع هؤلاء الكلمات إذا أصبح وَإذا أَمْسَى: ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تحتي)).
இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் இந்த துஆ வை ஓதாமல் விட்டதே இல்லை.
நான் நிலத்திலிருந்து திடீரென உள்வாங்கப்பட்டு கொல்லப்படுவதிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக.
(இமாம் அபூதாவூத் وهو الخسف، இது பூகம்பம் அல்லது நிலத்தில் உள்வாங்கப்படுவதை குறிக்கும் என விளக்கமளித்தார்கள்)
ஸுனன் அபூதாவூத் 5074
《☆》 சில அறிஞ்ர்கள் இந்த செய்தி அனைத்து விதமான பாதிப்பையும் குறிக்கும் என்று கூறுகின்றனiர். ஹதீஸ் கலையில் பெரும்பாலான அறிஞ்ர்கள் இதை ஸஹீஹ் என்று அறிவித்திருக்கிறார்கள்.
83 – “حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم “(سبع مرات
《☆》 அபூதாவூத் 5081
من قال إذا أصبح وإذا أمْسى: حَسْبي الله، لا إله إلا هو، عليه توكلتُ، وهو ربُّ العرش العظيم، سَبْع مرات؛ كفاه الله ما أهمه، صادقًا كان بها أو كاذبًا
அபூ தர்தா (ரலி) – யாரொருவர் காலையிலும் மாலையிலும்
حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم
என 7 முறை கூறுகிறாரோ அவருடைய தேவைகளையெல்லாம் அல்லாஹ் போக்கி விடுவான் அவர் அதை உண்மையாக சொன்னாலும் பொய்யாக சொன்னாலும் சரியே.
《☆》 இந்த செய்தி அபூதர்தா (ரலி) சொன்னதாகவும்(موقوف) அபூதர்தா (ரலி) நபி (ஸல்) விடமிருந்து கேட்டு அறிவித்ததாகவும்
(مرفوع) வருகிறது.
《☆》இப்னு கஸீர் பாகம்- 4 பக்கம் 214 – இப்னு அஸாகீர் அவர்கள் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் தர்ஜமாவில் பதிவு செய்துள்ளார் “صادقًا كان بها أو كاذبًا என்ற வார்த்தையை இமாம் இப்னு கஸீர் பதிவு செய்திருக்கிறார் என குறிப்பிட்டுவிட்டு (وهذه زيادة غريبة) இந்த மேலதிக தகவல் மிகவும் புதுமையாக இருக்கிறது எனக்கூறிவிட்டு فرفعه فذكر مثله بالزيادة . وهذا منكر அஹ்மத் என்பவர் அதிகப்படுத்தி அறிவித்திருக்கிறார், சில செய்திகளை அதிகப்படுத்தி அறிவித்திருக்கிறார், மேலும் இது நிராகரிக்கத்தக்க செய்தி “என்று இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்.
《☆》 இப்னு அஸாகீர் அவர்களது வேறொரு நூலில் நபி (ஸல்) சொன்னதாக வேறொரு அறிவிப்பாளர் வரிசையாக வருகிறது. அந்த வரிசையில் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஸ்ஸாக் என்பவர் இடம்பெறுகிறார். அவர் அறியப்படாதவராக இருப்பதால் அந்த அறிவிப்பை சரியென ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
《☆》 இமாம் இப்னுஸுன்னி (ரஹ்) அவர்களின் அமலுல் யவ்மி வல்லைலா என்ற நூலில் நபி (ஸல்) மூலமாக அறிவிக்கும் அந்த செய்தியை அறிவிக்கிறார் அதில் صادقًا كان بها أو كاذبًا என்ற வார்த்தை இடம்பெறவில்லை.
《☆》 ஆகவே ஷேய்க் அல்பானி இதை இட்டுக்கட்டப்பட்ட(موضوع) செய்தி என்கிறார்கள்.
82- “اللهم عافني في بَدَني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت .اللهم إني أعوذ بك من الكفر، والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت” (ثلاث مرات)
அபூ பக்ரா (ரலி) (தாயிஃப் ஐ சேர்ந்தவர்) அவர்கள் வழியாக தன் மகன் அறிவிக்கும் செய்தி – தந்தையே நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் இந்த துஆ வை சொல்வதை நான் பார்க்கிறேன்
என 3 முறை காலையிலும் 3 முறை மாலையிலும் கூறுகிறீர்கள்; என்று நான் கேட்டபோது என் தந்தை கூறினார் “நான் நபி (ஸல்) விடமிருந்து இந்த துஆ வை கேட்டேன் ஆதலால் பின்பற்றுகிறேன்”என்றார்கள்.
《☆》இதில் ஜஹ்ஃபர் இப்னு மைமூன் என்ற அறிவிப்பாளர் இந்த தொடரில் இடம் பெறுகிறார். அவர் பலஹீனமானவர். இமாம் நஸாயீ அவர்கள் இந்த துஆ வை பதிவு செய்துவிட்டு
جعفر بن ميمون: ليس بالقوي في الحديث இவர் பலமானவரல்ல என குறிப்பிட்டிருக்கிறார்கள்.(சுனனுல் குப்ரா)
《☆》இமாம் பைஹகீ اثبات عذاب القبر (கபர் வேதனை உண்டு) என்ற நூலில் 206 ஆவது செய்தியில் இந்த தொடரின் ஸஹீஹான அறிவிப்பை கொண்டு வந்து இது இன்னொரு வகையிலும் அறிவிக்கப்படுகிறது என்று இந்த அறிவிப்பை குறிப்பிடுகிறார். அது அரபியில் مجهول(Indirect) வகையில் குறிப்பிடுகிறார். பொதுவாக ளயீஃபான செய்திகள் தான் அவ்வாறு (செய்யப்பாட்டுவினையில்) அறிவிப்பார்கள்.
என்று தொழுகையில் கூறக்கேட்டேன் ஆகவே நானும் அவ்வாறு செய்ய ஆரம்பித்தேன் அப்போது மகனே உனக்கு இதை யார் கற்றுத்தந்தார் என தந்தை கேட்டபோது நீங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் இதை ஓதுவதை கேட்டேன் ஆகவே நானும் அதை பின்பற்றினேன் என்றபோது; அதை தொடர்ந்து செய்யுங்கள் ஏனெனில் நபி (ஸல்) ஒவ்வொரு தொழுகைக்கும் பின்னால் இதை சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.
《☆》 இந்த ஹதீஸில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் ஸஹீஹானது, ஆயினும் இந்த செய்தியில் சில பலஹீனங்கள் உள்ளன. இமாம் நஸயீ, பைஹகீ போன்றவர்கள் இதை பலஹீனம் என்று அறிவிக்கிறார்கள்.
புத்தக ஆசிரியர் கருத்து :- தன்னுடைய அடியார்களுக்கு இம்மை மறுமை வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டுபவன். மேலும் தன்னுடைய நேசர்கள் அவனை வழிபடுவதற்கும் அவனுடைய திருப்தியை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுபவன். மிருகங்களாலும் தேவயானவற்றுக்கு வழிகாட்டுபவன்
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
⭐ ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான்.
⭐ நாம் துஆ கேட்கும்போது நம்முடைய பார்வைகள் மேலே செல்வதும் அல்லாஹ் மனிதனிடம் இயல்பாக உருவாக்கியுள்ளான்.
⭐ அல்லாஹ் வானத்தில் அவனது அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான். எப்படி இருக்கிறான் என்பது நாம் அரியமாட்டோம்.
⭐ ஆகவே العلي، الأعلى، المتعال என்ற அல்லாஹ்வின் திருப்பெயர்கள் மூலமாக அல்லாஹ் அவனது ذات ஆல் உயர்ந்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அவன் தனது صفت களாலும் உயர்ந்திருக்கிறான்.
அல்லாஹ்வுடைய சில صفت கள் மனிதர்களிடமும் இருக்கும். ஆனால் மனிதர்களுடைய صفت குறைபாடுடையது. அல்லாஹ்வுடைய صفت உயர்ந்ததும் பரிபூரணமானதுமாக இருக்கிறது.
⭐ மனிதன் பார்ப்பான் ஆனால் அவனது பார்வைக்கு ஒரு அளவு இருக்கிறது அதற்குமேல் அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் பார்ப்பது அது போன்றது அல்ல. அவன் அனைத்தையும் பார்ப்பவன் அனைத்தையும் கேட்பவன்.
⭐ அல்லாஹ் உயர்ந்தவன் என்றதில் அனைத்தையும் மிகைக்கக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான் என்ற கருதும் அதில் இருக்கிறது. அல்லாஹ்வை மிகைப்பதற்கு யாருமில்லை எதுவுமில்லை. அனைத்தையும் விட உயர்ந்தவனாகவும் அடக்கியாளக்கூடியவனாக இருக்கிறான்.
⭐ அல்லாஹ் சிலருக்கு சில சக்திகளை கொடுத்திருக்கிறான்.
உதாரணம்
⭐ தஜ்ஜாலுக்கு அல்லாஹ் சில சக்திகளை கொடுத்திருக்கிறான்
ஷைத்தானுக்கு சில சக்திகளை கொடுத்திருக்கிறான் …..
⭐ இவையனைத்தும் மனிதனை சோதிப்பதற்காகவே அவன் அந்த சக்திகளை கொடுக்கிறான். மனிதனுக்கு தாம் தான் மக்களை அடக்கியாளக்கூடியவன் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.
ஸூரத்துந் நாஜிஆத் 79:24
فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰى ۖ
“நான்தான்(பிர்அவ்ன்) உங்களுடைய மாபெரும் இறைவன் – ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
⭐ அப்படிப்பட்ட பிர்அவ்னை அல்லாஹ் நடுக்கடலில் தத்தளிக்க விட்டு உலக முடிவு வரை அவனை ஒரு அத்தாட்சியாக மாற்றியிருக்கிறான்.
⭐ ஹாரூனும் தன்னை உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் ஆணவத்தில் இருந்தபோது அல்லாஹ் அவனையும் அவனது மாளிகையும் பூமிக்குள் விழுங்கச்செய்தான்.
⭐ அஹ்லா என்பது அல்லாஹ்வின் பெயராகும். அதை மனிதர்களுக்கு சூட்டுவது தவறாகும்.
⭐ அபுல் அஹ்லா என்ற ஒரு தலைவரின் பெயர் இருக்கிறது. அல்லாஹ்வின் தந்தை என்று அதற்கு அர்த்தம் வருகிறது. ஆகவே தலைவர்களின் மீதுள்ள பற்றின் காரணமாக பிள்ளைகளுக்கு பெயர்சூட்டுவதில் கவனம் தேவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
⭐ சிலருக்கு அலீ என்று பெயர் வைக்கலாமா என்ற சந்தேகம் எழும்.
⭐ அல் அலீ என்று பெயர் வைக்கக்கூடாது. ال சேர்க்காமல் அலீ என்று மட்டும் பெயர் வைப்பதில் தவறில்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களது பெயரை நபி (ஸல்) மாற்றுமாறு கட்டளையிடவில்லை.
⭐ العلي، الأعلى، المتعال என்ற பெயரை புரிந்துகொள்ளும்போது நாம் எத்தனை வசதியும் வலிமையும் படைத்தவர்களாக இருந்தாலும் நாம் ஒன்றுமில்லை என்பதை புரிந்துகொள்வோம். உண்மையான العلي، الأعلى، المتعال அல்லாஹு சுபஹானஹு வ தஹாலா தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஏழை, பணக்காரன், அழகு, அறிவு, எதைக்கொண்டும் நாம் சிறந்தவர்களாக முடியாது. அல்லாஹ் தான் உயர்ந்தவன் மற்றவர்கள் அனைவரும் அவன் முன்னிலையில் தாழ்ந்தவர்களே என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துரைகள் (Comments)