ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 40

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 40

الرحمن على العرش استوى

அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் என்று குர்ஆனில் 7 இடங்களில் இடம்பெறுகிறது. 

استوى

அபுல் ஆலியா (ரஹ்) என்ற தாபிஹ் استوى என்ற சொல்லுக்கு உயர்ந்திருக்கிறான்  என்பது பொருளாகும். 

சில தர்ஜமாக்களில் 

அர்ரஹ்மான் அர்ஷின் மீது தனது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்து இடம்பெற்றிருக்கும். அது மிகவும் தவறான கருத்தாகும்.

மாறாக அர்ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான் என்பதே சரியான கருத்தாகும்.  

குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும்போது 

அல்லாஹ் அவர்களுக்கு மேலே இருக்கிறான் 

அல்லாஹ் உயர்ந்தவனாக இருக்கிறான் என்றெல்லாம் வசனங்கள் இடம்பெறுகிறது.

குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தான் என பல இடங்களில் குறிப்பிடுகிறான். அவன் மேலே இருப்பதால் தான் இறக்கினோம் என்று கூறுகிறான்.

ஸூரத்துல் ஹிஜ்ர் 15:9

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

ஸூரத்துல் கத்ரி 97:1

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

ஸூரத்து ஃபாத்தி 35:10

مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ؕ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ؕ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ‏

எவன் இஜ்ஜத்தை – கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு – இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.

 حديث أبي هريرة

قال: قال رسول الله ﷺ: من تصدق بعَدل تمرة من كسب طيب -ولا يقبل الله إلا الطيب- فإن الله يقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فَلُوَّه حتى تكون مثل الجبل

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்லதை தவிர வேறெதுவும் அல்லாஹ்விடம் ஏறிச்செல்லாது . யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் “தமது குதிரைக் குட்டியை” அல்லது “தமது ஒட்டகக் குட்டியை” வளர்ப்பதைப் போன்று.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book :12 ஸஹீஹ் முஸ்லீம் 

ஸூரத்துல்ஆல இம்ரான் 3:55

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ‌‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ

“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

ஸூரத்துல் முல்க் 67:16, 17

ءَاَمِنْتُمْ مَّنْ فِىْ السَّمَآءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِىَ تَمُوْرُۙ‏

வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.

اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا‌ ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ‏

அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

நபி (ஸல்) – நீங்கள் பூமியில் உள்ளவர்களுக்கு அன்பும் இரக்கமும் காட்டினால் வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பும் இரக்கமும் காட்டுவான் (திர்மிதி)

நபி (ஸல்) – ஹஜ்ஜதுல் விதாவில் – தனது ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தி யா அல்லாஹ் நீ இதற்கு சாட்சி என்று 3 முறை கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்)

நபி (ஸல்) மிஹ்ராஜ் சென்றபோது வானத்தில் ஏறிச்சென்று அல்லாஹ்விடம் பேசிவிட்டு வந்தார்கள்(புஹாரி, முஸ்லீம்)

மேற்கூறப்பட்ட ஆதாரங்கள் அல்லாஹ் மேலே இருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. இந்த கருத்தை உலகிற்கு வந்த நபிமார்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

ஸூரத்துல் முஃமின் 40:36, 37

وَقَالَ فِرْعَوْنُ يٰهَامٰنُ ابْنِ لِىْ صَرْحًا لَّعَلِّىْۤ اَبْلُغُ الْاَسْبَابَۙ‏

(இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக – நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!

اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى وَاِنِّىْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِيْلِ ؕ وَمَا كَيْدُ فِرْعَوْنَ اِلَّا فِىْ تَبَابٍ‏

“(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 39

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 39

அந்த வழிகெட்ட கொள்கையினர் இட்டுக்கட்டி கூறும் மேலும் ஒரு ஆதாரம்  

ஸூரத்துல் ஹதீத் 57:4

….. وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ؕ……

நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் 

ஸூரத்துத் தவ்பா 9:40

…… لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌ ۚ……

………“கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்”………..

ஸூரத்து ஃகாஃப் 50:16

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

இந்த வசனங்களை முன்வைத்து அல்லாஹ் மனிதர்களோடு இருக்கிறான் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இஸ்லாத்தில் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு ஹதீஸையும் ஒரு குர்ஆன் வசனத்தையும் மட்டும் வைத்து ஒரு முடிவு எடுத்தல் கூடாது. மாறாக அந்த தலைப்பில் வரும் அனைத்து குர்ஆன் வசனங்களையும் ஹதீஸையும் வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே இந்த கருத்து பிற குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸுகளுக்கும் மாற்றமாக இருக்கிறது.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 38

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 38

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

  1. முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!” என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், “வானத்தில்” என்று பதிலளித்தாள். அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள். அவர்கள் (என்னிடம்), “அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், வள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :5 ஸஹீஹ் முஸ்லீம் 

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 37

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 37

வழிகெட்ட கொள்கைகளில் ஒன்று 

وحدت الوجود அனைத்தும் அல்லாஹ் தான் எனும் கருத்து 

இயல்வது யாவும் இறை உருவே

அனைத்தும் அல்லாஹ்வின் தோற்றமே 

ஸூரத்துல் ஹதீத் 57:3

هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ‌ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

இந்த வசனத்தில் الظَّاهِرُ என்ற வார்த்தைக்கு  வெளிப்படை என்ற அர்த்தமிருப்பதால், அல்லாஹ்வின் வெளிப்பாடு தான் பிரபஞ்சத்தின் அனைத்தும் என்ற கருத்தை இட்டுக்கட்டி மக்களை வழிகெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் எங்குமிருப்பான், தூணிலுமிருப்பான்  துரும்பிலும் இருப்பான் என்றெல்லாம் கூறுவது மிகவும் தவறான வழிகேடான கொள்கையாகும். இவ்வாறான கொள்கை ஒரு மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியே கொண்டு சென்றுவிடும். 

الظَّاهِرُ என்ற வார்த்தைக்கு  நபி (ஸல்) கற்றுத்தந்த விளக்கத்தில் அல்லாஹ் உயர்ந்தவன் அவனுக்கு மேலாக வேறெதுவும் கிடையாது என்று கூறினார்கள். 

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 36

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 36

العلي، الأعلى، المتعال

العلي – உயர்ந்தவன் 

திருக்குர்ஆனில் 2 இடங்களில் அளீம் என்ற பெயருடன் அலீ என்ற பெயர் இணைந்து வருகிறது. 

ஸூரத்துல் பகரா 2:255

….. وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ 

இன்னும் 4 இடங்களில் அல் கபீர் என்ற பெயருடன் அல் அலீ என்ற பெயரை சேர்த்து சொல்கிறான்.

ஸூரத்துல் ஹஜ் 22:62

ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏

الأعلى – மிக மேலானவன்(உயர்ந்தவன்)

ஸூரத்துல் அஃலா 87:1

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ‏

المتعال(எல்லாவற்றையும் மிகைத்து உயர்ந்திருக்கக்கூடியவன்)

ஸூரத்துர் ரஃது 13:9

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏

العلي، الأعلى، المتعال இதன் வேர்ச்சொல் علو என்பதாகும் 

العلو என்றால் மேலே உள்ளது, உயர்ந்தது என்று பொருளாகும் 

அதிகமானவர்கள் அல்லாஹ்  அனைத்தையும் அடக்கியாள்வதில் மேலானவன் என்ற கருத்தை கூறுவார்கள். ஆனால் அவன் தனது ذات (அல்லாஹ்வின் உண்மையான நிலை, வடிவம் ) ஆல்  உயர்ந்தவனாக இருக்கிறான்.

அல்லாஹ்விற்கு முகம் இருக்கிறதா?

ஆம் இருக்கிறது.

என்ன ஆதாரம்?

அல்லாஹ் குர்ஆனில் தனக்கு முகம் இருப்பதாக கூறி இருக்கிறான்.

ஆனால் அல்லாஹ்வின் முகம் எப்படி இருக்கும் என்று அல்லாஹ் நமக்கு கூறவில்லை. நபி (ஸல்) சஹாபாக்களிடம் அல்லாஹ்வின் முகத்தைப்பற்றி கூறியபோதும் அது எப்படி இருக்கும் என்று சொல்லிக்கொடுக்கவில்லை. ஆகவே மனிதர்கள் யாருக்கும் அதைப்பற்றிய அறிவு இல்லை. அதைப்பற்றிய எந்தவிதமான கற்பனையும் மனிதனுக்கு அனுமதிக்கப்படவில்லை.

அதுபோலவே அல்லாஹ்வுக்கு கை இருக்கிறது, கால் இருக்கிறது, கெண்டைக்கால் இருக்கிறது என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெறுகிறது.

ஸூரத்துர் ரஹ்மான் 55:27

وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ۚ‏

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

ஸூரத்து ஃகாஃப் 50:30

يَوْمَ نَـقُوْلُ لِجَهَـنَّمَ هَلِ امْتَلَـئْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ‏

நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!

 عن أنس  قال: قال رسول الله ﷺ: لا تزال جهنم يلقى فيها وتقول: هل من مزيد؟ حتى يضع رب العزة قدمه فيها، فينزوي بعضها إلى بعض وتقول: قط قط وعزتك وكرمك، ولا يزال في الجنة فضلٌ حتى ينشئ الله لها خلقاً آخر فيسكنهم الله تعالى في فضول الجنة[1]، رواه مسلم.

  1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். நரகம் (வயிறு நிரம்பாமல்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும்; இறுதியில் கண்ணியத்தின் அதிபதி (யான இறைவன்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, “போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!” என்று நரகம் கூறும்.

சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான்.

இதை, “நாம் நரகத்திடம் “உனக்கு (வயிறு) நிரம்பிவிட்டதா?” என்று கேட்கும் நாளில் “இன்னும் அதிகம் இருக்கிறதா?”என்று அது கேட்கும்” (50:30) எனும் இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் அப்துல் வஹ்ஹாப் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book :51 முஸ்லீம் 

அகீதா தெளிவான முறையில் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயத்தில் எந்த வித குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்ததை நாம் அவ்வாறே ஏற்றுக்கொள்வது தான் நமக்கு சிறந்ததாகும்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை இருக்கிறது என்று நமக்கு கற்றுத்தந்தார்களோ அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வோம் அவர்கள் எதை கற்றுத்தரவில்லையோ அதை பற்றி எந்த ஒரு கருத்தும் முஸ்லிம்கள் கூறமாட்டார்கள்.

ஆகவே அல்லாஹ்வின் ذات ஐ அரபு மொழியிலேயே சொல்வது நமக்கு சிறந்தது. அதை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது நம்மை வீணான குழப்பத்திற்கு இட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 35

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 35

2. رزق خاص  விசேஷமான ரிஸ்க்  رزق القلوب (உள்ளங்களுக்கு  கிடைக்கும் ரிஸ்க்). உள்ளத்திற்கு நல்ல கல்வியும் ஈமானும் கிடைப்பதே رزق خاص ஆகும். மேலும் மார்க்கத்தை சீரான முறையில் வைத்துக்கொள்வதற்கேற்ப ஹலாலான ரிஸ்க் கிடைப்பது.

இது முஃமின்களுக்கு மட்டுமே அவர்களது படித்தரங்களுக்கு ஏற்ப கிடைப்பதாகும்

ஸூரத்துத் தலாஃக் 65:11

…..وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا‏

…. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் – அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்

ஸூரத்து ஸாத் 38:49 – 54

هٰذَا ذِكْرٌ‌ؕ وَاِنَّ لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍۙ‏

இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.

جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ‌ۚ‏

“அத்னு” என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.

مُتَّكِـــِٕيْنَ فِيْهَا يَدْعُوْنَ فِيْهَا بِفَاكِهَةٍ كَثِيْرَةٍ وَّشَرَابٍ‏

அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.. 

وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ‏

அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.

 هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ‏

“கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.

 اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّـفَادٍ ‌ۖ 

“நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

ஆகவே இந்த 2 வகை ரிஸ்க்கையும் வழங்குபவன் அல்லாஹ் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

உலக இன்பத்திற்கான ரிஸ்க்கிற்காக உலகம் அலைகிறது ஆனால் உள்ளத்திற்கான ரிஸ்க் விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கிறார்கள்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 34

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 34

ஒரு காபிருக்கு அல்லாஹ் வாரிசுகளையும் கொடுத்து அதிகமான ரிஸ்க்கை கொடுக்கிறான் என்பது அல்லாஹ் அவனை பொருந்திக்கொண்டான் என்பத்திற்கான அடையாளமல்ல 

 إن الله يعطي الدنيا من يحب ومن لا يحب ولا يعطي الدين إلا من يحب.

நபி (ஸல்) – அல்லாஹ் தான் நேசிப்பவர்களுக்கு நேசிக்காதவர்களுக்கும் இந்த உலகத்தை(உலக இன்பங்களை) கொடுப்பான்.(அஹமத்)

ஸூரத்துஸ் ஸபா 34:35 – 37

وَ قَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًا ۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ

இன்னும்: “நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” என்றும் கூறுகிறார்கள்.

قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ

“நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் – எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும். 

وَمَاۤ اَمْوَالُـكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِىْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰٓى اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِى الْغُرُفٰتِ اٰمِنُوْنَ‏

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்

ஸூரத்துல் முஃமினூன் 23:55, 56

اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ

அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?

نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ‌ ؕ بَلْ لَّا يَشْعُرُوْنَ

அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை

ஸூரத்துல் ஃபஜ்ரி 89:15, 16

 فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ‏

ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.

وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏

எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.

ஆகவே  رزق عام  பொதுப்படையான ரிஸ்க் உலகம் அழியும் வரை அல்லாஹ் கொடுத்துக்கொண்டே இருப்பான்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 33

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 33

ரிஸ்கில் ஹலாலும் ஹராமும் இருக்கிறது 

ஸூரத்து யூனுஸ் 10:59

قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

ஸூரத்துல் முல்க் 67:15

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.

இந்த வசனங்களை கடந்து வரும்போது ரிஸ்க்கை தருபவன் அல்லாஹ் அவனை தவிர வேறு யாரும் தர முடியாது 

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க்கை அதிகமாகவும் தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் கொடுப்பான் 

அல்லாஹ் ஒருவருக்கு ரிஸ்க் அளிப்பதை வைத்து ஒருவரை நல்லவர் என்ற முடிவுக்கு வர முடியாது ஏனெனில் முஸ்லிம்களுக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ் ரிஸ்க் அளிக்கிறான். 

இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜாவ்ஸிய்யா (ரஹ்) ரிஸ்க்கை 2 ஆக பிரிக்கிறார்கள் 

 الرزق نوعان رزق عام ورزق خاص ⭐ 

  1. رزق عام  பொதுப்படையான ரிஸ்க் (இது நல்லவர்களுக்கும் கிடைக்கும், முஃமின்களுக்கும் காபிர்களுக்கு கிடைக்கும், ஆரம்பத்திலுள்ளவர்களுக்கும் பின்னால் உள்ளவர்களுக்கும் கிடைக்கும் . رزق الابدان அது தான் உடலுக்குரிய ரிஸ்க் ஆகும். 

ஸூரத்து ஹூது 11:6

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

ஒவ்வொருவரும் அவரது தாயின் வயிற்றியிருக்கும்போதே அவருக்கு இந்த ரிஸ்க் அவர் மீது எழுதப்பட்டு விடுகிறது. 

உணவை மனிதன் தேட வேண்டும்:-

ஸூரத்துல் முல்க் 67:15

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.

ஹுதைஃபா (ரலி) – நபி (ஸல்) – இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு உயிரினமும் அதற்கு எழுதப்பட்ட ரிஸ்க்கை அடைந்துகொள்ளாமல் இந்த பூமியை விட்டு போகாது.(அல்பானி – ஸஹீஹ்)

ரிஸ்க் ஐ பற்றி சரியாக புரிந்து கொண்டால் ஒருவர் மீது ஒருவருக்கு பொறாமையும் வராது.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 32

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 32

அவன் தந்த ரிஸ்க்கை சொல்லிக்காட்டி அல்லாஹ் வை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்று சொல்லிக்காட்டுகிறான் 

ஸூரத்துல் பகரா 2:21, 22

 يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.

الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ 

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

ஸூரத்துர் ரூம் 30:40

اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ‌ ؕ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّفْعَلُ مِنْ ذٰ لِكُمْ مِّنْ شَىْءٍ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.

ஸூரத்து ஃபாத்திர் 35:3

يٰۤاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْؕ هَلْ مِنْ خَالِـقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۖ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

ஸூரத்துல் பகரா 2:254, 172

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ‌ ؕ وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்

பனீ இஸ்ராயீல் 17:31

وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

 ஸூரத்துத் தலாஃக் 65:2, 3

 …..وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏

…. எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ…..

….அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்

ஸூரத்துல் ஹஜ் 22:50

فَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ

“எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

ஸூரத்துல் அஃராஃப் 7:32

قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِ‌ؕ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏

(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 31

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 31

ரிஸ்க் என்ற சொல்லுக்கு உணவு என்று மட்டுமே மொழிபெயர்ப்பது தவறாகும். 

ஷேக் அப்துல் ரஸ்ஸாக் 

அல்லாஹ் மனிதனுக்கு அளித்த ரிஸ்க்கை சொல்லிக்காட்டுகிறான்.

உதாரணம்:-

ஸூரத்துந் நஹ்ல் 16:72

وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ جَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ‌ؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ‏

இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?

பனீ இஸ்ராயீல் 17:70

وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.

ஸூரத்துல் முஃமின் 40:64

اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ‌ ۖۚ فَتَبٰـرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏

அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.