ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 30

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 30

பூமியிலுள்ள அனைத்தின் ரிஸ்க்கும் அல்லாஹ்விடம் இருக்கிறது 

ஸூரத்து ஹூது 11:6

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன

உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் ரிஸ்க்கை தருகிறான்.
ஸூரத்துல் அன்கபூத் 29:60

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் – இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

ஸூரத்துல் பகரா 2:212

….وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

… இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.

பனீ இஸ்ராயீல் 17:30

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் – நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 29

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 29

الرَّزَّاقُ و الرازق 

ஸூரத்துத் தாரியாத் 51:58

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

வேறுசில இடங்களில் الرَّزَّاقُ என்ற சொல்லின் பன்மையை அல்லாஹ் உபயோகிக்கிறான்.

ஸூரத்துல் ஜுமுஆ 62:11

……وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ

…………..மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக

ஸூரத்துல் ஹஜ் 22:58

….وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ

(ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்

ஸூரத்துல் மாயிதா 5:114

….وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ

…… நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

மேலும் الرّٰزِق என்ற பெயர் குர்ஆனில் இடம்பெறவில்லை மாறாக ஹதீஸில் இடம்பெறுகிறது. 

 عن أنس بن مالك قال: غلا السعر على عهد رسول الله يَةِ فقالوا: يا رسول الله، لو سغزت، فقال: «إن الله هو الخالق القابض الباسط الرازق المُسَعْرُ، وإِنِّي لأرْجو أنْ ألقَى اللهَ ، و لَا يَطْلُبُني أحدٌ بمظلَمَةٍ ظلمتُها إيَّاه في دمٍ ولا مالٍ

அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் பொருட்களுக்கான விலை அதிகரிக்க ஆரம்பித்தபோது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விலையை நீங்கள் கட்டுப்படுத்தினால் என்ன என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) “நிச்சயமாக அல்லாஹ்வே படைத்தவனாகவும், சுருக்குபவனாகவும், விரிப்பவனாகவும், இராஜிக் ஆகவும், விலைகளை கட்டுப்படுத்துபவனாகவும் இருக்கிறான். நான் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும்போது எந்த ஒருவருக்கும் இரத்த விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் அநீதி இழைக்காதவனாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்.

(முஸ்னத் அஹமத் )

குறிப்பு:- 

சந்தையில் விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தலாமா?

அதிகமான அறிஞர்கள் விலைகளை நிர்ணயிக்கக்கூடாது என்றே கருத்து தெரிவிக்கின்றனர்.

சில அறிஞர்கள் அதற்கான தேவை ஏற்பட்டால் (வியாபாரிகள் விலையை கூட்டினால் ஆட்சியாளர் தலையிட்டு விலையை குறைக்கலாம்) செய்யலாம் என்று கூறுகின்றனர். 

⭐ நபி (ஸல்) ஒருவரிடம் ஒட்டகம் வாங்கிவருமாறு பணம் கொடுத்து அனுப்பினார்கள். வாங்கி வந்தவர் ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்த முழு  பணத்தையும்  அப்படியே நபி (ஸல்) அவர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்டபோது நீங்கள் தந்த பணத்தில் 2 ஒட்டகங்கள் வாங்கி 1 ஒட்டகத்தை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். அந்த பணம் தான் இது என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதருக்காக துஆ செய்தார்கள்.

இந்த இரண்டு பெயர்களும் )الرَّزَّاقُ و الرازق (ஒரே கருத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது رزق ஐ அதிகமாக வழங்குபவன் என்பதே இதன் பொருளாகும்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 28

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 28

2. மனிதர்களையும் ஜின்களையும் அல்லாஹ் படைத்தது அவனை வணங்குவதற்காகவே.

ஸூரத்துத் தாரியாத் 51:56

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

அல்லாஹ் மனிதர்களை படைத்ததும் தன்னை வணங்குவதற்காகவே 

அல்லாஹ் தன்னை படைப்பாளன் என்று நமக்கு கற்றுத்தருவதும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தான் என்று நாம் புரிந்து கொண்டு அவனை வணங்குவதற்காகவே.

இந்த அடிப்படையை புரியாதவர்கள் மட்டுமே அல்லாஹ் தான் படைப்பாளன் என்று கூறிவிட்டு அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவார்கள்.

ஸூரத்து யூஸுஃப் 12:106

وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏

மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) – அவர்களிடம் வானங்கள் பூமியை மலைகளை படைத்தது யாரென்று கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள் ஆனால் அவர்கள் ஷிர்க் வைப்பவர்களாக இருப்பார்கள்.

ஸூரத்துல் அன்கபூத் 29:61, 63

وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ۚ فَاَنّٰى يُؤْفَكُوْنَ‏

மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?

وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ

இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  

ஸூரத்துல் முஃமினூன் 23:84 – 89

قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

“நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ‏

“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ‏

“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏

“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!

قُلْ مَنْۢ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

“எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ‏

அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.

ஸூரத்துந் நம்லி 27:59, 60

ءٰۤللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَؕ‏

….. அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”  

اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآٮِٕقَ ذَاتَ بَهْجَةٍ‌ ۚ مَا كَانَ لَـكُمْ اَنْ تُـنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ؕ‏

அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.

ஈஸா (அலை) அவர்களையும், சிலைகளையும், பசுமாட்டையும்,  அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்தும் அவன் படைத்தவையே. படைப்புக்களை வணங்காமல் படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். முஸ்லிம்களாயினும் முஸ்லீம் அல்லாதவர்களாயினும் இணைவைப்பது படைத்தவன் ஒருவன் மட்டுமே என்ற கொள்கை உள்ளத்தில் ஆழமாக பதியாததால் தான்.

ஸூரத்துல் ஹஜ் 22:73

يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.

مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாதவர்கள் மட்டுமே அவனை தவிர பிறருக்கு வணக்கங்களை செலுத்தி இபாதத்துகள் செய்வார்கள்.

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே என்பது தான் லா இலாஹ இல்லல்லாஹ் வின் அர்த்தம். ஆகவே அந்த வணக்கத்தை வேறொருவருக்கு செலுத்தினாலும் அல்லாஹ் அதை ஒருபோதும் அங்கீகரிக்கவே மாட்டான். 

ஸூரத்துன்னிஸாவு 4:48

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கிறான்.

ஸூரத்துஜ்ஜுமர் 39:53

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் ஒருவன் மரணித்தால் அல்லாஹ் நாடினால் அவனை மன்னிப்பான் அல்லாஹ் நாடினால் தண்டிப்பான். ஆனால் இணைவைத்து தவ்பா செய்யாமல் மரணித்தால், அவன் நிரந்தரமாக நரகத்தில் இருக்க வேண்டிய நிலை வரும் 

 أَلَّا تُشْرِكَ بِاللَّهِ شَيْئًا ، وَإِنْ قُطِّعْتَ وَحُرِّقْتَ ⭐

அபூதர்தா (ரலி) – நபி (ஸல்) அறிவுறை கூறுகையில் ..”நீ நெருப்பில் எறியப்பட்டாலும் துண்டு துண்டாக அறுக்கப்பட்டாலும் அல்லாஹ்விற்கு இணைவைத்து விடாதே”என்று கூறினார்கள். 

ஆகவே அல்லாஹ்வின் திருநாமங்களில்

 الخالق படைப்பவன் 

 الخلاق அதிகமாக படைப்பவன் 

மிக முக்கியமான திருநாமங்களாக கருதப்படுகிறது. 

அல்லாஹ் எதையும் வீணாக படைக்கவில்லை 

எதையும் சரியான முறையில் அவற்றை அறிந்து அவனை கண்ணியப்படுத்தவேண்டிய முறைப்படி அவனை நாம் கண்ணியப்படுத்த வேண்டும். 

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 27

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 27

அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் நோக்கம் என ஆசிரியர் 2 காரணங்களை கூறுகிறார்:-

  1. அல்லாஹ் வை அறிந்து கொள்வதற்காக. 

ஸூரத்துத் தலாஃக் 65:12

اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.

ஸூரத்துல் காஷியா 88:17 – 20

اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

وَاِلَى السَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,

وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)…

அல்லாஹ் தனது படைப்புகளை பார்க்கச்சொல்வதன் மூலம் இதை படைத்தவன் இருக்கிறான் என்பதையும் அவனது வல்லமையையும் புரிந்து கொள்ளச்சொல்கிறான்.

ஸூரத்து ஃபாத்திர் 35:27, 28

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ‌ۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَاؕ وَمِنَ الْجِبَالِ جُدَدٌۢ بِيْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِيْبُ سُوْدٌ‏

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.

 وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَ لْوَانُهٗ كَذٰلِكَ ؕ اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ‏

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

இவையனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் தான் என்று புரிந்து கொண்டவன் அல்லாஹ் வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுவான். ஆகவே அல்லாஹ்வை சரியான முறையில் அறிந்து கொண்டவர்கள் தான் அல்லாஹ் வை அஞ்சுவார்கள்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 26

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 26

  • خلق  என்ற அரபி வார்த்தைக்கு تقدير (நிருணயித்தல்) என பொருள் வரும்.

ஸூரத்துல் அன்கபூத் 29:17

…… اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ ؕ 

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்…… 

இங்கு பொய்யாக வடிவமைப்பது என்ற பொருள் இடம்பெறுகிறது. 

சில சந்தர்ப்பங்களில் படைப்பினங்களை அல்லாஹ் خالق என்று குறிப்பிடுவதை காணலாம்.

உதாரணம் 

ஸூரத்துல் முஃமினூன் 23:14

….. فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ‏

…………. படைப்பாளர்களின் சிறந்தவனாக இருக்கும் அல்லாஹ் பரக்கத் நிறைந்தவன்.

இங்கு خلق என்பது புதிதாக ஒன்றை படைப்பதை குறிக்காது மாறாக ஒன்றை நிருணயித்து வடிவமைப்பதை குறிக்கும்.

அல்லாஹ்வை தவிர எந்த ஒரு படைப்பாளர்களுமில்லை. 

ஸூரத்து ஃபாத்திர் 35:3

…هَلْ مِنْ خَالِـقٍ غَيْرُ اللّٰهِ …

…. அல்லாஹ்வை தவிர படைக்கக்கூடியவர்கள் வேறு எவரேனும் இருக்கிறார்களா?….

ஸூரத்து லுக்மான் 31:11

هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ

“இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.  

உலகத்திலுள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் ஒரு ஈயை கூட படைக்க முடியாது 

ஸூரத்துல் ஹஜ் 22:73, 74

 يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.

مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

சுருக்கமாக خلق என்ற சொல்லுக்கு 2 பொருள்:-

1) படைப்பாளன் (முன்னுதாரணங்களின்றி படைத்தவன்)

  • படைப்பாளன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அவனைத்தவிர வேறு படைப்பாளர்கள் இல்லை. 
  • அல்லாஹ் எந்த ஒரு படைப்பையும் வீணாக படைப்பதில்லை 

ஸூரத்துல் அன்பியா 21:16,17,18,19

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏

மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّـتَّخِذَ لَهْوًا لَّا تَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ  ۖ  اِنْ كُنَّا فٰعِلِيْنَ‏

வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ‌ ؕ وَلَـكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَنْ عِنْدَهٗ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏

வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.

ஸூரத்துல் முஃமினூன் 23:115, 116

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏

“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)

 فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏

ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!

நபி (ஸல்) இரவில் விழித்து தொழுதுகொண்டே இருந்தார்கள், பிறகு அழுது அழுது ஸுஜூத் செய்யும் இடமும் மடியும் எல்லாம் நனைந்து போயிருந்தது. பாங்கு சொல்ல வந்த பிலால் (ரலி) அவர்களிடம் ஆயிஷா (ரலி) இதைப்பற்றி கூறியபோது பிலால் (ரலி) ஆறுதல் கூறியபோது நபி (ஸல்) இரவில் எனக்கு சில வசனங்கள் திறக்கப்பட்டன அவற்றை யாரொருவர் ஓதி அதை சிந்தித்து படிப்பினை பெறவில்லையே அவருக்கு கேடு தான் என்று கூறி அழுதார்கள். பிறகு 3:190 வசனம் முதல் ஓதி காண்பித்தார்கள். 

ஸூரத்துல்ஆல இம்ரான் 3:190, 191

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ 

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 25

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 25

இந்த خَلْق என்ற வார்த்தைக்கு 2 அர்த்தங்கள் 

  • படைத்தல் (முன்னுதாரங்கங்கள் எதுவுமில்லாமல் புதிதாக ஒன்றை படைப்பது)

ஸூரத்து யாஸீன் 36:71

اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ‏

நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.

ஸூரத்துல் கமர் 54:49

اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ‏

நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

ஸூரத்துல் அஃலா 87: 2, 3

  87:2 الَّذِىْ خَلَقَ فَسَوّٰى

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

87:3 وَالَّذِىْ قَدَّرَ فَهَدٰى 

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:2

وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا‏

…… அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்

ஸூரத்துல் அன்பியா 21:104

…. كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ ؕ وَعْدًا عَلَيْنَا‌ ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ‏

………… முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.

⭐ மேற்கூறப்பட்ட வசனங்களில் خَلْقٍ என்ற சொல்லுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் படைத்தல் என்ற கருத்து இடம்பெறுகிறது.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 24

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 24

الخالِق என்ற பெயரின் மற்றொரு வடிவம் தான் الخلاق. 

الخالِق என்ற பெயர் அல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.

உதாரணம் :-

ஸூரத்துல் ஹஷ்ர் 59:24

هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ‌ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‌ؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

ஸூரத்துஜ்ஜுமர் 39:62

اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.

خَالِقُ என்ற பெயரின் முபாலகா(அதிகமாக என்ற கருத்தை தரக்கூடிய வடிவம்) குர்ஆனில் 2 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது 

ஸூரத்துல் ஹிஜ்ர் 15:86

اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏

ஸூரத்து யாஸீன் 36:81

…. بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏

அல்லாஹ் الخالِق என்று தன்னை கூறும்போது அந்த பெயரில் خَلْق என்ற صفة (பண்பு) இருப்பது நாம் அறிகிறோம்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 23

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள் 

பாகம் – 23

புத்தக ஆசிரியர் அல்லாஹ் என்ற பெயரின் சிறப்பை இது வரை விளக்கினார்கள். இப்போது அல்லாஹ் என்ற பெயரின் கருத்தை விளக்குகிறார்கள். 

இதன் அடிப்படை பெயர் ال اله என்பதாகும். ஆகவே ال اله என்பதும் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். 

ஆதாரம் :

ஸூரத்துல் பகரா 2:163

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ

ஸூரத்துத் தவ்பா 9:31

…وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏

ஸூரத்துல் அன்பியா 21:108

قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

அல்லாஹ் என்ற வார்த்தையின் அர்த்தம் 

عن ابن عباس قال: الله ذو الألوهية والعبودية على خلقه أجمعين، 

இப்னு அப்பாஸ் (ரலி) – தன்னுடைய அனைத்து படைப்புகளும் வணங்கத்தகுதியானவனும்  அனைத்து படைப்புகளும் அவனுக்கே 

அடிபணிந்து இருக்கின்றன.(தப்ஸீர் தபரீ)
அல்லாஹ் என்ற பெயரில் இருக்கும் கருத்து:

அல்லாஹ் தான் வணங்கி வழிபடத்தகுதியானவன் 

படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் அடிமைகள் 

அல்லாஹ் என்ற பெயரை புரிந்து கொண்ட ஒரு முஃமின் கண்ணியமானவனாக இருப்பான்.

ஸூரத்துல் அன்ஃபால் 8:2

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ 

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

அல்லாஹ் என்ற வார்த்தைக்கு பொருள் அறிந்தால் தான் அவனது கண்ணியம் புரிந்தால் தான் அவனது பெயர் சொல்லப்பட்டால் உள்ளம் நடுங்கும். 

அல்லாஹ் என்ற பெயரை புரிந்தவன் அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் வணங்கவே மாட்டான், எவருக்கும் பலி அறுக்க மாட்டான்

لا اله الا الله

இதில் அல்லாஹ்வின் 2 பெயர்கள் உள்ளன. அல்லாஹ்வின் பெயரைப்புரிந்தவன் அல்லாஹ்வை தவிர வேறெதனையும் வணங்கவே மாட்டான். 

 شَيْخُ الْإِسْلَامِ ابْنُ تَيْمِيَّةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى: الْعِبَادَةُ هِيَ اسْمٌ جَامِعٌ لِكُلِّ مَا يُحِبُّهُ اللَّهُ تَعَالَى وَيَرْضَاهُ مِنَ الْأَقْوَالِ وَالْأَعْمَالِ الْبَاطِنَةِ وَالظَّاهِرَةِ

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) – அல்லாஹ் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளார்ந்த வெளிப்படையான அனைத்து செயல்களும் வணக்கம் என்று கூறப்படும்.

வணக்கம் 2 வகைப்படும் 

  • உள்ளத்தால் செய்யக்கூடிய வணக்கம் (அல்லாஹ்வை அஞ்சுவது, அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பது, தவக்குல் வைப்பது, இக்லாஸ், தவக்குல், ஆதரவு வைப்பது, அல்லாஹ்வை அஞ்சுவது)
  • உடலால் செய்யக்கூடிய வணக்கம் (தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், நேர்ச்சை, குர்பானி, ஸதகா, குர்ஆன் ஓதுவது, நாவால், பணத்தால்…)

அல்லாஹ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தால் எந்த சூழலிலும் அவனுக்கு வேறெதையும் நாம் இணை வைக்கவே மாட்டோம் 

பிலால் (ரலி) சுடுமணலில் இட்டு வேதனை செய்யப்பட்டபோதும் அவரது வாயால் அஹத் அஹத் என்று தான் கூறினார்கள்.

ஹப்பாப் (ரலி) நெருப்பின்மீது கட்டித்தூக்கப்பட்டு அவரது உடலிலிருந்து கொழுப்பு கரைந்து வடிந்தபோதும் அல்லாஹ்விற்கு இணை வைக்கவில்லை 

யாசிர் (ரலி) இரண்டாக பிளக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டபோதும் இணைவைக்கவில்லை 

சுமையா (ரலி) பிறப்புறுப்பில் அம்பு எய்து கொல்லப்பட்டபோதும் இணைவைக்கவில்லை

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 22

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள் 

பாகம் – 22

புரைதா (ரலி) – ஒரு மனிதர் “

 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّه لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الأَحَدُ، الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ، وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

யா அல்லாஹ் நான் உன்னிடம் கேட்கிறேன், நீ தான் அல்லாஹ் என்று நிச்சயமாக நான் சாட்சி சொல்லுகிறேன், உன்னைத்தவிர வணக்கத்திற்கு தகுதியான உண்மையான கடவுள் யாருமில்லை, நீ தான் தனித்தவன் எந்த தேவையும் அற்றவன், யாரையும் பெற்றெடுக்காத யாராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எதுவுமே இல்லை “

என்று கூறி பிரார்த்தித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் 

 فَقَالَ: «لَقَدْ سَأَلَ اللَّهُ بِاسْمِهِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى, وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ ⭐   

கேட்டால் மறுக்கப்படாத பிரார்த்தித்தால் நிராகரிக்கப்படாத அந்த பெயரைக்கொண்டு நீ அல்லாஹ்விடத்தில் கேட்டிருக்கிறாய் என்று கூறினார்கள்.((திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா))

ஆனால் இஸ்முல் அஹ்லம் ஆகிய அந்த பெயர் எது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக்கூறவில்லை.

ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் இதை ஸஹீஹ் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) – இஸ்முல் அஹ்லம் சம்மந்தமாக வந்த ஹதீஸுகளில் இது தான் மிக சிறந்த அறிவிப்பாளர் வரிசையைக்கொண்டது.

இஸ்முல்லாஹில் அஹ்லம் எது என்பது நபி (ஸல்) குறிப்பிட்டு கூறாத காரணத்தினால் உலமாக்கள் அதை ஆய்வு செய்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

முதல் கருத்து 

சில அறிஞர்கள்:- இஸ்முல் அஹ்லம் என்ற ஒரு குறிப்பிட்ட மகத்தான பெயர் அல்லாஹ்விற்கு இல்லை என்று கூறுகிறார்கள். இக்கருத்து ஏற்புடையதல்ல 

இரண்டாவது கருத்து 

அல்லாஹ் வின் மகத்தான பெயர் எது என்பதை அடியார்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை அதை அவன் மறைத்துவிட்டான்.

மூன்றாவது கருத்து 

அல்லாஹ்விற்கு இஸ்முல் அஹ்லம் இருக்கிறது என்று சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த கருத்துடைய அறிஞர்கள் 14 விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர் என பதஹுல் பாரி எனும் ஹதீஸ் விளக்கவுரை நூலில் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.  அவை 

  1. هو அவன் 
  2.  الله அல்லாஹ்
  3.  الله الرحمان الرحيم இந்த 3 பெயர்களும் சேர்ந்தது தான் இஸ்முல் அஹ்லம் என்று சிலர் கூறுகின்றனர்.
  4.  الرحمان الرحيم الحى القيوم இந்த 4 பெயர்களும் சேர்ந்தது 
  5.  الحى القيوم
  6.  -الحنانُ المنانُ بديعُ السماواتِ والأرضِ  ذو الجلال والاكرام الحى القيوم இந்த 7 பெயர்கள் 
  7.  بديعُ السماواتِ والأرضِ  ذو الجلال والاكرام  
  8.  ذو الجلال والاكرام
  9.  الله لا اله الا ه الاحد الصمد الذى لم يلد ولم يولد ولم يكن له كفو احد
  10.  رب رب
  11.  لا اله الا انت سبحانك اني كنت من الظالمين
  12.   هو الله الله الله الذى لا اله الا ه رب العرش العظيم
  13.  அல்லாஹ்வின் திருநாமங்களுக்குள் மகத்தான அந்த பெயர் மறைந்திருக்கிறது 
  14.  لا اله الا الله

இஸ்முல் அஹ்லம் இற்கு மிகவும் நெருக்கமான பெயராக இருப்பது அல்லாஹ் என்ற பெயர் தான் என இந்த ஆய்வுகளை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. 

அதற்கு அடுத்தபடியாக  الحى القيوم என்ற பெயர் நெருக்கமாக இருக்கிறது.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 21

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள் 

பாகம் – 21

  •  அல்லாஹ்வின் மற்ற பெயர்கள் அனைத்தும் சொல்லக்கூடிய மொத்தக்கருத்துக்களும் அல்லாஹ் என்ற பெயரில் உள்ளடங்கியுள்ளது
  • அல்லாஹ்வின் பெயர்களில் ‘யா’ வைத்து அழைக்கும்போது ‘அல்’ போய்விடும்.

உதாரணம்:

அர்ரஹ்மான் எனும் பெயரை வைத்து நாம் துஆ செய்யும்போது யா ரஹ்மானே என்று துஆ செய்வோம்.

யா அல்லாஹ் என்று அழைக்கும்போது நிதா வின் ‘யா’ வந்து சேர்ந்தாலும் அல்லாஹ்வில் இடம்பெறும் ‘அல்’ நீங்காது. 

  • நாம் ஓதும் திக்ர் துஆக்கள் பெரும்பாலும் அல்லாஹ் என்ற பெயரிலேயே வரும் 
  • குர்ஆனில் அல்லாஹ் என்ற பெயர் ஏறத்தாழ 2200 முறைக்கும் மேலாக இடம்பெற்றிருக்கிறது.
  • சுமார் 33 வசனங்கள் அல்லாஹ் என்ற பெயரைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கன்றன. 
  • பெரும்பாலான அறிஞர்கள் கருத்துப்படி اسم الله الاعظم எனப்படும் பெயர் அல்லாஹ் என்ற பெயராகும்.
  • عن أبي أمامة -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: (اسْمُ اللَّهِ الأَعظَمُ فِي سُوَرٍ مِنَ القُرآنِ ثَلَاثٍ: فِي البَقَرَةِ وَآلِ عِمرَانَ وَطَهَ). 

அபூஉமாமா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வின் மகத்தான அந்த பெயர் குர்ஆனில் 3 சூராக்களில் இடம்பெற்றிருக்கிறது.அது சூரத்துல்  பகரா, ஆலு இம்ரான், மற்றும் தாஹா (இப்னு மாஜா 3856 ஹசன்)

⭐ அனஸ் (ரலி) – நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது ஒரு மனிதன் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம்  துஆ கேட்கையில் 

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لك الْمَنَّانُ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ

யா அல்லாஹ்! நான் உன்னிடம் கேட்கிறேன், எல்லாப்புகழும் உனக்கே உரியது உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லை, நீ கொடுப்பவன், வானங்களையும் பூமியையும் முன்னுதாரணமின்றி படைத்தவன், கண்ணியமும் மகத்துவமும் பொருந்தியவன், என்றென்றும் உயிரோடிருப்பவனே,  என துஆ செய்தபோது 

நபி (ஸல்) அவர்கள் 

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الْعَظِيمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَ 

அந்த பெயரைக்கொண்டு பிரார்த்தித்தால் அல்லாஹ் உடனடியாக பதில் கொடுக்கிறான்.

இந்த பெயரைக்கொண்டு கேட்டால் அல்லாஹ் உடனடியாக அதை அவருக்கு கொடுக்கிறான்.(திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா)

இதன் மூலம் அல்லாஹ்வின் திருநாமங்களை கொண்டு துஆ கேட்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்தார்கள். 

சிலர் 

اللهم اني اسالك باسمائك الحسنى وصفاتك العليا 

யா அல்லாஹ் உன்னுடைய அனைத்து திருநாமங்களையும் கொண்டு உன்னிடம் நான் கேட்டறிகிறேன் மேலும் உன்னுடைய அனைத்து பண்புகளையும் கொண்டு உன்னிடம் கேட்கிறேன் 

என பிரார்த்திப்பார்கள் 

அல்லது அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ப 

உதாரணம் :-

அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்கும்போது அவனது மன்னிக்கும் பண்பை குறிக்கும் பெயர்களை மனமார கூறி மன்னிப்பு கேட்டல் சிறந்ததாகும்.    

அனைத்து  பெயர்களையும் விட அல்லாஹ்வின் இஸ்முல் அஹ்ழம்  ஆன பெயர்களைச்சொல்லி கேட்பது சிறந்தது.