التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்
பாகம் – 20
⭐ அல்லாஹ்வின் திருநாமங்கள் அனைத்தும் 3 முக்கிய திருநாமங்களில் அடங்கும். அவை
- அல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன்)
- அர் ரப்பு (ருபூபிய்யத்திற்கு தேவையான பண்புகளை உள்ளடக்கி இருக்கிறது)
- அர் ரஹ்மான் (அல்லாஹ் வின் தாராளத்தன்மை, சிறப்பு உயர்வு அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது)
என்பவையாகும்.(இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ்)
இந்த 3 பெயர்களும் சூரா ஃபாத்திஹா வில் இடம்பெற்றிருப்பதை நாம் காண முடியும்.
அல்லாஹ் الله என்ற பெயருக்குரிய சிறப்பு அம்சங்கள்
- அல்லாஹ் என்கிற பெயரே அல்லாஹ்விற்குரிய அடிப்படையான பெயராக திகழ்கிறது.
ஸூரத்துல் அஃராஃப் 7:180
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
ஸூரத்து தாஹா 20:8
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى
அல்லாஹ் – அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.
ஸூரத்துல் ஹஷ்ர் 59:23 ; 24
(23) هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை
(24) هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰىؕ
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன
கருத்துரைகள் (Comments)