ஜனாஸா சட்டங்கள் 10

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 10

மரண தருவாயில் சூரா யாசீன் ஓதுவது 

معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم أنه قال: “اقرأوا على موتاكم يس

உங்களில் மரண நேரத்தில் உள்ளவருக்கு யாசீன் ஓதிக்கொடுங்கள் (அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா . இமாம் அல்பானியே இதை லயீஃப் என்று அறிவித்துள்ளார்கள்)

இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் அபூதாவூத் அவர்கள் كتاب الجنائز இல் باب الجنائز عند الموت என்ற தலைப்பில் இந்த ஹதீஸை மரணத்தை நெருங்குபவருக்கு யாசீன் ஓதவேண்டும் என்று இந்த ஹதீஸை குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இமாம் இப்னு மாஜா அவர்கள் ஒரு நோயாளி மரணத்தை நெருங்கினால் இதை ஓதவேண்டும் என்று குறிப்பிட்டு இந்த ஹதீஸை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மரணித்தவருக்காக சூரா யாசீனோ அல்லது குர்ஆன் ஓதுவதும் மரணித்துக்கொண்டிருப்பவரிடம் சூரா யாஸீனை ஓதும்படியும் அவரை கிஃப்லாவின் பக்கம் முகம் திருப்பி வைக்கும்படியும் வந்துள்ள நபிமொழிகள் எதுவும் சரியானதல்ல.

சட்ட வல்லுனரும் தாபியீன்களில் தலைசிறந்தவரும் மார்க்கத்தீர்ப்பு வழங்குபவருமாக இருந்த சயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் மரண தருவாயில் கிஃப்லாவின் பக்கம் முகத்தை திருப்பி வைப்பது  விரும்பத்தகாதது என தீர்ப்பளித்தார்கள். 

சயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் மரணத்தருவாயில் இருந்தபோது அபூஸலமத் இப்னு அப்துற் ரஹ்மான் அவர்கள் பக்கத்திலிருந்தார்கள். சயீத் அவர்கள் மயக்கமடைந்தபோது அன்னாரின் படுக்கையை கிஃப்லாவின் பக்கம் முகம் வருமாறு திருப்பக் கூறினார்கள். அவ்வாறு செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின் சயீத் இப்னு முஸய்யப் அவர்கள் உணர்வு பெற்று என் படுக்கையைத் திருப்பினீர்களா? எனக்கேட்டார்கள். ஆம்! என பதிலளிக்கபட்டது. அபூஸலமாவின் பக்கம் பார்த்து “நீர் தான் இவ்வாறு செய்யச் சொன்னீரா? எனக்கேட்டார்கள். ஆம்! எனக் கூறியவுடன் பழையபடி படுக்கையை மாற்றும்படி கட்டளையிட்டார்கள் என ஸுர்ஆ இப்னு அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னு அபீஷைபா, முஸன்னப்)

உயிருடனிருக்கும்போது நாம் தான் நமக்காக குர்ஆன் ஓத வேண்டும். நமக்காக பிறர் நமது மரணத்திற்கு பிறகு குர்ஆன் ஓதுவது நமக்கு எந்த நன்மையையும் தராது. 

ஜனாஸா சட்டங்கள் 09

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 9

மரண வேளையில் மற்றவர்கள் செய்ய வேண்டியவை 

🌹 நோயாளிக்கு மரணவேளை வந்ததும் அருகில் இருப்பவர்களுக்கு சில செயல்கள் கடமையாகின்றது.

سمعت أبا سعيد الخدري يقول قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله

அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – நபி (ஸல்) – மரணிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு லா இலாஹ இல்லல்லாஹ் வை சொல்லிக்கொடுங்கள்.

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

دَخَلَ الْجَنَّةَ» رَوَاهُ أَبُو دَاوُد، 

முஆத் இப்னு ஜபல் – நபி (ஸல்) –  எவருடைய கடைசி வார்த்தை மரண நேரத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் வாக இருக்கிறதோ அவர் சுவர்க்கம் நுழைவார்.(அபூதாவூத்)

عَنْ عُثْمَانَ – رضي الله عنه – قَالَ: قَالَ رَسُولُ اللّهِ – صلى الله عليه وسلم – “مَنْ مَاتَ وَهُوَ

يَعْلَمُ أَنَّهُ لاَ إِلٰهَ إِلاَّ الله دَخَلَ الْجَنَّةَ”. رواه مسلم

உஸ்மான் (ரலி) – நபி (ஸல்) – லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை அறிந்த நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்(முஸ்லீம்)

قال: «من مات لا يشرك بالله شيئاً دخل الجنة، ومن مات يشرك به شيئاً دخل النار»[1]، رواه

مسلم

ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் அல்லாஹ்விற்கு இணைவைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவர் நரகத்தில் நுழைவார் யார் இணைவைக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார் (முஸ்லீம்)

إذا حضرتمُ المريضَ أوِ الميِّتَ فقولوا خيرًا فإنَّ الملائِكةَ يؤمِّنونَ على ما تقولونَ 

உம்முஸலமா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் நோயாளியிடமோ அல்லது மரணதருவாயிலிருப்பவரிடமோ சென்றால் நல்லதையே கூறுங்கள் ஏனென்றால் நீங்கள் கூறுவதற்கெல்லாம் வானவர்கள் ஆமீன் கூறுகிறார்கள். (முஸ்லீம், பைஹகீ) 

 கலிமாவை நாம் தான் நோயாளியின் காதில் விழும் வண்ணம் கூற வேண்டும் மாறாக நோயாளியிடம் கலிமா சொல்லச்சொல்லி பயமுறுத்தக்கூடாது என சிலர் வாதிடுகின்றனர். அவ்வாறல்ல 

أنَّ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ عادَ رجُلًا منَ الأنصارِ ، فقالَ : يا خالُ، قُل لا إلَهَ إلَّا اللَّهُ

فقالَ: أخالٌ أم عمٌّ ؟ فقالَ: بل خالٌ فقالَ: فَخيرٌ لي أن أقولَ : لا إلَهَ إلَّا اللَّهُ . فقالَ النَّبيُّ صلَّى اللَّهُ

علَيهِ وسلَّمَ : نعَم .

அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ஒரு அன்சாரி ஸஹாபியின் நோயை விசாரிக்க சென்றபோது லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள் மாமாவே என்று கூறியபோது நோயாளியாக இருந்த அவர் சிரியதந்தையா அல்லது மாமாவா? என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் மாமா தான் என்று கூறினார்கள்.அப்போது அவர் நான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது நல்லதா? என்று கேட்டபோது நபி (ஸல்) ஆம் என்று பதிலளித்தார்கள்.

(அஹமத் – இமாம் முஸ்லீம் அவர்களின் நிபந்தனையின் அடிப்படையில் இதன் சனத் ஸஹீஹ்)

ஜனாஸா சட்டங்கள் 08

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 8

தமது ஜனாஸாவில் பித்அத் நடக்கும் என்று அஞ்சுபவர்கள் நபி வழியில் தான் எனது ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் என்று தனது வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய வேண்டும்.

அமீர் இப்னு சஹத் இப்னு அபீ வக்காஸ் அவர்களிடம் தனது தந்தை “லஹத் முறையில் என்னை அடக்கம் செய்ய வேண்டும். நபியவர்களுக்கு செய்யப்பட்டது போல கற்களை நட்டு தான் வைக்க வேண்டும்.” என்று வஸிய்யத் செய்தார்கள். (முஸ்லீம்)

ஜனாஸா சட்டங்கள் 07

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 7

நம்முடைய வாரிசுகளுக்கு சொத்திலிருந்து அதிகப்படியான வஸிய்யத் செல்லுபடியாகாது. 

நபி (ஸல்) தனது இறுதி ஹஜ்ஜில் ” அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் உரிமைகளை கொடுத்துவிட்டான். வாரிசுகளுக்கு வஸிய்யத் கிடையாது” என்று கூறினார்கள்.

பிறருக்கு இடைஞ்சல் வருவது போல வஸிய்யத் செய்யக்கூடாது. வாரிசுகளில் சிலருக்கு சொத்து கிடைக்காத ஏற்பாடுகளை செய்வதும் செய்யக்கூடாது.

ஸூரத்துன்னிஸாவு 4: 12 – 14

….مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏

………..ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

تِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ

الْفَوْزُ الْعَظِيْمُ‏

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான வெற்றியாகும்

 وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

لا ضرر ولا ضرار

நபி (ஸல்) – ஒரு முஸ்லீம் தனக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடாது பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடாது.

مَنْ ضَارَّ مُسْلِمًا ضَارَّهُ اللَّهُ، وَمَنْ شَاقَّ مُسْلِمًا شَقَّ اللَّهُ عَلَيْه

நபி (ஸல்) – யார் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கிறானோ அல்லாஹ் அவருக்கு ஆபத்தை விளைவிப்பான், யார் பிறரை கஷ்டப்படுத்துகிறாரோ அல்லாஹ் அவரை கஷ்டப்படுத்துகிறான். (ஹாகிம், தாரகுத்னீ)

அது போலவே அநியாயமான வஸிய்யத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد

நபி (ஸல்) – மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவரேனும் புதிதாக கொண்டு வந்தால் அது ரத்து செய்யப்படும்.(புஹாரி, முஸ்லீம் )

ஒருவர் தன்னுடைய மரண நேரத்தில் தனது 6 அடிமைகளையும் விடுதலையிட்டார்கள். அவரிடம் வேறு எந்த சொத்தும் இருந்திருக்கவில்லை. அப்போது அவரது வாரிசுகள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த செய்தியை சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) – எனக்கு தெரிந்திருந்தால் அதற்கு நான் துணை செய்திருக்க மாட்டேனே என்று கூறிவிட்டு அந்த 6 அடிமைகளுக்கும் மத்தியில் சீட்டு குலுக்கி போட்டார்கள் அதில் 2 பேரை தேர்வு செய்து உரிமை விட்டுவிட்டு மீதமிருக்கும் 4 அடிமைகளை அவரது வாரிசுகளுக்கு கொடுத்தார்கள்.

ஜனாஸா சட்டங்கள் 06

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 6

சொத்தில் 3இல் ஒரு பங்கு மட்டுமே தருமத்திற்கு வஸிய்யத் செய்ய வேண்டும் 

  1. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். 

மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும், ‘வேண்டாம்’ என்றே பதிலளித்தார்கள். நான், ‘மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)’ என்று கேட்டேன். அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்’ என்று கூறினார்கள். அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. 

Volume :3 Book :55(புஹாரி)

இப்னு அப்பாஸ் (ரலி) மூன்றிலொரு பங்கிலிருந்து 4 இல் ஒரு பங்கு வரை ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஜனாஸா சட்டங்கள் 05

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 5

 من مات وعليه دين فليس ثَمَّ دينار ولا درهم ولكنها الحسنات والسيئات 

நபி (ஸல்) – யாரொறொருவர் கடனாளியாக மரணிக்கிறாரோ அவர் மறுமையில் தனது நன்மைகளை கடன் கொடுத்தவருக்கு கொடுக்கவேண்டி வரும் அல்லது கடன்கொடுத்தவரின் பாவங்களில் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்.

(இப்னு மாஜா, முஸ்னத் அஹமத், ஹாகிம்)

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 2387)

ஜாபிர் (ரலி) – உஹதுடைய காலம் நெருங்கியபோது என்னுடைய தந்தை அந்த இரவு என்னை அழைத்து “நாளை நபித்தோழர்களில் முதலில் கொல்லப்படக்கூடியவர்களில் நானும் ஒருவன். எனக்குப்பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்ததாக உன்னை கண்ணியமானவனாக கருதுகிறேன். என்னுடைய கடன்களை நிறைவேற்றி விடு மகனே!, உங்களுடைய சகோதரிகள் விஷயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் ” என வஸிய்யத் செய்தார்கள். மறுநாள் காலையில் கொல்லப்பட்டவர்களில் முதல்வராக என்னுடைய தந்தை இருந்தார்.(புஹாரி)

வஸிய்யத்தை எழுதி வைக்க வேண்டும் 

நபி (ஸல்) – ஒரு முஸ்லீம் தனது வஸிய்யத்துகளை தலையணைக்கு கீழே எழுதப்பட்டதாக வைக்காமல் 2 இரவுகளை கடத்த கூடாது. 

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த செய்தியை  கேட்டதிலிருந்து என்னுடைய வஸிய்யத்தை எழுதாமல் ஒரு இரவை கூட கடந்ததில்லை.(புஹாரி, முஸ்லீம்)

ஜனாஸா சட்டங்கள் 04

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 4

4) நோயாளியிடம் மற்றவர்களின் உடமைகள் இருந்தால் அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால் அவரிடம் பணமோ பொருளோ கொடுக்க அந்த நேரத்தில் இல்லையென்றால் அது பற்றி வஸிய்யத் செய்துவிட வேண்டும்.

عَنْ  أَبِي هُرَيْرَةَ  رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ كَانَتْ لَهُ

مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ  عِرْضِهِ أَوْ شَيْءٍ ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ ، إِنْ

كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ

فَحُمِلَ عَلَيْهِ

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் தனது சகோதரருக்கு அவருடைய மானம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் அல்லது அவரது பொருள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் அநியாயம் செய்திருந்தால் அதை மறுமை வரும் முன் சரிசெய்துவிடட்டும். அந்த நாளில் தங்கக்காசுகளோ வெள்ளிக்காசுகளோ ஏற்றுக்கொள்ளப்படாது. அவரது நல்ல அமல்கள் இருந்தால் அதை எடுத்து அநியாயம் செய்யப்பட்டவருக்கு அல்லாஹ் கொடுத்து விடுவான் அவரிடம் நல்ல அமல் இல்லையென்றால் அநியாயம் செய்யப்பட்டவரின் பாவத்தை எடுத்து அவர் மீது சுமத்தப்படும். (புஹாரி) 

عَنْ ‏أَبِي هُرَيْرَةَ ‏، عَنْ النَّبِيِّ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  ‏  ‏قَالَ : هَلْ تَدْرُونَ مَنْ ‏الْمُفْلِسُ ؟ قَالُوا ‏:

الْمُفْلِسُ فِينَا ، يَا رَسُولَ اللَّهِ ، مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ . قَالَ ‏: ‏إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي مَنْ يَأْتِي يَوْمَ

الْقِيَامَةِ بِصِيَامٍ وَصَلَاةٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ عِرْضَ هَذَا ، وَقَذَفَ هَذَا ، وَأَكَلَ مَالَ هَذَا ، فَيُقْعَدُ

‏، ‏فَيَقْتَصُّ ‏‏هَذَا مِنْ حَسَنَاتِهِ ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يَقْضِيَ مَا عَلَيْهِ مِنْ

الْخَطَايَا أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ . 

رواه مسلم 

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ஓட்டாண்டி  தெரியுமா? என்று கேட்டபோது யாரொருவரிடம் ஒரு வெள்ளிக்காசோ அல்லது அதுவும் இல்லாமல் இருக்கிறாரோ அவர் தான் ஓட்டாண்டி என்று பதிலளிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” என்னுடைய உம்மத்தில் மறுமையில் நோன்பு, தொழுகை, ஜகாத், போன்ற அனைத்து அமல்களையும் செய்து அதை கொண்டு வருவார், ஆனால் அவர் பிறரை திட்டியிருப்பார், அவதூறு பேசியிருப்பார், நல்ல பெண்களை அவதூறு பேசியிருப்பார், அநியாயமாக பிறரின் சொத்தை சாப்பிட்டிருப்பார், பிறரது இரத்தத்தை ஓட்டியிருப்பார், பிறரை அடித்திருப்பார் ஆகவே அவரது நன்மைகளெல்லாம் பறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஆயினும் பாதிக்கப்பட்டவர்கள் மீதம் இருப்பின் இவரிடம் கொடுப்பதற்கு நன்மை இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களை எடுத்து இவருக்கு கொடுக்கப்படும். அந்த பாவங்களை சுமந்து இவர் நரகத்திற்கு அனுப்பப்படுவார். அந்த மனிதன் தான் மறுமையில் உண்மையான ஓட்டாண்டி என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லீம்)

ஜனாஸா சட்டங்கள் 03

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 3

3) நோய் கடுமையானால் மரணத்தை வேண்டுவது கூடாது. 

عن أم الفضل ، أن رسول الله صلى الله عليه وآله وسلم دخل عليهم وعباس عم رسول الله

صلى الله عليه وآله وسلم يشتكي ، فتمنى عباس الموت ، فقال له رسول الله صلى الله عليه

وآله وسلم : ” يا عم ، لا تتمن الموت ، فإنك إن كنت محسنا فإن تؤخر تزداد إحسانا إلى

إحسانك خير لك ، وإن كنت مسيئا فإن تؤخر فتستعتب من إساءتك خير لك ، فلا تتمن الموت

” هذا حديث صحيح على شرط الشيخين ، ولم يخرجاه بهذا اللفظ ، إنما اتفقا على حديث قيس 

عن خباب ، لولا أن رسول الله صلى الله عليه وآله وسلم نهانا أن نتمنى الموت لتمنيته 

உம்முல் பாளுல் (ரலி) – அப்பாஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது  அவர்களை காண நபி (ஸல்) அவர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றபோது அப்பாஸ் (ரலி)  தனக்கு மரணம் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபோது நபி (ஸல்) அவர்கள்”என் சிறியத்தந்தையே, நீங்கள் மரணம் வந்துவிட  வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் நீங்கள் நல்லவராக இருந்தால் இன்னும் அதிகமான நன்மைகள் செய்யமுடியும். நீங்கள் தவறிழைப்பவராக இருந்தால் இன்னும் சில காலம் வாழ்ந்து அதற்கு பரிகாரம் செய்யலாம். எனவே நீங்கள் மரணத்தை ஆசை பட வேண்டாம்(முஸ்னத் அஹமத், ஹாகிம் – புஹாரி, முஸ்லீம் இமாம்களின் ஷர்த்தின் படி இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள், இமாம் தஹபீ இந்த ஹதீஸை சரி கண்டிருக்கிறார்கள்.   

வேண்டுமானால் ஒருவர் இவ்வாறு கூறலாம் 

فإن كان لا بد متمنيا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا

لي 

அனஸ் (ரலி) – ஒருவர் மரணத்தை வேண்டி துஆ செய்ய வேண்டுமானால் இவ்வாறு வேண்டுமானால் கூறலாம் என நபி (ஸல்) கூறினார்கள். “நான் உயிர் வாழ்வது நன்மையாக இருந்தால் என்னை உயிர் வாழ வை, நான் மரணிப்பது தான் நன்மையாக இருந்தால் என்னை மரணிக்க வைத்து விடு என்று பிரார்த்திக்கலாம்”(முஸ்லீம்)

ஜனாஸா சட்டங்கள் 02

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 2

2) மரணத்தை எட்டிய நோயாக இருந்தால் அல்லாஹ்வின் பயமும் இருக்க வேண்டும் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்க வேண்டும்.

 أنَّه صلَّى اللهُ عليه وسلَّم دخل على شابٍّ وهو في الموتِ فقيل كيف تجِدُك قال أرجو اللهَ

وأخافُ ذنوبي فقال صلَّى اللهُ عليه وسلَّم لا يجتمعان في قلبِ عبدٍ في مثلِ هذا الموطنِ إلَّا

أعطاه اللهُ ما يرجوه وأمَّنه ممَّا يخافُ

الراوي :  أنس بن مالك 

ஒரு இளைஞர் மரணத்தருவாயில் இருக்கும்நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். நபி (ஸல்) “நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்” என்று கேட்டபோது அந்த இளைஞர் “அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்ற ஆசையும் இருக்கிறது அதே நேரத்தில் அல்லாஹ் தண்டித்து விடுவான் என்ற பயமும் இருக்கிறது.” அதற்கு நபி (ஸல்) “இவ்வாறான ஒரு சூழலில் உள்ளவருக்கு அவர் அஞ்சியதை விட்டு விலக்காமலும் ஆதரவு வைத்ததை கொடுக்காமலும் இருக்க மாட்டான்” என்று கூறினார்கள். (திர்மிதி, இப்னு மாஜா – ஹஸன்) 

ஜனாஸா சட்டங்கள் 01

 أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 1

முன்னுரை :-

ஆசிரியர் புத்தகம் எழுதியதற்கான காரணத்தை கூறுகையில்” நான் ஒரு ஜனாஸா விற்கு சென்றிருந்தேன் அப்போது அந்த ஜனாஸாவின் சொந்தக்காரர் என்னிடம் ஜனாஸா பற்றிய புத்தகத்தை நீங்கள் எழுதினால் மக்களுக்கு நபிவழியில் ஜனாஸாவிற்கான கடமைகளை செய்ய உதவியாக இருக்குமே என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த சட்டதிட்டங்களில் பல்வேறுவிதமான கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றது. மிகவும் நீளமான செய்திகள் கொண்ட பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே அவ்வளவு எளிதில் இதை கோர்வை செய்ய முடியாதே என நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்த சகோதரர் என்னை மீண்டும் ஆர்வப்படுத்தியதால் இதை செய்ய முடிவெடுத்தேன்”. 

ما يجب على المريض 

நோயாளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் 

1) நோயாளி அல்லாஹ்வின் விதியை பொருந்திக்கொண்டு  பொறுமையை கைக்கொள்ளவேண்டும்.

وَعَنْ أبي يَحْيَى صُهَيْبِ بْنِ سِنَانٍ  قَالَ: قَالَ رَسُولُ الله ﷺ: «عَجَباً لأمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ

خَيْرٌ، وَلَيْسَ ذَلِكَ لأِحَدٍ إِلاَّ للْمُؤْمِن: إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْراً لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ

صَبَرَ فَكَانَ خيْراً لَهُ». رواه مسلم

நபி (ஸல்) – ஒரு முஃமினின் காரியங்கள் ஆச்சரியமாக  இருக்கிறது. அவனுடைய காரியங்கள் அனைத்தும் நலவானதாகவே இருக்கும்.  முஃமினை தவிர வேறு யாருக்கும் இது வராது. அவனுக்கு ஒரு சந்தோஷமான நிலை ஏற்பட்டால் அவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவான் அதுவே அவனுக்கு சிறந்ததாக இருக்கும். ஒரு துக்கமான காரியம் ஏற்பட்டால் பொறுத்துக்கொள்வான் அதுவே அவனுக்கு சிறந்ததாக இருக்கும்(ஸஹீஹ் முஸ்லீம்)

عن جابر بن عبدالله الأنصاري – رضي الله عنهما – أنه سمِع رسول الله – صلى الله عليه

وسلم – قبل موته بثلاثة أيام يقول: ((لا يَموتنَّ أحدكم إلا وهو يُحسن الظن بالله – عز وجل))؛

رواه مسلم

நபி (ஸல்) – உங்களிலொருவர் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தே தவிர மரணிக்க வேண்டாம்.(முஸ்லீம், சுனனுல் பைஹகீ, முஸ்னத் இமாம் அஹமத்)