ஸலாத்துல் தவ்பா 06

ஃபிக்ஹ்

ஸலாத்துல் தவ்பா

பாகம் – 6

🌷இமாம்களின் கருத்துப்படி பாவமன்னிப்புக்கு 5 நிபந்தனைகள் 

(1) இஹ்லாசுடன் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் 

(2) பாவங்களை விட்டு விட வேண்டும் 

(3) செய்த தவறுக்காக கவலைப்பட வேண்டும் 

ஆதம் , ஹவ்வா (அலை) அவர்கள் பாவமன்னிப்பிற்க்காக செய்த துஆ 

சூரா அல் அஃராஃப் 7:23

قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.

(4)இனிமேல் இப்படி பட்ட பாவங்களை செய்ய மாட்டேன் என்று முடிவெடுக்க வேண்டும் 

ஆதாரம் 

சூரா ஆலு இம்ரான் 3:135

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்து விட்டால், அல்லது (ஏதும் பாவமிழைத்துத்) தங்களுக்குத் தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். இன்னும் (அவனிடமே) தங்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கத்தேடுவார்கள்; (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர, (இத்தகையோரின்) குற்றங்களை மன்னிப்பவனும் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (த் தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டே (அதில்) நிலைத்திருக்கவு மாட்டார்கள் (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்)

(5)மரணம் வருவதற்கு முன்னால் பாவமன்னிப்பு தேட வேண்டும் 

🌷ஒரு மனிதனுக்கு மனிதன் பாவம் செய்து விட்டால் இந்த 5 நிபந்தனைகளுடன் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடினால் போதாது.

எந்த மனிதருக்கு பாவம் செய்தோமோ அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஸலாத்துல் தவ்பா 05

ஃபிக்ஹ்

ஸலாத்துல் தவ்பா

பாகம் – 5

🌷நபி (ஸல்) – பாலைவனத்தில் ஒட்டகத்தை தொலைத்தவன் மீண்டும் அதை பார்த்த சந்தோஷத்தில் யா அல்லாஹ் நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று தன்னை மறந்து கூறிவிடும் அளவு சந்தோஷப்படுவது போல அல்லாஹ் ஒரு அடியான் பாவமன்னிப்பு கேட்கும்போது சந்தோஷமடைகிறான்.

🌷நபி (ஸல்)-முன் சென்ற சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் 99 கொலைகளை செய்து விட்டு ஒரு மார்க்க அறிஞரிடம் எனக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா என்று கேட்டபோது அவர் கிடைக்காது என்று கூறியதும் அவரையும் கொன்றார். இன்னொரு மார்க்க அறிஞரிடம் சென்றபோது நல்லவர்களின் ஊருக்கு சென்று நல்லவராக வாழு என்று உபதேசித்தார்.போகும் வழியில் அவரது உயிர் எடுக்கும் வானவர்களுக்கிடையில் தர்க்கம் ஏற்பட்டபோது- நன்மைக்கான ஊருக்கு அல்லாஹ் பூமியை சுருக்கி அந்த அளவை சுருக்கி அவரை நல்லவராக மரணிக்க செய்தான்.

ஸலாத்துல் தவ்பா 04

ஃபிக்ஹ்

ஸலாத்துல் தவ்பா

பாகம் – 4

சூரா அன்னிஸா 4:17,18

اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ‌ؕ

وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏

(17)எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.

(18) இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

சூரா அல்ஃபுர்கான் 25:70

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

ஸலாத்துல் தவ்பா 03

ஃபிக்ஹ்

ஸலாத்துல் தவ்பா

பாகம் – 3

சூரா அந்நூர் 24:31

நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

சூரா அத்தஹ்ரீம் 66:8

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்…

🌷அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) – அல்லாஹ் வின் மீது ஆணையாக ஒரு நாளைக்கு 70 இருக்கும் மேற்பட்ட முறை அல்லாஹ் விடம் நான் பாவமன்னிப்பு கேட்கிறேன்(புஹாரி)

🌷நபி (ஸல்) கூறினார்கள்- மனிதர்களே அல்லாஹ் விடத்தில் பாவமன்னிப்பு தேடுங்கள் நான் ஒரு நாளைக்கு 100 தடவை அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுகிறேன் (முஸ்லீம்)

🌷அல்லாஹ் பாவமன்னிப்பின் வாசலை திறந்து வைத்திருக்கிறான் அது ஒரு நாள் மூடப்படும் கியாமத் நெருங்கும்போது 

ஒவ்வொருவருக்கும் தொண்டைக்குழிக்கு உயிர் வந்தடைந்ததும் அவருடைய பாவமன்னிப்பின் வாசல் மூடப்படும் 

ஸலாத்துல் தவ்பா 02

ஃபிக்ஹ்

ஸலாத்துல் தவ்பா

பாகம் – 2

كل بنى آدم خطاء ، وخير الخطائين التوابون 

நபி (ஸல்)-ஆதமின்  மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள் அதில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்களே 

சூரா அல் ஜுமர் 39:53,54

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ

هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

(53)“தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகிவெட வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் _ (உங்களுடைய) பாவங்கள் யாவையும் _(நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்துவிடுவான்; (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன், மிகக்கிருபையுடையவன் “என்று (நபியே!) நீர் கூறுவீராக!

وَاَنِيْبُوْۤا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏

(54) ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

ஸலாத்துல் தவ்பா 01

ஃபிக்ஹ்

ஸலாத்துல் தவ்பா

பாகம் – 1

🌷அபூபக்கர் (ரலி)- நபி (ஸல்) கூற நான் கேட்டேன் எந்த ஒரு மனிதனாவது ஏதாவது ஒரு பாவம் செய்து  பிறகு அந்த மனிதன் எழுந்து உளூ செய்து தொழுது பிறகு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறிவிட்டு கீழ்வரும் வசனங்களை ஓதினார்கள்.(அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, பைஹகீ, திர்மிதி-ஹசன்)

ஹதீஸுகளில் ஸலாத்து தவ்பா என்று வராவிட்டாலும் அறிஞர்கள் இப்படி பெயரிடுகிறார்கள்.

சூரா ஆலு இம்ரான் 3:135,136

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلا

اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

(135)தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَنِعْمَ اَجْرُ

الْعٰمِلِيْنَؕ‏

(136) அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

இஸ்திகாரா தொழுகை

ஃபிக்ஹ்

இஸ்திகாரா தொழுகை

நன்மையை நாடி தொழும் தொழுகை:

ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) எங்களுக்கு குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை கற்றுக்கொடுப்பது போன்று இஸ்திகாரா தொழுகையை கற்றுத்தரக்கூடியவர்களாக இருந்தார்கள்.

உங்களிலொருவருக்கு  ஏதாவது ஒரு காரியம் செய்யவேண்டுமென்ற எண்ணம் வந்து விட்டால் அவர் பர்ளு அல்லாத இரண்டு ரக்காத் தொழட்டும் 

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ

وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي

وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ

أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ

عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي 

↔ اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ

அல்லாஹ்வே உன்னுடைய அறிவைக்கொண்டு உன்னிடத்தில் அந்த நன்மையை தேடுகிறேன் 

↔ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ

உன்னுடைய ஆற்றலைக்கொண்டு நான் உன்னிடத்தில் ஆற்றலை கேட்கிறேன் 

↔ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ 

மகத்தான உன்னுடைய அருளை உன்னிடத்தில் நான் கேட்கிறேன் 

↔ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ 

நீ சக்திவாய்ந்தவன் நான் சக்தியற்றவன் 

وَتَعْلَمُ وَلا أَعْلَمُ 

நீ அறிந்தவன் நான் அறியாதவன் 

↔ وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ 

நீ மறைவானவற்றை மிக அறிய கூடியவன்

↔ اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ

இறைவா நீ அறிந்தால்

↔ نَّ هَذَا الأَمْرَ 

இந்த (என்னுடைய) காரியம்
(هنا تسمي حاجتك) – (அல்லாஹ்விடம் கேட்கப்போகும் அந்த விஷயத்தை இங்கே சொல்ல வேண்டும் )

↔ خَيْرٌ لِي 

எனக்கு நன்மை

↔ ي دِينِي وَمَعَاشِي 

என்னுடைய மார்க்கத்திலும் என்னுடைய வாழ்க்கையிலும் 

↔ وَعَاقِبَةِ أَمْرِي 

என்னுடைய இந்த காரியத்தினுடைய கடைசி வரைக்கும் 

↔ أَوْ قَالَ 

அல்லது நபி(ஸல்) கூறினார்கள் (ஹதீஸ் அறிவிப்பாளருக்கு சந்தேகம் ஏற்படும் போது அவர்கள் கூறும் வார்த்தை)

↔ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ

இப்போதும் என்னுடைய இந்த காரியம் முடியும் வரை 

↔ فَاقْدُرْهُ لِي 

அதை எனக்கு நீ ஏற்படுத்திக்கொடு 

↔ وَيَسِّرْهُ لِي 

அதை எனக்கு இலகுவாக்கிக்கொடு 

↔ ثُمَّ بَارِكْ لِي فِيهِ 

பின்பு அந்த காரியத்தில் எனக்கு அருள் புரிவாயாக 

↔ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي 

இந்த காரியத்தில் எனக்கு என்னுடைய மார்க்கத்திலும், வாழ்க்கையிலும் என்னுடைய கடைசி வரை எனக்கு இது தீமையாக இருந்தால் 

↔ أَوْ قَالَ 

அல்லது நபி(ஸல்) கூறினார்கள் (ஹதீஸ் அறிவிப்பாளருக்கு சந்தேகம் ஏற்படும் போது அவர்கள் கூறும் வார்த்தை)

↔ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي

இப்போதும் என்னுடைய இந்த காரியம் முடியும் வரையிலும் என்னை விட்டும் அதை தூரமாக்கிவிடு

↔ وَاصْرِفْنِي عَنْهُ

அதை விட்டும் என்னை தூரமாக்கிவிடு.

↔ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ 

பிறகு எனக்கு (எது) நன்மையோ அதை ஏற்படுத்தி கொடு.

↔ ثُمَّ أَرْضِنِي 

பின்பு அதை எனக்கு பொருந்திக்கொள்வாயாக 

❣  இந்த துஆ வை கேட்டுவிட்டு அதற்கு பிறகு அவருக்கு எது மனதிற்கு சரியாக தோன்றுகிறதோ அது தான் அவருக்கு நன்மை என நபி (ஸல்) கூறினார்கள்.

❣  ஒரு மனிதன் அவன் எதை செய்யவேண்டும் என்று முடிவு செய்ய முடியாமல் தடுமாறினால் இப்படி தொழுது துஆ செய்ய வேண்டும்.

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 08

ஃபிக்ஹ் 

இரவுத் தொழுகை

பாகம் – 8

💕 எத்தனை ரகாஅத் தொழுவது?

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) ரமளானிலும் மற்ற காலத்திலும் 11 ரகாஅத்தை விட அதிகமாக தொழவில்லை. 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள்.பிறகு 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள். பிறகு 3 ரகாஅத் தொழுவார்கள்.- யா ரசூலுல்லாஹ் நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன்னால் தூங்குகிறீர்களா?-நபி (ஸல்)-என்னுடைய கண்கள் தான் உறங்குகிறது உள்ளம் உறங்குவதில்லை (முஸ்லீம்)

💕 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – இரவுத்தொழுகை இரண்டு இரண்டாக தொழட்டும் பஜ்ர் நெருங்குவதை  அஞ்சினால் ஒரு ரகாஅத் தொழுது முடித்துக்கொள்ளட்டும் (புஹாரி, முஸ்லீம்)

💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 13 ரகாஅத் தொழுவார்கள் அதில் 5 ரகாஅத்தை வித்ர் ஆக்கிக்கொள்வார்கள்.

💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவுத்தொழுகையை சுருக்கமான 2 ரகாஅத்களைக்கொண்டு ஆரம்பிப்பார்கள் (முஸ்லீம்) 

💕 ஜைத் (ரலி) – நபி (ஸல்) வின் தொழுகையை போன்று தொழுது கட்டினார்கள் – 2 சுருக்கமான தொழுகையை தொழுதார்கள், பிறகு மிக நீளமான 2 ரகாஅத், பிறகு சுருக்கமான 2 ரகாஅத் (முந்தியதை விட குறைவாக இருந்தது), பிறகு 2 ரகாஅத் முந்தியதை விட குறைவாக இருந்தது, பிறகு அதை விட குறைவான 2 ரகாஅத், பிறகு ஒரு ரகாஅத் தொழுதார்கள்.

💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவு தொழுகையை விட்டுவிட்டால் பகலில் 12 ரகாஅத் தொழுவார்கள் (முஸ்லீம்)

💕 நபி (ஸல்) – யாரேனும் ஒருவர் இரவுத்தொழுகையை தொழ வேண்டும் என்ற நிய்யத்துடன் உறங்கி அந்த தொழுகையை தொழவில்லையென்றாலும் தொழுத நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்(இப்னுமாஜா, நஸயீ)

💕 நபி (ஸல்) – யாரேனும் ஒருவர் நோயின் காரணமாகவோ பிரயாணத்தின் காரணமாகவோ வழமையாக செய்யும் அமலை செய்யவில்லையென்றால் வழக்கமாக அவர் செய்த நன்மையை அல்லாஹ் வழங்குவான்

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 07

ஃபிக்ஹ் 

இரவு தொழுகை

பாகம் – 7

💕 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நம் இறைவன் ஒவ்வொரு இரவும் 3 வது பகுதியில்  முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்னிடம் யார் பிராத்திக்கிறார்களோ அவர்களுக்கு நான் விடை கொடுக்கிறேன் யார் என்னிடம் கேட்கிறாரோ அவர்களுக்கு நான் வழங்குகிறேன் யார் என்னிடத்தில் பிழை பொறுப்பு தேடுகிறார்களோ அவர்களுக்கு நான் பிழை பொறுப்பு வழங்குகிறேன்.

💕 யஃகூப் (அலை) அவர்களது பிள்ளைகள் அவர்களுக்காக பிழை பொறுப்பு தேடிய நேரம் இரவின் கடைசி பகுதி என்று உலமாக்களின் கருத்தும் உள்ளது 

💕 அம்ரு இப்னு ஹபசா (ரலி) -நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன் ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய நேரம் இரவின் கடைசி பகுதி. அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூறக்கூடியவராக நீயும்  ஆகி விடு (ஹாகிம், திர்மிதி – ஹசன் ஸஹீஹ்)

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 06

ஃபிக்ஹ் 

இரவு தொழுகை

பாகம் – 6

🛡 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- இரவிலே தொழுவதற்காக எழுந்து மனைவியையும் எழுப்பி எழ மறுத்தால் தண்ணீர் தெளித்து எழுப்புபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அது போல கணவனையும் எழுப்பும் மனைவிக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

🛡 அபூஹுரைரா (ரலி) – கணவன் தன் மனைவியை எழுப்பி அவ்விருவரும் 2 ரகாஅத் தொழுதால் அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்கள் பட்டியலில் பதிவு செய்யப்படுவார்கள்.(அபூதாவூத்)