🛡 இப்னு அப்பாஸ் (ரலி) – ஒரு முறை நான் மைமூனா (ரலி) வீட்டில் தங்கியபோது-நபி (ஸல்) தூக்கத்திலிருந்து விழித்து கண்களை கசக்கி ஆல இம்ரான் சூராவில் கடைசி 10 வசனங்கள் ஓதி பிறகு உளூ செய்து தொழ ஆரம்பித்தார்கள்.-இரண்டிரண்டாக 12 ரகாஅத்துகள் தொழுது பிறகு 1 ரகாஅத் வித்ர் தொழுது பிறகு உறங்கினார்கள் பிறகு சுபுஹ் தொழுகையின் பாங்கு சொல்லப்பட்டபின் சுன்னத் தொழுதுவிட்டு சுபுஹ் தொழவைத்தார்கள் (புஹாரி, முஸ்லீம்)
🛡 அனஸ் (ரலி) – நபி (ஸல்) வை இரவில் நாங்கள் பார்க்கும்போது தொழக்கூடியவர்களாகவும் தூங்கக்கூடியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் (புஹாரி, நஸயீ, அஹ்மத்)
(15) நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
(16)அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
🛡ஸூரத்துஜ்ஜுமர் 39:9
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
🛡 அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) – நபி (ஸல்) மதீனாவிற்கு வந்த போது நபி (ஸல்) வை பார்க்கச்சென்றவனாக இருந்தேன். அவர்களது முகத்தில் ஒரு பொய்யரை போல தோன்றவில்லை அவர்கள் உண்மையாளராக இருந்தார்கள். நபி (ஸல்) முதலாவதாக சொல்லி நான் கேட்டவார்த்தை – அதிகமாக ஸலாத்தை பரப்புங்கள் – ஏழை எளியவருக்கு உணவளியுங்கள் – உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் – மக்கள் உறங்கும்போது இரவில் எழுந்து நீங்கள் தொழுங்கள்-சுவர்க்கத்தில் சந்தோஷமாக நுழையவீர்கள்
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 9 ரக்காஅத் வித்ரு தொழும்போது 8 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு எழுந்து 9 வது ரக்காஅத்-ஐ தொழுது அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்து பிறகு எங்களுடைய காதுக்கு கேட்கும்படி ஸலாம் கொடுப்பார்கள் (முஸ்லீம்)
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவில் 13 ரக்காஅத் தொழுவார்கள்.இரண்டிரண்டாக ஸலாம் கொடுத்து மொத்தம் 8 ரக்காஅத் தொழுதுவிட்டு; பிறகு ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத் தொழுது கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத் இருந்து ஸலாம் கொடுப்பார்கள் – (முஸ்லீம்)
❣ 7 ரக்காஅத் ஆக தொழும்போது :
உம்முஸலாமா (ரலி) – நபி (ஸல்) – நபி (ஸல்) 5 ரக்காஅத் வித்ரு தொழுதிருக்கிறார்கள்
7 ரக்காஅத்-ஐ கொண்டும் வித்ரு தொழுதிருக்கிறார்கள். அதில் ஸலாத்தை கொண்டோ பேச்சைக்கொண்டோ அந்த தொழுகையை பிரிக்க மாட்டார்கள். (அஹ்மத், நஸயீ – நஸாயீ யில் அல்பானீ இதை ஸஹீஹ் என்கிறார்,இமாம் நவவி இது நல்ல அறிவிப்பு என்கிறார்கள்)
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வித்ருடைய 2 ரக்காஅத்தில் ஸலாம் கொடுக்க மாட்டார்கள்
❣ இன்னொரு அறிவிப்பில்
நபி (ஸல்) – 3 ரக்காஅத் வித்ரு தொழுவார்கள் கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத்தில் அமர்வார்கள் (நஸாயீ, பைஹகீ)
❣ இரண்டிரண்டாக தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு ஒரு ரக்காஅத் தொழலாம்:
இப்னு உமர் (ரலி) – இரண்டிரண்டு ரக்காஅத்துகளாக தொழுது ஸலாம் கொடுப்பார்கள் பிறகு ஒரு ரக்காஅத் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு கூறினார்கள்; இப்படித்தான் நபி (ஸல்) செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்-ஃபதஹுல் பாரியில் இப்னு ஹஜர் (ரஹ்) இந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசை உறுதியானது என்று கூறுகிறார்கள்.
கருத்துரைகள் (Comments)