❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) எனக்கு 3 உபதேசம் செய்தார்கள் அதில் ஒன்று தான் தூங்கும்முன் வித்ர் தொழ சொன்னார்கள்.
❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – அபூபக்கர் (ரலி) யை பார்த்து-எப்போது வித்ர் தொழுகிறீர்கள்?-ஈஷா விற்கு பிறகு- உமர் (ரலி) யிடம் கேட்டபோது-இரவின் கடைசி பகுதியில் – நபி (ஸல்) அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:‘நீங்கள் ஜாக்கிரதையாக வழிமுறையை த் தேர்வு செய்துள்ளீர்’. உமர்(ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘ உமரே நீங்கள் மனஉறுதி மிக்க வழிமுறையை த் தேர்வு செய்துள்ளீர்’.
(அஹ்மத், அபூதாவுத், ஹாகிம். இது முஸ்லிம் அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று ஹாகிம் கூறுகிறார்).
❣ அபூ பாஸரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் உங்களுக்கு இன்னுமொரு தொழுகையை அதிகப்படுத்தி தந்திருக்கிறான் அது வித்ர் தொழுகையாகும் அதை இஷா வுக்கும் ஃபஜர்க்கும் இடையில் தொழுங்கள் (அஹ்மத்)
❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – யார் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து வித்ரு தவறி விடும் என்று பயந்து விடுகிறாரோ அவர் இஷாவுக்கு பிறகு அதை தொழுது கொள்ளட்டும். யார் இரவின் கடைசி நேரத்தில் தொழலாம் என்று உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் அந்த நேரத்தில் தொழட்டும் அது மலக்குமார்கள் வரும் நேரமாகவும் சிறந்த நேரமாகவும் இருக்கிறது. (முஸ்லீம்)
❣ அலி (ரலி) – நபி (ஸல்) – குர்ஆன் உடையவர்களே நீங்கள் வித்ர் தொழுகையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் ஒருமையானவன் அவன் ஒற்றைப்படையான வித்ர் தொழுகையை விரும்புகிறான். (அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி – ஹசன் என்ற தரத்தில் குறிப்பிடுகிறார்கள்)
❣ நபி (ஸல்) ஊரிலிருக்கும்போதும் பிரயாணத்தில் விடாமல் தொழுத இரண்டு சுன்னத்துகள் சுபுஹுடைய முந்திய 2 ரக்காஅத் மேலும் வித்ர் தொழுகையாகும்
லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும்
பாகம் – 2
லுஹா தொழுகையின் நேரம்:
ஜைத் இப்னு அர்கம் ரலி – ஒருமுறை நபி ஸல் குபா பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அப்போது லுஹா தொழுது கொண்டிருக்கும் ஸஹாபாக்களை நோக்கி லுஹாவின் நேரம் ஒட்டகத்தின் குட்டி சூட்டை தாங்க முடியாமல் இருக்கும்; அந்த நேரம் தான்.
லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும்
பாகம் – 1
லுஹா – பகல்
🔶அபூதர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் ஒவ்வொரு மூட்டிற்கும் பகலில் தருமம் செய்ய வேண்டும்; லுஹா வுடைய இரண்டு ரக்காத் 360 மூட்டுகளுக்கு* தருமம் கொடுத்ததாக ஆகும். (முஸ்லீம், ஸுனன் அபூதாவூத்)
🔶புரைதா (ரலி)- நபி (ஸல்) – ஒரு மனிதனின் உடம்பின் 360 மூட்டுகள் இருக்கின்றன ஒவ்வொரு மூட்டுக்கும் நாம் தருமம் செய்ய வேண்டும்.- எங்களில் யாருக்குத்தான் முடியும்?- பள்ளியில் யாரேனும் உமிழ்ந்தால் அதை மூடுவதும் தருமம் தான், பாதையில் கிடப்பதை அகற்றுவது தருமமாகும் …. இரண்டு ரக்காத் லுஹா தொழுதால் 360 மூட்டுகளுக்கு தருமம் செய்ததாக அமையும் (அஹ்மத், அபூதாவுத்)
🔶அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எனக்கு 3 விஷயத்தை செய்யும்படி உபதேசித்தார் – ஒவ்வொரு மாதத்திலும் 3 நோன்புகள் நோற்பது, 2 ரக்காத் லுஹா, தூங்குவதற்கு முன் வித்ர் (புஹாரி, முஸ்லீம்)
🔶 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – ஒரு பிரயாண நேரத்தில் 8 ரக்காத் லுஹா தொழுததை பார்த்தேன்
🔶 மக்கா வெற்றி பெற்றபோது உம்மு ஹானீ (ரலி) அவர்களது வீட்டில் நபி (ஸல்) லுஹா தொழுகை 8 ரக்காத் தொழுதார்கள்.
🔶 நபி (ஸல்) 2 முதல் 8 ரக்காத் வரை தொழுததாக நாம் அறிய முடிகிறது.
بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء
அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி)
சுருக்கமாக சொன்னால்
💠 5 கடமையான தொழுகைகளுக்கும் முன் சுன்னத் இருக்கிறது.
💠 அஸருக்கும் ஃபஜ்ருக்கும் பின் சுன்னத் இல்லை
💠 ஒரு சுன்னத் விடுபட்டுவிட்டால் மற்ற தொழுகையின் நேரங்களில் அதை தொழலாம். தொழுகை தடை செய்யப்பட்ட நேரத்தை தவிர.
💠 நபி (ஸல்) – ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இடம் ஸுஜூது தான்.
💠 நபி (ஸல்) – அத்தஹிய்யாத்தில் ஸலாமிற்கு முன்னால் நீங்கள் விரும்பியதை கேளுங்கள் அல்லாஹ்விடம்
நேரங்களில் சிறந்த நேரம்
❤ இரவின் கடைசி பகுதியில் தஹஜ்ஜத்தில் கேட்கலாம்
அல்லாஹ் முதல் வானத்திற்கு வந்து என்னிடம் கேட்பவர்கள் உண்டா என கேட்கும் நேரம்
صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء
❤ அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்)-மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் பின்னர் விரும்பியவர்களுக்கு என்று கூறினார்கள் كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً ஏனெனில் மக்கள் அதை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக எடுத்துவிடுவார்களோ என எண்ணி விரும்பியவர்கள் என கூறினார்கள் – (புஹாரி)
❤ நபி (ஸல்) – மஃரிபுக்கு முன்னால் 2 ரக்காத் தொழுதிருக்கிறார்கள்.(இப்னு ஹிப்பான்)
❤ இப்னு அப்பாஸ் (ரலி) – நாங்கள் மஃரிபுக்கு முன் 2 ரக்காத் தொழுபவர்களாக இருந்தோம்.நபி (ஸல்) எங்களை பார்ப்பார்கள் எங்களை அவர்கள் அந்த தொழுகையை ஏவவும் மாட்டார்கள் தடுக்கவும் மாட்டார்கள்.(முஸ்லிம்)
❤ இப்னு அப்பாஸ் (ரலி) – நாங்கள் மஃரிபுக்கு பாங்கு சொன்னால் தூண்களை நோக்கி விரைந்து சென்று தொழுவோம் 2 ரக்காத் சுன்னத் தொழுவதற்காக.
❤ இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்)
❤ அலி (ரலி) – நபி (ஸல்) – அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுவார்கள்.இரண்டிரண்டாக தொழுவார்கள்.அதில் மலக்குமார்களுக்கும் முஃமின்களுக்கும் ஸலாம் கொடுப்பார்கள்.
கருத்துரைகள் (Comments)