❤ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான்.
❤ அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்)
❤ ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) – நபி (ஸல்) விற்கு ஊழியம் செய்யும் நபித்தோழர்களில் ஒருவர் – நபி (ஸல்) ஏதாவது கேளுங்கள் – சொர்க்கத்தில் உங்களுடன் இருக்க வேண்டும்-வேறு எதுவும் வேண்டாமா?-எனக்கு அது தான் வேண்டும் – அதிகமாக ஸுஜூது செய்யுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்(முஸ்லீம்).
ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது
கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை:
💠 ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது.
وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح الحديث فهو مذهبي
☝இமாம் அபூஹனீபா, ஷாபி இருவரும் – உங்களுக்கு ஒரு ஹதீஸ் சஹீஹ் என்று தெரிந்து விட்டால் அது தான் என்னுடைய மத்ஹப் என்று கூறியுள்ளார்கள்.
நான் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்பட்ட ஒன்றை சொன்னால் என்னுடைய வார்த்தையை விட்டு விடுங்கள்.
நான் எங்கிருந்து இந்த சட்டத்தை கொண்டு வந்தேன் என்று தெரியாத வரை என் சட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
இமாம் மாலிக் – நான் ஒரு மனிதன் நான் சரியாகவும் சொல்லலாம் தவறாகவும் சொல்லலாம். என்னுடைய தீர்ப்பில் எது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் ஒத்துப்போகிறதோ அந்த முடிவை எடுங்கள். என்னுடைய முடிவு குர்ஆனுக்கும் ஹதீஸு க்கும் மாற்றமாக இருந்தால் அதை விட்டு விடுங்கள். என்னுடைய வார்த்தை உயர்ந்ததல்ல அல்லாஹ்வுடைய வார்த்தை தான் உயர்ந்தது.
நபி(ஸல்) அவர்களின் பேச்சை மட்டும் தான் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது கட்டாயம். மனிதர்களில் வேறு யாரின் கருத்தாக இருந்தாலும் அதை நாம் எடுக்கவும் செய்யலாம் விடவும் செய்யலாம்.
ஷாபி(ரஹ்) – நபி (ஸல்) வின் கருத்துக்கு எதிராக உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
َஷாபி (ரஹ்)என்னுடைய புத்தகத்தில் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாக தவறை கண்டால் நீங்கள் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்னுடைய கருத்தையோ வேறு யாருடைய கருத்தையோ நீங்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது.
(إذا رأيتموني أقول قولا وقد صح عن النبي صلى الله عليه وسلم خلافه فاعلموا أن عقلي قد ذهب).
(ابن عساكر بسند صحيح)
நபி(ஸல்) வார்த்தைக்கு மாற்றமாக என் வார்த்தையை கண்டால் என் மூளை குழம்பி விட்டது என்று விளங்கிக்கொள்ளுங்கள்.நபி(ஸல்) அவர்களின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஷாபி(ரஹ்)- என் தீர்ப்பு சஹீஹ் ஆன ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் நான் உயிருடன் இருந்தாலும் மரணித்து விட்டாலும் என் தீர்ப்பிலிருந்து நான் பின்வாங்கி விட்டேன்.
நபி(ஸல்)மூலம் வந்திருக்கக் கூடிய அனைத்து செய்திகளும் என்னுடைய ஃபத்வா தான் அதை நீங்கள் என் மூலம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சரியே.
அஹ்மத்(ரஹ்)-என்னையும் மாலிக்கையும், ஷாபி , அவ்ஜயி , சவ்ரீ(ரஹ்) அவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அதை பின்பற்றுங்கள்.
ஆகவே நபி (ஸல் ) அவர்கள் ஆமீன் சொன்ன முறைப்படி ஆமீன் சொல்ல முயற்சிப்போம்.
💠 நபி(ஸல்) அவர்கள் ஆமீன் சொல்லும் சப்தத்தை நீளமாகவும் சப்தத்தை உயர்த்தியும் சொன்னார்கள்(அபு தாவூத், திர்மிதி)
💠 ஆமீன் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தியும், நீளமாகவும் சொல்வது; அதிகமான அறிஞர்களின் மூலம் அறியப்பட்டதாக இமாம் திர்மிதி பதிவுசெய்ததால் அது முக்கியமான சுன்னத் என்று நாம் புரிந்துக் கொள்வோம்.
அல்லாஹ்வே! என்னுடய பாவங்களிலிருந்து என்னை கழுகிவிடு; சுத்தமான நீரைக் கொண்டும், மேலும் பனிக்கட்டியைக் கொண்டும், மேலும் ஆலங்கட்டியைக் கொண்டும்…
ஆதாரம்♦️புஹாரி, முஸ்லிம், அபு தாவூத்,
இப்னு மாஜா, திர்மிதி
அபூ ஹூரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், தக்பீரத்துல் இஹ்ரமிற்கும், ஃபாத்திஹாவிற்கும் இடையில் நீங்கள் அமைதியாக சொல்லுவது என்ன என்று கேட்டபோது, நபி ( ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக கூறினார்கள .
ஆதாரம்♦️அபு தாவூத்,ஹாக்கிம்
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً مسلما وما انا من المشركين إن صلاتي ونسكي ومحياي
ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا اول المسلمين
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً مسلما وما انا من المشركين إن صلاتي ونسكي ومحياي
ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين
அத்தஹியாத்தில் இரண்டாவது ரக்காஅத் (முதல் அத்தஹியாத்தில் அமர்வது வாஜிப்)
முதல் அத்தஹியாத்தில் ஓதும் தஷஹ்ஹூதும் வாஜிப்.
⚜வாஜிபுகள்⚜
தக்பீரத்துல் இஹ்ராமை தவிர, மற்ற தக்பீர்கள் வாஜிப். 5 தக்பீர்கள்: 🔹ருகூவிற்கு செல்லும் போது தக்பீர், 🔹சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர், 🔹முதல் சுஜூதிலிருந்து எழும்போது சொல்லும் தக்பீர், 🔹இரண்டாவது சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர், 🔹சுஜூது முடித்து நிலைக்கு வரும்போது சொல்லும் தக்பீர்,
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – என்று சொல்வது.
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – விற்கு பிறகு சொல்லும் துஆ.
ருகூவில் ஓதும் துஆ.
சுஜூதில் ஓதும் துஆ.
இரண்டு சுஜூதுகளுக்கும் இடையில் ஓதும் துஆ.
முதலாவது அத்தஹியாத்தில் அமர்வது.
தஷ்ஷஹூத் (அத்தஹியாத் ஓதுவது).
🌷5 தக்பீர்களையும் ஒன்றாக கணக்கு எடுத்தால் 8வாஜிபுகளும்.🌷
🌷5 தக்பீர்களையும் தனித்தனியாக கணக்கு எடுத்தால் 12வாஜிபுகளும் உள்ளன… 🌷🌷🌷
தொழுகையின் ஃபர்ளு(ருக்குன்) விடுபட்டால் அதை மீண்டும் செய்தே ஆக வேண்டும்; ஆனால் வாஜிப் விடுபட்டால் சஜ்தா சஹூ செய்தால் போதுமானது.
வாஜிப் :
غير تكبيرة الاحرام – தொழுகையில் ஆரம்ப தக்பீர்(تكبيرة الاحرام) தவிர மற்ற அனைத்து தக்பீர்களும் வாஜிப் ஆகும். ருக்கூவில் இருந்து எழும் போது இமாம் سَمِـعَ اللَّهُ لِمَـنْ حَمِـدَه; சொல்வது. ருக்கூவில் سبحان رب العظيم; சொல்வது. ருகூவில் ஓத கூடிய திக்ருகள்.
🔸سبحان رب العظيم
(முஸ்னத் இமாம் அஹ்மத், அபு தாவூத், இப்னு மாஜா)
நபி(ஸல்) سبحان ربي العظيم وبحمده ; என்றும் ஓதி இருக்கின்றார்கள். (சுனன் அபு தாவூத், சுனன் தார குத்னி, முஸ்னத் இமாம் அஹ்மத், தப்ரானி, பைஹகி)
🔸سبوح قدوس رب الملائکه والروح
(சஹீஹ் முஸ்லீம்)
🔸 سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي
(புஹாரி, முஸ்லிம்)
இது அல்லாது வேறு துஆக்களும் உள்ளன; நாம் இந்த துஆக்களை மட்டும் தற்போது அறிந்து கொள்வோம்.
🌼 நபி (ஸல்) – உங்களிலொருவரது தொழுகையில் முழுமையாக அமரும் வரை சுஜூதிலிருந்து எழுந்து அமர வேண்டும்.
(ஸுனன் அபூதாவூத், முஸ்தத்ரக் ஹாக்கிம் )
🌼 நபி (ஸல்) – தக்பீர் சொல்லி விட்டு 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர வேண்டும் (புஹாரி, முஸ்லீம்)
🌼 ஆகவே 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர்வது கடமையாகும்.
எப்படி அமர வேண்டும்:
🌼 அமைதியான முறையில் அவர் தனது இடது காலுக்கு மேல் அமர வேண்டும். வலது காலை நட்டு வைத்ததாக இருக்க வேண்டும் அதன் விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்க வேண்டும்.
🌼 நபி (ஸல்) – நீங்கள் சுஜூதிலிருந்து எழுந்தால் உங்களது இடது தொடையின் மீது அமருங்கள் (அஹ்மத், அபூ தாவூத்)
🌼 நபி (ஸல்) அவர்கள் தனது வலது கால் பாதத்தை நட்டு வைத்தவர்களாக அமருவார்கள்(புஹாரி, பைஹகீ)
🌼 நபி (ஸல்) அவர்களது விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கும்.
இரண்டு சுஜூதுகளுக்கு மத்தியில் அமருதல்
🌼 நபி (ஸல்) அவர்கள் சுஜூதிலிருந்து எழுந்து வலது காலின் மீது அமர்ந்து இடது காலை நட்டு வைத்திருப்பார்கள். வலது காலின் விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கும்(ஸுனன் நஸயீ)
🌼 அத்தஹிய்யாத்தில் அமருதல் மேலும் தஷாஹ்ஹுத் ஓதுதல்
நபி (ஸல்) – இறுதி ஸுஜுதிலிருந்து உங்கள் தலையை உயர்த்தி பின் தஷாஹ்ஹுத் ஓதுவதற்காக அத்தஹிய்யாத்தில் நீங்கள் அமர்ந்தால் உங்களுடைய தொழுகை நிறைவேறி விடும்.
ابنِ مسْعودٍ رضي الله عنه قال: كُنَّا إِذا كُنّا مَعَ النَّبِيِّ صلَّى اللهُ عَلَيْهِ وسَلَّمَ في الصَّلاةِ قُلْنا: السَّلامُ عَلى اللهِ مِنْ
قولُهُ: (السَّلامُ على فُلانٍ وفلانٍ) أيْ: جبريلَ وميكائيلَ.
இப்னு மசூத் (ரலி) – தஷாஹ்ஹுத் கடமையாக்கப்படுவதற்கு முன்னர் நாங்கள் السَّلامُ عَلى اللهِ مِنْ عِبادِه، السَّلام على فُلانٍ وفلانٍ என்று செல்பவர்களாக இருந்தோம் அப்போது நபி (ஸல்) அவ்வாறு சொல்ல வேண்டாம் ஏனெனில் அல்லாஹ் ஸலாம் ஆக இருக்கிறான் அவன் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று நீங்க கூற வேண்டாம் என எங்களை தடுத்தார்கள். பிறகு அத்தஹிய்யாத்தை கற்றுத்தந்தார்கள்.
(ஸுனன் அபீதாவுத், ஹாகிம்)
🌼 தஷாஹ்ஹுத் பல விதமான அறிவிப்புகளில் இடம்பெற்றிருப்பினும் மிகவும் ஆதாரபூர்வமானதாக இப்னு மசூத் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறுகிறது.
تشهد ابن مسعود رضي الله عنه : ( التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
வானத்திலும் பூமியிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் இருக்கக்கூடிய அனைத்து நல்லடியார்களுக்கும் இந்த துஆ சென்றடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
🌼 இதற்கு அடுத்த தரத்தில் உள்ள ஹதீஸாக
رواية ابن عباس رضي اللّه عنهما:
عن رسول اللّه صلى اللّه عليه وسلم: ”التَّحِيَّاتُ المُبارَكاتُ الصَّلَواتُ الطَّيِّباتُ لِلَّهِ، السَّلامُ عَلَيْكَ أيُّهَا النَّبيُّ وَرَحْمَةُ
اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلامُ عَلَيْنا وعلى عِبادِ اللّه الصَّالِحينَ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ اللَّهُ، وَأشْهَدُ أنَّ مُحَمَّداً رَسُولُ اللَّهِ” رواه مسلم في صحيحه
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுத்தருவது போல தஷாஹ்ஹுதை கற்றுத்தந்தார்கள்.(முஸ்லீம், அபூதாவூத், நஸயீ)
தொழுகை முறைப்படி செய்ய வேண்டும்
இறுதியாக ஸலாம் சொல்லுவது
{مفتاح الصلاة الطهور ، وتحريمها التكبير ، وتحليلها التسليم
அலி (ரலி) – நபி (ஸல்) – தொழுகையின் சாவி சுத்தமாகும், அதன் ஆரம்பம் தக்பீரும் அதன் முடிவு ஸலாமும் ஆகும் (அபூதாவூத், திர்மிதி)
🌼 ஆமிர் இப்னு சஹத் (ரலி) தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள் – நாங்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஸலாம் சொல்லும்போது அவர்களது வலது கன்னத்தின் வெண்மையை நாங்கள் பார்ப்போம் (அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா, திர்மிதி)
🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது வயிறும் தொடைப்பகுதியும் இணையாமல் இடைவெளி விடுவார்கள்
🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது முழங்கையை நிலத்தில் படாமல் வைத்துக்கொள்வார்கள்.தனது இரண்டு விலாப்பகுதியிலுருந்து கைகளை தூரமாக்கி கொள்வார்கள். பின்பக்கத்திலிருந்து பார்ப்பர்வர்களுக்கு அவர்களது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்கு கைகளை தூரமாகி வைத்திருப்பார்கள்(புஹாரி, முஸ்லீம்)
🌼 ஒரு சிறிய ஆட்டுக்குட்டி செல்லும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் கைகளை விரித்து வைத்திருப்பார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)
🌼 நபி (ஸல்) – நீங்கள் ஸுஜூது செய்தால் உங்களுடைய முட்டுக்கய்யய் உயர்த்தி வையுங்கள்(முஸ்லீம்)
🌼 நபி (ஸல்) – நீங்கள் ஸுஜூது செய்யும்போது நடுநிலையுடன் செய்யுங்கள். உங்களிலொருவர் தங்களுடைய கையை நாய் வைத்திருப்பது போல வைக்க வேண்டாம்(புஹாரி, முஸ்லீம்)
🌼 நபி (ஸல்) – உங்களுடைய கைகளை சுஜூதில் மிருகங்கள் வைப்பது போல வைத்துக்கொள்ள வேண்டாம்.
கருத்துரைகள் (Comments)