ஃபிக்ஹ்
தொழுகையின் ஃபர்ளுகள்
பாகம் – 8
وكان يعتمد على كفيه ويبسطهما ويضم أصابعهما، ويوجهها قبل القبلة،
🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்யும்போது தனது இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து அழுத்தமாக ஊன்றி வைப்பார்கள், (அவர்கள் விரல்கள் இணைந்திருக்கும் உள்ளங்கை விரிந்திருக்கும்), அந்த விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கும்.
(இப்னு ஹுஸைமா, அபூ தாவூத், பைஹகீ)
كان يجعلهما حذو منكبيه
🌼 நபி (ஸல்) – தனது இரண்டு தோள்புஜத்திற்கு நேராக உள்ளங்கைகளை தரையில் வைப்பார்கள்.(ஸுனன் அபூ தாவூத்)
🌼 அல்லது காதுக்கு நேராக உள்ளங்கைகளை தரையில் வைப்பார்கள்.(அபூதாவூத், நஸயீ)
🌼 நபி (ஸல்) அவர்கள் சுஜூதில் தனது மூக்கையும் நெற்றியையும் அழுத்தமாக வைப்பார்கள்.(அபூதாவூத், திர்மிதி)
إذا سجدت؛ فمكّن لسجودك
🌼 நபி (ஸல்) – நீங்கள் ஸஜ்தா செய்தால் சுஜூதிற்காக அழுத்துங்கள்.(அபூதாவூத்)
🌼 நபி (ஸல்) -நீங்கள் ஸுஜூது செய்தால் உங்கள் முகத்தையும் இரண்டு கைகளையும் அழுத்தி வைத்து ஒவ்வொரு எலும்புகளும் அதன் இடத்தில இருக்கும் வரை அமைதியாக இருந்து கொள்ளுங்கள் (இப்னு ஹுஸைமா)
🌼 நபி (ஸல்) – தனது இரண்டு முட்டுக்கால்களையும் கால் விரல்களையும் அழுத்தி வைப்பார்கள்(முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பைஹகீ)
🌼 நபி (ஸல்) – சுஜூதில் தனது கால் பாதத்தையும் கால் விரல் நுனிகளையும் கிப்லாவை முன்னோக்கியதாக வைப்பார்கள்.(புஹாரி, அபீ தாவூத்)
🌼 நபி (ஸல்) – தனது இரண்டு குதிகால்களையும் இணைத்து வைப்பார்கள் (இப்னு ஹுஸைமா,முஸ்தத்ரக் ஹாக்கிம்)
கருத்துரைகள் (Comments)