ஃபிக்ஹ்
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
பாகம் – 6
சிறந்த பள்ளிகள்
🌰 ஜாபிர் (ரலி) – மக்கா பள்ளியில் தொழக்கூடிய ஒரு தொழுகை ஒரு லட்சம் தொழுகைகளுக்கு சமமானது, மஸ்ஜிதுன் நபவியில் தொழக்கூடிய தொழுகை 1000 தொழுகைகளுக்கு சமமானது பைத்துல் முகத்தஸில் தொழக்கூடிய தொழுகை 500 தொழுகைகளுக்கு சமமானது.
(பைஹகீ, இமாம் சுயூத்தி – ஹஸன்)
🌰 நபி (ஸல்) – என்னுடைய பள்ளியில்(மஸ்ஜிதுன் நபவி) தொழக்கூடிய தொழுகை மற்ற பள்ளிகளில் தொழும் தொழுகையை விட 1000 மடங்கு சிறந்தது மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதை தவிர. மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் தொழுகை என்னுடைய பள்ளியில் தொழுவதை விட ஒரு லட்சம் மடங்கு அதிகமானது. (அஹ்மத்)
أبو هريرة – رضي الله عنه – عن النبي – صلى الله عليه وسلم – قال: (لا تُشَدُّ الرِّحالُ إلا إلى ثلاثةِ مساجدَ:
المسجدِ الحَرامِ، ومسجدِ الرسولِ صلَّى اللهُ عليه وسلَّم، ومسجدِ الأقصى
🌰 நபி (ஸல்) நீண்ட பிரயாணம் மேற்கொண்டு நீங்கள் செல்லக்கூடிய பள்ளிவாசல்கள் 3 தான். மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளி(மஸ்ஜிதுன் நபவி), மேலும் மஸ்ஜிதுல் அக்ஸா
கருத்துரைகள் (Comments)