Oct 29
ஜமாஅத் தொழுகை 16
ஜமாஅத் தொழுகை
பாகம்-16
خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبًا فِي الصَّلاةِ ، وَمَا مِنْ خُطْوَةٍ أَعْظَمُ أَجْرًا مِنْ خُطْوَةٍ مَشَاهَا رَجُلٌ إِلَى فُرْجَةٍ فِي صَلاةٍ فَسَدَّهَا ” .
❣ இப்னு உமர் (ரலி) ஒரு மனிதன் எடுத்து வைக்கக்கூடிய அடிகளில்; இறைவனிடம் சிறந்த அடி முன்வரிசையில் இருக்கும் ஒரு இடத்தை அடைப்பதற்காக செல்லும் அடியே ஆகும். (முஸ்னத் பஸ்ஸார்)
❣ நபி (ஸல்) – யார் ஒரு சஃப்பில் உள்ள இடைவெளியை சேர்ப்பதற்காக செல்லுகிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக்கொள்வானாக. யார் ஒரு சஃப் ஐ துண்டிக்கிறாரோ, அவரை அல்லாஹ்வும் துண்டித்துவிடுவானாக
(ஸுனன் நசயீ)
❣ ஜாபிர் இப்னு சமுரா (ரலி) -நபி (ஸல்) – ஒரு முறை எங்களிடம் வந்தார்கள். “மலக்குமார்கள் அல்லாஹ்விடத்தில் சஃப்-ஆக நிற்பது போன்று நீங்கள் நிற்கக்கூடாதா?” என்று கேட்டார்கள். நாங்கள் கேட்டோம், “யா ரஸூலுல்லாஹ், அல்லாஹ்விடத்திலே மலக்குமார்கள் எப்படி சஃப்-ஆக நிற்கிறார்கள்?” முதல் வரிசையை முழுமைப்படுத்துவார்கள். பிறகு அதை நெருக்குவார்கள்.
(புஹாரி)
Oct 29
ஜமாஅத் தொழுகை 15
ஜமாஅத் தொழுகை
பாகம்-15
كان رسول الله صلى الله عليه وسلم يسوينا في الصفوف كما يقوم القدح حتى إذا ظن أن قد أخذنا عنه ذلك
وفقهنا أقبل ذات يوم بوجهه إذا رجل منتبذ بصدره فقال : لتسون صفوفكم أو ليخالفن الله بين وجوهكم
❣ நுஃமான் இப்னு பஷீர் (ரலி)- நபி(ஸல்)அம்பை கூர்மைப்படுத்துவது போன்று எங்கள் சஃப்-களை நேர்மைப்படுத்துவார்கள். வரிசைகள் நேராகிவிட்டது என்று விளங்கிக்கொண்டால் நபி (ஸல்) தொழுகையை ஆரம்பிப்பார்கள். ஒருமுறை ஒருவர் மற்றவர்களின் நெஞ்சைவிட தன் நெஞ்சை முன்னால் வரும்படி வரிசையில் நின்றுகொண்டிருந்தார் அப்போது (ஸல்) அவர்கள் கோபப்பட்டு ” உங்களுடைய சஃப்-களை நீங்கள் நேர்மையாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் முரண்பட்ட கருத்துகள் உருவாக்கிவிடுவான். உங்கள் சஃப்-களில் நீங்கள் முரண்படுவது உங்கள் வாழ்க்கையிலே அது பிரதிபளிக்கிறது. “
(ஸுனன், முஸ்னத் அஹ்மத்)
❣ அபு உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய சகோதரர்களிடம் மிருதுவாக நடந்துகொள்ளுங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் இடைவெளி விடாதீர்கள் (அஹ்மத், தபராணீ )
❣ நபி (ஸல்) முதல் வரிசையை முழுமைப்படுத்துங்கள் பிறகு அடுத்தடுத்த வரிசைகளை முழுமை படுத்துங்கள்(பைஹகீ)
Oct 29
ஜமாஅத் தொழுகை 14
ஜமாஅத் தொழுகை
பாகம்-14
தொழுகையின் வரிசையில் நிற்கும் முறை :
- இமாமிற்கு பின்னாலிருந்து ஆரம்பிக்க வேண்டும்
- ஒரு வரிசை முழுமையடையாமல் அடுத்த வரிசைக்கு செல்லக்கூடாது
سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاةِ
❣ அனஸ் (ரலி) – நபி(ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லுவதற்கு முன் தொழுகையின் வரிசைகளை திரும்பி பார்ப்பார்கள்.பிறகு “நெருக்கமாக நில்லுங்கள், நீளமாக நில்லுங்கள் தொழுகையை முழுமையாக்கும் காரியங்களில் இதுவும் ஒன்று ” என்று கூறுவார்கள்.
(புஹாரி, முஸ்லிம்)
عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم فإني أراكم من وراء ظهري وكان أحدنا
يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه
❣ அனஸ் (ரலி)-நாங்கள் தொழுகையில் எங்கள் தோள் புஜங்களையும் கால் பாதங்களையும் வலதும்; இடதும் பக்கம் இருப்பவருடன் ஒட்டி நிற்போம்.(புஹாரி)
Oct 29
ஜமாஅத் தொழுகை 13
ஜமாஅத் தொழுகை
பாகம்-13
இமாமுக்கு தொழுகையை விடக்கூடிய நிலை ஏற்பட்டால்
❣ அவ்வாறான சூழல்களில் இமாம் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய தொழுகையை தொடர வேண்டும்.
❣ அம்ரு இப்னு மைமூன் (ரலி) – உமர் (ரலி) சுபுஹ் தொழுகையை தொழுவித்து கொண்டு இருக்கும் போது அபூலூலு அல் மஜூசி என்ற நெருப்பு வணங்கி இரண்டு முனைகளும் கூராக உள்ள கத்தி யைக் கொண்டு உமர் (ரலி) அவர்களை குத்தி கொன்றான்.அப்போது எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தான் இருந்தார்கள். அப்போது உமர் (ரலி) கோபத்திலே “என்னை ஒருவன் கொன்றுவிட்டான்” அல்லது, “என்னை ஒரு நாய் கடித்துவிட்டது” என்று கூறி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)கையை பிடித்து இமாமாக்கி தொழுகை நடத்த வைத்தார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து நமக்கு தெரியவேண்டிய சட்டம் :
❣ ஒரு இமாமிற்கு தொழுகையை முழுமைப்படுத்த முடியாத நிலையிலே, பின்னால் இருப்பவர்கள் முன்னால் சென்று அந்த தொழுகையை முழுமைப்படுத்த வேண்டும்.
لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى
❣ நபி (ஸல்) – எனக்குபிறகு அறிவுள்ளவர்கள் நிற்கட்டும்.
❣ இமாமிற்கு தொழுகையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதை அவர்களுக்கு பின்னாலிருப்பவர்கள் இமாம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அந்த தொழுகையை நிறைவேற்றலாம்
கருத்துரைகள் (Comments)