إذا جئتم إلى الصلاة ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئاً ومن أدرك الركعة فقد أدرك الصلاة
❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் தொழுகைக்கு வரும் நேரத்தில் நாங்கள் ஸூஜூதில் இருந்தால் நீங்களும் ஸூஜூது செய்யுங்கள் அந்த ரகாஅத்தை நீங்கள் கணக்கெடுக்க வேண்டாம். யார் ரகாஅத்தை(ருகூஹ்) அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.
عن ابن عباس رضي الله عنه قال : (بت عند خالتي ميمونة فقام النبي صلى الله عليه وسلم يصلي من الليل فقمت
أصلي معه فقمت عن يساره فأخذ برأسي وأقامني عن يمينه
❣ அனஸ் (ரலி) – நான் என்னுடையதாயின் சகோதரி மைமுனா (ரலி) அவர்களுடைய வீட்டில் ஒரு இரவு தங்கினேன். நபி (ஸல்) அவர்கள் இரவு தொழுகை தொழுவதற்காக எழுந்தாரகள். நானும் அவர்களுடன் எழுந்து தொழ வந்தேன். நபி அவர்களுடைய இடது பக்கத்தில் நின்றபோது அவர்கள் என் தலையை பிடித்து, (இன்னொரு ரிவாயத்தில் காதை பிடித்து என்று வருகிறது) அவர்களுடைய வலது பக்கம் என்னை நிறுத்தினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் இருவர் மட்டுமே இருந்தாலும் ஜமாஅத்தாக தொழலாம் என்று விளங்கிக்கொள்ளலாம்.
❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காக எழுந்தபோது நான் அவர்களுடைய இடது பக்கம் நின்றேன். எனது கையை பிடித்து அவர்களுடைய வலது பக்கமாக நிற்க வைத்தார்கள். பிறகு ஜாபிர் இப்னு ஸஹர் (ரலி) அவர் வந்தார் நபி(ஸல்) அவர்களுடைய இடது பக்கம் நின்றார்கள். அப்போது நபி (ஸல்) எங்கள் இருவரின் கையையும் பிடித்து எங்களை பின்னால் நிலைநிறுத்திவிட்டார்கள். (ஸஹிஹ் முஸ்லிம், சுனன் அபுதாவுத்)
❣ இன்னும் ஒரு அறிவிப்பில், முஸ்னத் இமாம் அஹ்மத், சுனான் அபுதாவூத், “இமாம் ஆக்கப்பட்டதெல்லாம் அவரை பின்தொடரப்பட வேண்டும் என்பதற்கு தான்.
[ ] அவர் தக்பீர் சொல்லும் வரை நீங்கள் தக்பீர் சொல்ல வேண்டாம்.
[ ] அவர் ருகூஹ் செய்யும் வரை நீங்கள் ருக்கூ செய்யாதீர்கள்.
[ ] அவர் சுஜூத் செய்யும் வரை நீங்கள் சுஜூத் செய்ய வேண்டாம்.
❣ அபு ஹுரைரா (ரலி) – உங்களில் ஒருவர் இமாமுக்கு முன்னால் தன் தலையை உயர்த்தினால், அவரின் தலையை கழுதையின் தலைபோன்று அல்லது அவருடைய ரூபத்தை கழுதையின் ரூபம்போன்று அல்லாஹ் மாற்றுவதை உங்களில் ஒருவர் பயப்பட கூடாதா?(புகாரி, முஸ்லிம்) ❣ நபி (ஸல்) – மனிதர்களே நான் உங்களுடைய இமாம். ருகூஹ்வை கொண்டோ, சுஜூதை கொண்டோ, கியாமை கொண்டோ, உட்காருவதை கொண்டோ, திரும்புதலை கொண்டோ, எதை கொண்டும் என்னை நீங்கள் முந்தாதீர்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
كنا نُصلي خلف النبي صلى الله عليه وسلم فإذا قال : سمع الله لمن حمده ، لم يَحْنِ أحدٌ مِـنّـا ظهره حتى يضع
النبي صلى الله عليه وسلم جبهته على الأرض
❣ பரா இப்னு ஆஸிப் (ரலி) – நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழக்கூடியவர்களாக இருந்தோம். அவர்கள் ஸமியல்லாஹு லிமன் ஹமிதா என்று சொன்னால், எங்களில் ஒருவர் நபி ஸல் தரையிலே தன்னுடைய நெற்றியை வைக்கும் வரை தனது முதுகை வளைக்க மாட்டார், (புஹாரி)
❣ அபூஹுரைரா (ரலி) – இமாம் ஆக்கப்பட்டதெல்லாம் அவரை பின்தொடரப்படவேண்டும் என்பதற்காகத்தான்.அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள் அவர் ருகூஹ் செய்தால் நீங்களும் ருகூஹ் செய்யுங்கள் அவர் سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ என்று சொன்னால் رَبَّنَا وَلَكَ الْحَمْدُ என்று சொல்லுங்கள் அவர் ஸுஜூது செய்தால் நீங்களும் ஸுஜூது செய்யுங்கள் (புஹாரி, முஸ்லீம்)
❣ அபூகத்தாதா (ரலி) -நபி (ஸல்) முதல் ரக்கா அத்தை நீட்டி தொழுவார்கள் அப்போது நாங்கள் மக்கள் முதல் ரகாத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து கொள்வோம். ❣அபூஸயீது (ரலி) – தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் பிறகு எங்களில் ஒருவர் மக்பரா இருக்கும் இடத்திற்கு சென்று இயற்கை தேவைகளை முடித்து விட்டு உளூ செய்துவிட்டு வருவார் அப்போதும் நபி (ஸல்) முதல் ரகாஅத்தில் தான் தொழவைத்துக் கொண்டிருப்பார்கள். (அஹ்மத், ஸஹீஹ் முஸ்லீம்)
❣அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) – உங்களிலொருவர் மக்களுக்கு தொழ வைக்க நேர்ந்தால் சுருக்கமாக தொழுது கொள்ளட்டும் உங்களுடன் தொழுபவர்களில் பலஹீனமானவர்கள் நோயாளிகள் முதியவர்கள் போன்றவர்கள் இருப்பார்கள். (புஹாரி, முஸ்லீம்)
❣ முஆத் (ரலி) – நபி (ஸல்) உடன் தொழுதுவிட்டு தன்னுடைய ஊர் ஜமாஅத்தில் தொழ வைப்பார்கள். அப்போது நீளமாக தொழவைத்தபோது பின்னால் தொழுதவர் தனியாக தொழுது முடித்தார். அப்போது நபி (ஸல்) விடம் அழைத்து வரப்பட்டு காரணம் கேட்டபோது விவசாயம் செய்து களைப்பில் இருக்கும்போது இவர் நீளமாக தொழுது சிரமத்தை ஏற்படுத்தினார் என்று அவர் கூறியதும் நபி (ஸல்) முஆத் (ரலி) இடம் சுருக்கமாக தொழுமாறு உபதேசம் செய்தார்கள்.
❣ அனஸ் (ரலி) – நான் தொழுகையை ஆரம்பிக்கிறேன் நீளமாக தொழ நினைக்கிறேன் குழந்தையுடைய அழுகை சத்தத்தை கேட்கிறேன் அந்த அழுகையின் மூலம் அதன் தாயின் மனம் வேதனைப்படும் என நினைத்து சுருக்கமாக தொழுகிறேன்
❣ அபூ கதாதா (ரலி) – ஒரு முறை நபி (ஸல்) தொழுதுகொண்டிருக்கும்போது மக்கள் தொழுகைக்காக ஓடி வரும் சத்தம் கேட்டு ஏன் ஓடி வந்தீர்கள் என்று கேட்டபோது தொழுகை அடைய வேண்டுமென்றே ஓடி வந்தோம் என பதில் கூறப்பட்டபோது நபி (ஸல்) தொழுகைக்காக வரும்போது அமைதியாக வாருங்கள் உங்களுக்கு எத்தனை தொழுகையிலிருந்து கிடைக்கிறதோ அதை அடைந்து கொள்ளுங்கள். எது விடுபட்டதோ அதை முழுமைப்படுத்துங்கள். (புஹாரி, முஸ்லீம்)
பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று திரும்பும் சூழல் இருக்க வேண்டும்.
சரியான இஸ்லாமிய ஆடை அணிந்திருக்க வேண்டும்.
(அலங்கரித்து வாசனை திரவியம் பூசியவளாக இருக்க கூடாது)
عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال :
{ إذا استأذنكم نساؤكم بالليل إلى المسجد فأذنوا لهن }
⚜ அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் பெண்களை பள்ளிக்கு செல்வதிலிருந்து தடுக்க வேண்டாம்
ஆனால் அவர்களுடைய வீடே அவர்களுக்கு சிறந்ததாகும்.(அஹ்மத், அபூ தாவூத்)
وعن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال :
{ لا تمنعوا إماء الله مساجد الله ، وليخرجن تفلات}
⚜ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை நீங்கள் பள்ளிகளுக்கு செல்வதிலிருந்து தடுக்காதீர்கள். அவர்கள் செல்லும்போது மணம் பூசாமல் செல்லட்டும் (அஹ்மத், அபூ தாவூத்)
குறிப்பாக இஷா தொழுகைக்கு பெண்கள் வருவதாயின் ஒரு வேலை மணம் பூசியிருந்தால் கடமையான குளிப்பு குளிப்பதை போல குளித்துவிட்டு வரட்டும் (அஹ்மத், அபூ தாவூத்)
فعَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-:
⚜ அபூஹுரைரா (ரலி) – நறுமணம் பூசிய பெண்கள் இஷா தொழுகைக்கு ஜமாத்துக்கு வர வேண்டாம் (முஸ்லீம், அபூதாவூத், நஸயீ)
⚜ இதிலிருந்து பெண்களுக்கு பள்ளிக்கு செல்வதில் அனுமதி இருக்கிறது ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளில் தொழுவதே சிறந்ததாகும்.
⚜ உம்மு ஹுமைத் அஸ் ஸாஹிதிய்யா (ரலி) – நபி (ஸல்) விடம் வந்து நான் உங்களுடன் தொழ விரும்புகிறேன் என்று கூறியபோது. நபி (ஸல்) உங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் தொழுவதை விட உங்கள் வீட்டில் நீங்கள் தொழுவதே சிறந்ததாகும். உங்கள் வீட்டின் உள் அறையில் தொழுவதே அதை விட சிறந்ததாகும்.
❣அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவர் 5 நேர தொழுகைகளையும் அதற்கான அழைப்பு கொடுக்கப்படும்போதே அதை பாதுகாத்துக்கொள்ளட்டும் ஏனெனில் அல்லாஹ் தனது மார்க்கமாக்கிய ஒரு நேர்வழியாகும் ஆகவே உரிய நேரத்தில் தொழுவது நேர்வாழிகளில் ஒன்று. ஜமாத்தை விட்டு வீடுகளில் தொழுபவரைப்போன்று நீங்களும் ஆகினால் சுன்னாவை விட்டுவிட்டவர்களாகி விடுவீர்கள். எங்களில் தெளிவான நயவஞ்சகரென்று தெரிந்தவரை தவிர ஜமாத்துக்கு வராமலிருக்க மாட்டார்கள். நடக்க முடியாதவர் இரண்டு பேருடைய தோள்களில் கைகளை இட்டு தொழுகைக்கான வரிசையில் வந்து நிற்பார்கள்(ஸஹீஹ் முஸ்லீம்) மற்றொரு அறிவிப்பில் – நபி (ஸல்) எங்களுக்கு நேர்வழியை கற்றுக்கொடுத்தார்கள் அது எந்த பள்ளியில் பாங்கு சொல்லப்படுகிறதோ அந்த பள்ளியில் தொழுவது.
கருத்துரைகள் (Comments)