ஜமாஅத் தொழுகை
பாகம்-2
❣அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)விடம் கண் தெரியாத ஒருவர் வந்து என்னை பள்ளிக்கு அழைத்து வர யாருமில்லை ஆகவே வீட்டில் தொழுதுகொள்ளவா?-நபி (ஸல்) அனுமதியளித்துவிட்டு பிறகு தொழுகைக்கான அழைப்பு உங்களுக்கு கேட்கிறதா என்று நபி (ஸல்) கேட்டார்கள்.ஆம் கேட்கும் என பதிலளித்தபோது அவ்வாறாயின் அந்த பாங்கிற்கு நீங்கள் பதிலளித்து தான் ஆக வேண்டும்(பள்ளிக்கு வந்து தான் ஆக வேண்டும்) என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லீம்)
❣ சில நேரத்தில் என்னை அழைத்து வரக்கூடியவர் வர மாட்டார்கள் மதீனாவின் பாதைகளில் விஷ ஜந்துக்கள் இருக்கிறதே ஆதலால் நான் வீட்டில் தொழலாமா என்று கேட்டபோது நபி (ஸல்) அனுமதியளித்து விட்டு பிறகு சென்ற அந்த மனிதரை மீண்டும் அழைத்து வரச்சொல்லி பாங்கின் சத்தம் கேட்கிறதா என்று கேட்டு ஆம் என்று சொன்னதும் அப்படியாயின் பள்ளிக்கு வந்து தான் ஆக வேண்டும் (முஸ்லீம்).
❣நபி (ஸல்) – எனது உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக மக்களிடத்தில் விறகுகளை கொண்டுவரச்சொல்லி பிறகு பள்ளியில் ஒருவரை இமாமாக நிறுத்தி பிறகு யாரெல்லாம் பள்ளிக்கு வராயாமலிருக்கிறார்களோ அவர்களுடைய வீடுகளுக்கு சென்று அந்த விறகுகளைக்கொண்டு அந்த வீடுகளை எரித்துவிட முடிவெடுத்தேன் (புஹாரி).
வேறொரு அறிவிப்பில்: பிறகு அந்த முடிவை மாற்றி விட்டேன் ஏனெனில் அந்த வீடுகளில் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் இருப்பார்கள் என்பதால்.
கருத்துரைகள் (Comments)