சஜ்தா திலாவத் 01

  ஃபிக்ஹ்

சஜ்தா திலாவத்

பாகம் – 1

  1. ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)7:206
  2. ஸூரத்துத் ரஃது (இடி)13:15
  3. ஸூரத்துந் நஹ்ல் (தேனி)16:50
  4. பனீ இஸ்ராயீல்(இஸ்ராயீலின் சந்ததிகள்)17:109
  5. ஸூரத்து மர்யம்19:58
  6. ஸூரத்துல் ஹஜ்22:18
  7. ஸூரத்துல் ஹஜ்22:77
  8. ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)25:60
  9. ஸூரத்து நம்ல் (எறும்புகள்)27:26
  10. ஸூரத்துஸ் ஸஜ்தா32:15
  11. ஸூரத்து ஸாத்38:24 
  12. ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா41:38

🌷 இந்த வசனங்களை நாம் ஓதினாலோ அல்லது பிறர் ஓத கேட்டாலோ நாம் ஸஜ்தா செய்வது சுன்னாத்தாகும் 

🌷 சில அறிஞர்களிடம் இந்த ஆயத்திற்கு ஸஜ்தா செய்ய வேண்டுமா இல்லையா  என்று கருத்து முரண்பாடு இருக்கிறது.

  1. ஸூரத்துல் ஹஜ்22:77
  2. ஸூரத்து ஸாத்38:24 
  3. ஸூரத்துந் நஜ்ம் (நட்சத்திரம்)53:62 
  4. ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)84:21 
  5. ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)96:19  

 

சஜ்தா சஹ்வு பாகம் 08

ஃபிக்ஹ் 

சஜ்தா சஹ்வு

பாகம் – 8

إذا شك أحدكم في الثنتين والواحدة فليجعلها واحدة ، وإذا شك في الثنتين والثلاث فليجعلها

ثنتين وإذا شك في الثلاث والأربع فليجعلها ثلاثا ثم ليتم ما بقي من صلاته حتى تكون الوهم

في الزيادة ثم يسجد سجدتين وهو جالس قبل أن يسلم وأخرجه الحاكم في المستدرك ولفظه

فإن الزيادة خير من النقصان 

🌼 அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் தன்னுடைய தொழுகையில் அவர் ஒன்று தொழுதாரா அல்லது இரண்டு தொழுதாரா என்று சந்தேகம் வந்தால் அதை அவர் ஒன்றாக ஆக்கிக்கொள்ளட்டும், இரண்டு தொழுதாரா அல்லது மூன்று தொழுதாரா என்று அறியவில்லையென்றால் அதை இரண்டாக ஆக்கிக்கொள்ளட்டும், மூன்றா அல்லது நான்கா என்று அறியவில்லையென்றால் மூன்றை ஆக்கிக்கொள்ளட்டும் பிறகு தொழுகையை முடித்துக்கொண்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்களை செய்து கொள்ளட்டும்(அஹ்மத், இப்னு மாஜா, திர்மிதி, 

🌼 அபூசயீத் அல் குத்ரி (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் தன் தொழுகையில் தான் 3 தொழுதாரா அல்லது  4 தொழுதாரா என்று சந்தேகம் கொண்டால் தெளிவானதை எடுத்துக்கொள்ளட்டும் பிறகு ஸலாம் கொடுப்பதற்கு முன் சஜ்தா சஹ்வு செய்து கொள்ளட்டும். அவர் 5ஐ தொழுதால் ஸஜ்தாக்கள் மூலம் அதை இரட்டையாக்குகிறார் உண்மையில் 4 ஐ தொழுதிருந்தால் சஜ்தா சஹ்வு மூலம் ஷைத்தானுக்கு மூக்கு உடைக்கப்பட்டது 

 ஸஜ்தா சஹ்வு 

தொழுகையில் ரக்காத்துக்களை கூட்டினாலோ குறைத்தாலோ ஸலாம் கொடுத்ததற்கு பின்னால் சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும் 

🌼 அத்தஹிய்யாத்தை மறந்தாலோ சந்தேகம் கொண்டாலோ ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும் 

🌼 மேற்கூறப்பட்டவையில்லாத ஒரு நிலை வந்தால் ஸலாமிற்கு முன்னாலும் சஜ்தா சஹ்வு செய்யலாம் அல்லது ஸலாமிற்கு பின்னாலும் சஜ்தா சஹ்வு செய்யலாம்.

சஜ்தா சஹ்வு பாகம் 07

ஃபிக்ஹ் 

சஜ்தா சஹ்வு

பாகம் – 7

1 – நபி (ஸல்) சுருக்கமாக தொழுதபோது; விட்ட ரக்காத்துகளை மீண்டும் தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள் 

2 – நபி (ஸல்) அதிகமாக தொழுதபோதும் ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள் 

அத்தஹிய்யாத் விடுப்பட்டுவிட்டால் 

ابن بحينة: (أن النبي صلى اللَّه عليه وآله وسلم صلى فقام في الركعتين فسبحوا به فمضى

فلما فرغ من صلاته سجد سجدتين ثم سلم

↔ فقام في الركعتين

இரண்டு ரக்காத்துக்களில் எழுந்து விட்டார்கள் 

↔ فسبحوا به

(நபி ஸல்) வுக்கு தஸ்பீஹ் சொல்லி சுட்டிக்காட்டப்பட்டது  

↔ فمضى

(நபி ஸல் கவனிக்காமல்) போய் விட்டார்கள் 

فلما فرغ من صلاته

 தொழுகையை முடித்த போது 

↔ سجد سجدتين ثم سلم

இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பிறகு ஸலாம் கொடுத்தார்கள் 

إذا قام أحدكم من الركعتين، فلم يستتم قائما فليجلس، فإذا استتم قائما فلا يجلس، ويسجد

سجدتي السهو

↔ إذا قام أحدكم من الركعتين

உங்களிலொருவர் இரண்டு ரக்காத்தில்(அத்தஹிய்யாத்தில் உட்காராமல்) எழுந்தால் 

↔ فلم يستتم قائما فليجلس 

நிற்பது முழுமையடையவில்லையென்றால் அவர் உட்காரட்டும் 

↔  فإذا استتم قائما فلا يجلس

அவர்  முழுமையாக \நின்று விட்டால் உட்கார வேண்டாம் 

↔ ويسجد سجدتي السهو

அவர் சஜ்தா சஹ்வு வை செய்யட்டும்.

🌷 முகீரா (ரலி) – நபி (ஸல்) -உங்களிலொருவர் இரண்டு ரக்காத்திற்கு பிறகு அத்தஹிய்யாத்தில் உட்காராமல் எழுந்து முழுமையாக   எழும் முன் ஞாபகம் வந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும் முழுமையாக எழுந்து விட்டால் சஜ்தா சஹ்வு செய்துக்கொள்ளட்டும் ( அஹ்மத்,அபூதாவூத், இப்னு மாஜா )

சஜ்தா சஹ்வு பாகம் 06

ஃபிக்ஹ்

சஜ்தா சஹ்வு

பாகம் – 6

தொழுகையில் ஒன்றை அதிகப்படுத்தினால் 

அப்துல்லாஹிப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை 5 ரக்காத் தொழுதார்கள் – தொழுகை கூட்டப்பட்டுவிட்டதா?-அப்படியென்றால் என்ன ?-நீங்கள் 5 ரக்காத் தொழ வைத்துவிட்டீர்கள் – ஆகவே ஸலாம் கொடுத்ததற்கு பிறகு 2 ஸுஜூது செய்தார்கள்(புஹாரி, முஸ்லீம்).

ஆகவே குறைத்து தொழுதபோதும் கூட்டித்தொழுதபோதும் ஸலாம் கொடுத்ததற்கு பின்னரே நபி (ஸல்) 2 சஜ்தா செய்துள்ளார்கள்.

இலக்கணம் சம்மந்தமான கேள்வி 

  1. وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى – ஏன் இங்கு யமீன் என்று வராமல் யும்னா என்று வந்துள்ளது ?
  2. ஐஸிர் என்று வராமல் ஏன் யுஸ்ரா என்று வந்துள்ளது ?
  3. وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرَ – இங்கு ஏன் உமர மன்சூப ஆகா வந்துள்ளது?

சஜ்தா சஹ்வு பாகம் 05

ஃபிக்ஹ்

சஜ்தா சஹ்வு

பாகம் – 5

எந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) ஸலாம் கொடுப்பதற்கு முன் செய்தார்கள் 

صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ ، قَالَ ابْنُ سِيرِينَ : سَمَّاهَا أَبُو

هُرَيْرَةَ ، وَلَكِنْ نَسِيتُ أَنَا ، قَالَ : فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي

الْمَسْجِدِ فَاتَّكَأَ عَلَيْهَا كَأَنَّه غَضْبَانُ ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ 

وَوَضَعَ خَدَّهُ الْأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى ، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ ، فَقَالُوا 

قَصُرَتِ الصَّلَاةُ وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ

يُقَالُ لَهُ ذُو الْيَدَيْنِ ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلَاةُ ؟ ، قَالَ : لَمْ أَنْسَ وَلَمْ

تُقْصَرْ ، فَقَالَ : أَكَمَا يَقُولُ ذُو الْيَدَيْنِ ، فَقَالُوا : نَعَمْ ، فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ ، ثُمَّ سَلَّمَ ، ثُمَّ كَبَّرَ

وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ، ثُمَّ

رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ

 

↔ صَلَّى بِنَا رَسُولُ الله صلى الله عليه وسلم إحْدَى صَلاتَيْ الْعَشِيِّ 

நபி (ஸல்) பகல் நேரத் தொழுகையை எங்களுடன் தொழுதார்கள்.

↔ قَالَ ابْنُ سِيرِينَ : وَسَمَّاهَا أَبُو هُرَيْرَةَ . وَلَكِنْ نَسِيتُ أَنَا

இப்னு ஸீரீன் (ரஹ்) கூறுகிறார் அபூஹுரைரா எனக்கு அதை அறிவித்தார் நான் அதை மறந்து விட்டேன்.

↔ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ 

(நபி ஸல்) 2 ரக்காத் தொழுதார்கள் 

↔ ثُمَّ سَلَّمَ

பிறகு ஸலாம் கொடுத்தார்கள் 

↔ فَقَامَ إلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ

பள்ளியில் நட்டுவைக்கப்பட்டிருக்கும் ஒரு மரக்குச்சியில் கையை ஊன்றி நின்றார்கள் 

↔ فَاتَّكَأَ عَلَيْهَا كَأَنَّهُ غَضْبَانُ

அவர்கள் கோபமாக இருப்பது போல இருந்தார்கள் 

↔ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى , وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ

நபி யவர்களின் வலது கையை இடது கையில் கோர்த்து இருந்தார்கள் 

↔ وَوَضَعَ خَدَّهُ الْأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى

கன்னத்தை புறங்கையில் வைத்தார்கள் 

وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ

பள்ளியின் வாயில் வழியாக வேகமாக சென்றார்கள்.

↔ فَقَالُوا

மக்கள் கூறினார்கள் 

قَصُرَتِ الصَّلَاةُ

தொழுகை சுருங்கிவிட்டதா 

وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ

அபூபக்கர் (ரழி) உமர் (ரழி)  பேச அஞ்சினார்கள்.

وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ يُقَالُ لَهُ ذُو الْيَدَيْنِ

அந்த கூட்டத்தில் ஒருவர் இருந்தார் அவரை இரண்டு கையுடையவர் என்று அழைப்பார்கள் 

↔ قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلَاةُ

யா ரசூலுல்லாஹ், நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது தொழுகை சுருங்கி விட்டதா?

قَالَ : لَمْ أَنْسَ وَلَمْ تُقْصَرْ

நபி (ஸல்) கூறினார்கள் நான் மறக்கவுமில்லை சுறுக்கப்படவுமில்லை. 

↔ فَقَالَ : أَكَمَا يَقُولُ ذُو الْيَدَيْنِ 

துல்யதைன் சொல்வது சரியா? என மக்களிடம் கேட்டார்கள் 

↔ فَقَالُوا : نَعَمْ 

அவர்கள்  ஆம் என்றார்கள் 

↔ فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ

நபி (ஸல்) முன்னால் சென்றார்கள் எதை விட்டார்களோ அதை தொழுதார்கள்.

↔ ثُمَّ سَلَّمَ

பிறகு ஸலாம் கொடுத்தார்கள் 

ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ

 பிறகு தக்பீர் சொன்னார்கள் மேலும் ஸுஜூது செய்தவர்கள் வழமையாக ஸுஜூது செய்யும் அளவிற்கு அல்லது அதை விட நீளமாக 

↔ ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ

பிறகு தலையை உயர்த்தி தக்பீர் சொன்னார்கள் 

↔ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ

வழமையான சுஜூதின் அளவுக்கோ அல்லது அதை விட நீளமாகவோ ஸுஜூது செய்தார்கள் 

↔ ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ

பிறகு தலையை உயர்த்தி தக்பீர் சொன்னார்கள் 

💕 இந்த ஹதீஸ் புஹாரி முஸ்லிமில் இடம் பெறுகிறது.

ஆகவே ஒரு மனிதர் குறைத்துதொழுதால்; தவற விட்ட ரக்காத்துகளை மட்டும் மீண்டும் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டு சஜ்தா சஹ்வு செய்யவேண்டும்.

சஜ்தா சஹ்வில் சொல்ல வேண்டிய துஆ

💕 வழக்கமாக சுஜூதில் ஓதும் துஆ தான் சஜ்தா சஹ்விலும் சொல்ல வேண்டும். இதற்கென்று பிரத்யேக துஆ இல்லையென்பதை புரிந்து கொள்வோம்.

சஜ்தா சஹ்வு பாகம் 04

ஃபிக்ஹ் 

சஜ்தா சஹ்வு

பாகம் – 4

💠 அபூசயீது அல் குத்ரி (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் அவருடைய தொழுகையில் சந்தேகம் கொண்டால் எத்தனை ரக்காத் தொழுதார் என்று தெரியாத நிலையில் 3 ஆ அல்லது 4 ஆ என்று சந்தேகம் வந்தால் அவர் சந்தேகப்பட்டதை வீசி விடட்டும் அவர் உறுதிகொண்டதின் மீது அமைத்துக்கொள்ளட்டும் ஸலாம் கொடுப்பதற்கு முன்னதாக அவர் 2 சஜ்தா செய்யட்டும் இவ்வாறு நாம் தொழுகையை நிறைவேற்றுவது ஷைத்தானை அடிப்பதற்கு சமம் (முஸ்லிம்)

💠 நபி (ஸல்) ஒருமுறை குறைவாக தொழுதபோது ஸஹாபி ஞாபகப்படுத்தியாதால் விடுபட்ட ரக்காத்துகளை  தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு அதன் பின்னர் சஜ்தா சஹ்வு செய்தார்கள் 

💠 சில நேரத்தில் நபி (ஸல்) ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் ஸுஜூது சஹு செய்திருக்கிறார்கள் சில நேரத்தில் ஸலாம் கொடுத்ததற்கு பிறகு ஸுஜூது சஹு செய்திருக்கிறார்கள். 

💠 நபி (ஸல்) விற்கு நடந்தது போன்று நமக்கும் தவறுகள் ஏற்பட்டால் நபி (ஸல்) ஸுஜூது செய்தது போலவே நாமும் செய்வோம்.

💠 நபி (ஸல்) விற்கு நடக்காத விதத்தில் நம் தொழுகையில் தவறுகள் ஏற்பட்டால் நமக்கு சரியாக பட்டது போன்று நாம் சஜ்தா சஹ்வு செய்துக்கொள்ளலாம். (இமாம் ஷாவ்க்காணி)(இதில் அறிஞர்களுக்கிடையில் பல கருத்துக்கள் உள்ளன)

إِذَا زَادَ الرَّجُلُ أَوْ نَقَصَ ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ 

إِذَا زَادَ الرَّجُلُ 

ஓரு மனிதர் அதிகப்படுத்தி விட்டால் 

أَوْ نَقَصَ

அல்லது குறைந்துவிட்டால் 

↔  فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ

அவர் இரண்டு ஸஜ்தாக்களை செய்யட்டும் 

💠 அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதர் தொழுகையில் கூட்டி தவறு செய்தாலும் அல்லது குறைத்து தவறு செய்தாலும் அவர் இரண்டு சஜ்தாக்களை செய்யட்டும் (முஸ்லீம்)

இலக்கணம் சம்மந்தமாக வந்த கேள்விக்கு விடை அரபி புக் 2 வில் படிக்க இருக்கிறோம் إِن شاء الله 

(Refer சஜ்தா சஹ்வு பாகம்-3)

சஜ்தா சஹ்வு பாகம் 03

ஃபிக்ஹ்

சஜ்தா சஹ்வு

பாகம் – 3

 ஸஜ்தா சஹ்வு:

⛰ இது இரண்டு சுஜூதுகளாகும் சில சந்தர்ப்பங்களில் ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் இதை செய்ய வேண்டும் சில சந்தர்ப்பங்களில் ஸலாம் கொடுத்ததற்கு பின்னால் இதை செய்ய வேண்டும்.

إذا شك أحدكم في صلاته فلم يدر كم صلى ثلاثا أم أربعا فليطرح الشك وليبن على ما استيقن ثم يسجد

سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعن له صلاته ، وإن كان صلى إتماما لأربع كانتا

ترغيما للشيطان 

  ↔ إذا شك أحدكم في صلاته

உங்களிலொருவர் தன் தொழுகையில் சந்தேகம் கொண்டால் 

فلم يدر كم صلى 

அவர் அறியவில்லை எத்தனை(ரக்காத்) தொழுதார் 

ثلاثا أم أربعا 

மூன்றா❓ அல்லது நான்கா❓ என்று 

فليطرح الشك

சந்தேகப்பட்டதை வீசிவிடட்டும் 

وليبن على ما استيقن

உறுதி கொண்டதின் மீது அமைத்துக்கொள்ளட்டும் 

ثم يسجد سجدتين

பிறகு இரண்டு சஜ்தாக்களை செய்யட்டும் 

قبل أن يسلم

ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் 

فإن كان صلى خمسا شفعن له صلاته

அவர் ஐந்தை தொழுதிருந்தால் சஜ்தா சஹ்வு செய்து இரட்டைப்படையாக்கிவிடும்  

وإن كان صلى إتماما لأربع

அவர் நான்கை முழுமையாக தொழுதிருந்தால் 

كانتا ترغيما للشيطان

ஷைத்தானுக்கு மூக்குடைப்பட்டது போன்று தான்.

சஜ்தா சஹ்வு பாகம் 02

ஃபிக்ஹ்

சஜ்தா சஹ்வு

பாகம் – 2

ஸூரத்துல் கஹ்ஃபு 18 : 110

(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”

நபி (ஸல்) – மர்யமின் மகன் ஈஸா (அலை) யை கிறிஸ்தவர்கள் உயர்த்தியது போன்று நீங்கள் என்னை உயர்த்தாதீர்கள் என்னை அல்லாஹ்வுடைய அடிமை என்றும் தூதர் என்றும் கூறுங்கள்.

ஸூரத்து அலம் நஷ்ரஹ் 94 : 4

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

ஸூரத்துல் கலம் 68 : 4

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.

إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني  

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – நான் ஒரு மனிதன் நீங்கள் மறப்பதைப்போல நானும் மறக்கிறேன் நான் மறந்துவிட்டால் எனக்கு நினைவூட்டுங்கள் (புஹாரி)

தொழுகையில் இமாம் தவறிழைத்தால் 

பின்னாலிருக்கும் ஆண்கள் سُبْحَانَ الله என்று கூற வேண்டும் பெண்கள் கை தட்ட வேண்டும்.

சஜ்தா சஹ்வு பாகம் 01

ஃபிக்ஹ்  

சஜ்தா சஹ்வு

பாகம் – 1

மறதிக்கான செய்யக்கூடிய சுஜூது

தொழுகையில் நாம் விடக்கூடிய தவறுகளுக்கு பரிகாரமாக செய்வது தான் ஸுஜூது சஹ்வு 

தொழுகையில் மறதியால் சில தவறுகள் செய்துவிட்டால். (செய்யவேண்டிய ஒன்றை செய்யாமல் விட்டுவிட்டாலோ,செய்யக்கூடாதவையை செய்தாலோ, அல்லது சந்தேகம் வந்தாலோ, செய்யும் சுஜூது)

தொழுகையில் ருக்ன் (ஃபர்ளை) விட்டால் அதை திரும்ப செய்து சஜ்தா சஹ்வும் செய்ய வேண்டும் 

வாஜிபானவற்றை விட்டால் சஜ்தா சஹ்வு செய்தால் போதுமானது 

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 19

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள் 

பாகம் – 19

பொதுவாக அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் அது தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் முக்கியமானதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் மனோஇச்சை அடிப்படையில் பேசுதல் கூடாது. 

  • அல்லாஹ்வின் பெயர்களை குறிப்பிட்டு இந்த பெயரை இத்தனை முறை கூறினால் இந்த விஷயம் நடக்கும் என்று குறிப்பிடும் புத்தகங்களில் எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லை.
  • அல்லாஹ்வின் பெயர்களை பயன்படுத்தி தாயத்துகள் எழுதுவதோ உபயோகிப்பதோ கூடாது  

 من تعلق تميمة فقد أشرك 

இப்னு மசூத் (ரலி) – யார் தாயத்து கட்டுகிறாரோ  அவர் அல்லாஹ்விற்கு இணைவைத்து விட்டார் (அபூதாவூத், அஹ்மத்)

  • வீடுகளில் அலங்காரத்துக்காக அல்லாஹ்வின் பெயர்களை எழுதி தொங்கவிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • காலை மாலை துஆக்களுடன் அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத்துக்களை  ஓத வேண்டிய அவசியமில்லை.
  • குர்ஆன் ஹதீஸின் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தாமாகவே அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத்துக்களுக்கு தனிச்சிறப்பை இருப்பதாக இட்டுக்கட்டி கூறுவது தவறாகும்.
  • அல்லாஹ்வின் பெயர்களுக்கு நிகராக பிறரின் பெயர்களை சூட்டுவது ஷிர்க்காகும்.

உதாரணம் :

அப்துல் அலீ 

  • அல்லாஹ்வின் பெயர்கள் அடங்கிய தாள்களை அவமதிக்கும் செயல்களை செய்வதை விட அதை எரிப்பதே  சிறந்ததாகும்.
  • அல்லாஹ்வின் பெயர்களில் சில சிலவற்றை விட சிறப்பு வாய்ந்ததாகும். 
  • ஆதாரம் 
  • நபி (ஸல்) :- அல்லாஹ்வின் பெயரில் ஒன்றை மகத்தான பெயர் என அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

💠 நபி (ஸல்) – அல்லாஹ்வின் இஸ்முல் அஃழம்(மகத்தான பெயர்) ஐ கொண்டு ஒருவர் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனை நிராகரிக்கப்படாது.

💠 அந்த மகத்தான பெயர் அல்லாஹ் என்றும், அல் ஹய்யு என்றும் , அல் கய்யூம் என்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. 

  • இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத்துக்கள் ஒன்றை விட மற்றொன்று சிறந்ததல்ல என்று எவரேனும் கூறினால் அது ஆதாரமற்ற செய்தியாகும்.

ஸூரத்துல் அஃராஃப் 7:180

وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌….

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை பிரார்த்தியுங்கள்….

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا ، يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ

الصَّمَدُ ، الَّذِي لَمْ تَلِدْ وَلَمْ تُولَدْ ، وَلَمْ يَكُنْ لَكَ كُفُوًا أَحَدٌ . قَالَ : ” لَقَدْ سَأَلْتَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ ، الَّذِي إِذَا

سُئِلَ بِهِ أَعْطَى ، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ

மாலிக் இப்னு மிக்வல்- நபி (ஸல்) – ஒருவர் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில்  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ تَلِدْ وَلَمْ تُولَدْ ، وَلَمْ يَكُنْ لَكَ كُفُوًا أَحَدٌ இவ்வாறு துஆ செய்தபோது நபி (ஸல்) அல்லாஹ் உன்னுடைய துஆ வை ஏற்றுக்கொள்கிறான் என்ற நற்செய்தியை  கூறினார்கள். (முஸ்லீம்)