ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 18

اسماء الله الحسنى غير محصورة

அல்லாஹ்வின் பெயர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடங்கக்கூடியவை அல்ல 

பாகம் – 18

 فقَدْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ لَيْلَةً مِنَ الفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي علَى بَطْنِ قَدَمَيْهِ وهو في

المَسْجِدِ وهُما مَنْصُوبَتَانِ وهو يقولُ:اللَّهُمَّ أعُوذُ برِضَاكَ مِن سَخَطِكَ، وبِمُعَافَاتِكَ مِن عُقُوبَتِكَ، وأَعُوذُ بكَ

مِنْكَ لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أنْتَ كما أثْنَيْتَ علَى نَفْسِكَ

ஆயிஷா (ரலி) – ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை (உறக்கத்தில் என் அருகில் இல்லையே என்று) கையால் தேடினேன். எனது கை அவரது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர் ஸுஜூது செய்தவராக இருந்துகொண்டிருந்தார். அப்போது நபி ஸல் கூறினார்கள் “யா அல்லாஹ் உன்னுடைய திருப்தியைக்கொண்டு உன்னுடைய கோபத்திலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன், உன்னுடைய மன்னிப்பைக்கொண்டு உன்னுடைய தண்டனையிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன், உன்னைக்கொண்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், நீ உன்னை புகழ்ந்திருப்பது போன்று என்னால் உன்னை புகழ முடியாது”(ஆகவே அல்லாஹ்வின் அனைத்து  பெயர்களும் நமக்கு தெரியாத காரணத்தினால் அந்த அளவுக்கு நம்மால் புகழ முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்) (ஸஹீஹ் முஸ்லீம்)

 ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي 

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – (மறுமை நாளில், மஹ்ஷரில்)…..அல்லாஹ்வின் அழகிய புகழ்ச்சிகளில் சிலதை அப்போது அல்லாஹ் எனக்கு தருவான், அதற்கு முன்னர் அதை யாருக்கும் கொடுத்திருக்க மாட்டான்.(புஹாரி, முஸ்லீம்)

 اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ

اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ

الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي

இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) கவலை துக்கம் ஏற்படும் வேளைகளில் இந்த துஆ வை ஓதினால் கவலை நீங்கி விடும் என்று கூறினார்கள்.

அல்லாஹுவே நான் உனது அடிமை, உனது அடிமையின் மகன், உனது அடிமை பெண்ணின் மகன், எனது நெற்றிமுடி உன்னுடைய கையில் இருக்கிறது, உன்னுடைய தீர்ப்பு என்னில் நடந்து விட்டது, என்னுடைய விஷயத்தில் நீ வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதமானது, உனக்குரிய அனைத்து திருநாமங்களைக்கொண்டும் உன்னிடம் கேட்கிறேன், அவை நீயே உனக்கு சூட்டிய பெயர்களாகும், அல்லது அதை உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி இருக்கிறாய், அல்லது உன்னுடைய அடியார்களில் யாருக்கேனும் நீ கற்றுக்கொடுத்திருக்கிறாய், அல்லது அந்த பெயர்களை உன்னுடைய மறைவான ஞானத்தில் நீ எடுத்து வைத்திருக்கிறாய், குர்ஆனை என்னுடைய உள்ளத்திற்கு வசந்தமாகவும் என்னுடைய நெஞ்சுக்கு ஒளியாகவும் என்னுடைய கவலையை போக்கக்கூடியதாகவும் என்னுடைய துயரத்தை போக்கக்கூடியதாகவும் ஆக்கி வைப்பாயாக“.

 (அஹ்மத்)

 عن أبي هريرة رواية قال لله تسعة وتسعون اسما مائة إلا واحدا لا يحفظها أحد إلا دخل الجنة وهو

وتر يحب الوتر 

அபூஹுரைரா (ரலி) – அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் அதாவது 100 இல் ஒன்று குறைவான பெயர்கள் இருக்கிறது. அதை மனனம் செய்தவர்கள் சொர்க்கம்  நுழைவார்கள்.(புஹாரி)

🌹 இந்த ஹதீஸில் அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் மட்டுமே உள்ளன என்று இடம்பெறவில்லை அல்லாஹ்வின் பெயர்களில் 99 ஐ மனனம் செய்தவருக்கு சுவர்க்கம் என்றே இடம்பெறுகிறது.

🌹 திர்மிதியில் இடம் பெரும் அல்லாஹ்வின் திருநாமங்கள் பட்டியலின் அடிப்படையில் தான் தற்போது நாம் எங்கும் காணும் அல்லாஹ்வின் பெயர்கள் பட்டியலாகும். அந்த ஹதீஸுகள் அனைத்தும் பலகீனமானவையாகும்.

🌹 அல்லாஹ்வின் பெயர்களை பட்டியலிடக்கூடிய ஹதீஸ்  நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவையல்ல என்று இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

🌹 ஆகவே அல்லாஹ்வின் திருநாமங்கள் எத்தனை என்பது அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 17

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா  (فقه الأسماء الحسنى) 

பாகம் – 17

💕 أسماء الله الحسنى مختصة به لائقة بجلاله 

அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லாஹ்விற்கே உரியவையாகவும் அவனுடைய அந்தஸ்திற்கும் கண்ணியத்திற்கும் பொருத்தமானவையாகயும் உள்ளன.

ஸூரத்துல் பகரா 2:255

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ 

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்

ஸூரத்துர் ரூம் 30:19

يُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ

அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்;

💕 الْحَـىُّ என்ற பெயர் குர்ஆனில் அல்லாஹ்விற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது படைப்பிணங்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

💕 அல்லாஹ்வின் ஹயாத்திற்கு முன்னர்; இல்லாமை என்ற ஒன்று இருந்ததே இல்லை. அல்லாஹ்விற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. ஆனால் மனிதர்கள் அவ்வாறு அல்ல அடியார்களின் ஹயாத் இல்லாமை என்ற நிலைக்குப் பிறகு வந்தது. 

ஸூரத்துத் தஹ்ர் 76:1

هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـٴًـــا مَّذْكُوْرًا‏ 

திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

ஸூரத்துல் கஸஸ் 28:88

كُلُّ شَىْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ‌ؕ لَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 

…..அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

ஸூரத்துன்னிஸா 4:28

وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏ 

…ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

💕 ஆகவே அல்லாஹ்வின் பெயர்களை அதற்கே உரிய அந்தஸ்தையும் கண்ணியத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

💕 அல்லாஹ்வை பற்றி அல்லாஹ் குர்ஆனில் 

ஸூரத்துல் அன்ஃபால் 8:61

اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏ 

….நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

💕 தனது சில அடியார்களை பற்றி குர்ஆனில் 

ஸூரத்துத் தாரியாத் 51:28

وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ‏ 

…அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.

பனீ இஸ்ராயீல் 17:85

وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا

…. இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக

💕 மனிதன் ஒன்றும் அறியாதவனாக பிறந்தான்.

ஸூரத்துந் நஹ்ல் 16:78; 70

(78) وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَيْئًا ۙ

உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்…..

💕 மனிதர்களின் அறிவு வயோதிகத்தில் மங்கிப்போய் விடும் 

(70) وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْــٴًــا‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ‏ 

…..கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.

💕 அல்லாஹ்வின் அறிவிற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. அவனுக்கு கடந்த காலம் நிகழ்காலம் எல்லாம் ஒரே போல அறிந்தவன். அல்லாஹ்வின் அறிவு பலவீனமானதல்ல. மனிதர்கள் அவ்வாறானவர்களல்ல. 

பனீ இஸ்ராயீல் 17:44

اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏ 

… நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் 37:101

فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ‏ 

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

ஸூரத்துன்னிஸா 4:58

اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ

بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏ 

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.

ஸூரத்துத் தஹ்ர் 76:2

اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًۢا بَصِيْرًا‏ 

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

💕 மனிதர்களின் பார்வைகளுக்கும்  கேள்விக்கும் ஒரு அளவு இருக்கிறது. அல்லாஹ் அனைத்தையும் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கிறான். 

ஸூரத்துல் பகரா 2:143

 ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏ 

…. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

ஸூரத்துத் தவ்பா 9:128

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ 

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

💕 அல்லாஹ் அவனுடைய கண்ணியத்திற்கும் மகிமைக்கு அந்தஸ்துக்கும் ஏற்ற நிலையில் رَءُوْفٌ ‏ ஆகவும் رَّحِيْمٌஆகவும் இருக்கிறான்.

💕 مَّلِكٌ என்ற பெயர் குர்ஆனில் அல்லாஹ்வின் பெயராக வருகிறது  59:23

18:79 – லும் ஒரு அரசன் இருந்தான் என்பதை குறிக்க மலிக் என்று குறிப்பிடுகிறான். 

💕 மலிக் என்ற சொல் அல்லாஹ்வை குறிப்பிடும்போது அவனுடைய கண்ணியத்திற்கேற்ப உள்ளது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஸூரத்துல் ஹஷ்ர் 59:23

.. الْعَزِيْزُ என்ற வசனத்தில் இடம்பெறுகிறது 

ஸூரத்து யூஸுஃப் 12:51

இந்த வசனத்தில் அந்த மன்னனின் பெயர் அஸீஸ் என்று இடம்பெறுகிறது.

ஸூரத்துல் ஹஷ்ர் 59:23

.. الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ؕ…..அல்லாஹ்வின் பெயர்கள் 

ஸூரத்துல் முஃமின் 40:35

…كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ‏ 

இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்

💕 ஆகவே அல்லாஹ்வின் பெயர்கள் அடியார்களுக்கு சூட்டப்பட்டாலும் அதை அல்லாஹ்வின் பெயர்களை அல்லாஹ்விற்கு சூட்டும்போது அதற்குரிய கண்ணியதோடு அதை புரிந்து கொள்ள வேண்டும். 

💕 அல்லாஹ் அடியார்களுக்கு பயன்படுத்திய பெயர்களை அடியார்களுக்கு நாம் பயன்படுத்தலாம் எனினும் அல்லாஹ்விற்குரிய பெயர்களை அதற்கான கண்ணியத்திலும் பூரணத்தன்மையிலும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

💕அல்லாஹ்வின் சில பெயர்களை அடியார்களுக்கு பயன்படுத்த முடியாது. 

உதாரணம் :

💕 அல்லாஹ்,அர் ரஹ்மான், அர் ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெயர்களாகும்

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 16

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 16

قال الإمام أحمد: ” لا يوصف الله إلا بما وصف به نفسه أو وصفه به رسوله، لا يتجاوز القرآن والحديث

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) – அல்லாஹ் தன்னை எவ்வாறு வரணித்துள்ளானோ அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அல்லாஹ் வை எவ்வாறு வரணித்துள்ளார்களோ அவ்வாறே தான் நாமும் அவனை வரணிக்கவும் நம்பவும் வேண்டும். அதில் குர்ஆன் ஹதீஸை தாண்டி நாம் செல்லவே கூடாது. 

ஸூரத்துஷ் ஷூறா 42:11

لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ 

…..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

الاستواء معلوم والكيف مجهول والسؤال عنه بدعة والايمان به واجب 

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் அல்லாஹ் அர்ஷில் எப்படி இருக்கிறான் என்று கேட்டபோது இமாம் மாலிக் அவர்கள் 

الاستواء معلوم அல்லாஹ் அர்ஷின்மீது உயர்ந்தான் என்பது அறிந்த விஷயமே, 

والكيف مجهول எப்படி என்பது தெரியாது 

والسؤال عنه بدعة  அதைப்பற்றி கேள்வி கேட்பது பித்அத் ஆகும் 

الايمان به واجب அதை நம்புவது கட்டாயமாகும் 

என பதிலளித்தார்கள். 

قَالَ نُعَيْمُ بْنُ حَمَّادٍ : مَنْ شَبَّهَ اللَّهَ بِشَيْءٍ مِنْ خَلْقِهِ فَقَدْ كَفَرَ , وَمَنْ أَنْكَرَ مَا وَصَفَ اللَّهُ بِهِ نَفْسَهُ فَقَدْ كَفَرَ , فَلَيْسَ مَا وَصَفَ اللَّهُ بِهِ نَفْسَهُ وَرَسُولُهُ تَشْبِيهٌ .

நயீம் இப்னு ஹம்மாத் – யார் அல்லாஹ்வை அவனது படைப்புகளோடு ஒப்பிட்டு பேசுகிறாரே அவர் காஃபிராகி விடுவார், அல்லாஹ் தன்னைப்பற்றி வரணித்திருக்கக்கூடிய ஒன்றை யார் மறுக்கிறாரோ அவரும் காஃபிராகி விடுவார். அல்லாஹ் வும் அவனது தூதரும் அவனை வர்ணித்ததில் எந்த ஒரு ஒப்புவமையும் இல்லை.

 (شرح أصول اعتقاد أهل السنة والجماعة للالكائي புத்தகம்- ஷரஹு வசூலில் இஹ்திகாதி அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஅ)

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 15

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 15

🌷 قال لها: «أين الله؟ قالت: في السماء، قال: من أنا؟ قالت: أنت رسول الله، قال: أعتقها فإنها

مؤمنة»؛ 

முஆவியத் இப்னுல் ஹகம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் தனது அடிமையை விடுதலை செய்வதை பற்றி ஆலோசனை கேட்டபோது அந்த பெண்ணிடம் நபி (ஸல்) அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று கேட்டார்கள் அப்பெண் வானதிலிருக்கிறான் என்று பதிலளித்தார்கள் அப்போது நபி (ஸல்) நான் யார் என கேட்டார்கள் அப்போது அவர் நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என பதிலளித்தபோது. அவளை விடுவித்து விடுங்கள் அவள் முஃமினானவள் என்று கூறினார்கள். 

🌷 அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் என 7 இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஸூரத்துல் முல்க் 67:17

اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا‌ ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ‏ 

அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

🌷 மூஸா (அலை) அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று பிரச்சாரம் செய்தார்கள் 

ஸூரத்துல் கஸஸ் 28:38

وَقَالَ فِرْعَوْنُ يٰۤـاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرِىْ‌ ۚ فَاَوْقِدْ لِىْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّىْ صَرْحًا

لَّعَلِّىْۤ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى ۙ وَاِنِّىْ لَاَظُنُّهٗ مِنَ الْـكٰذِبِيْنَ‏ 

இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் – மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 14

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 14

  • அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கிறது என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் ஜஹ்மிய்யாக்களின் இந்த கொள்கையை விமர்சித்த முஃதஸிலாக்கள் அல்லாஹ்விற்கு பெயர்கள் இருப்பது உண்மை ஆனால் அவனுடைய பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என கூறினர். 
  • இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ பல ஆய்வுகளுக்கு பின்னர் அல்லாஹ்வின் நாட்டம் தொடர்பான பண்புகளை மட்டும் மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 

இவர் அல்லாஹ்வின் பெயர்களை ஏற்றுக்கொண்டு அவனது செயல்கள் சம்மந்தமான பண்புகளை மறுப்பது என முடிவெடுத்தார்.

💠 அல்லாஹ்வின் இருப்பு சம்மந்தமான 7 பண்புகளாகிய(அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை, பேச்சு, என்றென்றும் உயிரோடிருத்தல்) இவைகளை அல்லாஹ்வுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய பண்புகள் எனவும் மீதமுள்ள அனைத்து பண்புகளுக்கும்  மாற்று அர்த்தம் கொடுத்தார். 

உதாரணம்:- 

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்ற ஹதீஸிற்கு அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அவனது அருள் இறங்குகிறது என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற மாற்று விளக்கமளித்தார்.

அல்லாஹ் வின் கை என்று வார்த்தைக்கு அல்லாஹ்வின் சக்தி என மாற்று விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் முகம் என்ற சொல்லுக்கு அல்லாஹ்வின் திருப்தி 

அல்லாஹ்வின் ரஹ்மத் என்று கூறப்பட்ட இடங்களில் அருள் என்று அர்த்தம் கொடுப்பது 

அல்லாஹ்வின் கோபம் என்ற வார்த்தைக்கு பழிவாங்குதல் என மாற்று விளக்கமளித்தார்

இது தான் அஷ்அரிய்யா கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 

💠 இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ சில நாட்கள் மக்கள் கண்முன்னில் வராமல் இருந்துவிட்டு பிறகு ஒரு நாள் வெளியே வந்து “அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத் சம்மந்தமான உலமாக்களின் புத்தகங்களை நான் படித்தேன். ஆகவே என்னுடைய கொள்கை தவறானதும் அவர்களது கொள்கையே சரியானது” என்றும் பிரகடனப்படுத்தினார்கள். அவர் அந்த கொள்கையை விட்டும் வெளியேறி விட்டார் ஆனால் அந்த கொள்கை அவ்வாறே இருக்கிறது.

💠 அவர் சரியான கொள்கைக்கு வந்த பிறகு அஷ்அரிய்யா கொள்கைக்கு எதிராக 

الإبانة عن أصول الديانة அல் இபானா அன் உஸூலி தியானா 

مقالات الإسلاميين மகாலாத்துல் இஸ்லாமிய்யீன் 

என்ற 2 புத்தகங்களை எழுதியுள்ளார்கள். 

  • அபூமன்சூர் அல் மாத்துருஜீ என்பவறின் கொள்கையை உடையவர் தான் மாத்துறிஜிய்யா கொள்கையினர் என்று அழைக்கப்படுகின்றனர். மாத்துருஜிய்யாக்களும் அஷாஇராக்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்களாவர்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 13

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 13

جادّة أهل السنة في باب الأسماء والصفات

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவின் வழிமுறை 

ஜஹ்ம் இப்னு சஃப்வான் என்பவன் பெயரில்  தோன்றிய இயக்கம் தான் ஜஹ்மிய்யா. அல்லாஹ் அடியார்களைப்போன்றவன் அல்ல என்று  நிறுவ வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் அவன் இப்படி செய்திருப்பினும் அதை தவறான முறையில் அவர்கள் அணுகி இறுதியில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற நிலைக்கு வந்தடைந்தனர். 

من لا يعرف الجاهلية لا يعرف الاسلام

உமர் (ரலி) – யார் ஜாஹிலிய்யத்தை அறிந்து கொள்ளவில்லையோ அவர் இஸ்லாத்தை அறிந்து கொள்ள முடியாது.

வழிகெட்ட கொள்கையினரின் மோசமான கொள்கைகளில் ஒன்று தான்.

الغاية تبرر الوسيلة

“நோக்கம் வழிமுறைகளை நல்லதாக மாற்றும்” என்ற அடிப்படை(நல்ல நோக்கத்தை  அடைவதற்காக சில தவறான பாதைகளை மேற்கொண்டாலும் தவறில்லை).

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 12

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 12

அல்லாஹ்வின் திருநாமங்களை சரியான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் புரிந்து; அதை உள்ளத்தில் பதிந்து, அது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும். (இமாம் ஸஅதீ, மஜ்மூஹ் அல் காமிலா)

ஸூரத்துல் அன்ஃபால் 8 : 2

அல்லாஹ்வை அறிந்து கொள்வதென்பது 2 வகைப்படும் 

  • அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொள்வது 

படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்ற அறிவு உலகில் அனைத்து மதத்தினரிடமும் பரவலாகவே காணப்படுகிறது.

  • அல்லாஹ்வை நேசிக்க வேண்டும், அவனை பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளத்தில் வர வேண்டும் அவனுக்கு பயப்பட வேண்டும் அவன் பால் நெருங்க வேண்டும், அவனிடம் வெட்கப்பட வேண்டும், அவனிடமே திரும்பிச்செல்ல வேண்டும் என்ற எண்ணம்  ஏற்படுத்துகிற அறிவு. இவ்வாறு அல்லாஹ்வை அறிந்துகொள்வது தான் நன்மைகள் அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது.

குர்ஆனில் அல்லாஹ்வை பற்றி அதிகமாக கூறப்பட்டிருக்கிறது 

உதாரணம் 

ஸூரத்துல் முஜாதலா 58:1

قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ ‌ۖ وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ ۢ بَصِيْرٌ‏ 

(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 11

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 11

🏵 மிருகங்கள் உலகில் எதற்காக பிறந்தன எதற்காக இறந்தன என்ற எதையும் அறியாமல் உலகிற்கு வந்து செல்வதைப்போல் தான் அல்லாஹ்வை அறியாதவர்கள் இவ்வுலகிற்கு வந்து செல்கின்றனர். (இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ்) 

🏵 مساكين أهل الدنيا ، خرجوا من الدنيا وما ذاقوا أطيب ما فيها .

قيل : وما أطيب ما فيها ؟ 

قال: محبة الله ، والأنس به ، والشوق إلى لقائه ،والتنعم بذكره وطاعته 

இமாம் இப்னுல் கையிம் கூறினார்:- உலகத்தின் உண்மையான இன்பத்தை அறியாமல் உலகத்தை விட்டு செல்பவர்கள் தான் பரிதாபத்திற்குரியவர்கள்.

உலகத்திலுள்ள இன்பமென்று நீங்கள் எதை சொல்லுகின்றீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது 

அதற்கவர் – அல்லாஹ்வை அறிவதும் அவனை நேசிப்பதும் அவனது நெருக்கத்தை விரும்புவதும், மறுமையில் அவனை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் தான் மிகப்பெரும் இன்பமாகும்.(புத்தகம்:- அல் ஜவாபுல் காஃபீ, பக்கம் 123, இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ்)

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 10

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 10

ஒரு ஆத்மாவிற்கு அவனை படைத்தவனை அறிந்து கொள்வதும், நேசிப்பதும், அவனை திக்ர் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவதும் தான் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. ஒரு அடியான் அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொண்டால் அவன் அல்லாஹ்வை சரியாக அறிந்தவனாகவும் அவனை அதிகமாக தேடக்கூடியவனாகவும் அவனுக்கு நெருக்கமானவனாகவும் இருப்பான்.

அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறியாமலிருந்தால் அல்லாஹ்வை அறியாதவனாக இருப்பான், அல்லாஹ்வை வெறுப்பானவனாகவும் அவனை விட்டும் தூரமானவனாகவும் இருப்பான். 

ஓர்  அடியான் அல்லாஹ்வை எந்த இடத்தில் வைக்கிறானோ அவ்விடத்தில் தான் அல்லாஹ் அவனை வைக்கிறான். 

(அல் காஃபிய்யது ஷாபியா, பக்கம் 3,4- இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்சிய்யா ரஹ்)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي

بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ

مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي

أَتَيْتُهُ هَرْوَلَةً

كتاب التوحيذ

الصحيح البخاري

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “அல்லாஹ் கூறுகிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனதினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனதினுள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூர்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடோடிச் செல்கிறேன். நூல்: புகாரி. பாகம் 8. பக்கம் 171.-முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2061.

சூரா ஃபாத்திர் 35:28

اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ 

 நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். 

விளக்கம்: அல்லாஹ்வை சரியான முறையில் அறிந்து கொண்ட உலமாக்கள் தான் அவனை சரியான முறையில் அஞ்சுவர். மகத்துவமிக்க, அறிவு நிறைந்த பூரணமான அனைத்து பண்புகளையும் கொண்ட, உயர்ந்த அழகிய திருநாமங்களை கொண்ட அல்லாஹ்வை ஒருவன் அறியும்போது அவன் அல்லாஹ்வை அஞ்சுவதும் பூரணமாக இருக்கும்.

(தப்சீர் இப்னு கஸீர், vol 3, பக்கம் 559)

ஈஸா (அலை) அல்லாஹ்விடம்  

ஸூரத்துல் மாயிதா 5:118

اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ‌ۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

இந்த வசனத்தை ஓதிவிட்டு நபி (ஸல்) அழுதார்கள்.

ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவனுடைய உள்ளமும் ஆன்மாவும் வாழ்வதில் தான் தங்கியிருக்கிறது. அவனுடைய உள்ளம் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் அதை படைத்தவனைப்பற்றி அது அறிந்திருக்க வேண்டும்.(அல் ஜவாபுல் காஃபீ, இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா)

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ

அபூமூஸா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வை நினைவு கூறுபவனுக்கும் நினைவு கூறாதவனுக்கும் உள்ள வித்தியாசம் உயிரோடிருப்பவனுக்கும் மரணித்தவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப்போன்றது.(புஹாரி)

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 09

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 9

🌷 مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُ مِنَ النَّارِ إِلا وَقَدْ بُيِّنَ لَكُمْ 

நபி (ஸல்) – உங்களை சுவர்க்கத்தின் பால் நெருக்கக்கூடிய மேலும்  நரகத்திலிருந்து தூரமாக்கக்கூடிய எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தெளிவுபடுத்தப்படாமல் விடப்படவில்லை 

(முஹ்ஜமுல் கபீர் – இமாம் தபரணீ)

🌷 அல்லாஹ்வை பற்றிய அறிவில் தான் மனிதனின் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ்வை அறிந்தால் மட்டுமே இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஸூரத்துந் நஹ்ல் 16:97

مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا

يَعْمَلُوْنَ‏ 

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

ஸூரத்துல் அன்ஆம் 6:82

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ‏ 

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.