ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 08

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 8

فضل العلم بأسماء الله تعالى وصفاته

அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவதன் சிறப்பு 

💠 மார்க்கத்தில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையம் பற்றி அறிவதை விட சிறந்த கல்வி இல்லை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கிறான் என்ற நபிமொழியை நாம் அறிந்தோம். மார்க்கத்தை அறிவதே நன்மை என்றால் மார்க்கத்தை அளித்த அல்லாஹ்வை பற்றி அறிவதன் சிறப்பை நாமே உணர முடியும்.

இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்) 

 إن دعوة الرسل تدور على ثلاثة أمور 

நபிமார்களின் பிரச்சாரம் 3 அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது.

١ تعريف الرب المدعو إليه بأسمائه وصفاته وأفعاله

மக்களுக்கு அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் அவனுடைய செயல்களைப்பற்றி கற்றுக்கொடுப்பது 

٢ معرفة الطريقة الموصلة إليه وهي ذكره وشكره

அல்லாஹ்வின் பால் நெருங்கக்கூடிய வழிகளை தெளிவு படுத்துவது.

٣ تعريفهم ما لهم بعد الوصول إليه في دار كرامته من النعيم الذي أفضله وأجله رضاه عنهم، وتجليه

لهم ورؤيتهم وجهه الأعلى، وسلامه عليهم، وتكليمه إياهم

💠 நாளை சுவனத்தில் இருக்கக்கூடிய சிறந்த விஷயங்களான அல்லாஹ் மக்களை பொருந்தி கொள்வான் இன்னும் அல்லாஹ் மக்களுக்கு காட்சி தருவான் இன்னும் அல்லாஹ் மக்களுக்கு சலாம் சொல்வான் மேலும் அல்லாஹ் அவர்களிடம் பேசுவான் என்பதையும்  அந்த மக்களுக்கு அவர்களுக்கு உண்டானதைப் பற்றி நபிமார்கள் விளக்குவார்கள்

(நூல்: அஸ்ஸவாஇகுல் முர்சலா, vol 4, 1481 பக்கம்)

💠 நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அல்லாஹ்வை பற்றிய அறிவையும் சரியான முறையில் கற்றுத்தந்தார்கள். அதன் விளைவாக தான் ஸஹாபாக்கள் உச்சகட்டமாக துன்புறுத்தப்பட்ட நிலையிலும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் அவர்கள் உறுதியுடன் இருந்தார்கள்.

 قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ ، لَيْلُهَا كَنَهَارِهَا ، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ ، مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا

كَثِيرًا ، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي ، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَعَلَيْكُمْ

بِالطَّاعَةِ ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا ، فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ ، حَيْثُمَا قِيدَ انْقَادَ

நபி (ஸல்) – உங்களை நான் வெள்ளைவெளேறென்ற ஒரு வழியில் விட்டுச்செல்கிறேன், அதில் இரவும்  பகலைப்போன்று தான் இருக்கும், எனக்கு பிறகு அழிவை நோக்கிச்செல்லக்கூடியவன் அதிலிருந்து தடம் புரளுவான்.

(அஹமத், இப்னு மாஜா)

💠 ஆகவே நபி (ஸல்) தெளிவாக அல்லாஹ் வை பற்றி தெளிவு படுத்திட்டு தான் சென்றார்கள்.

 مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلاَّ كَانَ حَقًّا عَلَيْهِ أَنْ يَدُلَّ أُمَّتَهُ عَلَى خَيْرِ مَا يَعْلَمُهُ لَهُمْ، وَيَنْهَاهُمْ عَنْ شَرِّ مَا يَعْلَمُهُ لَهُمْ

நபி (ஸல்) – அல்லாஹ் அனுப்பிய எந்த ஒரு தூதராக இருந்தாலும் அவர்கள் நன்மை என்று அறிந்து கொண்ட எந்தஒன்றையும் அவர்களுடைய சமுதாயத்திற்கு சொல்லாமல் செல்லவில்லை. தீமை என்று அவர்கள் அறிந்த அனைத்தையும் விட்டு அவர்களுடைய சமுதாயத்தை தடுத்திருக்கிறார்கள்.

(முஸ்லீம்)

💠 ஆகவே இவையனைத்தையும் சொல்லித்தந்த நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி நமக்கு சொல்லி தந்திருக்க மாட்டார்களா? 

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 07

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 7

இப்னு தைமியா (ரஹ்) தொடர்ந்து கூறுகையில்

குர்ஆனில் உள்ள அத்தியாயங்களிலேயே மிகச்சிறந்ததாகவும், குர்ஆனின் தாய் என்று அழைக்கப்படக்கூடியதாகவும் இருப்பது சூரத்துல் ஃபாத்திஹாவாகும். அதில் அல்லாஹ் தன்னுடைய பெயர்களையும் பண்புகளையும் பதிவு செய்கிறான்.

ஆதாரம்:

  1. 4474. அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்தபின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது  அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்-(7). பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்-(8). எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள். Volume :5 Book :65 ஸஹீஹ் புஹாரி

  1. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், ‘ஏனெனில், அந்த பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள்.

Volume :7 Book :97 ஸஹீஹ் புஹாரி

மேலும் இமாம் இப்னு தய்மியா (ரஹ்) அவர்கள் கூறுகையில் :- 

இந்த ஹதீஸின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் அல்லாஹ்வின் சிஃபத்துக்களை யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் ஒருவரை விரும்பி விட்டால் அவன் தனது வானவர்களை அழைத்து நான் இவரை விரும்புகிறேன் நீங்களும் இவரை விரும்புங்கள் என்று கூறுவான். அதற்குப்  பிறகு நல்ல மனிதர்களெல்லாம் அவரை விரும்ப ஆரம்பிப்பார்கள்

💕 மேற்கூறப்பட்ட அத்தனை விஷயங்களும் அல்லாஹ்வை பற்றிய அறிவதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்த போதுமானவையாக இருக்கிறது. இது ஈமானின் அடிப்படைகளில் மிகப்பிரதானமானது என்று நமக்கு புரிய வைக்கிறது, மேலும் மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று என்றும், அதில் தான் மார்க்கத்தின் முக்கிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன என்றும் புரிய வைக்கிறது. 

ஆசிரியர் கூறுகிறார்: தங்களை படைத்த, தங்களுக்கு படியளக்கும் அல்லாஹ்வை பற்றி அறியாமலிருந்தால்  எப்படி மக்களின் நிலைமைகள் சீராகும்? அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் பண்புகளையும் அறியாமல் எப்படித்தான் அவர்களுடைய வாழ்வு சீராகும்? மக்களுக்காக எது படைக்கப்பட்டதோ அதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் எதற்காக  மக்கள் படைக்கப்பட்டார்களோ அதில் அவர்கள் பொடுபோக்காகி விட்டார்கள்.

ஸூரத்துல் முனாஃபிஃகூன் 63:9

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 06

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 6

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) :-

💕 குர்ஆனில் சுவர்க்கத்தின் இன்பங்களான உண்பது, குடிப்பது, திருமணம் முடிப்பது என்பதைப்பற்றி சொல்வதை விட அதிகமாக அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் அல்லாஹ்வின் செயல்களும் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் சொல்லக்கூடிய வசனங்கள் மறுமையைப்பற்றி அறிவிக்கக்கூடிய வசனங்களை விட மகத்தானவை. குர்ஆனில் மகத்துவமிக்க வசனமாக இருப்பது அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் இடம்பெற்றுள்ள ஆயத்துல் குர்ஸீ தான்.

தர்உ தஆருதில் அக்லி வன்னக்லி  (பகுத்தறிவும் குர்ஆன் ஹதீஸும் முரண்படாது)  என்ற புத்தகத்தில், 5 ஆம் பாகம் 310-312

ஸூரத்துல் பகரா 2: 255

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ

عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ

السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ۚ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். 

  1. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” எனக் கேட்டார்கள். நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினேன். அவர்கள் “அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” என (மீண்டும்) கேட்டார்கள். நான் “அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்… எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்” என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு “அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!” என்றார்கள்.

(Book :6 ஸஹீஹ் முஸ்லீம்)

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 05

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 5

அல்லாஹ்வை அறிவது ஒரு முஸ்லிமிற்கு கடமை என்பதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் சில கீழ்வருமாறு:-

ஸூரத்துல் பகரா 2 : 209; 231; 233; 235; 244; 267

  • 209فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

…நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 231….وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

…நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 233وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏

 நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 235 وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ

…. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 244 وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

  • 267 .. وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏

நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்

ஸூரத்துல் மாயிதா 5 : 98 

  • اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ؕ‏

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,

ஸூரத்துல் அன்ஃபால் 8 : 40

  •  …فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰٮكُمْ‌ؕ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ‏

…நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் – அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.

ஸூரத்துல் பகரா 2: 194; 235

  • 194 وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏

…… நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 235 … ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ‏

…..  அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஸூரத்து முஹம்மது 47 : 19

  • فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக……

🌹 அல்லாஹ்வை அறிந்தால் அவனது பெயர் கூறப்பட்டால் உள்ளம் நடுங்கும்.

 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

🌹 அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் குர்ஆனில் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது. குர்ஆனில் சொல்லப்பட்ட மிகச்சிறந்ததும் உயர்ந்ததுமான விஷயம் அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் தான். அதை குர்ஆனிலுள்ள வேறெதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு மேன்மையானதாக இருக்கிறது.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 04

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 4

இமாம் இப்னுல் கய்யிம் தொடர்ந்து கூறுகையில் :-

அமல்கள் எனும் கட்டடத்தை கட்டும் அடிப்படை மனித உடலில் உள்ள பலத்தை போன்றது. உடல் பலமாக இருந்தால் அனைத்து நோய்களிலிருந்தும் தீக்காயங்களிலிருந்தும் தன்னை அது தடுத்துக்கொள்ளும். அதேசமயம் மனிதனின் உடல் பலஹீனமானதாக இருந்தால் நோய்களை சுமப்பது  சிரமமாவதோடு மட்டுமல்லாமல் எளிதில் நோயுற்று விடும் நிலைக்கு அந்த உடல் தள்ளப்படும்.

🌷 எனவே உம்முடைய கட்டடத்தை ஈமானின் அஸ்திவாரத்தில் கட்டி எழுப்புவீராக. அப்போது உன்னுடைய அமல்கள் கூடிக்கொண்டு போகும் இடையில் ஏதேனும் இடையூறுகள் வந்தாலும் அதை சீர் செய்ய உன்னால் முடியும்.

அஸ்திவாரத்தில் 2 முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும்:-

الأول: صحة المعرفة بالله وأمره وأسمائه وصفاته.

 அல்லாஹ்வை அறிந்து கொள்வது, அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொள்வது.

والثاني: تجريد الانقياد له ولرسوله دون ما سواه.

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்படுவது.

🌷 அல்லாஹ் இருக்கிறான் என்பது உலகில் அனைவரும் அறிந்ததே. ஆனால் அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதை ஒரு முஸ்லீம் அறிந்திருக்க வேண்டும்

ஸூரத்துஜ்ஜுமர் 39:67

وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ‌ۖ

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 03

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 3

ஆசிரியர் கூறுகிறர்கள்:-

ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு அஸ்திவாரம் இருக்கும், மார்க்கத்தின் அஸ்திவாரம் அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனுடைய பண்புகளையும் பற்றி அறிந்து கொள்வது தான்.இந்த அஸ்திவாரம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடத்தை அது உறுதியாக சுமக்கும்  அழிவிலிருந்து கட்டிடம் இடிந்து சுக்குநூறாவதிலிருந்தும் அது பாதுகாக்கும்.

இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ் தனது ஃபவாயித் என்ற நூலில் :-

யார் தன்னுடைய கட்டடம் உயரமாக கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் தன்னுடைய அஸ்திவாரத்தை உறுதியாகவும் நேர்த்தியாகவும் இடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கட்டடத்தின் உயரம் என்பது அஸ்திவாரத்தின் நேர்த்தியிலும் உறுதியிலுமே தங்கி இருக்கிறது.

நாம் செய்யக்கூடிய அமல்கள் கட்டடம் போன்றது அதன் அஸ்திவாரமாக ஈமான் இருக்கிறது.எந்த அளவுக்கு அஸ்திவாரம் உறுதியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த கட்டடம் உயர்ந்து செல்லும்.உறுதியான அஸ்திவாரம் உள்ள கட்டடத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் வெடிப்போ அல்லது ஏதேனும் தீங்கோ ஏற்பட்டால் அதை மீண்டும் கட்டுவது எளிதானது.

அஸ்திவாரம் உறுதியாக இல்லாவிட்டால் அது அசைந்து விட்டால் கட்டடம் இடிந்து விழுந்து விடும் அல்லது விழும் நிலைக்கு வந்து விடும்.

ஒரு புத்திசாலியின் கவலையும் ஆசையும் தனது அஸ்திவாரத்தை சரி செய்வதிலும் சீர் செய்வதிலும் தான் இருக்கும்.

அறிவில்லாதவன் அஸ்திவாரத்தை கவனிக்காமல் கட்டடத்தை கட்டுவதில் கவனம் செலுத்துவான். அவனுடைய கட்டடம் எப்போதும் விழும்நிலையிலேயே இருக்கும்.

அல்லாஹ் குர்ஆனில்

ஸூரத்துத் தவ்பா 9:109

اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِىْ

نَارِ جَهَـنَّمَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 02

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா 

(فقه الأسماء الحسنى)

முதலாவது தலைப்பு

منزلة العلم بأسماء الله تعالى وصفاته – அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறிவதன் நிலை

 பாகம் – 2

 💎 அல்லாஹ்வின் பெயர்களைப்பற்றி அறியும் இக்கல்வியானது கல்விகளில் மிகச்சிறந்தாகவும்  அல்லாஹ்வின் அன்பை பெறக்கூடிய ஒரு விஷயமாகவும் உள்ளது. 

ஆதாரம் :

مَن يُرِدِ الله به خيرًا يُفقِّهْه في الدين،

முஆவியா (ரலி) – நபி (ஸல்) – யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவர்களுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கிறான்(புஹாரி, முஸ்லீம்)

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 01

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)

 المؤلف: عبد الرزاق بن عبد المحسن البدر

ஆசிரியர் :- அப்துர் ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல் பதர்(ரஹ்)

 பாகம் – 1

💢 தற்காலத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான சிந்தனை உடைய மூத்த அறிஞரான அப்துல் ரஸ்ஸாக் என்பவர் அப்துல்  முஹ்ஸின் அல் பதர் ரஹ்மதுல்லாஹ் அவர்களுடைய மகன் ஆவார். இஸ்லாமிய சிந்தனைகளை உலகிற்கு எடுத்துக்கூறுவதில் இவரது தந்தை முன்னணியில் உள்ள ஒரு அறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் மதீனாவின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கே பேராசிரியராக இருக்கிறார். அகீதா ரீதியான பல புத்தகங்களை எழுதிய இவர் ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் இருக்கும் விளக்கங்கள்) என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 1

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 1 

ஹதீஸ் கலை

ஹதீஸ் என்றால் என்ன ஹதீஸுகளை எவ்வாறு அணுகவேண்டும்?

ஹதீஸ்களை படிப்பதோடு ஹதீஸ் கலையையும் கற்றுக்கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

🌷 இமாம் நவவி கூறினார்கள் கல்வியைத்தேடுதல் அணைத்து நஃபிலான வணக்கங்களையும் விட சிறந்தது.

அடிக்குறிப்பு

ஸஹீஹ் முஸ்லீம் புத்தகத்தில் தளைப்பு வாரியாக பிரித்வர் இமாம் நவவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷாஃபி மத்ஹபை சார்ந்த சிறந்த அறிஞர். இமாம் ஷாஃபி அவர்களின் கருத்துக்கு இவர்களின் கருத்து முரண்பட்டால் பெரும்பாலான சந்தர்ப்பங்களின் இவரது கருத்தையே முற்படுத்தப்படும். المجموع شرح المهذب  என்ற மிகப்பெரும் ஃபிக்ஹ் புத்தகத்தை எழுதியவர்.

🌷 இமாம் அஹ்னஃப் (ரஹ்) கூறுகிறார்கள் கல்வியில்லாமல் வரக்கூடிய கண்ணியம் அனைத்தும் இழிவானதே.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 24

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 24

💠 முதிர்ச்சியடையாமல் குறைவான அறிவோடு எதையும் அணுகுதல் கூடாது  ஒரு கருத்தை நாம் முன் வைக்கும்போது அதைப்பற்றிய முழுமையான புரிதலுடன் நாம் இருக்க வேண்டும்.

💠 மேற்கத்திய கருத்துக்களையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கியவர்களாகவே நாம் இருக்கின்றோம். ஆகவே நமக்கு முன் சென்ற அறிஞர்கள் இஸ்லாத்தை உள்வாங்கியதைப்போன்று மார்க்கத்தை புரிந்து கொள்ளவேண்டும் தவிர நவீன சிந்தனைகள், அசத்திய கொள்கையினரின் கருத்துக்கள், கீழையாதவர்களின் கருத்துக்கள்(orientalist) போன்றவற்றை உள்வாங்கி விடக்கூடாது.

💠 வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்

💠 இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) இபாதத்தில் சலிப்படைந்தவர்களும், மார்க்கத்தை எளிதாக காண்பவர்களுக்கு, தக்வா வை விட்டு தூரமானவர்களுமே வீண் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

💠 ஒருவரிடம் பேசும் முன் அந்த பேச்சு இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தருமா என்று சிந்தித்த பின்னரே ஒரு நல்ல கல்வியாளர் தனது பேச்சை தொடருவார்.

💠 கல்வியாளர்கள் இயக்கங்களாகவும் குழுக்களாகவும் பிரிந்து விடக்கூடாது. நமக்கு முன் சென்ற அறிஞர்கள் தம்மை தாம் முஸ்லீம் என்ற ஒரே ஒரு அடையாளத்துடன் தான் வாழ்ந்தார்கள்.

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)