கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 23

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 23

கல்வியில் பகட்டுத்தன்மை கூடாது:-

⚜ ஆசிரியரை விட தான் சிறந்தவன் என்று நிரூபிக்க முனைவது.

⚜ எழுத்தின் மூலம் மக்களுக்கு அழைப்புப்பணி செய்பவர்கள் அந்த துறையைப்பற்றி முழுமையாக படித்துவிட்டு அதை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச்செல்லலாம்.

⚜ இமாம் கத்தீப் அல் பக்தாதீ கூறுகிறார்கள்:- ஒருவர் ஒரு புத்தகத்தை தொகுத்தால் அவர் அந்த புத்தகத்தை முன்வைக்கவில்லை அவர் தனது அறிவை முன்வைக்கிறார்.

⚜ கல்வியில் சிறுபுத்தி அல்லது குறும்புத்தி உடையவர்கள் சமகாலத்து இமாம்களின் பதிவுகளை மக்கள் முன்னிலையில் கேவலப்படுத்துவது மிக மோசமான செயலாகும். அந்த புத்தகத்தின் மூலமாக மக்களில் எவரேனும் தவறு செய்வதை கண்டால் அந்த தவறை சுட்டிக்காட்டி தெளிவு படுத்தலாம் ஆயினும் இழிவு படுத்தும் நோக்கத்தோடு புத்தகங்களை விமர்சித்தல் கூடாது.

⚜ புத்தக ஆசிரியர் – நம்முடைய உள்ளத்தை கண்ணாடி குவளை போல் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.

⚜ இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் மாணவர்களுக்கு செய்த உபதேசம் – உங்கள் உள்ளத்தை பஞ்சு போல் ஆக்காதீர்கள். பஞ்சு நல்லதையும் கெட்டதையும் அனைத்தையும் உரிந்து கொள்ளும். தேவையில்லாத விஷயங்களை உள்வாங்கும்போது மனதில் ஏற்படும் சந்தேகங்கள் மூலமாக ஈமான் பலகீனமாகிறது.

⚜ அரபியில் நஹு – ஸர்ஃபில் தவறுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

⚜ உமர் (ரலி) – அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களுக்கு பல நல்ல ஒழுக்கங்களை அதிகரிக்கச்செய்யும்.

⚜ முன் சென்ற இமாம்கள் தங்கள் மாணவர்கள் அரபு இலக்கணங்களில் தவறிழைத்தால் மிக கடுமையாக நடந்து கொண்டார்கள் என அறிய முடிகிறது. 

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 22

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 22

புத்தக ஆசிரியர் மாணவர்களை 3 விதமாக பிரிக்கிறார்; மாணவர்களிடம் இருக்கக்கூடாத தன்மைகள் என சில உபதேசங்கள் அளிக்கிறார்கள்.

💕 பகல் கனவு காண்பவன்  حلم اليقظة .

💕 திறமையில்லாத அறிவில்லாதாவர் தனக்கு அறிவிருப்பது போல் காண்பித்தல்.

புத்தக ஆசிரியர் கல்வியாளர்களை 3 தரமாக பிரிக்கிறார்கள்

💕 ஆரம்ப நிலை கல்வி பயில்பவர்கள்.

💕 சிறிது அறிவுடன் இருக்கும் பணிவு கலந்த நிலை.

💕 அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அதிகமாக படிப்பார்கள் அதிகமாக படிக்கும்போது தனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் நிலையில் இருப்பார்கள்.

புத்தக ஆசிரியர் கூறும் பழமொழி:-

பக்குவமடைவதற்கு முன்னரே தான் பக்குவமடைந்ததாக காட்டிக்கொள்பவர் தன்னை அழித்துக்கொள்வதற்கு சவால் விடுக்கிறார்.

ஷேக் உஸைமீன் அவர்கள் பக்குவமடைந்ததாக தன்னைத்தானே காண்பிப்பவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என விளக்கமளிக்கிறார்கள்.

💕 தமக்கு எல்லாம் தெரியும் என்ற தன்னை பற்றிய பெருமிதமும் பூரிப்பும் மமதையும் உடையவர்களாக இருப்பார்கள்.

💕 மார்க்கத்தை விளங்கி வாழ்ந்த ஸஹாபாக்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விளங்கி புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்காது.

💕 வாயில் வந்தவற்றையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் பேசுவது

💕 சத்தியத்தை எடுத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு ஊரில் மார்க்க அறிவில் முதிர்ச்சி அடைந்தவர்கள் இல்லாத பட்சத்தில் மார்க்கத்தை பற்றிய சிறிய ஞானம் உள்ளவர்கள் பேசலாம் ஆனால் சர்ச்சைக்குரிய விஷங்களையோ, கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயங்களையோ பற்றி அவரிடம் கேட்கப்பட்டால் கற்றுத்தேர்ந்த பெரியவர்களிடம் கேட்டுச்சொல்கிறேன் என்று அவர்கள் கூற வேண்டும்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 21

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 21

புத்தகங்களை 3 வகையாக பிரிக்கலாம்

  1. நல்ல புத்தகம்
  2.  தீய புத்தகம்
  3.  பயனோ தீமையோ அற்ற புத்தகம்.

🏵 இதில் இம்மை மறுமை பயனுள்ள புத்தகங்களை நாம் உபயோகித்தல் வேண்டும்.

❣ ஒரு புத்தகம் வாசிப்பதற்கு முன் அது எந்த துறையைச் சார்ந்த புத்தகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

❣ அந்த புத்தகத்திலுள்ள கலைச்சொற்களை அறிந்து கொள்ள வேண்டும்

❣ புத்தக ஆசிரியரின் எழுத்து போக்கை தெரிந்து கொள்ள வேணடும்

❣ அடிக்குறிப்புகள் எழுதும் பழக்கங்கள் வளர்ப்பது நல்லது

❣ தான் படிப்பதை சுருக்கமாக அமைக்க வேண்டும்

❣ எந்த ஒரு புதிய புத்தகம் வாங்கினாலும் அதன் முன்னுரையேனும் வாசித்து விட்டு எடுத்துவைத்தல் சிறந்தது

❣ குறிப்புகளை தெளிவாகவும் எழுத்துக்களுக்குள்ள சட்டதிட்டங்களை தெரிந்து எழுத வேண்டும்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 20

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 20

இஸ்லாமிய மாணவரிடம் இருக்கக்கூடாத தன்மை المداهنة

மாற்றுக் கருத்துடையவர் அல்லது எதிர்க்கருத்து உடையவர்  நம்மை விமர்சிக்காத வரை அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டாமலிருத்தல்.

இருக்க வேண்டிய தன்மை المدَاراة

மாற்றுக்கருத்துடையவரின் தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.

கல்வியை தேடக்கூடியவர் புத்தகங்களோடு எப்படி தொடர்புடன் இருக்க வேண்டும்

அதிகமான புத்தகங்களை வாங்கவும் வாசிக்கவும் வேண்டும்.

பெரும்பாலும் மூல புத்தகங்களை வாங்கி வாசித்தல் சிறந்தது.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 19

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 19

அறிஞர்கள் கண்ணியத்தை விரும்ப வேண்டும்.

 அதிகாரம் படைத்தவர்கள் அறிஞர்களை பயன்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது.

 மார்க்க தீர்ப்பு வழங்கும் நேரத்தில் யாருக்கும் சாதகமாக வளைத்து கூறுதல் கூடாது.

 கல்வியாளர் மறுமையை முன்னிறுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்.

 தகுதியான சபையில் கல்வியை எடுத்து வைக்க வேண்டும்

أنزلوا الناس منازلهم

ஆயிஷா (ரலி)- நபி (ஸல்) – மக்களெல்லாம் அவரவர்கள் கூடிய இடங்களை வைத்து இஸ்லாத்தை புரிய வைக்க வேண்டும்  (அபூதாவூத்)

 உலமாக்களின் வரலாறுகளை படித்து பயன்பெற முயற்சிக்க வேண்டும்.

 பெருமையடிக்கக்கூடியவர்களாகவும் பிற மக்களை இழிவாக கருதுபவர்களாகவும் இருக்க கூடாது

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 18

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 18

💕புத்தக ஆசிரியர் கல்விக்கும் ஸகாத் உண்டு என சில கருத்துக்களை கூறுகிறார்கள்

  1. சத்தியத்தை உடைத்து கூற வேண்டும். சத்தியத்தை மறைத்து சமாதானமாக போவது கல்விக்கு நாம் செய்யும் மோசடியாகும்.
  2. நன்மையை ஏவ வேண்டும்(அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் இட்ட கட்டளைகள்)
  3. தீமையை தடுக்க வேண்டும் (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் விலக்கியவைகள்). நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் அறிவை பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும்
  4. கற்ற கல்வியை பரப்ப வேண்டும்
  5. அதன் மூலம் மக்கள் பயன் பெறுவதை விரும்ப வேண்டும்  
  6. கல்வி கற்பதால் கிடைக்கும் பதவிகளை மக்களுக்கு பயன் தரும் விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 17

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 17

🌹சரியான கல்வியை கற்றதன் அடையாளம்:

  1. கற்ற கல்வியை அமல் படுத்துவார்கள்.
  2. தன்னைப்பற்றி பெருமையடித்துக்கொள்ள மாட்டார்.
  3. கல்வி அதிகரிப்பதற்க்கேற்ப்ப பணிவு அதிகரிக்கும்.
  4. தலைமைத்துவம் பிரபல்யம் போன்ற உலக இன்பங்களை விரும்ப மாட்டார்.
  5.  

    தனக்கு கல்வி இருக்கிறது என நினைக்க மாட்டார்.

  6. பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வார்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 16

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 16

வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

❤ ஸூரத்துல் ஃபுர்ஃகான்25:63

وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامً

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

🌹குர்ஆன் சுன்னா வாழ்க்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும்

🌹இஸ்லாமிய கல்வியில் ஒவ்வொரு துறையின் அடிப்படைகளையும் தெரிந்திருக்க வேண்டும்

🌹ஃபிக்ஹை படிப்பதற்கு முன் அதன் அடிப்படையான உஸூலுல் ஃபிக்ஹை படிக்க வேண்டும். அல்லது இதில் எதை முதலில் கற்பது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 15

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 15

ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை

⚜ அழகிய முறையில் கேள்வி கேட்டல்

⚜ பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும்

⚜ பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்

💕 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் கேட்காதீர்கள்

கல்வியின் 6 படித்தரங்கள்

⚜ நல்ல முறையில் கேள்வி கேட்டல்

⚜ கவனமாக கேட்டல்

⚜ சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்

⚜ கேட்டதை மனனம் செய்ய வேண்டும்

⚜ கற்றுத்தர வேண்டும்

⚜ விளங்கியதை கொண்டு அமல் செய்ய வேண்டும்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 14

🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது.

🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் பிறகு – பிறகு என்று தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டும்.

🌀 முழு நேரமும் கல்விக்காக ஒதுக்காமல் சிறிது ஓய்வும் மனிதனுக்கு தேவை.

🌀 நபி (ஸல்) – உங்களுடைய ரப்பிடத்தில் உங்களுக்கு சில கடமைகள் இருக்கிறது, உங்களுடைய ஆன்மாவிற்கும் உங்கள் மீது கடமைகள் இருக்கின்றது, குடும்பத்தார் மீதும் உங்களுக்கு கடமைகள் இருக்கின்றது ஆகவே உங்களது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றுங்கள்(புஹாரி)

🌀 மாணவர்கள் ஆசிரியர்களிடம் தான் படித்ததை வாசித்து காட்டி தன்னை திருத்திக்கொள்வது சிறந்தது