கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 13

🌹 கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.
🌹 இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம்
🌹 இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள்.
🌹 கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் தகுதிக்கு மீறி தன்னை உயர்த்திக்கொள்ள மாட்டார்.(தனக்கு தெரியாததை தெரியாது என்றே கூறுவார்கள்)
🌹 எனக்கு தெரியாது(لا ادرى) என்று கூறுவதே ஒரு அறிஞரின் கேடயமாகும்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 12

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 12

💠  மாணவருக்கு பொறுமை வேண்டும். கற்பதிலும் பொறுமை இருக்க வேண்டும்.
💠 கல்வியில் விளக்கத்தை கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.

கல்வியில் அமானிதத்தைப் பேணுதல்.

💕 சரியான நபரிடம் கல்வி கற்க வேண்டும்.

💕 அவர்கள் கற்றுத்தரும் சரியான விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

💕 கற்றதை அமல் செய்ய வேண்டும்.

💕 அமல் செய்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

💠 கல்வியில் அமானிதம் பேணுதல் மிகவும் அவசியமாகும்.
💠 கல்வியில் அமானிதம் பேணுதல் என்றால் என்ன❔️

💕 யாரிடமிருந்து எடுத்த கருத்து என அறிவிப்பது.

💕 இமாம்கள் ஒன்றை சொன்னதாகக் கூறாமலிருத்தல்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 11

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 11

குர்ஆன் சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்ள ஷேக் உஸைமீனின் (ரஹ்) அறிவுரை

💠 கல்வி علم

💠 புரிதல் فهم

💠 புரிந்த கல்வியை சிந்திப்பது التفكر

மேற்கண்ட 3 ஆயும் சரியாக செய்தால் التفقه (மார்க்கத்தை புரிந்தவர்) என்ற அந்தஸ்தை அடைய முடியும்.

💕 குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் التفقه இருக்க வேண்டும். அது அறிவைச்சார்ந்தோ அவருடைய மனோ இச்சையை சார்ந்தோ இருக்கக்கூடாது.

உலமாக்கள் ஃபிக்ஹ் ஐ இரண்டாக பிரித்தார்கள்

💠 அகீதா(கொள்கை) சம்மந்தப்பட்டது فقه النفس

💠 ஹலால் ஹராம் என்று தெளிவு படுத்துவது  فقه البدن

💕 ஃபிக்ஹ் கற்கும் மாணவர்கள் ஃபிக்ஹின் அடிப்படை சட்டங்களை தெரிந்திருக்க வேண்டும்; என இந்த புத்தகத்தின் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 10

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 10

💕 நபி (ஸல்) – யார் உலமாக்களிடம் விவாதிப்பதற்காகவோ, மடயர்களை மேலும் மடயர்களாக்கவோ, மக்களெல்லாம் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவோ கல்வியைக் கற்றுக்கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை நரகத்தில் புகச்செய்வான்(திர்மிதி)

உலமாக்கள் கல்வியை இரண்டாக பிரிக்கிறார்கள்

  • தான் கற்பதையெல்லாம் மனனம் செய்வது حفظ الرواية
  • தான் கற்றுக்கொள்வதெல்லாம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது  حفظ الرعاية

💕 நாம் கற்றதை மனனம் செய்வதை விட அதை நடைமுறை படுத்துவது மிக முக்கியமானதாகும்.

💕 நபி (ஸல்) – குர்ஆனை மனனம் செய்தவர் ஒட்டகத்தை வைத்திருப்பவரைப்போலாவார், ஒட்டகத்தை கட்டிவைத்தால் அது அங்கேயே இருக்கும் அதை அவிழ்த்து விட்டால் போய்விடும்.

💕 கல்வியை மீண்டும் மீண்டும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

💕 இப்னு மசூது (ரலி) – உங்களில் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் அதிகமாயிருப்பினும் மார்க்கத்தை புரிந்து கொண்டவர்கள்(ஃபிக்ஹ்) குறைந்து விட்டார்களே? என்று கேட்டார்கள்.

ஃபிக்ஹ் – குர்ஆன் சுன்னாவிலிருந்து புரிந்து கொள்ளும் விளக்கம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 134

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 134

3 – அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும்.

قال : إن رسول الله صلى الله عليه وسلم قال : ( الدين النصيحة قلنا: لمن يا

رسول الله ؟ قال : لله , ولكتابه , ولرسوله , ولأئمة المسلمين , وعامتهم ) رواه

مسلم

♦️ நபி (ஸல்) – மார்க்கம் என்பதே உபதேசம் தான் என்றார்கள் யாருக்கு என்று கேட்டபோது ஆட்சியாளரருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்(முஸ்லீம்)

4 – ஆட்சியாளர் கெட்டவராக இருந்தாலும் அவருக்கு பின்னால் தொழ வேண்டும் அவர்கள் குஃப்ர் செய்தாலே தவிர.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 133

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 133

இஸ்லாமிய ஆட்சியாளர்களை பொறுத்தவரை நாம் எப்படி இருக்க வேண்டும்

ஸூரத்துன்னிஸாவு 4:59

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்

♦️ நபி (ஸல்) – உங்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டாலும் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுங்கள்.

♦️ கட்டுப்படுதல் குர்ஆன் சுன்னாவிற்கு முரண் படாத விஷயத்தில் இருக்க வேண்டும்.

2 – நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 132

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 132

அறிஞர்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

  • அவர்களை விரும்ப வேண்டும்
  • அவர்களுடைய ரஹ்மத்துக்காக துஆ செய்ய வேண்டும்
  • அவர்களுக்காக பாவமன்னிப்பு தேட வேண்டும்

قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين

يلونهم

♦️ இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி (ஸல்) – சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்னுடைய சமுதாயம் அதற்கு பின்னால் அவர்களை தொடர்ந்து வரக்கூடியவர்கள் பின்னர் அவர்களை தொடர்ந்து வரக்கூடியவர்கள்(புஹாரி)

ஸூரத்துல் ஹஷ்ர் 59:10 அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

💫 அவர்களைப்பற்றி  நல்ல முறையில் பேச வேண்டும்.

💫 இமாம் மாலிக், இமாம் ஷாஃபீ, இமாம் அஹ்மத், இமாம் அபூ ஹனீஃபா போன்ற இமாம்கள் குர்ஆன் சுன்னாவிலிருந்து அவர்களுக்கு கிடைத்த அறிவிலிருந்தே பேசினார்கள்.

💫 அவர்களின் வழிகாட்டல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். (தக்லீத்)கண்மூடித்தனமாக பின்பற்றல் அவர்களை மதிப்பதாக ஆகாது.

💫 மார்க்க விஷயங்களில் அவர்களின் பிழைகளை சரியான முறையில் புரிந்து கொள்ளல்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 131

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 131

5 – அவர்களுடைய தவறுகளை பேசக்கூடாது

6 – நபி (ஸல்) வின் மனைவிமார்கள் நம்முடைய தாய்மார்கள் என ஏற்றுக்கொள்ளல்

ஸூரத்துல் அஹ்ஜாப 33:6 இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 130

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 130

4 – ஒவ்வொரு ஸஹாபிக்கும் தனி சிறப்புக்கள் உண்டு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்

أنس بن مالك رضي الله عنه حدثهم أن النبي صلى الله عليه وسلم صعد أحدا وأبو

بكر وعمر وعثمان فرجف بهم فقال اثبت أحد فإنما عليك نبي وصديق وشهيدان

அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) உடன் உஹதில் இருந்தபோது உஹத் குலுங்கியது அப்போது நபி (ஸல்) அமைதியடை உஹதே உனக்கு மேல் ஒரு நபியும் ஒரு சித்தீக்கும் இரு ஷஹீதுகளும் இருக்கிறார்கள் என்றார்கள் (புஹாரி)

قال النبي صلى الله عليه وسلم لعلي أما ترضى أن تكون مني بمنزلة هارون من

موسى

🌺நபி (ஸல்) அலீ (ரலி) யிடம் மூஸாவுக்கு ஹாரூன் இருந்தது போல எனக்கு நீங்கள் இருக்க விரும்பவில்லையா என்று கேட்டார்கள் (புஹாரி)

🌺நபி (ஸல்) பாத்திமா (ரலி) யை சொர்க்கத்தின் பெண்களின் தலைவி என்று நபி (ஸல்) கூறினார்கள்.

وعن جابر – رضي الله عنه – قال : قال النبي – صلى الله عليه وسلم – : ” من

يأتيني بخبر القوم ؟ ” يوم الأحزاب . قال الزبير : أنا فقال النبي – صلى الله عليه

وسلم – : ” إن لكل نبي حواريا ، وحواري الزبير ” . متفق عليه .

🌺 நபி (ஸல்) – ஒவ்வொரு நபிக்கும் துணையாளர்கள் இருப்பார்கள் என்னுடைய துணையாளர் ஜுபைர் இப்னு அவ்வாம் என்று கூறினார்கள்.(புஹாரி, முஸ்லீம்)

اللهم أحبهما فإني أحبهما

🌺 நபி (ஸல்)  ஹசன் ஹுசைன் இந்த இருவரையும் நீ விரும்பு நான் இந்த இருவரையும் விரும்புகிறேன் என துஆ செய்தார்கள்

أن عبد الله رجل صالح

🌺 அப்துல்லாஹ் இப்னு உமர் ஒரு சிறந்த மனிதர் என நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி)

🌺 நபி (ஸல்) – ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) வை நோக்கி நீங்கள் என்னுடைய சகோதரர் மேலும் எனது தோழர்

جعفر بن أبي طالب الهاشمي رضي الله عنه وقال له النبي صلى الله عليه وسلم

أشبهت خلقي وخلقي

🌺 நபி (ஸல்) ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) யை நோக்கி நீங்கள் என்னைபோன்றவர் என்னைப்போன்ற பண்புகளுடையவர் என்று கூறினார்கள்.

يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دف نعليك بين يدي في

الجنة

🌺 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) பிலால் (ரலி) இடம் சொர்க்கத்தில் எனக்கு முன்னால் உங்கள் செருப்பின் ஓசையை கேட்டேன் என்றார்கள்.(புஹாரி)

🌺 ஸாலிம், அப்துல்லாஹ் இப்னு மசூத், உபை இப்னு கஹ்ப், முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹும் இவர்களை பார்த்து நபி (ஸல்) கூறினார்கள் இவர்கள் நால்வரிடமிருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள்.

وفضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام

🌺 அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) – நபி (ஸல்) -தரீத் என்ற உணவு உணவுகளிலேயே சிறப்பு இருப்பதைப்போல பெண்களிலேயே ஆயிஷாவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது (புஹாரி)

لو سلك الناس واديا أو شعبا وسلكت الأنصار واديا أو شعبا لسلكت وادي الأنصار

أو شعبهم

🌺 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – மனிதர்கள் அனைவரும் ஒரு பாதையில் சென்றால் அன்சாரிகள் ஒரு பாதையில் சென்றால் நான் அன்சாரிகளுடைய பாதையில் செல்வேன் (புஹாரி)

الأنصار شعار والناس دثار

🌺 நபி (ஸல்) – அன்சாரிகள் என்னுடைய உடலை ஒட்டிய ஆடை மக்கள் எனது மேலாடை (புஹாரி)

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 129

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 129

3 – அபூபக்கர் (ரலி) நபித்தோழர்களிலேயே சிறந்தவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் பிறகு  உமர் (ரலி) பிறகு உஸ்மான் (ரலி) பிறகு அலி (ரலி) என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلا مِنْ أُمَّتِي لاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلا , وَلَكِنْ أَخِي وَصَاحِبِي فِي

الْغَارِ ” . وَإِنَّ أَحَقَّ مَنْ يُعِينُنِي بِهِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو بَكْرٍ

நபி (ஸல்) – மனிதர்களில் ஒருவரை என்னுடைய உற்ற நண்பராக எடுக்க வேண்டுமென்றால் அபூபக்கரை என்னுடைய உற்ற நண்பராக எடுத்திருப்பேன். அவர் எனது சகோதரரும் என் தோழருமாக இருக்கிறார்.

عن ابن عمر رضي الله عنهما قال كنا نخير بين الناس في زمن النبي صلى الله

عليه وسلم فنخير أبا بكر ثم عمر بن الخطاب ثم عثمان بن عفان رضي الله عنهم

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) உயிரோடிருக்கும் காலத்தில் மக்களில் சிறந்தவர்கள் அபூபக்கர் பிறகு உமர் பிறகு உஸ்மான் பிறகு அலி ரலியல்லாஹு அன்ஹும் என்று கூறக்கூடியவர்களாக இருந்தோம்.(புஹாரி)

♦️ அலீ (ரலி) – நபி (ஸல்) – நபிக்கு பின்னால் மிக சிறந்தவர் இந்த உலகத்தில் யாரென்று சொல்லவா என்று கேட்டு அபூபக்கர் பிறகு உமர் என்றார்கள். 3வது சொல்லவா என்று கேட்டு உஸ்மான் (ரலி) என்று கூறினார்கள்.